திங்கள், 30 நவம்பர், 2009

சீன செல்போன் இணைப்பு இன்றிரவு 12 மணி முதல் ரத்து!

சர்வதேச மொபைல் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத சுமார் 2.1 கோடி சீன செல்போன்களின் இணைப்பு இன்றிரவு 12 மணியுடன் ரத்தாகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு செல்போனையும் அடையாளம் காண வசதியாக ஐஎம்இஐ எண் தரப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால் தரமற்ற சீனா, கொரியா செல்போன்களை நம்நாட்டில் கோடிக்கணக்கானோர் வாங்கி வந்தனர். ஐஎம்இஐ எண் இல்லாத இந்த செல்போன்கள் தொலைந்தாலோ, அதை வைத்திருப்பவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட புகார் மீதோ கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

இத்தகைய போன்களின் இணைப்புகளை ரத்து செய்ய கடந்த செப்டம்பர் 3ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. ஐஎம்இஐ எண் இல்லாத போனை வாங்கிய அப்பாவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய செல்போன் சேவை அளிப்போர் சங்கம் (எம்எஸ்ஏஐ) நவம்பர் 30 வரை (இன்று) அவகாசம் கேட்டது. அதற்கு தொலைத் தொடர்புத் துறை அனுமதி அளித்தது. ஐஎம்இஐ எண் இல்லாத போன்களை பதிவு செய்து கட்டணம் செலுத்தி புதிய எண் பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது இன்றுடன் முடிகிறது. ஐஎம்இஐ எண் இல்லாமல் சுமார் 3 கோடி செல்போன்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த அறிவிப்புக்கு பிறகும் 2.1 கோடி போன்களுக்கு புதிய எண் விண்ணப்பித்து பெறப்பட வில்லை என தெரிகிறது. எனினும், கடந்த சில நாட்களாக புதிய எண் பெற கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இன்றிரவு 12 மணிக்குப் பிறகு இந்த செல்போன் இணைப்புகள்
ரத்தாகும். போனை பயன்படுத்த முடியாது.

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை புதுத் தெருவை சார்த்த ஜனாப் M. A. ஷாஜஹான் அவர்களின் தாயார் இன்று காலை (30-11-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 3.30 மணிக்கு நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

தகவல் : ஜனாப். சிராஜ்தீன், சென்னைஸ்ரீவைஜமாஅத்

வெள்ளி, 27 நவம்பர், 2009


நெல்லை டவுண்னில் புதிதாக ஆரம்பித்துள்ள
SMS INTERNET CITY யில்
பனி புரிவதற்கு உடனடி ஆட்கள் தேவை
CV அனுப்பவேண்டிய முகவரி nellaihameed@gmail.com
மேலும் தொடர்பு கொள்ள
99 44 720 666
Eid Mubarak.

كل عام و انتم بخير
و تقبل الله منا و منكم صالح الأعمال





E _nda

I _niya

D _inathil

M _nnippaiyum

U _yarvaiyum

B _arakkatthaiyum

A _nbaiyum

R _ahmatthaiyum

A _llah

K _oduppanaha.

Aameen.



எண்ணற்ற
தியாகங்கள்
இவ்வையத்தில்
வரலாற்றிலும்
வாழ்விலும்!

நாட்டுக்காக
மொழிக்காக
உறவுக்காக
நட்புக்காக
காதலுக்காகவென!

உயிர்
உறவுகள்
உடமைகள்
சொத்துக்கள்
சுகங்களெனப்
பலவற்றின் தியாகம்!

ஆயினும்
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய்ப்
போற்றப்பட்டு வரும்
ஒரே தியாகம்
இப்ராஹீம்(அலை)நபி
அவர்களுடையது தான்!

தள்ளாத முதுமையில்
தனக்குப் பிறந்த
ஒரே மகனை
இறைவனின் ஆணையேற்றுப்
பலிப்பீடம் ஏற்றியது!

சுய நலமே சூழ்ந்திருக்கும்
இவ்வுலகில் நாம்
தியாக உணர்வு
பெற்றிட
உணர்த்தும் நாளே
தியாகத் திருநாள்

வாழ்த்தும் அன்பு உள்ளம்

நெல்லை ஹமீது

நெல்லை சிந்தா

&

குடும்பத்தினர்

வியாழன், 26 நவம்பர், 2009

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்குகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த ஆண்டு ஹஜ் செய்த அனைத்து மக்களின் ஹஜ்
ஏற்று கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும், ஹஜ் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திடவும் துவா செய்து கொள்யோம்.

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

பெண்களின் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520

அன்று பிறந்த பாலகர்

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521

சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா

சிறப்பு விருந்தினர்
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092

ரமளானில் ஒரு ஹஜ்

உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201
அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702

ஒன்பதாம் நாள் விடுதலை நாள்
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402

அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி),

நூல்:திர்மிதி3509

அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்
முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579

தல்பியாவின் சிறப்பு

எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758

தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947

சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396

மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட

எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.


அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.


கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை
வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)
நுல் புகாரி (1718)


ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.


நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)


எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்


விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.


நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.


சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகள் ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும்
என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)


குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)


நாமே அறுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

தொகுப்பு:
மௌலவி எம்.எஸ் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி (வெப்மாஸ்டர்-TNTJ)

புதன், 25 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் இன்று ஏ.ஐ.டி.யு.சி., உண்ணாவிரதம்

திருநெல்வேலி: பணிமனை தோன்றி 21 ஆண்டு கால தொழிலாளர்களின் அடிப்படை, அத்யாவசிய கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் பணிமனை 6.4.88ம் ஆண்டு 15 வழித்தடங்களுங்களுடன் துவங்கப்பட்டது. தற்போது 35 வழித்தடங்களும், 38 பஸ்களும் உள்ளது. பணிமனை ஆரம்ப நாளில் எப்படி இருந்ததோ அதே நிலைமையில் தான் உள்ளது. டயர் புதுப்பித்தல் பிரிவு கொசுக்களில் கூடாரமாக மாறியுள்ளது. பழைய கழிவு டயர்களை அப்புறப்படுத்தவேண்டும். டயர் பிளாண்டில் காண்டிரக் முறையை கைவிடவேண்டும்.

ஓய்வறை விஸ்தரித்தல், தரமான மதிய உணவு வழங்குதல், தரமான டீ வழங்குதல், 240 நாள் பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்துதல், கழிப்பறை வசதி என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து தலைமை கிளைத்தலைவர் ஜேசுபாதம் தாவீதுராஜா, கிளைச் செயலாளர் முருகன் முன்னிலை வகிக்கிறார். உண்ணாவிரதத்தை இந்திய கம்யூ., நகர செயலாளர் நடராஜன் துவக்கிவைக்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி தலைவர் அழகுமுத்துப்பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். சம்மேளன துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், பொதுச் செயலாளர் ஆறுமுகம், தலைவர் குருசாமி பேசுகின்றனர். இத்தகவலை ஏஐடியுசி துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தி : தினமலர்

பக்ரீத் பண்டிகை : குர்பானிக்கு 18 ஒட்டகங்கள் வந்தன

தண்டையார்பேட்டை: பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக 18 ஒட்டகங்கள் வண்ணாரப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வரும் 28-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை வாங்கி வெட்டி இறைவனுக்கு படைப்பார்கள். பின்னர் அவற்றை உறவினர்கள், ஏழைகளுக்கு வழங்குவார்கள். கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் ஒட்டகங்களை முஸ்லிம்கள் குர்பானி கொடுத்து வருகின்றனர். ஒட்டகத்தின் விலை அதிகமாக இருப்பதால், சிலர் கூட்டாக சேர்ந்து வாங்கி வெட்டி பங்கு போட்டுக் கொள்கின்றனர்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலையில் உள்ள தர்காவுக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து லாரிகள் மூலம் 18 ஒட்டகங்கள் வந்து இறங்கின. அவற்றை தர்காவில் உள்ள வளாகத்தில் விட்டுள்ளனர். இந்த ஒட்டகம் ஒவ்வொன்றும் 250 முதல் 300 கிலோ வரை எடை கொண்டது. ஒரு ஒட்டகத்தின் விலை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை.

தமுமுகவை சேர்ந்த ஏ.என்.தாஹா மற்றும் அமீது ஆகியோர் இந்த ஒட்டகங்களை குர்பானி கொடுப்பதற்காக வாங்கியுள்ளனர்.

செய்தி : தினகரன்

செவ்வாய், 24 நவம்பர், 2009

திருச்செந்தூர் அ.தி.மு.க., வேட்பாளர் பயோ-டேட்டா

திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தல் அ.தி.மு.க.. வேட்பாளராக அக்கட்சி உடன்குடி ஒன்றிய செயலர், அம்மன் டி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பயோ-டேட்டா

பெயர்: அம்மன் டி. நாராயணன்(57)
ஜாதி: இந்து நாடார்
கல்வித் தகுதி: ஏழாம் வகுப்பு
சொந்த ஊர்: திருச்செந்தூர் அடுத்த அம்மன்புரம்
குடும்பம்: மனைவி வசந்தா, அ.தி.மு.க.,விலுள்ள அவர் 2001 முதல் 2006 வரை உடன்குடி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தார்.
மகள்கள்: 1. சரவணக்குமாரி - திருமணமாகிவிட்டது, 2. சூரியகுமாரி (9ம் வகுப்பு படிக்கிறார்), மகன்- ஆனந்தகுமார் -இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படிக்கிறார்.
தொழில்: விவசாயம்

அரசியல் அனுபவம்: 1972ல் அ.தி.மு.க., உறுப்பினரான அவர், 1993 முதல் 1998 வரை உடன்குடி ஒன்றிய ஜெ., பேரவை இணைச்செயலர், 1998 முதல் 2003 வரை உடன்குடி ஒன்றிய ஜெ.,பேரவை செயலர், 2003 முதல் தற்போது வரை உடன்குடி ஒன்றிய அ.தி.மு.க., செயலர். அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

சாதனைகள் ஜெயிக்க வைக்கும்: வேட்பாளர் அம்மன் டி.நாராயணன் கூறுகையில்,"" ஏழைத்தொண்டனான என்னை, வேட்பாளராக அறிவித்த அம்மாவுக்கு(ஜெ.,க்கு) நன்றி. தமிழகத்தில் ஜெ., ஆட்சியில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். எனவே, அந்த சாதனைகள் என்னை ஜெயிக்கவைக்கும்.

அதன் மூலம் திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை என மீண்டும் நிரூபிக்கப்படும். எம்.எல்.ஏ., ஆனபின் தொகுதி மக்கள் பிரச்னை தீர்க்க பாடுபடுவேன்'' என்றார்.

செய்தி : தினமலர்

திங்கள், 23 நவம்பர், 2009

குறுகிய பாலத்தில் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்: ஆதிச்சநல்லூர் பாலத்தின் அவலம்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் உள்ள குறுகிய பாலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, திருச்செந்தூர் ரோட்டில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இதில் உள்ள கால்வாய் மேல் அமைக்கபட்டுள்ள பாலம் மிகவும் பழமையானது.

ஒரு பஸ் மட்டுமே செல்லக்கூடிய அளவில் உள்ள இந்த குறுகிய பாலம் பல ஆண்டுகள் ஆகியும் அகலப்படுத்தப்படவில்லை. 30 மீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த பாலம் மெயின்ரோட்டில் அதுவும் வலைவில் உள்ளதால் பஸ் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை தரும் பாலமாகவே உள்ளது.

இதனால் அடிக்கடி இங்கு சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த அவலம் விரைவில் அகலப்படுத்தபட வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.

திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலை மிகவும் போக்குவரத்து அதிகமாகி வருவதால் வாகன விபத்துக்களை தவிர்க்கவும் இந்த பாலம் அகலப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதே பொதுமக்களின் ஒட்டு மொத்த விருப்பமாகும்.

செய்தி : தினமலர்

ஸ்ரீவையில் நேற்று மழை பெய்த்தது

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று 13 மில்லிமீட்டரில் மழை பெய்த்தது இதனால் ஸ்ரீவை சுற்றி உள்ள அனனத்து குளங்களும் மீண்டும் நிரம்பி உள்ளது.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியர் உள்பட 4 ஹஜ் பயணிகள் மரணம்

ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் உள்பட நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள்.

ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா வந்த சில மணி நேரங்களி்ல் இவர்கள் இறந்துள்ளனர்.

இதுகுறித்து சவூதி அரேபிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா , சூடான், மொராக்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேருமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாமல் பயணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

நான்கு பேரில் இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு வயது 75 ஆகும். நைஜீரியாவைச் சேர்ந்த யாத்ரீகர் 17 வயது சிறுவன் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இந்தியரின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.

ஹஜ் யாத்திரைக்காக சவூதிக்கு 160 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவையில் சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்

ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் ஆறுமுகநயினார். இவரது மாமனார் சங்கரநாராயணன் (80). இவர் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ஆஸ்துமா நோயினால் சங்கரநாராயணன் நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த அதிர்ச்சி செய்தி கேட்ட அவரது மனைவி இறந்தார் இந்த சம்பவம் அந்த ஸ்ரீவை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது

சனி, 21 நவம்பர், 2009

உலமாக்கள் நல வாரியம் மூலம் 4808 பேருக்கு அடையாள அட்டை

உலமாக்கள் நல வாரியம் மூலம் இதுவரை 4,808 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என, வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உலமாக்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் மூலம் உறுப்பினர்களாக சேர்வதற்கு 8,825 பேர் மனு அளித்தனர். இவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இதுவரை 4,808 பேர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்தெந்த சலுகைகள் அளிக்கப்படுகிறதோ, அதே சலுகை உலமாக்கள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் வழங்கப்படும். திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக 4 இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வக்ஃபு வாரியம் நலிவடைந்து உள்ளதால் வருவாயை பெருக்க தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மீட்கப்படும் இடங்களில் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் கட்டப்படும்.

வேலூர் அருகே சேத்தனூரில் 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வக்ஃபு வாரியம் சார்பில் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு திருச்சி அல்லது தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரியும், திருநெல்வேலியில் பொறியியல் கல்லூரியும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

பேட்டியின் போது அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உடனிருந்தார்.

செய்தி : தினமணி

வெள்ளி, 20 நவம்பர், 2009

உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்ன‌ஸ் சாத‌னை ப‌டைத்த‌ அமீர‌க‌ இந்திய‌ர்


உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்னஸ் சாத‌னை ப‌டைத்துள்ளார் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாய் வாழ் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ச‌ம‌த்த‌ர், ஐ.நா.ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15ம் தேதி முத‌ல் 2008ம் ஆண்டு மே மாத‌ம் 27ம் தேதி வ‌ரை இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

அமெரிக்க‌ன் வேர்ல்ட் ரிகார்ட் அகாட‌மி, லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட், கின்ன‌ஸ் உல‌க‌ சாத‌னை நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌வை ச‌ம‌த்த‌ரின் ப‌ய‌ண‌ம் உல‌கின் முத‌லாவ‌து ம‌ற்றும் வேக‌மான‌து என‌ சான்று அளித்துள்ள‌ன‌.

இப்ப‌ய‌ண‌த்திற்கான விசா பெறுவ‌த‌ற்கு ப‌ல்வேறு சிர‌ம‌ங்க‌ளைச் ச‌ந்தித்தாலும் த‌ன‌து ப‌ய‌ண‌த்திட்ட‌த்திலிருந்து பின்வாங்க‌வில்லை. இதுகுறித்து அவர் கூறுகையி்ல், '194 நாடுக‌ளில் 160 நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ அந்த‌ந்த‌ நாட்டு விமான‌ நிலைய‌ங்க‌ளில் விசா பெற‌ இயலாது.

என‌து ப‌ய‌ண‌த்தின் போது ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலாத்துறை அமைச்ச‌ர்க‌ளைச் ச‌ந்தித்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு விசா வ‌ழ‌ங்கும் முறைக‌ளை எளிதாக்க‌ கேட்டுக் கொண்டேன். உல‌க‌ சுற்றுலா குறித்த‌ விழிப்புண‌ர்வினை ஏற்ப‌டுத்துவ‌தே என‌து ப‌ய‌ண‌த்தின் நோக்க‌ம்' என்றார் ச‌ம‌த்த‌ர்.

ஸ்ரீவை, எம்.எல்.ஏ., தமிழக துணைமுதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தார்,


ஸ்ரீவை அருகேயுள்ள தோழப்பண்பண்ணையில் புதியதாக மணல்குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக துணைமுதல்வருக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.,சுடலையாண்டி கோரிக்கை விடுத்து மனு கொடுத்தார்.

தூத்துக்குடியில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக துணைமுதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசினார். விழாவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.,சுடலையாண்டி கலந்துகொண்டு பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாமிரபரணி ஆற்றை நம்பியே விவசாயப்பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. ஸ்ரீவை அருகேயுள்ள தோழப்பண்பண்ணை கிராமப்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் புதியதாக மணல்குவாரி அமைப்பதற்கு அரசிடம் சிலர் கோரிக்கை விடுத்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்

புதியதாக மணல்குவாரிகள் அமைக்கப்பட்டால் ஸ்ரீவையை சுற்றி உள்ள சுமார் 83 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தேவையான குடிநீரை பெறமுடியாமல் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும். எனவே தமிழக அரசு தாமிரபரணி ஆற்றில் புதியதாக மணல்குவாரிகள் எதுவும் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்ககூடாது என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் சார்பில் தங்களிடம் கேட்டுகொள்கிறேன் என்று பேசினார்.

பின்னர் ஸ்ரீவை எம்.எல்.ஏ., தனது கோரிக்கை தொடர்பான மனுவை தமிழக துணைமுதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார்.

வியாழன், 19 நவம்பர், 2009

நெல்லை மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அறிவிப்பு

மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்பின் நிறுவனர் எஸ். முகம்து ரவி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தலைமை நிலையச் செயலராக ராஜா முகம்மது, தலைமை சட்ட ஆலோசகராக அப்துல் ஜப்பார், கொள்கைப் பரப்புச் செயலர்களாக முஸ்தபா, இமாம் முகம்து அலி, மாவட்டத் தலைவராக எஸ்.ஏ. ஷேக், வர்த்தக அணிச் செயலராக சுல்தான், மருத்துவ சேவை அணிச் செயலராக தாஹிர் ஒசாமா, திருநெல்வேலி மாநகரச் செயலராக மவுலானா, மாநகரப் பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளராக எம்.ரிபாயி .

ஸ்ரீவைகுண்டத்தில் கிராம கல்விக்குழு பயிற்சி

ஸ்ரீவைகுண்டத்தில் கிராம கல்வி குழு பயிற்சி நடந்தது.அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் ஏ. கே.வி.எஸ்.மகளிர் மேல்நிலைப்பள்ளி தொகுப்பு வளமையம் சார்பில் 13 பள்ளிகளுக்கான பயிற்சி முகாமில் ஸ்ரீவை., டவுன் பஞ்.,தலைவர் கந்தசிவசுப்பு தலைமை வகித்தார்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிலட்சுமி, மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பள்ளிகளில் இயங்கும் கிராம கல்வி குழு செயல்பாடுகள், பெற்றோர்களின் கடமைகள், இடைநிற்றலை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை பற்றி பேசினர். விழாவில் கவுன்சிலர் பாமா, பெற்றோர்கள் கிராம கல்வி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியை ஒருங்கிணைப்பாளர் வீரமூர்த்தி பயிற்றுனர் லொரேட்டா ஆகியோர் நடத்தினர்.

செய்தி தினமலர்

புதன், 18 நவம்பர், 2009

இது தான் கூகுள்

புதுடில்லி: இன்டர்நெட்டில் தகவல் கூகுள் வெப்சைட் தரும் தகவல்களை நம்புவோர் ஏராளம். ஆனால், இந்தியா மற்றும் சீனா விவகாரத்தில் தனது "நிறத்தை' கூகுள் வெளிப்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில், இந்தியர்களை கூகுள் நிறுவனமும் ஏமாளியாக்கி வருகிறது.

கூகுள் வெளியிட்டுள்ள கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து http://maps.google.com/ வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து http://ditu.google.com/ பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக,

இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


செய்தி : தினமலர்

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.
நன்றி,
chittarkottai.com.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

நாடு முழுவதும் 77 இடங்களில் பாஸ்போர்ட் மையங்கள்

பாஸ்போர்ட் விண்ணப்பப் பரிசீலனையை விரைந்து முடிக்க 77 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன என வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட், விசா மற்றும் பாஸ்போர்ட் சேவை திட்ட இயக்குநர் நாகேந்திர பிரசாத் தெரிவித்தார்

வக்ஃப் வாரிய உறுப்பினராக தலைமை காஜி மீண்டும் நியமனம்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தமிழக அரசின் தலைமை காஜி முப்தி சலாஹூதின் முகம்மது அயூப் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.மூன்று மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட அவரை மீண்டும் வக்ஃப் வாரிய உறுப்பினராக நியமித்த தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் தாவூத் மியாகான் நன்றி தெரிவித்துள்ளார்.

சனி, 14 நவம்பர், 2009

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்


செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாயம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுகமானாலும் ஐபோன் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த சந்தையில் நோக்கியாவே முன்னணியில் இருக்கிறது. வருவாய் மற்றும் லாபத்தைலும் இதே நிலை தான்.

ஆனால் தற்போது முதல்முறையாக ஆப்பிள் நோக்கியவைவிட அதிக லாபம் ஈட்டியிருக்கிறதாம்.இந்த ஆண்டின் சமீபத்திய காலாண்டு முடிவுகளின் படி நோக்கியா 1.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது

வெள்ளி, 13 நவம்பர், 2009

வரும் 20ஆம் தேதி சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்

சவுதி அரேபியாவில் ஹாஜிகளின் தேவைக்காக இந்த வருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பில் நவம்பர் 20ம் தேதியன்று ரத்ததான முகாமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரியாத் மாநகரில் மெக்காகுரைஷ் ரோட்டில் அமைந்திருக்கும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து ரத்தம் தானமாக பெறப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு :

1. நவ்லாக்-0509181890,

2. பைஸல்-0507809247,

3. முஹம்மது மாஹீன்-0542540860.

ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார்


ஹாங்காங்கில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்நுட்பம் மற்றும் புதுப்பித்தல் அமைப்பு மற்றும் ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைகழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறிய சீட்டுகளைக் கொண்ட இந்த கார் பேட்டரியால் இயக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கார், சுற்றுப்புறத்திற்கு கேடு விளைக்காதது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக 7 சீட்டுகள் கொண்ட காரில் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்வதற்கான தேவையான பெட்ரோலுக்கு 2.20 ஹாங்காங் டாலர் செலவாகும். ஒரு சீட் கொண்ட காராக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 1ஹாங்காங் டாலர் செலவாகும். ஆனால் இந்த மின்சாரக் காரிற்கு வெறும் 10 ஹாங்காங் சென்ட் மட்டுமே செலவாகுமாம்.

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு 10 ஹாங்காங் டாலர் செலவாகிறது. இதில் சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பேருந்தில் பயணம் செய்வதை விட குறைந்த செலவுதானாம். இந்த காரின் விலை 90,000 ஹாங்காங் டாலர் என பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் பவர் எலக்ரானிக் ரிசர்ச் சென்டர் தெரிவித்துள்ளது.

செய்தி தினமலர்

சொத்துக் கணக்கை வெளியிட்ட தமிழகத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி


சொத்துக் கணக்கை வெளியிட்ட தமிழகத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றுள்ள நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், தான் 20 வருட காலமாக அரசுப் பணியில் இருந்தபோதிலும், மிகக் குறைவான சொத்துக்களுடன் இருப்பதற்குக் காரணம், நேர்மையாக இருந்ததால்தான் என்று கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருக்கும் உ.சகாயம், சமீபத்தில் தனது சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளார்.

அவர் குறித்த பல நல்ல செய்திகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சகாயம். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. சமூகப் பணி பட்டம் பெற்ற முதல் பேட்ச்சைச் சேர்ந்தவர் சகாயம். அதேபோல சட்டமும் படித்துள்ளார் சகாயம்.

18 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்தார் சகாயம். கடந்த 2001ம் ஆண்டு அவருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக மிகத் துணிச்சலுடன் போராடுபவர் சகாயம்.

தான் பல்வேறு பதவிகளில் வகித்தபோது, மணல் கொள்ளையர்கள், குளிர்பானக் கம்பெனியின் மோசடிகள், ஹோட்டல்களில் நடைபெறும் முறைகேடுகள், காஸ் டீலர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கடுமையாகவும், துணிச்சலாகவும், இடைவிடாமலும் போராடி வெற்றி பெற்றவர் சகாயம்.

காஞ்சிபுரத்தில் இவர் பணியில் இருந்தபோது, சட்டவிரோத மணல் கொள்ளையர்களை எதிர்த்து கடுமையாக செயல்பட்டார். இதற்காக அவர்களால் தாக்கவும் செய்யப்பட்டார். இருந்தாலும் தனது பணியிலிருந்து அவர் சற்றும் ஓயவில்லை.

1999ம் ஆண்டு தமிழகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் சகாயம். அப்போது மிகப் பெரிய பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின் குளிர்பானங்கள் மனிதர்கள் குடிக்கவே லாயக்கற்ற மோசமான தரத்துடன் இருப்பதாக தெரிவித்து அந்த குளிர்பானத் தயாரிப்பு நிறுவன பிரிவை மூட அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

சிவில் சப்ளைஸ் துறையி்ன் துணை ஆணையராக இருந்தபோது, வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதை கண்டுபிடித்து ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பல்வேறு ஹோட்டல்களில் இவரே நேரடியாக ரெய்டு நடத்தி அதிரடியாக சிலிண்டர்களைக் கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், எனது கணக்குப்படி, இப்படிப்பட்ட மோசடியான செயல்களால் எண்ணை நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 4000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அரசுக்கும் விரிவான அறிக்கை அனுப்பி வைத்தார்.

அதேபோல, ஒரு மாவட்டத்தில் வருவாய் அதிகாரியாக இருந்தபோது, ஒரு பிரபல ஹோட்டல் ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுக் கொடுத்தார்.

45 வயதாகும் கலெக்டர் சகாயம் தனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவித்தது பெரிய விஷயமே இல்லை என்கிறார் அடக்கத்துடன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது சொத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இது விதி. நான் அதையும் தாண்டி, எனது சொத்து விவரத்தை மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அவ்வளவுதான்.

பொதுமக்கள் மத்தியில், அரசுப் பணியாளர்கள் குறித்து மோசமான கருத்துக்கள் உள்ளன. இது அனைவருக்கும் தெரியும். இந்த நிலை நீடித்தால், அரசு நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கு இது மிகப் பெரும் தடையாக மாறி விடும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்தான மிகப் பெரும் தடைக்கல் என்பது எனது கருத்து. நான் ஊழல் கரையோடு இருக்க மாட்டேன் என்பதை வெளி்ப்படுத்தும் வகையில்தான் இந்த சொத்துக் கணக்கு விவர வெளியீடு. நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்கிறார்.

சகாயத்தின் சொத்து விவரம்...

வங்கிக் கணக்கில் பண இருப்பு - ரூ. 7172.
அசையா சொத்து - மதுரையில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள வீடு.

ஹாங்காங் வந்த இந்திய மத்திய அமைச்சர் மு.க அழகிரிக்கு சிறப்பான வரவேற்பு


இந்தியாவின் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க அழகிரி அவர்கள் ஹாங்காங் வந்தார்.அவருக்கு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் இந்திய அமைப்புக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹாங்காங் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத்தரின் மதிப்பிக்குரிய ஜனப் முஹம்மத் யூனஸ் அவர்கள் அறிமுக உரையாற்றினர். ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய அமைப்புகளின் தலைவர் அருணாசலம் அவர்கள் அமைச்சர் மத்திய மு.க அழகிரிக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.

ஹாங்காங் தமிழ் கலாச்சார அமைப்பு, ஹாங்காங் தமிழ் இஸ்லாமிய அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் தலைவர்களும் வந்து வாழ்த்துரை வழங்கினர்

வியாழன், 12 நவம்பர், 2009

விநாடிக்கு ஒரு பைசா: பி.எஸ்.என்.எல். அறிமுகம்


ப்ரீ பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு விநாடிக்கு ஒரு பைசா திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. (இச்செய்தி, நிமிடத்திற்கு ஒரு பைசா திட்டம் என தவறுதலாக புதன்கிழமை வெளியானது).

இதன்படி, உள்ளூர், வெளியூர் பி.எஸ்.என்.எல் அழைப்புகளுக்கு ஒரு விநாடிக்கு ஒரு பைசாவில் பேசிக் கொள்ளலாம். மற்ற இணைப்புகளுக்கு வினாடிக்கு 1.2 பைசா கட்டணம். ரூ. 45 செலுத்தி இந்தத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இத்திட்டத்துக்கு ஓராண்டு வேலிடிட்டி உண்டு

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நிலவரம்

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து புதன்கிழமை வரை 5202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மருதூர் மேலக்காலில் 1064 கனஅடி தண்ணீரும், கீழக்காலில் 400 கனஅடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1006 கனஅடி தண்ணீரும், வடகாலில் 979 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது

ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிஸில் அலுவலர் பற்றாக்குறை மக்களின் அன்றாட பணிகள் முடக்கம் : ஆளின்றி தவிக்கும் சர்வேயர் மற்றும் பட்டாபிரிவு

ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் சர்வேயர் பிரிவு, பட்டாபிரிவில் காலிஇடங்கள் நிரப்பபடாததால் மக்கள் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் பட்டாமாறுதல் பிரிவு, சர்வேயர்பிரிவு,வாரிசு சான்று, நலிந்தோர்நலதிட்டம்,ரேஷன், தேர்தல் என்று பல்வேறு பிரிவுகள் இயங்கிவருகிறது.

இப்பிரிவுகளில் பட்டாவழங்கும் பிரிவு, சர்வேயர் பிரிவுகளில் அலுவலர்கள் காலியிடங்கள் இன்னும் நிரப்பபடாததால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பட்டாபிரிவில் இருக்கவேண்டிய இரண்டு மண்டல துணை தாசில்தார்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். பலர் விடுமுறையில் உள்ளனர். இதனால் பட்டாவழங்கும் பணிமுழுமையாக நடைபெறவில்லை.

2009 அக்டோபர் மாதம் முடிய பெறப்பட்ட மனுக்கள் சுமார் 8ஆயிரம் ஆகும். அவைகளில் 3 ஆயிரத்து 200 ஏற்கப்பட்டது என்றும் 3ஆயிரத்து400 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் நிலுவையில் 2 ஆயிரம் என்றும் கணக்கிட்டு கூறியுள்ளனர். ஆனால் ஏற்கப்பட்ட 3 ஆயிரத்து200 மனுக்களை அரசு விதிமுறைகள் படி கம்ப்யூட்டரில் பதிவு செய்து அந்தந்த பயனாளிகளுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து ரூ20 பணம் செலுத்தி பெற்றுசெல்லவேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் ஏற்கப்பட்ட மனுக்களில் அலுவலகத்தில் வந்து கேட்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதற்கு மனுவுக்கு சுமார் ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மனுதாரர் செலவு செய்வதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் சர்வேயர் பிரிவில் தலைமை சர்வேயர் பணியிடம் எப்போதும் காலியாகவே உள்ளது. மேலும் பிர்க்கா சர்வேயர்கள் 6 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கும் நிலஅளவை கோரி வந்து இருக்கும் மனுக்கள் சுமார் 500க்கும் மேல் தேங்கி கிடக்கிறது
.
எனவே மாவட்ட நிர்வாகம் காலியான பணிகளையும் அதன் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் நயினார் குலசேகரன் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

செய்தி : தினமலர்

புதன், 11 நவம்பர், 2009

இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் (2010-11) முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் மதிப்பெண் பட்டியலில் மோசடி, ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது.

இந்தத் திட்டத்தை இஎஸ்எல்சி மதிப்பெண் பட்டியலில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வந்தோம். அது வெற்றி பெற்றுள்ளது. எனவே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களிலும் இதே முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களின் புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல் வழங்கினால் அதை நகல் எடுத்து அனுப்பும்போகு கெசடட் அதிகாரியின் கையெழுத்தும் தேவையில்லாமல் போகும். மார்க் பட்டியலில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத சங்கேத குறியீடுகள் உள்ளன. இதையும் மீறி மோசடி நடப்பதை தடுக்கவே இந்தத் திட்டத்தை கொண்டு வருகிறோம்.

இதை இந்தக் கல்வி ஆண்டில் கொண்டு வருவது சிரமம். எனவே அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் உள்ளது. அதையே பயன்படுத்தி கொள்ளலாமா? என்றும் கேட்டிருக்கிறைம் என்றார். இதுபற்றிய அறிவிப்பு அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று தெரிகிறது.

துபையில் மகளை கொன்ற இந்திய பெண்-15 ஆண்டு சிறை

துபாய்: முதல் மகளைக் கொன்றும், 2வது மகளைக் கொல்ல முயன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற இந்தியப் பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து துபாய் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

துபாயைச் சேர்ந்த அந்த இந்தியப் பெண்ணுக்கு வயது 24. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அழர் தனது மூன்றரை வயது மகள் நசுவாவை கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து பிறந்து 22 மாதமே ஆன நஜியாவையும் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். பின்னர் தன்னையும் கத்தியால் குத்திக் கொண்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். 2வது மகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவர் அப்பீல் கோர்ட்டில் மனு செய்தார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்தபோது நல்ல மனநிலையில்தான் அப்பெண் இருந்துள்ளார். எனவே வேண்டும் என்றேதான் தனது குழந்தையைக் கொன்றுள்ளார் என்று கூறி 10 ஆண்டு சிறைத் தண்டனையை 15 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தார்.

இந்தியப் பெண்ணால் குத்தப்பட்ட 2வது குழந்தைக்கு 35 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்த அப்பெண்ணின் கணவர், தங்களுக்கு 2001ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், அன்று முதல் இதுவரை தனது மனைவிக்கு மன நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்

லண்டனில் 6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.

கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.

இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.

அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி :தட்ஸ்தமிழ்

ஸ்ரீவைகுண்டத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் 2 ஏக்கர் நிலம் கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கணபதி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சேர்மசிஸ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சங்க செயலாளர் பெருமாள் சி.பி.எம். ஒன்றிய செயலாளர் கந்தசாமி நகர செயலாளர் இராமலிங்கம், சி. ஐ.டி.யு நிர்வாகி, முருகன், உலகநாதன் மாயாண்டி, சிவணைந்த பெருமாள் ஜவகர்ஷா சின்னதுரை கனியம்மாள், ஆகியோர் உ ட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு இரண்டு ஏக்கர் நிலம் உடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

த.மு.மு.க.,சார்பில் ஏரலில் ரத்தப்பிரிவு கண்டறியும் முகாம்

ஏரலில் த.மு.மு.க.,சார்பில் ரத்த பிரிவு கண்டறியும் முகாம் நடந்தது.

ஏரலில் த.மு.மு.க.,சார்பில் நடந்த ரத்த பிரிவு கண்டறியும் முகாமிற்கு கிளை தலைவர் அன்சார் அலி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பைசர்தின் தொடங்கி வைத்தார்.

செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் ஆவுல்பாதுஷா, மருத்துவ அணி செயலாளர் பீர் முகம்மது, ஏரல் கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்ய தீர்மானித்துள்ளனர்.மேலும் பலர் ரத்த பிரிவு சோதனை செய்து கொண்டனர்

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று நல்ல மழை

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 32மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2 வீடுகள் இடிந்துள்ளது.

ஸ்ரீவை.அணை நீரை சாத்தான்குளம், உடன்குடிக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை:-

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வீணாகக் கடலுக்குச் செல்லும் வெள்ள நீரை சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என தென்பகுதி விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஏரல் தரைப்பாலம் மூழ்கியது:-

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக நேற்றுஏரல் தரைப்பாலம் மூழ்கியதால், அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஆத்தூர் தாமிரபரணி மேம்பாலத்தை தெடும் அளவிற்கு வெள்ள நீர் சென்றது

செவ்வாய், 10 நவம்பர், 2009

இந்தியாவிலேயே முதன்முறையாக நெலலை பல்கலையில் கடல்சார் பொருளாதார மேற்படிப்பு

இந்தியாவிலேயே முதன் முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார மேம்பாடு குறித்த முதுகலைப் பட்டபடிப்பு (எம்ஏ) வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக யுஜிசி முதல் கட்டமாக ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன்,பதிவாளர் மாணிக்கம் ஆகியோர் கூறுகையில்,

இந்திய கடற்கரை ஒருபுறம் குஜராத்திலும், மறுபுறம் கொல்கத்தாவிலும் தொடங்கி தமிழ்நாடு வரை சுமார் 7,500 கி.மீ. நீளமுடையது.

தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில்கள், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகின்றன.

குறிப்பாக தமிழக் கடற்கரை பகுதிகளில் கடல்பாசி, கடற் புல், கடற் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்று சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.

இத்தனை வளங்கள் இருந்த போதிலும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே இருக்கும் வளங்களை வைத்து இவர்களது ஏழ்மையை போக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆராய்ச்சிகள்
அவசியமாகின்றன.

இதற்காக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார வளம் மற்றும் மேம்பாடு குறி்த்த எம்ஏ பாடத் திட்டத்தை செயல்படுத்த யுஜிசியிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது இதற்கான அனுமதியை யுஜிசி வழங்கியதுடன் ரூ. 34 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் தான் இந்த பாடப்பிரிவு துவக்கப்படுகிறது என்றனர்

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் ந‌ட‌த்திய‌ தீபாவ‌ளித் திருநாள்

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் தீபாவ‌ளித் திருநாளை 06.11.2009 அன்று மாலை ஷார்ஜா ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் வெகு விம‌ரிசையாக‌ ந‌ட‌த்திய‌து.

துவ‌க்க‌மாக‌ குழ‌ந்தைக‌ளின் த‌மிழ்த்தாய் வாழ்த்து பாட‌ப்ப‌ட்ட‌து. பொருளாள‌ர் கீதா கிருஷ்ண‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

ச‌ஞ்ச‌னா, ஐஸ்வ‌ர்யா, வ‌ஸ‌ந்த‌, சுஸ‌ந்த் உள்ளிட்ட‌ குழ‌ந்தைக‌ள் திருக்குற‌ளும், அத‌ன் விள‌க்கவுரையினையும் வாசித்த‌ன‌ர்.

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பெண் உறுப்பின‌ர்க‌ளின் தீப ஒளி ந‌ட‌னம் இட‌ம்பெற்ற‌து. அத‌னைத் தொட‌ர்ந்து குழ‌ந்தைக‌ளின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி இட‌ம் பெற்ற‌து.

இந்து, இஸ்லாம், கேர‌ளம் உள்ளிட்ட‌வ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ நிக‌ழ்ச்சி இட‌ம் பெற்ற‌து. பாலாஜியின் வார்த்தை விளையாட்டு நிக‌ழ்ச்சியும், ஜோடிப் பொருத்த‌ம் நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற்ற‌து.

துபாய் அல் வாஸல் ம‌ருத்துவ‌ம‌னையின் ம‌க‌ப்பேறு சிற‌ப்பு ம‌ருத்துவ‌ர் டாக்ட‌ர் ப‌ர்வீன் பானு, கேன்ச‌ர் குறித்த‌ விழிப்புண‌ர்வு உரை நிக‌ழ்த்தினார்.

துபாய் த‌மிழ்ச்சங்க‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

'தி ஹிந்து' நாளித‌ழின் திருச்சிப் ப‌திப்பு நிர்வாகி சைய‌து சக‌ப் முத்த‌ஹ‌ர் சிறப்பு விருந்தின‌ராக‌ப் ப‌ங்கேற்று போட்டிக‌ளில் வெற்றி பெற்ற‌ குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்கினார்.

ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளிக‌ளின் இய‌க்குந‌ர் பேராசிரிய‌ர் க‌ல‌ந்த‌ர் த‌ங்க‌ள‌து திற‌னை சிற‌ப்புற‌ வெளிப்ப‌டுத்திய‌ குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.

டிச‌ம்ப‌ர் 2 அன்று ந‌டைபெற‌ இருக்கும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி குறித்து விழாக்குழு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா விவ‌ரித்தார்.

துணைப் பொருளாள‌ர் சுந்த‌ர் நன்றி கூறினார். நிக‌ழ்ச்சியினை மீரா கிரிவாச‌ன் தொகுத்து வ‌ழ‌ங்கினார். தேசிய‌ கீத‌த்துக்குப் பின்ன‌ர் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து.

பொதுச்செய‌லாள‌ர் சி.ஜெக‌நாத‌ன் த‌லைமையிலான‌ குழுவின‌ர், க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் விழா சிற‌ப்புற‌ ந‌டைபெறுவ‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ளைச் செய்திருந்த‌ன‌ர்.

ஜித்தாவில் நாளை மாபெரும் உணவு திருவிழா

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நாளை (11.09.2009) மகளிர் உலகம் நடத்தும் இந்திய மகளிருக்கான "உணவு திருவிழா" நடக்க இருக்கிறது.

மகளிர் உலகம் என்னும் அமைப்பு, ஜித்தா சவுதி அரேபியாவில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வரிசையில் நாளை மாபெரும் 'உணவுத்
திருவிழாவுக்கு ஜித்தா 'சென்னை தர்பார்' உணவகத்தில் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம், குறைந்த இருக்கைகளே உள்ள காரணத்தினால் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் புதுமையாகவும், சுவையாகவும் செய்யும் உணவுக்கு முதல் மூன்று பரிசுகள் காத்திருக்கின்றன. கலந்து கொள்பவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி. தில்சாத் அக்பர் பாட்சா, திருமதி. மும்தாஜ் சீனி அலி மற்றும் திருமதி. நஜ்மா ஜின்னா ஆகியோர் செய்து வருகின்றனர்.

முன்பதிவுகளுக்கு 0509206690, 0507666906, 0560451020 ஆகிய கைப்பேசிகளை தொடர்பு கொள்ளலாம்.

ஈமெயில்: wworldjed@gmail.com

ஸ்ரீவை, மங்களகுறிச்சியில் இலவச காஸ் அடுப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே யுள்ள மங்களகுறிச்சி கிராமத்தில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

சுடலையாண்டி எம்.எல்.ஏ. தலைமை வகித்து 240 பேருக்கு காஸ் அடுப்புகளை வழங்கினார்.

வட்டாட்சியர் பரமசிவன், ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, சு.வீரபாகு, வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன், பேருராட்சித் தலைவர் கந்த சிவசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

காயல்பட்டினத்தில் ஜமா அத்துல் உலமா சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொதுக்குழுக் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.இ. காழி அலாவுதீன் தலைமை வகித்தார். எஸ்.எம். முஹம்மத் ஃபாரூக், எஸ்.டி. அம்ஜத் அலி, எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ். உமர் ரிழ்வானுல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் தொடக்கிவைத்தார்.

மாவட்ட ஜமா அத்துல் உலமா பேரவைச் செயலர் எஸ். முஜிபூர் ரஹ்மான், தூத்துக்குடி ஜாமி ஆ மஸ்ஜித் தலைமை இமாம் அப்துல் ஆழிம், தூத்துக்குடி மன்ப உஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஏ.எம். ஷேக் உஸ்மான், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரிப் பேராசிரியர் கே. சுல்தான் ஸலாஹூத்தீன், மஹழ்ரா அரபிக் கல்லூரிப் பேராசிரியர் எஸ். செய்யித் அப்துற் ரஹ்மான், தூத்துக்குடி மன்பஉஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் எம். இம்துல்லாஹ், செய்துங்க நல்லூர் ஜூம்ஆ பள்ளி இமாம் ஹஸன் ஞானியார், வடக்கு ஆத்தூர் ஜூம்ஆ பள்ளி இமாம் பஷீர் அஹ்மத், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி இமாம் ஏ.கே. அபூ மன்ஸþர் மற்றும் ஏரல் முஹம்மத் யூஸþப் ஆகியோர் பேசினர்.

உலமாக்கள் பணியாளர் நல வாரியத்தில் அதிக உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக மாவட்ட ஜமா அத்துல் உலமா பேரவைச் செயலர் முஜிபூர் ரஹ்மான் மற்றும் அரசு மாவட்ட காஜியாக காயல்பட்டினம் மஹ்ழரா துணை முதல்வர் எஸ்.டி. அம்ஜத் அலி ஆகியோரை நியமித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இருவரும் பொன்னாடை அணிவித்து கெüரவிக்கப்பட்டனர்.

மஹழ்ரா அரபிக் கல்லூரிப் பேராசிரியர் காஜா முஹ்யித்தீன் நன்றி கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகள் அகற்றம்

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.

ஆற்றை ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளினால் விஷப்பூச்சிகள், வண்டுகள் தேங்கி பொதுமக்கள் படித்துறைகளில் குளிக்கும்போது கடித்து விடுகின்றன.

இந்த அமலைச் செடிகளை பொதுபணி துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுடலையாண்டியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரும் இக் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி அமலைச் செடிகளை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் அமலைச் செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இப் பணியை சுடலையாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்.

பேரூராட்சித் தலைவர் கந்த.சிவசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நேற்று நிலவரம்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து நேற்று மாலை ஐந்து மணி நிலவரப்படி விநாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே எட்டடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு உள்ளது.இதன் மூலம் வடகால்,தென்காலில் 30க்கும் மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழை, நெல்லை மாவட்ட அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகியவற்றால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் மழைநீர் வெள்ளமென சீறிப்பாய்கிறது. நீரை சேமித்து வைக்க வழியில்லாததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் மழைநீர் வீணாக புன்னக்காயல் கடலில் சென்று கலக்கிறது.

நேற்று மாலை ஐந்து மணி நிலவரப்படி விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் அணையிலிருந்து கடலுக்குச் சென்றது. மழை தொடர்ந்தால் கடலுக்குச்செல்லும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கும்.

இந்த அணைக்கட்டிற்குப்பின்னரோ அல்லது முன்னரோ ஒரு தடுப்பணை கட்டியோ, வேறு திட்டத்தை செயல்படுத்தியோ மழைநீர் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். அவ்வாறு செய்தால் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை இருக்காது என அவர்கள் தெரிவிக்கின்றனர்

திங்கள், 9 நவம்பர், 2009

கண்களை குளமாக்கிவிட்டு வீரமரணம் அடைந்த சகோதரன்.

நாழிதளில் வந்ததை அப்படியே தந்துள்ளோம்.வல்ல நாயன் அல்லாஹ் இந்த வீரமரணம் அடைந்த தியாகச்செம்மலுக்கு சுவனப்பதி தருவானக!அவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பொருமையையும்,சாமாதானத்தையும் ,அமைதியையும் நிலவச்செய்வானாக.ஆமின்)

அரிக்கோடு : படகு கவிழ்ந்து, ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில், ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, மாணவர் ஷமீம் மரணத்தை தழுவினார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது. அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும்.சில தினங்களுக்கு முன், பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, இழுத்து வந்து கரையில் சேர்த்தார். சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது தான், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறக்க நேரிட்டது.தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

அதிரை POST

ஸ்ரீவையில் 22,மி.மீ.மழை பதிவானது

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது.

ஸ்ரீவையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு 22,மி.மீ.ஆக பதிவானது.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நிலவரம்

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 7,729 கனஅடி நீர் வெளியேறி கடலில் சென்று வீணாகக் கலந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மருதூர் மேலக்காலில் 1,100 கனஅடியும்,கீழக்காலில் 400 கனஅடியும், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1100 கனஅடியும், தண்ணீரும், வடகாலில் 978 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் ஏரல் பாலம் தண்ணீரில் மூழ்கியது


தாமிரபரணி ஆற்றில் வரும் அதிகப்படியான வெள்ளநீரால் ஏரல் ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குரும்பூர், ஏரல் இடையே வாகனப்போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏரல் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏரல் சுற்றுவட்டர பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கொட்டி வரும் கனமழையால் வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பருவமழை பலத்த மழையாக கொட்டி வருகிறது.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பள்ளமான பகுதிகளில் எல்லாம் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்து வருகிறது.

தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. " வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி ஆற்றோரம் வாழ்ந்துவரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஏராளமான கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் சென்று கலந்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சுடலையாண்டி ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சுடலையாண்டி எம். எல்.ஏ., ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பரமசிவன், ஆணையர் சுப்புலட்சுமி, டி.எஸ்.ஓ., சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து தலைவர் கந்தசிவசுப்பு, கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ., மழைநீர் தேங்கி கிடந்த பகுதிகளான சிவராமங்கலம், அப்பன்கோவில், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஹாங்காங்கில் தமிழர் இயக்கம் நடத்திய விளையாட்டுப் போட்டி


ஹாங்காங்கில் டயல் தமிழ் கலாச்சார அமைப்பின் சார்பில் 2009ம் ஆண்டிற்கான பேட்மிடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அக்டோபர் 26ம் தேதியன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் வாழும் இந்திய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் கலாச்சார அமைப்பு மற்றும் டயல் குரூப்ஸ் கம்பெனி ஆகிய அமைப்புக்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் இளைஞர்களுக்கான பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்திய சமுதாய மக்கள் குறிப்பாக தமிழர்களின் விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான ஆடைகள், சாதனங்கள் ஆகியவற்றை வழங்கி வரும் டயல் குரூப்ஸ் கம்பெனி, இப்போட்டிகள் நடத்துவதற்கான பொருட்செலவை வழங்கியது. இந்தியாவிற்கான அயல்நாட்டு துணை தூதர் எல்.டி.ரால்ட், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சீனக் கலைஞர்கள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சியும், இந்திய நடன ஆசிரியர்களிடம் பயின்ற சீன மாணவர்களின் பாலிவுட் நடனமும் இடம்பெற்றது. கின்னஸ் சாதனை நிகழ்த்திய பூவேந்திரனின் யோகா செயல் விளக்கம், நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழ் கலாச்சார அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினரும் பேட்மிடன் வீரருமான ரால்ட் ஆகியோர் பங்கேற்ற விளையாட்டுடன் போட்டிகள் துவங்கியது.

அனைத்து கழக உறுப்பினர்களின் அயறாத உழைப்பே நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு காரணமாக அமைந்தது. இறுதியில் 3.5 அடி உயரமுள்ள ஸ்ரீ கோவிந்தசாமி நினைவு கோப்பையை ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்ற ராகேஷ் மற்றும் பாபு ஆகியோர் கைப்பற்றினர்.

வெற்றியாளர்களின் பெயர்கள் :

ஆண்கள் இரட்டையர் போட்டி : ராகேஷ், பாபு

பெண்கள் இரட்டையர் போட்டி : பாவினி ஷா, பிரியனனிக்ரம்

இளைஞர் இரட்டையர் போட்டி : அஸ்வின், கிருஷ்ணா

செய்தி : தினமலர்

வஃபாத்து செய்தி

பெரிதாக பார்க்க ஒரு கிளிக் செய்தல் போதும்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு சனிக்கிழமை நிலவரம்

கடந்த 3 நாள்களாக இடைவிடாமல் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நிரம்பியதால் அதிலிருந்து சனிக்கிழமை நிலவரப்படி 8400 கன அடி உபரிநீர் வெளியேறி கடலுக்கு செல்கிறது.

மருதூர் மேலக்காலில் 1100 கனஅடி தண்ணீரும், கீழக்காலில் 400 கன அடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1100 கன அடி தண்ணீரும், வடகாலில் 978 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் 55-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன.

ஸ்ரீவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுடலையாண்டி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் புதிய பாலம் கட்டும் பணி மழையினால் தடைபட்டிருப்பதை பார்வையிட்ட சுடலையாண்டி சிவராமமங்கலத்தில் வீடுகளை சூழ்ந்திருந்த மழை வெள்ளத்தை அகற்ற எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

மேலும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கொடுத்த மனுவின் பேரில் அதை அகற்ற வட்டாட்சியரிடம் கேட்டுக்கொண்டார்.

வட்டாட்சியர் பரமசிவன், ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, கூடுதல் ஆணையாளர் வீரபாகு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் கந்த சிவசுப்பு உள்ளிட்டோர் அவருடன் சென்றனர்.

இஸ்லாமுக்கு யோகா விரோதம் இல்லை: இஸ்லாமிய மாநாடு தெளிவு

"இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு விரோதமாக யோகா பயிற்சிகள் இல்லை' என்று இஸ்லாமிய மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளனர், இஸ்லாமிய மதகுருக்கள். சமீபத்தில், உ.பி., மாநிலம், தியோபந்த் என்ற இடத்தில் ஜாமியத்-இ- உலேமா ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், பிரபல யோகா குரு ராம்தேவ் பாபா உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதில் யோகா குரு ராம்தேவ் கூறியதாவது: முதல் சுதந்திரப் போரிலிருந்து இந்த நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இஸ்லாமியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. பகதூர் ஷா ஜாபர், பேகம் ஹஜ்ரத் மகல், அஷ் பாக் உல்லா கான் இவர்கள் தொடங்கி அப்துல் கலாம் வரை இதற்கு உதாரணம் சொல்லலாம்.இந்துக்களும், முஸ்லிம் களும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் முன்னேற்றம் உறுதியாக இருக்கும்.இவ்வாறு ராம்தேவ் கூறினார்.தொடர்ந்து, மேடையிலேயே, பிராணாயாமம் குறித்த செயல்முறை விளக்கமும் அளித்தார்.

அதை மாநாட்டில் கலந்து கொண்ட உலாமாக்கள் கூர்ந்து கவனித்தனர். ராம்தேவின் பிராணாயாம விளக்கம், இந்த முறை வித்தியாசமாக சிறப்பாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜாமியத் அமைப்பின் பொதுச் செயலர் மவுலானா முகமது மத்னி கூறுகையில், "யோகா என்பது ஒரு வகை உடற்பயிற்சி. யோகா, இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு விரோதமில்லாத பயிற்சிதான்' என்று தெளிவுபடுத்தினார்.மாநாட்டில், "ஜிகாத்' என்ற சொல்லை மத அடிப்படையில் தவறாக திரிவுபடுத்தி பயன் படுத்தப்படுவது குறித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவை புதுக்குடி சேர்ந்தவர் சென்னை விபத்தில் மரணம் துக்கத்தில் மனைவியும் மரணம்

கணவர் விபத்தில் இறந்ததை அறிந்த மனைவி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(48). இவர் காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த இவர் அங்கு விபத்தில் இறந்துவிட்டார். பாலகிருஷ்ணன் இறந்த தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள வெள்ளூரில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கணவர் இறந்த தகவல் கேட்ட அவரது மனைவி செல்வி(40) மூர்ச்சையானார். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்

சனி, 7 நவம்பர், 2009

முஸ்லீம்களின் சுதந்திரத்தை பறித்தவர்கள் விடுதலைப் புலிகள்!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் சுமூகமான முறையில் வாழ்ந்து வந்த முஸ்லீ்ம்கள விரட்டியடித்து அவர்களின் சுதந்திரத்தைப் பறித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.

கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முஸ்லீம் பெண்களிடையே இன்று ராஜபக்சே பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 90களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் முஸ்லீகளை விரட்டியடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் விடுதலைப் புலிகள் .

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லீம்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையிலான ஒற்றுமையை, நல்லிணக்கத்தை சீர்குலைத்தவர்கள் புலிகள் .

அங்கிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தற்போது வாழ்ந்து வருகின்ரனர். இவர்களை சொந்த ஊர்களுக்கு மீள் குடியேற்றும் செய்யும் நடவடிக்கைள் விரைவில் தொடங்கும்.

இலங்கையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. வடக்கு மாகாணத்திற்கு வடக்கில் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்றார் ராஜபக்சே.

செய்தி : தட்ஸ்தமிழ்

விடிய விடிய பொழிந்த மழையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் நீர் நிரம்பி வழியுது


ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 48 மணிநேரம் கொட்டி தீர்த்தது பருவமழை.இதன் காரணமாக விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் அதிகாலை 4 மணிக்கு 104 கனஅடியும், 8 மணிக்கு 831 கனஅடியும்,தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரத்துவங்கியது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி சுமார் 5300 கன அடி தண்ணீர் கடலுக்குள் செல்கிறது.

கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. அணைக்கட்டுகள் நிரம்பியது இதனால் விவசாயத்திற்கு குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தங்கள் ஏர்கலப்பைகளை தூசி தட்டி ஆரவாரத்துடன் பிசானத்திற்கு தயாராகினர்.

மருதூர் மேலக்காலில் 1100 கனஅடி தண்ணீரும் கீழக்காலில் 400 கனஅடிதண்ணீரும் ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 979 கனஅடி தண்ணீரும், தென்காலில் 1100 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பாசனகால்வாயில் இருந்து பயன்பெரும் சுமார் 55 குளங்கலும் வேகமாக நிரம்பி வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை 81 மி.மீ அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் மழை தொடர்ந்து நீடித்தால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மிகுந்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும் நிலை ஏற்படும்

மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள 16 மதகுகளில் ஒருசிலவற்றைத் தவிர பல பழுதுபட்டு கிடப்பதால் வெள்ளக்காலங்களில் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆற்றில் காணப்படும் மணல் மேடுகள், அமலைச் செடிகள் வெள்ளக்காலங்களில் தேங்கி விடுகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்புறம் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு தேவைப்படும் மூலப்பொருள்கள், கம்பிகள், தளவாடங்கள் ஆற்றில் கிடந்தன. அதிகாலையில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அதை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். பின்னர் காலையில் டிராக்டர் மூலம் பொருள்கள் ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

இருப்பினும் பாலம் கட்டுமானப் பணிக்கு தேவையான பொருள்கள் சேதப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கனமழை தூத்துக்குடி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடலில் நிலை கொண்டுள்ள இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இதேபோல த‌மிழக‌ம் முழுவது‌ம் பெ‌ய்து வரு‌ம் கனமழை‌க்கு செ‌ன்னை, கா‌‌ஞ்‌சிபுர‌ம், திருவ‌ள்ளூ‌ர், புது‌க்கோ‌ட்டை, திரு‌ச்‌சி, திருநெ‌ல்வே‌லி, ராமநாதபுர‌ம் உ‌ள்‌ளி‌ட்ட மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது

நன்றி : செல்வா, திருநெல்வேலி

வந்தே மாதரம் பாடலுக்கு ஃபத்வா: பரெய்லி உலமா வரவேற்பு

வந்தே மாதரம் பாடலை முஸ்லீம்கள் பாடக்கூடாது என தியோபண்ட் மதகுருமார்கள் தடைவிதித்திருப்பதற்கு பரெய்லி உலமா ஆதரவு தெரிவித்துள்ளது.

இஸ்லாம் வேறு எந்த கடவுளையும் வழிபட அனுமதிப்பதில்லை என்பதால் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான ஃபத்வா சரி என்றே நாங்கள் கருதுகிறோம். நாட்டை நாங்கள் நேசித்தபோதிலும் அதை வழிபட முடியாது என தர்ஹா ஆலா ஹஸ்ரத் மெளலானா சுபன் ரஸா கான் அமைப்பின் சஜ்ஜதா நஸீன் என்பவர் தெரிவித்தார்.

இதேபோன்று அகில இந்தியா ஜமாத் ரஸா முஸ்தபா மெளலானா சஹாபுதீன் அமைப்பின் பொதுச்செயலரும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நெல்லை ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இடமாற்றம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் முன் அறிவுப்பு ஏதும் இன்றி வட பகுதியில் உள்ள புதிய கட்டடத்தின் முதல் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

சந்திப்பு ரயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக நுழைவுவாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் அறை, பயணிகள் தங்கும் அறை, உடனடி டிக்கெட் மையம், பார்சல் அலுவலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் முன்பதிவு டிக்கெட் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை: புள்ளி விபரங்கள் சேகரிப்பு பணிகள் துவக்கம்!

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கடற்கரை கிராமங்களில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில், பொது மக்கள் தங்கள் விபரங்களை வழங்கி பயனடையும்படி தாசில்தார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் தமிழ்மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாக கடற்கரை கிராமங்களில் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி இன்று (நவ.5)துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான பட்டணமருதூர், தருவைக்குளம் மற்றும் கீழஅரசடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது பெயர் மற்றும் வயதிற்கான ஆதாரங்களை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும், இந்த விபரங்களை வீடு, வீடாக லேப் டாப் கம்ப்யுட்டர் மூலம் புள்ளி விபரங்கள் சேகரிக்கும் கணக்கீட்டாளரிடம் வழங்கி பொது மக்கள் பயன்பெறலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News by Tuticorin Web Site

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பொழியுது பருவமழை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டிவரும் பருவமழையால் நெல்நாற்று நடவுப்பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது.

பருவமழையின் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் விவசாயத்திற்கு தேவையானபடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது

ஆற்றுப்பாசனம், கால்வாய் பாசனம் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளில் நெல் நடவுபணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மணக்கரை, நடுவக்குறிச்சி, வல்லநாடு, வசவப்பபுரம், ஸ்ரீவைகுண்டம், பேரூர், சிவகளை, கால்வாய், பொன்னங்குறிச்சி, புதுக்குடி, வெள்ளூர், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்வதற்காக வயல்களை உழுது தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

வியாழன், 5 நவம்பர், 2009

ஜனவரி 15ல் 108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்

108 வருடத்திற்கு பிறகு வரும் 'கங்கண சூரிய கிரகணம்' வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது.

அரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம் இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

ஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் தமிழகத்தில் கன்னியாகுமரி , நெல்லை , தூததுக்குடி, விருதுநகர், நாகப்பட்டிணம், கடலூர், ராம்நாடு, சிவகங்கை, திருச்சி , புதுகோட்டை,தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும்.

இதுகுறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறுகையில்,

இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்குப் பெயர் கங்கண சூரிய கிரகணம். இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் தமிழத்தில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.

தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்கிறோம்.

ஜனவரி முதல் நாள் நிகழும் சந்திர கிரகணம் அதிகாலை 12.21க்குத் துவங்கி சுமார் 1.24 மணிக்கு முடிகிறது என்றார் ராஜேந்திர ரத்னு.

சவூதி: இந்தியர்-2 பேரின் தலை துண்டித்து தண்டனை

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

மரியம் ஹூசேனின் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக பணியாற்றி வந்த ஹலிமாவின் உதவியுடன் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்து கொள்ளையடித்தனர்.

இதையடுத்து ஹலிமா உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெட்டாவில் இவர்கள் மூன்று பேரும் வாளால் தலை துண்டித்து மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 59 பேருக்கு இவ்வாறு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 102 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய ஷிராய சட்டப்படி, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவை மரண தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றால அருவிகளில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கனமழை காரணமாக பழையகுற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும், மெயின் அருவியில் இரவு மின் விளக்கு எரியாததாலும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் மெயின் அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. இரவு அருவி பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிக்க போலீசார் தடை விதித்தனர்.அருவிக்கு செல்லும் பகுதியின் குறுக்கே கயிறு கட்டி போலீசார் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

டவுன் பஞ்., ஊழியர்கள் மழை காரணமாக மின்விளக்கு சுவிட்சை போடாமல் சென்று விட்டதால் விளக்குகள் எரியவில்லை என்று அப்பகுதி வியாபாரிகள் கூறினர்.பழையகுற்றால அருவியில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

காயல்பட்டணம் கல்லூரியில் தொழில்நுட்பதுறை கூட்டம்

காயல்பட்டணம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் தொழிற்நுட்பத்துறை கூட்டம் நடந்தது.

வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் தகவல் தொழிற்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் கோதர் முகைதீன் தலைமை வகித்து மாணவியரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

கூட்டத்தில் கல்லூரி நிர்வாக அதிகாரி கம்சாமுகைதீன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தகவல் தொழிற்நுட்பத்துறை தலைவி ஷரீமின்மேரிஜானகி செய்திருந்தார்.

ஸ்ரீவை.,யில் பலமாத காலமாக பூட்டிகிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு உபகரணங்கள்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உபயோகமில்லாமல் பூட்டிகிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு உபகரணங்கள் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் பாழாகி வருகிறது என இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நல்ல உடல்கட்டுள்ள இளைஞர்களை உருவாக்கவும் உலக அரங்கில் விளையாட்டில் பின்தங்கி இருக்கும் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தமிழக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் கிராமபுற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள், ஜிம் உபகரணங்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி வருகிறது.

இத்தகைய உபகரணங்கள் பெரும்பாலும் அந்தந்த பஞ்.,அலுவலகங்களின் பழைய பேப்பர் வைக்கும் கிடங்குகளில் தான் முடங்கி கிடக்கிறது. இதனால் கிராமபுற இளைஞர்களுக்கு இதன் பயன்பாடே இல்லாமல் போகிறது.

முன்பெல்லாம் கிராமங்களில் கிட்டிபுளி, கோலிகுண்டு, பம்பரம், கிளியாந்தட்டு போன்றவைகளும் கபடி, கோ-கோ, மல்யுத்தம், உரியடி, வழுக்குமரம் போன்ற வீரவிளையாட்டுகளும் அவ்வப்போது நடந்து வந்தது.

ஆனால் காலமாற்றங்களுக்கேற்ப நாகரிகங்களின் வளர்ச்சி ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக கிரிக்கெட், ஹாக்கி, புட்பால், வாலிபால் போன்ற தேசிய விளையாட்டுக்கள் கிராமபுறத்தை ஆக்கிரமிப்பு செய்ய துவங்கி உள்ளது.
ஆனால் அதற்கான இடவசதியும், உபகரணங்களும் போதிய அளவும் போதிய பயிற்சியும் கிடைக்காததால் இவர்களுக்கு சரியான பயிற்சியும் முயற்சியும் கிடைப்பது இல்லை.

இதனை புரிந்த தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமபுறங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப இடவசதிக்கேற்ப வழங்கி வருகிறது.

இதன்படி ஸ்ரீவைகுண்டம் பஞ்.,யூனியனுக்குட்பட்ட ஸ்ரீபராங்குசநல்லூர் ஊராட்சியில் விளையாட்டு தளம் அமைப்பதற்கு பஞ்.,எல்லைக்குட்பட்ட பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வந்தும் அது உபயோகபடாமல் ஒரு மூலையில் முடங்கி கிடப்பதால் யாருக்கு என்ன லாபம்.
இதுகுறித்து யூனியன் நிர்வாகம், மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள் வந்தும் மூலையில் முடங்கி கிடக்கிறது. முடங்கி கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள், இதுபோல் எத்தனை பஞ்.,களில் டவுன் பஞ்.,களில் மூலையில் முடங்கி கிடக்கிறதோ தெரியவில்லை.
அரசின் இது போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கோ, இளைஞர்களுக்கோ போய் சேராமல் மூலையில் முடங்கி கிடப்பதால் யாருக்கு என்ன லாபம். எதிர்காலம் இவர்கள் கையில் என்று மார்தட்டி பேசும் மேடை பேச்சுகள் இதில் அடிபட்டு போய்விட்டது.

அரசின் லட்சக்கணக்கான பணம் இவ்வாறு வீணாகுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் திட்ட இயக்குனர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்களா? உரிய விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் உரிய இடத்திற்கு சென்றடைந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுமா? என்பதுதான் கேள்வி, பதில் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி: தினமலர்

புதன், 4 நவம்பர், 2009

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தயாரித்துள்ள அரபி பேசும் ரோபோட்


ரஜினிகாந்த்தை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் ரோபோட்டைத் தயாரித்து வருகிறார் நம்மூர் ஷங்கர். இந்த நிலையில் உலகின் முதலாவது அரபி பேசும் ரோபோட்டை தயாரித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

விரைவில் இந்த ரோபோட் பெருமளவில் வணிக ரீதியில்த யாரிக்கப்பட்டு ஷாப்பிங் வளாகங்களில் பணிக்கு களம் இறக்கப்படவுள்ளதாம்.

அபுதாபியின், அல் ஐய்ன் நகரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். தங்களது பல்கலைக்கழக ஆய்வகத்திலேயே இதை தயாரித்துள்ளனர்.

உலகின் முதலாவது அரபி பேசும் ரோபோட் இதுதான். இந்த ஆய்வகத்தின் இயக்குநரும், கிரேக்க நாட்டு கம்ப்யூட்டர் அறிவியல் உதவிப் பேராசிரியருமான நிக்கோலஸ் மாவ்ரைட்ஸ் இதற்கு உதவி புரிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ரோபோட் பார்க்க நிஜமான மனிதனைப் போலவே இருக்கும். இஸ்லாமிய தத்துவஞானியான இபின் சினாவின் பெயரை இதற்கு சூட்டியுள்ளோம். இவர் ஒரு மாபெரும் விஞ்ஞானியும் ஆவார். ஆங்கிலத்தில் இவர் அவிசென்னா என அறியப்படுகிறார்.

இந்த ரோபோட்டை சேல்ஸ்மேன், வரவேற்பாளர், ஷாப்பிங் வளாக உதவியாளர் என பல பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்.

கேள்விகள் கேட்டால் இந்த ரோபோட் பதிலளிக்கும். இன்டர்நெட் கனக்ட் செய்து கொடுக்கும். தகவல்கள் கேட்டால் கொடுக்கும். நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்த்து தேர்வு செய்து சொல்லும்.

இன்னும் ஆறு மாதங்களில் இந்த ரோபோட்டை முழு அளவில் செயல்படக் கூடியதாக தயார் செய்ய முடியும்.

தற்போது இந்த ரோபோட்டை சோதனை ரீதியாக அல் ஐய்ன் வணிக வளாகத்தில் ஒரு நாள் முழுவதும் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.

நிக்கோலஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அரேபியர்கள் அணிவதைப் போன்ற வெள்ளை நிற உடை, தலையில் தங்க நிறத்திலான வளையம், டர்பன், தாடி ஆகியவற்றுடன் பக்கா அரபித் தோற்றத்தில் உள்ளது இந்த ரோபோட்.

இபின் சினாவைப் போலவே இந்த ரோபோட்டை வடிவமைத்துள்ளனராம். இபின் சினா, உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா என்ற நகரில் பிறந்தவர் ஆவார்.

இந்த ரோபோட்டிடம் கேள்விகள் கேட்டால், மனிதனின் முக அசைவுகளுடன் பதில் சொல்கிறது.

முக அசைவுகள் உள்ளிட்டவற்றை இந்த ரோபோட்டில் கொண்டு வர ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உதவியுள்ளது. ஆனால் இதற்கான சாப்ட்வேரை நிக்கோலஸ் தலைமையிலான குழுவினரே வடிவமைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி இந்த ரோபோட்டையும், அதற்குத் தேவையான சாப்ட்வேர்களையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.

பார்க்க, முக பாவனைகளை கொண்டு வர, உணர, பதிலளிக்க உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் தனித் தனியாக சாப்ட்வேரை வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோட் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான பேர் தங்களுக்கு வேண்டும் என ஆர்டர் கொடுக்க ஆரம்பித்து விட்டனராம்.

இந்த ரோபோட்டை உருவாக்க 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதை விரைவில் வணிக ரீதியில் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகின்றனராம்

வந்தே மாதரம், தீவிரவாதத்துக்கு எதிராக 'பத்வா'!


தியோபந்த் (உத்தரப் பிரதேசம்): வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் என்ற முக்கிய இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மதகுருமார்கள், மத அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் அமைப்பு 2006ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதைப் பாடக் கூடாது என்று முஸ்லீம்களுக்கு பத்வா (தடை) பிறப்பித்தது. அந்தத் தடை சரியானதே.

நாங்கள் தாயை நேசிக்கிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான்.

இதனால் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது.

வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்சனையை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை. மதத்தை காரணம் காட்டி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மிக மிக தவறான செயல். இதனால், எல்லா வகையான தீவிரவாத்துக்கும் எதிராக பதவா பிறப்பிக்கிறோம். தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரான செயல். அதை ஆதரிக்கவோ அதற்கு உதவி புரியவோ கூடாது.

மதரஸாக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸா வாரியம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மதரஸாக்களை நாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்வோம்.

சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LinkWithin

Blog Widget by LinkWithin