ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
சனி, 30 மே, 2009
இஸ்லாம் - தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!
“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”
ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.
சமீப காலத்தில் பெங்களூர் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயின. ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் காரணமாகவே கொள்கை வுறுபாடுகள் பல இருந்தாலும் அனைத்து கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இத்தகைய செயல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றனர். அது மிகச் சரியான கண்டனமே என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
ஆனால் இது மாதிரி சமயங்களில் ஒரு சில அறிவிலிகளின் அல்லது எவ்வித கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களின் செயல்பாடுகளினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது ஒரு சாராருக்கு மட்டும் அது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் யார் எனில் உலகின் பல்வேறு திசைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் தான். உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு குண்டு வெடித்து விட்டால் உடனே “இஸ்லாமிய தீவிரவாதிகள்” குண்டு வைத்ததில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி! இதை அவர்கள் தங்கள் கைவசம் உள்ள சக்தி வாய்ந்த ஊடகங்களின் வாயிலாக பிரபலப்படுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பெருமைப்படுகின்றனர்.
அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிபோனதைப் பற்றியும், அதற்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை.
அதே சமயத்தில்,
இலங்கையில் குண்டு வெடிப்பின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு குண்டு வைத்தவர்களின் மதத்தைக் கூறி அவர்களை “இந்து தீவிரவாதிகள்” என்றோ,
அல்லது
ஆந்திரா, அஸ்ஸாம், நேபால் போன்ற இடங்களில் தீவிரவாத செயல்களின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு கொன்றவர்களை அவர்களின் மதத்தை முன்னுறுத்தி அவர்களையும் “இந்து தீவிரவாதிகள்” என்றோ,
அல்லது
அயர்லாந்து, ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறைகளினால் மக்கள் கொல்லப்படும் போது அவர்கள் சார்ந்த மதத்தைக் குறித்து அவர்களைக் “கிறிஸ்தவ தீவிரவாதிகள்” என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.
பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் அத்தகைய தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் “இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். இது தான் முறையானது என்பதே நமது கருத்துமாகும். ஆனால் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், ஒரு சில அறிவிலிகளின் செயலுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தையே தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்தி அதன் மூலம் சத்திய ஜோதியாகிய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அவர்களின் கொள்கையைச் சார்ந்தவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த திட்டம் என்றுமே பலிக்காது. எனெனில் திட்டமிடுபவர்களுக்கெல்லாம் மேலான திட்டமிடுபவனாகிய அல்லாஹ் தன்னுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்:
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)
பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செய்ல்களாகும். இந்த மாதிரியான செயல்களைச் செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது. இவ்வித எச்சரிக்கைகளை மீறி செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. ஆனால் உண்மையான விசயம் என்னவென்றால் இஸ்லாத்தின் எதிரிகளே இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்களின் மீது போடுகின்றனர். (உதாரணம்: <சமீபத்தில் தென்காசியில் கைதானவர்கள் மற்றும் <மஹாராஸ்திரா மாநிலத்தில் கைதானவர்கள் ).
இதற்கு காரணம் சகோதர பாசத்துடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் மிக கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களே இவ்வாறு செய்கின்றனர்.
“இஸ்லாம்” என்ற சொல்லே “அமைதி” (Peace) என்ற பொருளைக் கொண்டது. எனவே “அமைதி” மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இதை நாம் கூறவில்லை! மனித குலம் முழுவதையும் படைத்து பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வே தன்னுடைய திருவேதத்திலே கூறுகிறான்: -
அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் மனிதர்கள் யாவரையும் கொலைச் செய்தவன் போலாவான்: -
இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)
போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை!
நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும், சிறுவர்களையும் கொல்ல தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா, அஹ்மத், அல்முஅத்தா.
கொலை செய்யப்பட்டவரின் வாரிசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது!
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்-குர்ஆன் 17:33)
அநியாயமாக கொலை செய்பவனுக்கு கடுமையான தண்டணை இருக்கிறது!
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (அல்-குர்ஆன் 25:68)
இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது: -
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)
குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்: -
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல்-குர்ஆன் 4:93)
நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது கொலையைப் பற்றித்தான்!
(மறுமையில்) மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது (கொலை செய்து ஓட்டிய) இரத்தம் பற்றித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.
எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது.
ஆனால் இவைகளை நன்றாக அறிந்திருந்தும் மத துவேசிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் செயலோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது அல்லது தாங்களே தங்களின் கூலிகளின் மூலம் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அவற்றை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் செய்ததாக விளம்பரப்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் கண்டத்திற்குரியது மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் இருக்கிறது. நடுநிலையான பெரும்பாண்மை மக்கள் இத்தகைய மத துவேசிகளின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) இன்னும், ‘சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 17:81)
தொடர்பான கட்டுரைகளின் இணைப்புகள் - நன்றி: சத்தியமார்க்கம்.காம்
நன்றி : சுவன தென்றல்
வியாழன், 2 ஏப்ரல், 2009
பொது நலன் கொண்ட இப்படியும் ஒரு மனிதர், ஆம் மாமனிதர்!


விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?
முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.
வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.
``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்
2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!
கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.
இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.
நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.
இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.
செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு
புதன், 1 ஏப்ரல், 2009
மனித நேய மக்கள் கட்சி - வரலாற்று அலசல் !

மனித நேய மக்கள் கட்சி! இன்று செய்திகளில் அடிபட்டுக் கொண்டு இருக்கும் ஒரு கட்சி. திமுக கூட்டணியில் ஒரு மக்களைவை தொகுதி கொடுக்கப்பட்டும் கண்டிப்பாக 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் இருக்கின்றது என்ற செய்திகளைப் பார்க்க முடிகின்றது. இந்த பெயரையே பலரும் கேள்விப்படாத நிலையில் இவர்களுக்கு எப்படி 2 சீட் ஒதுக்கித் தர முடியும்..அதுவும் திமுக கூட்ட்ணியில் என்ற கேள்விகள் பரவலாக எழுகின்றன. மனித நேய மக்கள் கட்சி பற்றிய ஒரு அறிமுகமே இப்பதிவு.
இதற்கு முதலில் கொஞ்சமா ப்ளாஸ்பேக்களைப் பார்த்தால் புரியும். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீக் தான் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்தனர். காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு நாற்காலிக்காக அடித்துக் கொண்ட சண்டையில் முஸ்லிம் லீக் சிதறுண்டு போனது. அப்துல் சமது, அப்துல் லத்தீப் என பிற கழகங்களில் மறைவில் பதவி சுகம் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று விட்டனர். இது முஸ்லிம் லீக்கின் கதை.
1990 வரை முஸ்லிம்களிடன் அரசியல் விழிப்புணர்வு என்பதே சுத்தமாக இல்லை எனலாம். 1992 பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து கிடந்தது. தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்தது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்னும் அளவுக்கு நிலைமை முற்றியது. நிறைய பேர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் முஸ்லிம் லீக் சமுதாய மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் விழிப்புடன் இருந்தன. இதனால் மக்கள் முழுமையாக முஸ்லிம் லீக்கள் மீது விரக்தி அடைந்தனர்.
இந்த நேரத்தில் தான் சில இஸ்லாமிய தலைவர்கள் முஸ்லிம் அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் (இந்து முண்ணனி போல) என்ற அமைப்பை நிறுவ முயற்சித்தனர். அதில் இன்றைய PJ வும் இருந்தார். முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு அதற்கு சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரையும் தலைவராக தேர்தெடுத்தனர். அப்போதைய போலிஸ் கெடுபிடியில் பயந்து போய் அத்தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து PJ உள்ளிட்டோர் தொடர்ந்து இந்த அமைப்பை நடத்தி வந்தனர்
அதன் பின்னர் மீண்டும் 1995 ல் புதிய அணி ஒன்று உருவானது. குணங்குடி ஹனிபா, பி.ஜெயினுலாபுதீன்,அலாவுதீன்,உள்ளிட்ட தலைவர்கள் கூடி புதிய அமைப்பு நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ் போண்றோரும் இதில் அப்போது இணைந்தனர். குணங்குடி ஹனிபாவை நிறைய பேருக்கு தெரியாது. தமிழ்க்குடி தாங்கி அய்யா டாக்டர் ராமதாஸ் அரசியல் கத்துக்குட்டியாக இருந்த போது உடன் இருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளவும். ( மருத்துவர் அய்யா குணங்குடி ஹனிபா, பழனி பாபா எல்லாரையும் மறந்து ஏப்பம் விட்டது கிளைக் கதை). ஜவாஹிருல்லாஹ் சிமி அமைப்பில் மும்முரமாக இருந்தவர். அந்நேரத்தில் பாக்கர் சிறையில் இருந்தார்
அவ்வமைப்பிற்கு என்ன பெயர் சூட்டுவது என்று ஆலோசித்த போது குணங்குடி ஹனிபா தாம் பதிவு செய்து வீணாக இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொடுத்து உதவினார். 1995 ஆகஸ்ட்டில் த.மு.மு.க உருவானது. அதை அடுத்து மக்களிடையே தமுமுகவை எடுத்துச் செல்லும் முயற்சி தீவிரமாக அரங்கேறியது. ஏற்கனவே தவ்ஹீத் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்த PJ தமுமுகவின் அமைப்பாளராகவும் இருந்தார். அவர் தமுமுக பிரச்சாரப் பணிக்கு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டார். தமிழகம் முழுவதும் ஏற்கனவே இருந்த தவ்ஹீத் அமைப்பினர் தமுமுகவில் முழு மூச்சாக இறங்கினர்.
1997 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது. அதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது
தமிழகம் முழுவதும் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்தது. 1999 ல் சென்னை மெரினா கடற்கரையில் வாழ்வுரிமை மாநாடு என்ற ஒரு மாநாடு தமுமுக வால் நடத்தப்பட்டது. இதில் செல்வி.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டது மக்களை தமுமுகவினை திரும்பிப் பார்க்க வைத்தது.
2003 ல் தஞ்சையில் முஸ்லிம்களில் பெரும் பேரணி தமுமுகவால் நடத்தப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் இதில் பங்கெடுத்தனர். இந்நிலையில் PJ தனது தவ்ஹீத் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்ததால் புரோகித அடிப்படையிலான முஸ்லிம்கள் தமுமுகவை ஒரு சார்பான அமைப்பாக பார்க்கும் நிலை இருந்தது. இது தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோருக்கு உறுத்தலாக இருந்தது
இதனை அடுத்து சிலபல டிராமாக்களுக்கு (பெருங்கதை அது..) PJ விலகிச் செல்ல தமுமுகவில் சில சுணக்கம் நிலவியது. 2006 தேர்தலில் ஒரு புதிய சூழல் நிலவியது. அதாவது முஸ்லிம்களிடம் தனி இட ஒதுக்கீடு என்ற கோஷம் வலுவாக இருந்தது. இது குறித்து தமுமுக, TNTJ உள்ளிட்டவை மக்களை பிரச்சாரங்கள் மூலம் தெளிவாக்கி வைத்து இருந்தனர். TNTJ அம்மா ஏற்படுத்திய இட ஒதுக்கீடு ஆராயும் ஆணையத்திற்காக அம்மாவிடம் தஞ்சம் புகுந்தது.
தமுமுகவிற்கு ஜெயலலிதா மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் 1999 வாழ்வுரிமை மாநாட்டில் அவர் “இனி BJP உடன் எப்போதும் கூட்டு வைக்க மாட்டேன்” என்று மெரினாவில் வைத்து கூறி இருந்தார். ஆனால் மீண்டும் BJP யுடன் கூட்டு சேர்ந்து விட்டிருந்தார். எனவே தமுமுக திமுக அணியுடன் சேர்ந்தது. அதன் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவிற்கு கிடைக்க பாடுபட்டனர்.
இத் தேர்தலிலேயே தமுமுக போட்டியிட முயற்சி செய்தது. வாணியம்பாடி, மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட எத்தனித்தது. ஆனால் கடைசி நேரக் குளறுபடியில் வாணியம்பாடி கைவிட்டுப் போனது. பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் துபாயைச் சேர்ந்த பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட (உண்மை இறைவனுக்குத் தெரியும்) ஒருவரை நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தில் கோபமடைந்த கலைஞர் திமுகவைச் சேர்ந்த மைதீன்கானை வேட்பாளராக அறிவித்தார். அவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
MLA ஐப் பறித்துக் கொண்டாலும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை தமுமுகவிற்கு கலைஞர் வழங்கினார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அப்பதவிக்கு வந்தார். இந்து அறநிலையைத் துறையைப் போல் வக்ஃப் வாரியமும் பல கோடி சொத்துக்களை பராமரிக்கக் கூடியது என்பதால் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடை ஏதுமில்லாமல் போனது. மசூதிகளின் நிர்வாகிகளையே கண்காணிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு என்பதால் சுலபமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு உள்ளும் தமுமுக நுழைந்தது.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததும் தமுமுகவின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்று சொல்லலாம்
சமீபத்தில் பிப்ரவரி 2009 ல் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடும் வகையில் மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய அமைப்பை தமுமுக நிறுவியது. தாம்பரத்தில் திமுகவின் ஆசியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கபட்ட வேகத்திலேயே குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் பேச்சு வார்த்தை உள்ளது.
திமுக ஒன்றுக்கு மேல் எல்லாம் தர முடியாது என்று திட்டவட்டமாக இருப்பதாகவும், மனித நேய மக்கள் கட்சி இரண்டு கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களை என்று டீல் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அம்மாவிடம் சரணடையுமா என தீர்மானமாகத் தெரியவில்லை
ஏன் மனித நேய மக்கள் கட்சி??? தமுமுக என்ற பெயரே பரவலாக மக்களிடம் அறிமுகமானது தானே என்ற கேள்வி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை பதிந்து வைத்திருந்த குணங்குடி ஹனிபா கடந்த 12 ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். என்றாக இருந்தாலும் தமுமுக என்ற பெயருக்கு ஆபத்து உள்ளது. எனவே இச்சிக்கலைப் போக்க மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
நன்றி : http://majinnah.blogspot.com/2009/03/blog-post_30.html
செவ்வாய், 31 மார்ச், 2009
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது,
'1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
2.சூனியம்.
3.கொலை
4.வட்டி உண்பது
5.அனாதைகளின் சொத்தை உண்பது
6.போரில் புறமுதுகு காட்டுவது
7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம்
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்..
1.கொலையாளி,
2.காபிர்கள்
3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம்.
முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது.
இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
நன்றி : முஹம்மத் நியாஸ், சவுதி அரேபியா.Emai : iamniyaz@gamil.com
திங்கள், 30 மார்ச், 2009
முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?

இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.
இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.
இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.
இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.
இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.
ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.
இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.
அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.
சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.
சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!
எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?
வெள்ளி, 27 மார்ச், 2009
தந்தை பெரியார் பார்வையில் இஸ்லாம்

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.
மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.
இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது
ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை.
ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.
சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931) நன்றி: http://www.keetru.com/rebel/periyar/10.php
வியாழன், 26 மார்ச், 2009
இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியின் கையில் உள்ள ஆயுதங்களில் ஒன்றுதான் வெளிச்சந்தை நடவடிக்கை.
பணவீக்கத்தின் எதிர் நிலையான பணவாட்டம் ஏற்படும்போது, மக்களின் வாங்கும் சக்தி வற்றிப் போய்விட்டதாக அர்த்தம். இந்தப் பணவாட்டத்தைப் போக்கவே வெளிச் சந்தையில் பணப்புழக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளது ரிசர்வ் வங்கி.
இதற்காக ரூ.10000 கோடிக்கு தான் வெளியிட்ட கடன் பத்திரங்களை மீட்கிறது. இப்படி மீட்பதால், நாட்டில் கூடுதலாக ரூ.10000 கோடி புதிதாக பணப் புழக்கம் ஏற்படும்.
அடுத்து நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர வேண்டும். அப்படியும் பணவாட்டம் போகாவிட்டால்? நோட்டு அடிக்க வேண்டும். தமாஷில்லை... இதுவும் வெளிச்சந்தை நடவடிக்கைகளில் ஒன்றே!
இந்த மூன்றிலுமே பணவாட்டம் போகாவிட்டால்... நமது அடிப்படையே கோளாறு என்று அர்த்தம்!
எல்லாம் விதிப்படி நடந்தால்...!
பொருளியலின் விதிகளுக்குட்பட்டு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் அமைந்தால், ஒவ்வொரு நெருக்கடியையுமே, உடனுக்குடன் சரிப்படுத்த முடியும்.
பொருளியல் என்பது ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசித் திரியும் அரசியலைப் போன்றதல்ல. இயற்பியலின் விதிகளைப் போல... இது நடந்தால் அதற்கு தீர்வு இதுதான் என மிகச் சரியாக திட்டமிட்டு கையாளக் கூடிய அற்புதமான ஒரு துறை பொருளியல். இதற்கு அதிகபட்சத் தேவை- ஆள்பவர், கொள்கை வகுப்பாளர்களிடம் நேர்மை!
மருத்துவர்கள் நோயைக் கண்டறிந்து மருந்து தருவது போலத்தான் இதுவும்.
ஆனால், என்ன வியாதி என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயாளிக்கு என்னவென்று மருந்து தருவது? 'ஏதாவது குத்து மதிப்பாக ஒரு மருந்து தந்து, அதில் சரியாகிவிட்டால், ஆஹா... என்ன ஒரு மருந்து...! என்னே அற்புதமான டாக்டர்!!' என்று சிலாகிப்பதைப் போலத்தான் இந்தியப் பொருளாதாரமும்.
கராகாட்டக்காரனில் கவுண்டமணி சொல்வது போல, 'முதல்ல பெட்ரோல் ஊத்தினேன், அப்புறம் டீஸல், அதுக்கப்புறம் குரூட் ஆயில், கொஞ்ச நாளா மண்ணெண்ணெய் ஊத்தினேன்... இப்போ எதுல ஓடுதுன்னு எனக்கும் தெரியல, இந்தக் காருக்கும் புரியல!'சரியாகச் சொன்னால், இதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை.
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... அமெரிக்கப் பொருளாதாரம் மிகச் சரியான வரையறைகளுக்கு உட்பட்ட ஒன்று. அதற்கு நேர் எதிர் தன்மை கொண்ட க்யூபாவின் பொருளாதாரமும் சரியான நெறிமுறைகளுக்கு உட்பட்டதே.
இந்த இரண்டு நாடுகளுமே, தங்கள் பொருளாதாரத்தை Recession எனப்படும் மந்தம் எப்போது தாக்கும், எத்தனை ஆண்டுகள் வரை இந்த மந்தம் நீடிக்கும், எப்போது அதிலிருந்து நாடு வெளியே வந்து Boom எனப்படும் உச்சநிலையை அடையும் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடும் அளவுக்கு தெளிவாக உள்ளன.
உதாரணத்துக்கு:
அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி நிலை 2007-ன் பிற்பகுதியில் ஆரம்பித்தது. 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இது பேயாட்டம் போடும், 2010-ல் அடங்கி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிடும் என்பதை மிகச் சரியாக கணித்துச் சொல்லிவிட்டார் அந்நாட்டு Federal Reserve தலைவர் பென் பெர்க்மன். இந்தக் கணிப்பை அவர் இன்று நேற்று சொல்லவில்லை, 2007 டிசம்பரிலேயே வெளியிட்டுள்ளார்.
இதோ... பொருளாதார வீழ்ச்சி நிலை இப்போது உச்சத்தில் உள்ளது அமெரிக்காவில். இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தெரியவும் ஆரம்பித்துவிட்டன.
ஆனால் இந்தியாவில் அப்படியல்ல...
இந்தியப் பொருளாதாரத்தின் தன்மை என்னவென்று மக்களுக்கும் தெரியாது, ஆட்சியாளர்களுக்கும் புரியாது. ஜோசியக்காரர்களுக்கு நிகரான அறிஞர்கள்தான் இங்கே நிதித்துறையை ஆள்கிறார்கள்.
'போன வருஷம் பணவீக்கம் அதிகமா இருந்ததுன்னா... இந்த ஆண்டு குறைவாகத்தான் இருக்கும். அடுத்த வருஷம் திரும்ப ஏறும் (கருத்து உபயம் சி. ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர்!!)' என்று கூறுபவர்களைத்தான் நாம் பொருளியல் அறிஞர்களாகப் பெற்றுள்ளோம்.
நிதியமைச்சரோ பொருளியல் கோட்பாடுகளை நன்கு உணர்ந்திருந்தும், நம் நாட்டுக்கு என்ன தேவை என்று யோசிக்காமல் அமெரிக்க மனோபாவத்தில் ஒவ்வொன்றையும் அணுகுகிறார்.
உலக பொருளாதார வரலாற்றிலேயே பணவீக்கம் என்ற சொல்லே அர்த்தமற்றுப் போனது அநேகமாக இந்தியாவில்தான்.
பணவீக்கத்தைக் கணிக்க மொத்த விலைக் குறியீ்ட்டைப் பயன்படுத்துகிறோமா... அல்லது நுகர்வோர் குறியீட்டெண்ணைப் பயன்படுத்துகிறோமா... என்பதெல்லாம் சாமானியனுக்கு தேவையில்லாத ஒன்று. அவனது எதிர்பார்ப்பென்ன?
"பணவீக்கம் உச்சத்திலிருந்தபோது விலை ஏறியது, வட்டிகள் ஏறின, குண்டூசி விலை முதல் ஏரோப்ளேன் கட்டணம் வரை எல்லாவற்றின் உயர்வுக்குமே பணவீக்கத்தைக் காரணமாக சொன்னார்கள்.
இன்று :-
தேர்தல் திருவிழா தந்த போதையில், 'பணவீக்கமே இல்லை. எல்லாம் புஸ் ஆகிவிட்டது' என்று அறிவிக்கிறீர்கள் அல்லவா... ஆனால் விலைகள் குறையவில்லையே! அன்று கிலோ ரூ.20-க்கு வெங்காயம் வாங்கினேன்... இப்போது ரூ.30 ஆகிவிட்டது. அப்புறம் என்னய்யா பணவீக்கம், வெங்காயம்!" - என்ற ஒரு சராசரி இந்தியனின் கோபத்தில் எந்த தவறும் இல்லையல்லவா!
எனில் தவறு எங்கே... நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களிடம்...!
நாட்டை பாதிக்கும் எதையும் விட்டு வைக்கவே கூடாது... மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கோட்பாடுகளாக இருந்தாலும் சரி... அதை வகுப்பவர்களாக இருந்தாலும் சரி!!
மிக்க நன்றி : A.C.M. இப்ராஹிம், அல்க்சபிஜி , சவூதி அரேபியா
வெள்ளி, 20 மார்ச், 2009
தேசபக்தி திருத்தொண்டர்!

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.
இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.
நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)
வியாழன், 19 மார்ச், 2009
முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?

புதன், 18 மார்ச் 2009
ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
அப்போது மாணவராக இருந்த இவரைப் பிடித்துச் சென்ற போலீசார், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன், வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக்கொள்ளும்படி, தொடந்து 5 நாட்களுக்குச் சித்திரவதை செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30, 2008 அன்று, மாவட்ட கீழமை நீதிமன்றம், நிரபராதி எனக் கூறி இவரை விடுவித்துள்ளது. இதையடுத்து தனக்கு 20 லட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஜுனாயத் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
"அன்று செப்டம்பர் 3, 2007. நானும், நிஜாமியா அரசுக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மற்ற மாணவர்களும், புது டில்லிக்கு ஒரு கல்விச்சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய நாங்கள், பழைய ஐதராபாத்தின் யாகுத்புராவிலிருந்த எங்களது கல்லூரி விடுதிக்கு உள்ளூர் ரயிலின் மூலம் வந்து சேர்ந்தோம்.
அங்கு சென்றவுடன் எனது சகோதரனைப் பொதுத் தொலைபேசி மூலமாக அழைத்து, நான் வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தேன். பேசி முடித்துவிட்டு வெளியே வந்த மறுகணமே, சாதாரண உடையிலிருந்த நான்கு போலீசார் என்னைப் பிடித்து மூட்டையாகக் கட்டி ஒரு சுமோ காரில் ஏற்றினார்கள். அப்போது காலை 11 மணி. விக்டரி விளையாட்டு மைதானம் வரை அந்த வாகனம் விரைந்து சென்றது. அதற்குப் பிறகு என் கண்கள் கட்டப்பட்டன. பிறகு, ஒரு மணி நேரம் எங்கேயும் நிற்காமல் வாகனம் சென்றது. வண்டியின் ஓட்டுனர் வாய்தவறிக் கூறியதிலிருந்து நான் காந்திப்பேட்டையில் (25 கி.மீ தொலைவில்) இருப்பதை உணர்ந்தேன்.
எனது கைகள் பின்னால் கட்டப்பட்டன. நான் குற்றமற்றவன் என்றும், என் மீது இரக்கம் காட்டும்படியும் நான் கெஞ்சியபோதும் கூட, என் மீது மூன்று பேர் பாய்ந்தனர். குப்புறத்தள்ளி, இருவர் எனது கால்களை அழுத்திப் பிடித்து அமர்ந்துகொள்ள ஒருவர் எனது தோள் மீது ஏறி நின்றார். ஒருவர் எனது பாதங்களை தோல் பெல்ட்டால் அடிக்க, மற்ற இருவரும் என் உடம்பு முழுக்க அடித்துத் துவைத்தனர். வலியோ தாங்கவே முடியாததாக இருந்தது. முடிவில் நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன்.
மறுநாள் காலையில் கண்விழித்தவுடன், என்னை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கே ஒருவர் பூட்ஸ் காலால் என் உடல் முழுவதும் ஏறி மிதித்தார், எட்டி உதைத்தார், எனது கை, கால் விரல்களை நசுக்கினார்; எனது உடலில் இரத்த ஓட்டமே நின்றுவிட்டதைப் போன்று மரத்துப் போனது. மிகக் கடுமையான வலியால் நான் துடித்துப் போனேன். மெக்கா மசூதி, லும்பினி பூங்கா, மற்றும் கோகுல் சாட் சென்டர் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் எனது பங்கு என்ன என்று கேட்டுத் தொடர்ந்து என்னைச் சித்திரவதை செய்தனர். நான் குற்றமற்றவன் என்றும் என் மீது இரக்கம் காட்டும்படியும் அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் அவர்கள், என்னை நம்ப மறுத்துவிட்டனர். நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் ஒப்புக்கொள்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை.
இது என்னை விசாரித்தவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. சித்திரவதை அதிகமாகியது. எனது காது மடல்கள், மார்பு, உதடு, பிறப்புறுப்பு என எல்லா இடங்களிலும் மின்சாரத்தைப் பாய்ச்சினார்கள். காலையில் தொடங்கி இரவு வரை நீண்ட இத்தகைய சித்திரவதைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. பல நாட்களுக்கு சிறுநீருடன் இரத்தம் செல்லுமளவுக்கு எனது பிறப்புறுப்பு காயமடைந்திருந்தது. எனது உடலின் பல பகுதிகளில் அந்தக் காயங்களின் தழும்புகள் இன்னமும் உள்ளன.
மனித உரிமை ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் தலையிட்ட பின்னர்தான், என்னை, செப்டம்பர் 8, 2007 அன்று, மாநகர நீதிபதியின் முன் நிறுத்தினர். என்னை செப்டம்பர் 3ஆம் தேதியே கைது செய்துவிட்டபோதும், செப்டம்பர் 8இல் தான் கைது செய்தது போல் காட்டினார்கள்.
நான் ஏன் இதற்குப் பலியானேன்? மே 18, 2007, மெக்கா மசூதியில் குண்டு வெடித்த அன்று நான் அங்கே தொழுவதற்காகச் சென்றிருந்தேன். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவ, நான் மசூதிக்குத் திரும்பவும் சென்றேன். இதுதான் நான் செய்த குற்றம். அதேவேளையில் இந்த விசாரணைகள் எனக்கு ஒன்றை உணர்த்தின. போலீசாருக்கு வழக்கில் ஏதாவதொரு முன்னேற்றத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இந்த சமுதாயத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தவறுதலாக வழிகாட்டப்பட்டு ஜிகாத்துக்குத் திருப்படுகிறார்கள் என்ற வரையறைக்குப் பொருந்துவது போல, நான் வேறு படித்த முஸ்லீமாக இருந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த துரதிருஷ்ட நாளன்று நான் அந்த மசூதியில் வேறு இருந்தேன்.''
இக்கொடுமை மோடியின் இந்துவெறி பயங்கரவாத ஆட்சி நடக்கும் குஜராத்தில் நிகழவில்லை. மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் தான் நடந்துள்ளது. மசூதிகள் முஸ்லீம் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வைப்புகளை நடத்திவரும் இந்துவெறி பயங்கரவாதிகள் ஒருபுறம்; இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு வதைக்கும் அரச பயங்கரவாதம் மறுபுறம் என இருவகை பயங்கரவாதிகளிடம் சிக்கி நாடெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் வதைபடுகிறார்கள்.
நன்றி: அழகு
அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சிலகட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு சீட்டைக் கொடுத்து என்றும் நிரந்தரமாக இதயத்தில் இடம் கொடுக்கும் ராஜதந்திரம் இனியும் எடுபட வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசியல் கட்சியாகப் பரிணமித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு (ம.ம.க) மாறுபட்ட சிந்தனை உறுதியுடன் இருக்கிறது.
"எங்காளுக்குக் கருப்பு செவப்பத் தவிர வேற கலரே தெரியாம இருந்துச்சி" என்று தொடங்கிய பழனி பாபாவிலிருந்து செல்லரிக்கத் தொடங்கிய திமுகவின் முஸ்லிம் அடிமைப் பத்திரம், ததஜவில் தொடர்ந்து, வியப்பூட்டும் வகையில் தற்போது த.மு.மு.கவின் கைமாறி இருக்கிறது என்பதை, அதன் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ்வின் வெகுஅண்மைக்கால நேர்முக/ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. உரிய மரியாதை கிடைத்தால் அதிமுகவுடன் கூட்டணியமைத்தும் தேர்தலைச் சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சி காய்நகர்த்தி வருகிறது.
திமுகவைப் பொருத்தவரையில் இத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்பைவிட அதிகத்தொகுதிகளை வழங்கி மதிமுக,பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்து மத்திய அரசை ஆட்டுவிக்கப் போதுமான குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 4லிருந்து 6 தொகுதிகள்வர ஒதுக்கி, அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பாமகவுக்கு செக் வைக்கப்படலாம் (பாமகவுக்கு அம்மா பக்கமிருந்தும் அழைப்பிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்).
திமுக=15, காங்கிரஸ்=12, காதர் முஹைதீன்=1, திருமாவளவன்=1 அல்லது 2, தேமுதிக=6லிருந்து 8 போக மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியை தவிர வேறுவழியில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் கலைஞர் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லக்கூடும். (15+12+1+2+7+3).
இதுபோக,"எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எங்களின் கதவுதிறந்தே உள்ளது" என மனிதநேய மக்கள்கட்சி அறிவித்து அதிமுக அழைப்பையும் எதிர்பார்த்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஜெயலலிதா,மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 அல்லது 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்றும் ஆசை காட்டியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
அதிமுகவைப் பொருத்தவரை இத்தேர்தலில் இருபது சீட்டுகளை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குத் தலா நான்கு தொகுதிகளும் மதிமுகவுக்கு 4-5 தொகுதிகளும் வழங்கக்கூடும். அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் அன்பு அழைப்பை ஏற்று, தமிழினத்திற்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டனியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஆறு தொகுதிகளையும் ஒதுக்கக்கூடும். மனிதநேய மக்கள்கட்சியும் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் மதிமுகவிடம் இருந்து (Mr.வைகோ! உங்கள் கட்சியில் முன்பிருந்த மூத்தத் தலைவர்கள் தற்போது இல்லையே....) அல்லது அதிமுகவுக்கான தொகுதிகளிலிருந்து 1-2 ஐச்சேர்த்து மூன்று தொகுதிகள்வரை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடும்! (19+4+4+4+6+3).
இதுவரை ஒரேயொரு தொகுதியைப் பரிசாகப்பெற்று பாராளுமன்றத்தில் தமிழக முஸ்லிம்களின் குரலை ஒலித்த (?) கலாச்சாரத்தை மாற்றியமைத்து இம்முறை 4-6 தொகுதிகளில் கூட்டணியாக அல்லது தனித்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக மமக முனைப்புடன் உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியாகப் போட்டியிட்டாலும் உள்குத்து அரசியலுக்கு வெளியாட்களின் தேவை மமகவுக்கு இருக்காது. "தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்று சொல்லிவந்த தமுமுக தற்போது அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதாக முன்னாள் சகாக்களின் இனிய பிரச்சாரம் நடக்கலாம்.
போதாதென்று இந்திய தேசிய மக்கள் கட்சியும் பத்து இடங்களில் போட்டி இடப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். (சட்டமன்றத் தேர்தலுக்கே இ.தே.ம.க.வுக்குப் பத்து தொகுதிகள் அதிகம்!;-) முஸ்லிம்லீக்,மனிதநேய மக்கள் கட்சி,இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் குறிவைத்துள்ள தொகுதிகளில் வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகியவை உள்ளன.எதிரெதிர் கூட்டனியாக அல்லது தனித்து நின்றால் வேலூரில் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து இன்னொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் நிலை ஏற்படும்.(உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா!)
இருபத்தேழு லட்சம் (8%) வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தேமுதிகவை விட, தமிழக முஸ்லிம்கள் சற்று அதிகமாகவே உள்ளனர். அரசுப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 13-15 சதவீதம் அல்லது ஒருகோடிக்கும் மேலாக தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் பிரிந்து நின்று பிறகட்சிக் கூட்டணிக்கு ஏங்கி,பரஸ்பரம் எதிர்த்து நிற்பதை விடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஓரணியாக தனித்துப் போட்டியிடலாம்.
தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜாதிவாரி வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களையே தொகுதிக்கேற்ப நிறுத்துகின்றனர். எந்தக் கட்சியில் இருந்தாலும் தன்ஜாதிக்காரர்களுக்குக் குரல்கொடுக்கும் சட்ட/நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியாகக் கிடைக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும்வரைதான் கட்சிக்காரர் வென்றபிறகு அந்தந்த ஜாதிக்காரராகவே நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! இலட்சங்களாகப் பிரிந்துள்ள ஜாதிக்காரர்கள் தங்களுக்கென உறுப்பினரை பெறும்போது ஒருகோடிக்கும் அதிகமுள்ள முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் அவர்களைவிட அதிகமாகவே உறுப்பினர்களைப்பெற முடியும்!
தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 40-60 தொகுதிகள் 80,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டும் 20-30 தொகுதிகள் தேறும்! பெரும்பாலான தேர்தலில் 20,000-30,000 வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு புதிதாகப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அதிமுகவின் 8000-15000 வாக்குகளைப் பிரித்ததே காரணமென்பதை நினைவில் கொண்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்!
எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் 1-2 தொகுதிகளில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திட்டமிட்டுத் தேர்தல் களப்பணியாற்றினால் முஸ்லிம்கள் வெல்லக் கூடிய சூழல் உள்ளது. தோற்றாலும் இவர்களுக்கு இழப்பில்லை. திமுக-அதிமுக யார் வென்றாலும் எதிரணியின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை இணைந்து நின்று உணர்த்தினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தத் தேர்தலிகளில் முஸ்லிம்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருப்பார்கள்!
ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட முஸ்லிம் என்ற காரணமே போதும்.முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அல்லது வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கத் தேவையான வாக்குகளைக் கொண்ட தொகுதிகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் கட்சியினரின் ஒட்டுக்களுடன் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.முஸ்லிம்களிடம் ஜாதிவாரி பிரிவினை இல்லையென்பதால் எந்தக்கட்சியின் வெற்றிக்கும் முஸ்லிம்கள் ஓட்டு அவசியமாகிறது. இதை அனைத்து அரசியல்கட்சிகளுமே உணர்ந்துள்ளன.
"இருவர் பிணங்கிக் கொள்ளும்போது அவர்களைச் சமாதானப் படுத்துபவரே சிறந்தவர்" என்ற ஒற்றுமை முழக்கம் முஸ்லிம்களைவிட வேறுயாருக்குப் பொருந்தும்? அல்லாஹ் அக்பர் என்றதும் ஓரணியாக தொழுகையில் நிற்க முடியும்போது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் ஓரணியில் நிற்கலாமே!
"வேதமாகிய அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப்பிடியுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்...." (திருக்குர்ஆன் 003:103)
தகவல் :
செவ்வாய், 17 மார்ச் 2009
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
திங்கள், 16 மார்ச், 2009
முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி
பிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அது தென்னிந்திய முஸ்லிம்களை மையப்படுத்தாமல், வட இந்திய முஸ்லிம்களின் வரலாற்று நிழலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்க முயற்சி செய்கிறது. முனைவர் பட்டத்திற்கான அவருடைய ஆய்வுதான் முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி - தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947 எனப்படும் இந்நூல்.
தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை மிக இயல்பாகவும் அரசியல் குறித்த சிந்தனைகளை அலட்சியப்படுத்தியதாகவுமே இருந்துள்ளது. இப்போதைய அரசியல் விழிப்புணர்வு வரை முஸ்லிம்களுடைய நிலையைக் கவனித்தால், அவர்களாகவே எழுச்சிபெற்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததில்லை என்பது தெரியவரும். இஸ்லாமிய வாழ்க்கையே போதும் என்கிற எண்ணமே மேலோங்கியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். முஸ்லிம்களுக்குள்ளேயே பலமாக வேரூன்றிய தப்லீக் இயக்கம் இப்போதும் அரசியலை வெறுக்கின்றது. அரசியல் எழுச்சி இஸ்லாமிய உணர்வுகளை மழுங்கடித்துவிடும் என்று அது கற்பிதம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் அரசியல் விழிப்பை அடையவிடாமல் தடுப்பதிலும் அது முனைந்து செயல்பட்டு வருவதைக் காணமுடியும்.
உலகத் தலைவர்களைப் படுகொலை செய்வதைத் தங்களின் ஏகாதிபத்திய உரிமையாகவே கருதும் அமெரிக்க சி.ஐ.ஏ.யினுடைய முன்னாள் அதிகாரிகளில் ஒருவராக கிரகாம் இ புல்லர் தன்னுடைய இஸ்லாமின் எதிர்காலம் என்ற நூலில் தப்லீக் ஜமாத்தைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார் : “அமைதியான அரசியல் கலப்பில்லாத இயக்கம்”. அதே போல கலிபோர்னியா பல்கலைக் கழக அறிஞரான பார்பரா மெட்காஃப் தெற்காசிய இஸ்லாம் குறித்த தனது ஆய்வில், “அரசியல் கலப்பில்லாத மத அடிப்படை மறுமலர்ச்சிக்கான அமைதியான இயக்கம்” என்று கூறுகிறார். இந்த இரண்டு மேற்கோள்களிலும் “அமைதி” என்ற சொல் “அரசியல் கலப்பில்லாத” என்ற சொற்றொடரும் இணைக்கப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்குவது அவசியம் (ஆதாரம் : த சண்டே இந்தியன் - 11, ஜனவரி, 2009.) அரசியலை எண்ணாத சமூகம் கல்வி வளர்ச்சியையும் இயல்பாகவே கைவிட்டுவிடும். அப்படித்தான் இந்திய முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமாகவே இருந்து வந்துள்ளது; இப்போதும் கூட இதில் தலைகீழ் மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லைதான் - சச்சார் குழு அறிக்கை சாட்சியாக! இது மாதிரியான ஆய்வுகளை எவரேனும் முயற்சி செய்தால் அவர்களுக்கான முன்னெடுப்புகளை இந்தநூல் எடுத்துக் கொடுக்கும்.
ஆசிரியர் எடுத்துக்கொண்டிருக்கிற இந்தக் கால கட்டம், இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கிய உச்சத்தைக் கொண்டிருப்பது, பிரிட்டிஷாருககு எதிரான விடுதலைப் போராட்டங்கள் பேரளவில் நிகழ்ந்து, அவர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடித்து வெற்றி பெற்ற கட்டமாகும். இந்தச் சமயத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்பதை ஆய்வு செய்துள்ளது இந்நூல். ஆதலால் அதற்க முந்திய நிலை என்ன என்பதையும் ஆசிரியர் ஆய்வு செய்திருக்கிறார். அவற்றுள் புதிய தகவல்களும் அடங்கியுள்ளன.
தென்னிந்திய முஸ்லிம்கள் வணிகத்தில் ஈடுபட்டு, சோனகர்களுடனும் இதர பிரிவினருடனும் அவற்றைக் கையாண்டு வாழ்ந்திருப்பது ஒரு வகை. இஸ்லாமிய நடைமுறைகள் மேலெழும்போது இதர சமூகத்தாருடன் கொள்கிற பிணக்குகள் அல்லது இணக்கங்கள் பிறிதொரு வகை. ஆனாலும் வணிகத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள் அரசியல் ஆதரவைப் பெற முனையாமல், வருங்காலம் குறித்த சிந்தனைகளில்லாமல் இருந்தது பெரிய வேடிக்கையாகவே இருந்துள்ளது. வணிகத்தை மேம்படுத்துபவர்கள் அந்தந்த நாட்டின் அல்லது பகுதியின் தலைநகரங்களிலோ, வியாபார மேம்பாட்டுப் பகுதிகளிலோ தங்கள் நிறுவனங்களை விஸ்தரித்துக் கொள்வதே இயல்பானது. ஆனால் தமிழ் முஸ்லிம்கள் வெளி நாட்டினருடன் தொழில் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் வந்து காலூன்றவில்லை. அவர்களுடைய அதிகபட்சத் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்து முஸ்லிம்கள் மாத்திரம் இராமநாதபுரம் இராஜாவுடன் உறவுகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். கடலூருக்கு அருகிலுள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர் மற்றும் பிரபல வணிகரான மஹ்மூது ரெய்னா உள்ளிட்ட கப்பலோட்டிய வேறு பல முஸ்லிம்களும் சென்னையில் வந்து குடியேறவில்லை, இங்கிருந் டியே வர்த்தகம் புரியவும் இல்லை. (பக்.29)
சென்னை ராஜதானியில் மூன்று சதவிகிதம் மாத்திரமே இருந்த பிராமணர்கள் படுவேகமாக வளர்ச்சி யடைந்து கல்வித் துறையிலும் அரசுப் பணிகளிலும் ஆதிக்கம் பெற்றார்கள். இதன் பின்னர்தான் முஸ்லிம் களிடையிலும் நவீன கல்வி குறித்த எண்ணம் தோன்றியது. 1902- ஆம் ஆண்டில் தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து வந்த சூழல்களில் முஸ்லிம்களின் மேட்டுக்குடிப் பிரிவும் உண்டானது. இவவ்ளவு முக்கியச் சூழல்கள் நிகழ்ந்தும் கூட முஸ்லிம்களின் அரசியல் எண்ணம் பலமடைய வில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் போன்ற பிளவுகள் அதைப் பிரதிபலித்த நீதிக்கட்சித் தோற்றம், பின்னர் சுயமரியாதை இயக்கம் ஆகியன தோன்றவும் இவற்றினால் அதிர்வலைகள் தோன்றின. இவைதான் முஸ்லிம் சமூகத்தை இலேசாக அசைத்தும் பார்க்கின்றன. அதுவரையிலும் உருது முஸ்லிம்களுடன் மார்க்க ரீதியான ஒருங்கிணைப்பைத் தமிழ் முஸ்லிம்களும் கொண்டிருந்தார்கள்.
சுயமரியாதை இயக்கம் திராவிட உணர்வுகளை முன்மொழியும் போது திராவிடத் தன்மைக்கு அப்பாற்பட்ட உருது முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் முஸ்லிம்கள் இனரீதியாகப் பிளவுபடும் தன்மை உண்டானது. ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் சென்னை ராஜதானியில் உருவாக முடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. அகில இந்திய அளவில் கிலாபத் இயக்கமும் இதே காலத்தில்தான் நடந்தது. வட இந்திய முஸ்லிம்கள் பெற்றிருந்த அரசியல் உணர்வின் வீரியத்தை தென்னிந்திய முஸ்லிம்கள் பெறவில்லை; என்றாலும் தேக்க நிலையும் இல்லை. வெளிப்புறத் தாக்குதல்களினால் முஸ்லிம்களும் முடங்கிவிட முடியாமல் போயிற்று. ஒரு வகையான நிர்பந்தச் சூழல்தான். முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு என யூகிக்கலாம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சச்சரவுகள் குறித்து மோரே குறிப்பிடும்போது, இஸ்லாம் தென்னிந்தியாவில் கால் வைத்ததில் இருந்தே இதற்கான காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்கிறார் (பக் 105) இதைக் குறித்து மேலும் ஆய்வு செய்தலே நல்லது. இது ஆசிரியர் ஜே.பி.பி.மோரேயின் சொந்தக் கருத்துதான்.
ஆயிரக்கணக்கிற்கும் மேலான குறிப்புகளும் நூற்களுமாக அவருடைய இந்த ஆராய்ச்சி நூலுக்கு உதவியுள்ளன. ஆனால் அவருடைய சொந்தக் கருத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் எந்த மேற்கோள்களும் இல்லை அவரிடம். முதலில் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இஸ்லாம் அதன் ஆரம்பக் காலத்திலேயே உணரப்பட்டது. இங்கு முகலாயர் களின் வருகை தேவைப்படவில்லை. சோனகர்கள் எனப்படும் அரேபிய வணிகர்களின் மூலமே அது நிகழ்ந்தது. முத்துக்கள், ரத்தினங்கள், ஏலக்காய், குதிரைகள் என்று பரஸ்பர பரிமாற்றங்கள் மூலம் நிகழ்ந்த உன்னதமான வியாபார உறவுகளும். சூப்பிகளின் ஞானப் பிரச்சாரம் - சேவைகளும் இஸ்லாம் பரவுதலுக்கான உந்துசக்திகள். அப்போது வணிகம் சுமூகமான மதமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.
ஆசிரியர் மோரே இந்து - முஸ்லிம் சச்சரவுகளைக் குறிப்பிடும் போது ஆர்.எஸ்.எஸ். தோன்றுவதற்கு முன் மிகச் சிலவற்றையே சொல்கிறார். அனால் அவர் பட்டியலிடும் பெரும்பாலான வகுப்பு மோதல்களின் காலகட்டம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிறப்புக்குப் பின்னர்தான் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. இந்தியாவில் வகுப்பு மோதல்கள் உக்கிரமாய் வெளிப்பட்டபோது அவற்றின் அலையடிப்புகளே தமிழ்நாட்டிலும் நேர்ந்துள்ளன. மேலும் இஸ்லாம் இந்திய மண்ணில் நுழைந்தபோது ஒன்றுபட்ட இந்து மதம் என்பதும் கிடையாது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் மட்டுமே இருந்தன. இந்து என்ற நாமத்தையே பின்னர் அரேபியர்கள்தான் வழங்கினர். கி.பி. 632-ல் முகம்மது நபியின் மறைவுக்குப் பின் கி.பி. 700-ம் ஆண்டியலேயே நபித் தோழர்களை மிகவும் நெருங்கியிருந்த ஹஸரத் நபி இப்னே சபி என்பவர் குஜராத்தின் பாட்புட் கிராமத்திற்கு வந்து சூஃபித்துவ நெறிமுறையின் கீழ் இஸ்லாத்தைப் பரப்பியுள்ளார். காஷ்மீரும் சூஃபித்துவப் பண்பாட்டில் மலர்ந்ததுதான் என்பதையும் பல வரலாற்று ஆசிரியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாகவே இருவேறு விதமான கலாச்சாரங்கள் ஒரே மண்ணில் இடம் பெறுகையில் சிறுசிறு சச்சரவுகள் முதல் பெரும் மோதல்கள் வரை ஏற்படுவது இயற்கையே. ஆனால் அப்படிப்பட்ட மோதல்களுக்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், நம் வாழ்க்கை அனுபவங்கள் அவற்றிற்கிடையே நல்லுறவுகளை மேம்படுத்த வழிவகுக்கின்றன. இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஒரு நடைமுறை வழியாகப் பார்க்காமல் நமது பாரம்பரியப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவும் பார்த்திருக்கும் ஹக்கீம் அஜ்மல்கான் (1863 - 1928) போன்ற ஆளுமைகளும் நம்மிடையே உள்ளனர். (இந்தியாவும் இஸ்லாமும் - டி.ஞானையா பக்.135) முஸ்லிம்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியதால். அவர்கள் தம் வணிக நலனின் பொருட்டாக சமய ஒற்றுமையை விரும்புபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். சூஃபிகளின் வருகையும் அவர்களின் பணியும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே சுமுக நிலைகளை உருவாக்கத் தவறவில்லை.
முகம்மது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்குத் தமிழ் முஸ்லிம்களின் ஆதரவு எப்படி இருந்தது? அவர்களும் அதை விரும்பியே இருக்கிறார்கள். எனினும் சிறு தயக்கமும் ஊசலாட்டமும் கூடவே இருந்துள்ளன. இதனோடு இயைந்ததாக பெரியார் திராவிட நாடு கோரிக்கையையும் எழுப்பியிருந்தார். அவர் அதற்கு முஸ்லிம்களின் ஆதரவை எதிர்பார்த்தது இயல்பானதே. ஆனால் திராவிட நாடு கோரிக்கையை விடவும் பாகிஸ்தானுக்கான கோரிக்கையே முஸ்லிம்களிடம் அதிகம். முஸ்லிம்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் மைய மதிப்பீடுகளின் வரலாறு சார்ந்த தொடர்ச்சியே பாகிஸ்தான் கோரிக்கை என்று மோரே கூறுகிறார். இதை பிரிட்டிஷ்காரர்கள் துரிதப்படுத்தியது வரலாற்று உண்மை. தங்களின் காலனி நாடுகள் வளர்ச்சி பெறுவதை எந்த ஏகாதிபத்தியமும் விரும்பாது. எதிரும் புதிருமாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் முஸ்லிம்களின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது சுவாரசியமான செய்தியாகும். இந்தியா ஒரு ராமராஜ்யமாக இருக்கும் என்பது காந்தியடிகளின் விருப்பமாக இருந்தது. மகாத்மா காந்தியின் இந்தப் பேச்சு முஸ்லிம்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது. மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதிய ஸ்டேன்லி ஜோன்ஸ் அவ்வாறு கூறியுள்ளார்.
விடுதலைப் போரில் முஸ்லிம்களின் மீது மகாத்மா காந்தி, இராஜாஜி ஆகியோருக்கும் மதரீதியான விமர்சனங்கள் இருந்தன. காங்கிரசிற்குள் இருந்த மதன்மோகன் மாளவியா போன்றவர்களின் செயல்பாடுகள் முஸ்லிம்களின் அச்சத்தைப் பெருகிட வைத்தன என்பதை காந்தியின் கூற்றுக்கான பதிலாக முகம்மது அலி ஜின்னா முன்வைத்தார். காந்தி மேலும் கடுமையான அறிக்கையை வெளியிட இது போன்ற சிக்கல்கள் உதவின. எனவே விடுதலைப்போர் ஒரு முகமாக நடைபெற்றாலும் இந்து - முஸ்லிம் என்ற கசப்புப் பிரிவினைகள் பாகிஸ்தான் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தின. காந்தியைப் போலவே ராஜாஜிக்கும் கடுமையான விமர்சனங்கள் முஸ்லிம் களின் மீது இருந்தது. இதை பிரிட்டிஷார் மேலும் மேலும் ஊதி வளர்த்தார்கள். இந்தியா விடுதலையை நோக்கி முன்னேற, பிரிட்டிஷார் அதை பிரிவினையை நோக்கி நகர்த்தினார்கள். தலைவர்களின் மனக் கசப்புகள் அதற்கு நன்றாக உதவின. ஆனால் இந்துக்களுக் கும் முஸ்லிம்களுக்குமான தனித்தனித் தேசங்களை, பாகிஸ்தானியக் கோரிக்கைக்கும் முன்னரே வைத்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோல்வால்கர்தான். அவருடைய ‘சிந்தனைக் கொத்து’ நூலில் இதைக் காணலாம்.
பாகிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதைப் போலவே, மலபார் முஸ்லிம்களுக்காக மாப்ளஸ்தான் கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆனால் ஜின்னா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் கோரிய திராவிட நாடு கோரிக்கையையும் ஜின்னா ஏற்றுப் போராடவில்லை. முஸ்லிம்களின் ஆதரவும் இல்லை. தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியற் பரிணாமம் வகுப்பு மோதல்களையும் கசப்புணர்வுகளையும் விட்டு விலகியே இருந்தது குறிப்பிடத்தக்கது. உருது முஸ்லிம்களுடன் இனரீதியான வேறுபாடு இருந்தாலும், அவர்கள் அரசியலில் எதிர்ப்புகளைக் கொள்ளவில்லை. முஸ்லிம்லீக் தலைவராயிருந்த முஹம்மது இஸ்மாயில் சாகிப் உருது முஸ்லிம்களுடன் நல்லுறவையே வளர்த்துக் கொண்டார். தமிழ் முஸ்லிம்களுக்கே உரிய நிலப்பரப்பாக இருந்தாலும், உருது முஸ்லிம்களை விட தமிழ் முஸ்லிம்கள் வர்த்தக ரீதியாகப் பெரும் பங்கு வகித்ததும், ஆர்க்காடு நவாப் செல்வாக்கிழந்து பிரிட்டிஷாரை அண்டியிருந்ததும் என உருது முஸ்லிம்களின் ஆதிக்கம் சென்னை ராஜதானியில் எடுபடாமல் போனது. சுயமரியாதை இயக்கம் வீறு பெற்று இருந்ததால் அதனோடு இணைந்த திராவிட உணர்வு தமிழ் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு வாய்ப்பளித்தது. என்ன இருந்தாலும், இவையெல்லாம் இயல்பான வளர்ச்சிப் போக்குகளாகவே பரிணமித்தன. முரட்டுத்தனமான ஆதிக்க மோதல்களும், கண்ணுக்கு மறைவான அதிகாரத்தை இழப்பதில் பதற்றங்களும் உருது முஸ்லிம்களிடத்தில் நிகழவில்லை.
பிரிவினைக்குப் பின் தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட தென்னிந்திய முஸ்லிம்களைப் புதியநிலைக்கு அழைத்துச் சென்றதில் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப்பிற்குப் பெரும் பங்கு இருந்தது. சுதந்திரநாளைக் கொண்டாடும்படி அவர் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். பிரிவினைக் கோரிக்கையின் மிச்ச சொச்சங்களைக் கைவிட்டு இந்திய விடுதலைக்கான போராட்ட உணர்வுகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு, யூனியன் முஸ்லிம் லீகையும் இஸ்மாயில் சாகிப் வழிநடத்திச் சென்றதன் மூலம் பாகிஸ்தானை மனதளவில் துறந்துவிட இந்திய முஸ்லிம்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது.
ஏராளம் ஏராளமான நூல்கள், குறிப்புகள், நேர்காணல்கள், அரசு அறிக்கைகள், நாளிதழ்கள் உள்ளிட்டவை இந்த நூலின் ஆக்கத்திற்கு உதவியுள்ளன. சில மாற்றுக் கருததுக்களும் உள்ளன. பெரம்பூரில் உள்ள ஜமாலியா மதரசாவின் தோற்றம், முஸ்லிம்களின் கல்வி - பொருளாதார நிலை குறித்த நிறைய தகவல்களும், அரசியல் நிகழ்வுகளும் தலைப்பின் உடன்போக்காக வந்துள்ளன. வாசிக்கத் தோதான, நெருடலில்லாத மொழிபெயர்ப் பாக இது இருக்கின்றது. இதனை மொழி பெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. அரிய பணி அவருடையது.
முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ்நாடு மற்றும் சென்னை - 1930 - 1947.
ஆசிரியர்: ஜே.பி.பி.மோரே
பக்கங்கள்: 256 விலை ரூ.110/-
வெளியீடு:
அடையாளம்,
1205/1 கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் - 621 310.
தொலைபேசி : 04332- 273444
சனி, 14 மார்ச், 2009
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரம்தான்
அப்படியே தந்துள்ளோம்.
மேற்கு ஆசியாவில் மெக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று. உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கபாஅவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்! (காபா வரலாறும் அதன் சிறப்புக்களும் காண)
வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும்.
உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒரு தன்மையானதுதான்! அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது. நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மெக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் "ரத்த நிலம்" ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின.
இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். இசுலாம் என்பதற்கு "ஒப்படைப்பு" என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.
பொழுது புலர்வதற்கு முன்னால் தொடங்கி ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும், கூத்தாநல்லூரிலும், வாலாஜாபேட்டையிலும், வங்கதேசத்திலும், இரானிலும், ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.
இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குரான் விதிக்கிறது.
முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.
திருக்குரானில் அல்பாத்தியா என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதியான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்! இறைவன் அல்லா என்றழைக்கப்படுகிறான். "அல்லாகூ அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!
இசுலாத்தில் "இறை ஒருமை" இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.
ஆனால் திருக்குரான் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குரானில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது.
இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க சீரழிவுக் கலாசாரம் இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.
நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமி சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்!
அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கபாஅவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கபாஅவை விலக்கவில்லை. கபாஅ என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.
ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல்.
தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது.
தொழுதல் "உம்மாவோடு" தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! இஸ்தான்புல்லில் உள்ள இப்ராகிமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாவும் இணைய முடிவதற்கு நபிகர் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் உம்மா முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.
கடைசிக் கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!
மெக்கா கபாஅவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும், நிமிர்ந்தும், கைகளைச் சேர்த்தும், விரித்தும், துணியால் மூடப்பட்ட தலையோடு ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!
அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும், உம்மா உருவாக்கமும்!
இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத் தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!
ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும், பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!
ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.
இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்!
எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.
ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லா ஏற்றுக்கொள்வதில்லை என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாவின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!
நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லா உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.
மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!
தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குரான் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!
ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை?" என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!
நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும், எதையும் அருந்தாமலும், இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!
பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.
பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள்.
ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.
ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது!
இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்
எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு இஸ்லாமியர் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்?
1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும், முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும், பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது.
"யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.
உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான்.
உலக மனிதனே இசுலாத்தின் சாரம்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று. என்ற தவறான தகவலுக்கான விளக்கம்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறக்கும் முன்பே அந்த நகரமும் அங்குள்ள காபா ஆலயமும் புனிதமானவைகளாகவே அப்போதுள்ள மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். மக்காவிலுள்ள காபா ஆலயம் முதல் மனிதனின் கரங்களால் கட்டப்பட்டவை அதன் பின் இபுறாஹீம் நபி (அலை) ஆப்ரகாம் என்று சொல்லக்கூடிய இறைத்தூதரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டவை என்று முஸ்லீம்கள் நம்புகிறோம். நபி ஸல் அவர்கள் அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள் இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் சீரமைப்புச் செய்தார்கள் இறைச் செய்தியை பெற்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி நேர்வழிப்படுத்தினார்கள். அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இபுறாஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.
"தவாஃப்" செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்! என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)
அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது "எங்கள் இறைவா!" எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன் (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)
நன்றி : திணமனி செய்தி தாள்.
வெள்ளி, 13 மார்ச், 2009
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
(ஓய்வு)mdaliips@yahoo.com
2009 ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய துணைக் கண்டமே ஆவலுடன் எதிர்பார்த்த மும்பை பத்ரா குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்வளின் வாழ்க்கையினை தத்துருவமாக சித்தரித்த “ஸ்லம்டாக் மில்லினர்” என்ற படத்திற்கு எட்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது கண்டு அனைவர் உள்ளமும் துள்ளிக் குதித்தது. அதற்கு சிகரம் வைத்தாற்போல ஒரு தமிழன் என்ற முறையிலும், அதிலும் ஒரு முஸ்லிம் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த செய்தி அத்தனை இந்தியரையும், குறிப்பாக அதைத்து முஸ்லிம்களும் ஒட்டுமொத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூல்கடித்தது. அமெரிக்க நாட்டின் ஹாலிவுட் நகரை நான் 2001 ஆம் ஆண்டு கண்டிருக்கிறேன். லூஸ் ஏஞ்சலில் உள்ள பிரமாண்டமான அரங்கங்களைப் பார்வையிட உலக அளவில் மக்கள் கூட்டம் மொய்க்கும். அங்கே விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர். ரகுமான் தனது கொஞ்சும் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று நன்றி சொன்னபோது அனைத்து இறை நம்பிக்கை உள்ளவர்களும், குறிப்பாக ஏக இறைவன் அல்லாஹ் மீது ஈமான் கொண்டுள்ள அத்தனை இஸ்லாமியர்களின் உள்ளங்களும் குளிர்ந்தது.
ஏனென்றால் கடும் வெயிலிலும், கரடு முரடான பகுதியிலும், மூட நம்பிக்கையின் மொத்த உருவத்தில் உழன்ற காட்டு அரபிகளின் மத்தியிலே கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்த அன்னல் நபி அவர்கள் அரேபியர்களை செம்மைப்படுத்த தனது 40 ஆம் வயதில் நபித்துவம் பெற்று, சொல்லடியும், கல்லடியும் பெற்று ஏக இறைவன் ‘அல்லஹ்’ என்ற தாரக மந்திரத்தை மாந்தருக்கெல்லாம் கற்றுத்தந்த பொன்மொழி அகில உலகெங்கும் ஒளித்துக் கொண்டிருக்கிறது. மதினாவிலிருந்து மக்காவிற்;க்கு தனது காலடியினை எடுத்து வைத்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? ஏக இறை கொள்கைக்கு எதிராக நாள்தோறும் ஒரு கடவுள் உருவத்தினை வைத்து வணங்கிய ‘காபா’விற்கு சென்று அங்கு இருந்த சிலைகளை தானே ஒரு கம்பினை எடுத்து ஒவ்வொன்றாக உடைத்து எறிந்தார்கள் என்கிறது வரலாறு.ரசூலல்லாவினால் ஏற்றிவைத்த ஏக இறை தத்துவத் தீபத்தினை எடுத்துக்கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தைப் பரப்பிய புகழ் ரசூலல்லாவின் தோழர்களையும், சகாபிகளையும் சாரும். அவ்வாறு பரப்ப இந்தியாவிற்கும் சில சகாபிகள் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள்களும், அவர்களால் ஈர்க்கப்பட்டவர்களும் மரணமடைந்து பல இடங்களில் சமாதிகளும் உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால் அவர்களெல்லாம் தனி சக்தி பெற்று வரம் தருபவர்களல்ல எனக் கருதாது சமாதியே கதி என கிடக்கும் இஸ்லாமியர்களைக் காண பரிதாபமாக இல்லையா?
பாமரர்கள், படிக்காதவர்கள், புகழ் பெறாதவர்கள் அவ்வாறு சமாதிகளை வழி பட்டால் அவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் என விட்டு விடலாம். ஆனால் உலக புகழின் உச்சியில் இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவான ‘பெட்ட தர்காவிற்கு 27.2.2009 அன்று சென்று காலை 7 மணியிலிருந்து மாலை ஒரு மணிவரை வழிபட்டிருக்கிறார். ஏதற்காக? அந்த ‘பெட்ட தர்காவிற்கு வந்த பின்பு தான் தனது ஒவ்வொரு காரியமும் வெற்றியடைந்ததாக’ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். யார் சொல்வது? உலக மக்கள் அத்தனை பேர்களும் டி.வி யில் வைத்த கண் மாறாது லாஸ் ஏஞ்சலில் இரட்டை ஆஸ்கார் விருதினை பெறும்போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உரத்த குரலில் சொன்ன ஏ.ஆர். ரகுமான் தான் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?
அவர் பெட்ட தர்காவில் வழிபட்ட பெட்டிச் செய்தியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
எங்கள் ஊர் இளையாங்குடியில் 1970 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு இங்கே தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் ஊர் அருகில் மல்லிபட்டணம் என்ற ஊர் உள்ளது.அங்கு வருடந்தோரும் ஒரு சிறிய தர்காவின் சந்தனக்கூடு வருடா வருடம் நடக்கும்.அந்த சந்தனக்கூடை இளையாங்குடிக்கு கொண்டுவர சிலர் முயன்றனர். ஆனால் ஈமானில் நம்பிக்கை உள்ள சிலர் சந்தனக்கூடு எடுத்து வந்த டிராக்டரின் டயர்களின் முன் விழுந்து மறித்து எங்கள் பிணம் மீது தான் சந்தனக்கூடு இளையாங்குடிக்குள் வர வேண்டும் என்று எதிர்த்ததால் அந்த முயற்சியினை அவர்கள் கை விட்டனர். அதன் பிறகு இது வரை 30 ஆண்டுகளாக மல்லிபட்டணம் சந்தனக்கூடு இளையாங்குடி எல்லையினைத் தொடவில்லை.ரசூலுல்லாவிற்கு எல்லாம் வல்ல இறைவன் கொள்கையினை கைவிட்டால் உகது மலை அளவு தங்கம் தருவதாகவும், விரும்பும் பெண்ணை மணம் முடித்துத் தருவதாகவும் கூறிய குரைசியர்களின் ஆசை வார்த்தைக்கெல்லாம் ரசூலல்லா மசியவில்லை. ஏன் ரசூலல்லாவிற்குப் பின் வந்த கலிபாக்கள், சகாபிக்கள் நினைத்திருந்தால் தங்களுக்கு அழங்காரமான சமாதிகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அது போன்ற தனி நபர் துதிபாடு;க்கெல்லாம் அவர்கள் இடம் கொடுக்கவில்லை என்பதினை மக்கா, மதினா சென்றவர்கள் நன்கு அறிவர். மாற்று மதத்தினர் காபாவினை படங்களில் பார்க்கும்போது அதனை ஒரு கல் என்றும் எங்களைப்போல் முஸ்லிம்களும் கல்லைத்தானே வணங்க மக்கா செல்கிறார்கள் என்று சொல்வதைக்கேட்டிருக்கிறேன். நான் மக்கா 1999 ஆம் ஆண்டு சென்றபோது காபாவில் அசர்(சுகர்) தொழுது கொண்டு இருந்தபோது அதிசயமாக திடீர் என்று ஆலங்கட்டி மலை பெய்தது. இரவோடு இரவாக காபாவை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது தான் அது கல்லல்ல, மாறாக கதவுடன் கூடிய தொழுகைக் கட்டிடம் என்று அறிந்தேன். இததை மாற்று மதத்தினரிடமும் எடுத்துச் சொன்னால் தான் அவர்களும் புரிந்து கொள்வார்கள்.
இப்போதும் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப்பெற சென்னை மவுணட்ரோடு தர்கா போன்ற இடங்களில் போர்வை, மலர் வலையம் வைப்பதினைக் காணலாம். அவர்கள் எதற்காக அவ்வாறு செய்கிறார்கள் தெரியுமா? முஸ்லிம்களில் சிலர் அங்கு சென்று வழிபடுவதால் தானே மாற்று மதத்தினரும் தர்காக்கள் தான் முஸ்லிம்கள் வழிபடும் கடவுள் என நினைக்கின்றனர். மனநிலை பாதித்த மக்களுக்கு நல்ல மனநல டாக்டர்களிடம் வைத்தியம் செய்யாது இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் வைத்திருந்த 30 க்கு மேற்பட்டோர் தீ விபத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்ததினை நாம் மறக்க முடியுமா?
ஓரு முறை நபித்தோழர் முஆத் பின் ஜபல் ரசூலல்லா அவர்களுடன் பயணம் மேற்கொண்டு இருக்கும் போது முஆத்தை அழைத்து, “ அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்று தெரியுமா? ஏன வினவினார்கள். ஆதற்கு முஆத் அவர்கள், ‘ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள் என்றார்.
அதற்கு ரசூலுல்லாஹ், “மக்கள் அல்லாவிற்கு மட்டுமே அடிபணிந்து வணங்கி வாழ்வதும்-வேறொருவரையும் இணை வைக்காமலிருப்பதும் தான் அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்” என்றார்கள். “ யா முஆதிப்ன ஜபலி குத்து லப்பைக்க யாரசூலல்லாஹி வசைஹ்தைக்க…” என்ற வசனத்தில் இருக்கிறது. இசை முறசு நாகூர் கனிபா 50 வருடத்திற்கு முன்பு நான் சிறுவனாக இருந்த போது பாடிய பாடல் இங்கே சொல்வது பொருத்தமானதாக இருக்கும், “இறைவன் மேல் ஆணை, இறை மறையின் மேல் ஆணை, ஈமான் மறக்க மாட்டேன்”. சாதாரன மக்கள் யாராவது தர்காவிற்கு சென்றால் இஸ்லாத்திற்கு பெரிய தாக்கத்தினை ஏர்ப்படுத்தாது. ஆனால் உலக அளவில் புகழ் பெற்ற ஏ.ஆர். ரகுமான் செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 1987ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது உடல் நலம் குன்றி அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து சென்னை திரும்பிய உடன் கர்னாடகாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதனை அடுத்து மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகமானது. அவர் மறைவதிற்கு பின் அதன் மவுசு குறைந்து விட்டது என்று நான் சொல்லவில்லை, மாற்று மத நண்பர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
ஆகவே எப்போதும் அழியா புகழுடன் இருக்கும் எல்லா வல்ல அல்லாவிஹ்கு யாரும் நிகரில்லை. ஆகவே இனியாவது நாம் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொல்வதினை மாற்றி “எல்லாப் புகழும் அல்லாவிஹ்விற்கே” என்பதின் மூலம் ஏக இறை தத்துவத்திற்கு மாற்று எதுவுமில்லை என இஸ்லாமிய சமூகத்திற்கு உரத்த குரலில் சொல்லலாம்
நன்றி : முதுவை ஹிதாயத்
