திங்கள், 23 நவம்பர், 2009

குறுகிய பாலத்தில் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்: ஆதிச்சநல்லூர் பாலத்தின் அவலம்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் உள்ள குறுகிய பாலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, திருச்செந்தூர் ரோட்டில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இதில் உள்ள கால்வாய் மேல் அமைக்கபட்டுள்ள பாலம் மிகவும் பழமையானது.

ஒரு பஸ் மட்டுமே செல்லக்கூடிய அளவில் உள்ள இந்த குறுகிய பாலம் பல ஆண்டுகள் ஆகியும் அகலப்படுத்தப்படவில்லை. 30 மீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த பாலம் மெயின்ரோட்டில் அதுவும் வலைவில் உள்ளதால் பஸ் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை தரும் பாலமாகவே உள்ளது.

இதனால் அடிக்கடி இங்கு சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த அவலம் விரைவில் அகலப்படுத்தபட வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.

திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலை மிகவும் போக்குவரத்து அதிகமாகி வருவதால் வாகன விபத்துக்களை தவிர்க்கவும் இந்த பாலம் அகலப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதே பொதுமக்களின் ஒட்டு மொத்த விருப்பமாகும்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin