ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பருவமழை பலத்த மழையாக கொட்டி வருகிறது.
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பள்ளமான பகுதிகளில் எல்லாம் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்து வருகிறது.
தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. " வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி ஆற்றோரம் வாழ்ந்துவரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஏராளமான கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் சென்று கலந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சுடலையாண்டி ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சுடலையாண்டி எம். எல்.ஏ., ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பரமசிவன், ஆணையர் சுப்புலட்சுமி, டி.எஸ்.ஓ., சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து தலைவர் கந்தசிவசுப்பு, கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ., மழைநீர் தேங்கி கிடந்த பகுதிகளான சிவராமங்கலம், அப்பன்கோவில், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக