ஞாயிறு, 31 மே, 2009

10ஆ‌ம் வகு‌ப்பு சிறப்பு துணைத்தேர்வு‌: நாளை முதல் விண்ணப்ப‌ம்

10ஆ‌ம் வகு‌ப்பு., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் தோ‌‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் நாளை முத‌ல் ‌வ‌ழ‌ங்க‌ப்படு‌‌கிறது.

இது தொட‌ர்பாக அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் மு.மனோகரன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 10ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் தோ‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 5ஆ‌ம் தேதி வரை வழங்கப்படும்.

பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பத்தை பெற்று 5ஆ‌ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். தனித்தேர்வர்கள் அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இணையதள‌ம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமும், அரசு கருவூலக சீட்டாகவும் செலுத்த வேண்டும். ஜூன் 5ஆ‌ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆங்கில உச்சரிப்பில் இந்தியச் சிறுமி சாதனை

ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் போட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த காவ்யா சிவசங்கர் (13) முதலிடம் பெற்றார். அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் ரொக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.

கான்சாஸ் மாநிலத்தின் ஓலத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் 8-வது படிக்கிறார்.

வர்ஜீனியாவைச் சேர்ந்த டிம் ரூட்டர் (12) என்ற ஏழாவது வகுப்பு மாணவன் இரண்டாம் இடம் பிடித்தார்.

இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா பஸ்தபூர் (13) மூன்றாம் இடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு சமீஸ் மிஸ்ரா என்ற இந்திய அமெரிக்கருக்கே இந்த முதல் பரிசு கிடைத்தது.

1998-ல் கலிபோர்னியாவின் சாக்ரமண்டோ நகரைச் சேர்ந்த ராகஸ்ரீ ராமச்சந்திரன் இப்போட்டியில் முதலில் வந்து புதிய மரபைத் தோற்றுவித்தார். அதிலிருந்து அமெரிக்க் குடிமக்களாகிவிட்ட இந்திய வம்சாவழியினர் அதிக எண்ணிக்கையில் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.

1999-ல் நூபுர் லாலா முதல் இடம் பெற்றார். 2002-ல் பிரத்யூஷ் புத்திகவும், 2003-ல் சாய் குண்டூரியும், 2005-ல் அனுராக் காஷ்யப்பும் முதலிடம் பெற்றனர்.

காயல்பட்டினம் ஹாமித்திய்யா நிறுவனத்தில் ஐம்பெரும் விழா

காயல்பட்டினம் புகாரிஷ் ஷரீபு சபையில் ஹாமிதிய்யா சன்மார்க்க கல்வி நிறுவனத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

நபிகள் நாயகம் பிறந்த தின விழா, மகான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜூலானி உதய தின விழா, மகான் ஹாமீது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா, திருமறை குர்ஆன் மனனம் செய்துள்ள மாணவர்களுக்கு ஹாபிழ் (ஸனது) பட்டமளிப்பு விழா, மதரஸôவின் 39-வது ஆண்டு விழா என இந்த ஐம்பெரும் விழா நடைபெற்றது.

முதல் நாள் காலை முதற்கட்ட நகர்வலமும், சன்மார்க்கப் போட்டிகளும் நடைபெற்றன.

இரண்டாம் நாள் மாலை உயற்பயிற்சி மற்றும் தப்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு என்.எஸ். நூஹ் ஹமீத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ஜி. பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மூன்றாம் நாள் காலை இரண்டாம் கட்ட நகர் வலமும், பின்னர் குர்ஆன் மனனம் செய்த மாணவர்களுக்கு ஹாபிழ் (ஸனது) பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.

எஸ்.கே. ஷெய்கு அப்துல்லாஹ் ஜூமானி தலைமை வகித்தார். ஐ.எல். செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஸனது பற்றி விளக்கினார்.

மத்ரஸô பற்றி முதல்வர் ஐ.எல். நூல் ஹக் நுஸ்கி விரிவாக கூறினார். மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.என்.எம். முஹம்மத் இல்யாஸ் சிறப்புரையாற்றினார்.

முதன்மைப் பேராசிரியர் எஸ்.எம். அபூபக்கர் சித்திக் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு உரையாற்றினார்.

எஸ்.எம்.பி. ஹூûஸன் மக்கீ நன்றி கூறினார்

வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு காதர் மொகைதீனை நியமிக்க கோரிக்கை

தமிழக வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகைதீனை நியமிக்க வேண்டும் என, முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் கிளையின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்.கே. முஹம்மது அலி தலைமை வகித்தார். நகர துணைச் செயலர் ஏ.எல்.எஸ். அபூசாலிஹ் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கிவைத்தார்.
நகரச் செயலர் பி.எம்.எஸ். அமானுல்லாஹ் வரவேற்றார்.

மாநிலப் பொதுச் செயலராக பொறுப்பேற்றுள்ள காயல்பட்டினம் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பேரூராட்சித் தலைவர் வி.எம்.எஸ். லெப்பை பெயரை சூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட உதவித் தலைவர் எஸ்.டி. கமால், நகர மாணவரணிச் செயலர் எம்.ஏ.சி. சுஹைல் அஹ்மத், மாவட்ட கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ் ஆகியோர் பேசினர். நகர உதவிச் செயலர் என்.டி. ஸலாஹூத்தீன் நன்றி கூறினார்

கொங்கராயகுறிச்சி- கருங்குளம் இடையே ஆற்றுப்பாலம் : எம்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயகுறிச்சி- கருங்குளம் இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தேன். தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தேன்.

இதையடுத்து பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி கொங்கராயகுறிச்சி- கருங்குளம் இடையே ஆற்றுப்பாலம் அமைக்க முதல் கட்டமாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர் என்றார் எஸ்.ஆர். ஜெயதுரை

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

இன்று (31 -05- 2009 ) நமது ஊர் 2வது தெருவை சார்ந்த ஜனாப் S. அப்துல் ரஹீம் அவர்களின் மகளுக்கு பாளைங்கோட்டை K.T.C. நகரை சார்ந்த மர்ஹும் ஜனாப் S. அப்துல்காதர் அவர்களின் மகனுக்கும் பாளை M.O.C திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.

மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்

தொடர்புக் கொள்ள

MR. அப்துல் ரஹீம் 0091 - 99419 29269
MR. அப்துல் கரீம் 0091 - 98847 95664

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

சனி, 30 மே, 2009

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர் சாவு

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பண்டாரம். இவரது மகன் பாலாஜி (வயது 17). இவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பாலாஜி மரணம் அடைந்தார்.

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இஸ்லாம் - தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!

“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”

“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”

ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.

சமீப காலத்தில் பெங்களூர் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயின. ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் காரணமாகவே கொள்கை வுறுபாடுகள் பல இருந்தாலும் அனைத்து கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இத்தகைய செயல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றனர். அது மிகச் சரியான கண்டனமே என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

ஆனால் இது மாதிரி சமயங்களில் ஒரு சில அறிவிலிகளின் அல்லது எவ்வித கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களின் செயல்பாடுகளினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது ஒரு சாராருக்கு மட்டும் அது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் யார் எனில் உலகின் பல்வேறு திசைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் தான். உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு குண்டு வெடித்து விட்டால் உடனே “இஸ்லாமிய தீவிரவாதிகள்” குண்டு வைத்ததில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி! இதை அவர்கள் தங்கள் கைவசம் உள்ள சக்தி வாய்ந்த ஊடகங்களின் வாயிலாக பிரபலப்படுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பெருமைப்படுகின்றனர்.

அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிபோனதைப் பற்றியும், அதற்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை.
அதே சமயத்தில்,

இலங்கையில் குண்டு வெடிப்பின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு குண்டு வைத்தவர்களின் மதத்தைக் கூறி அவர்களை “இந்து தீவிரவாதிகள்” என்றோ,


அல்லது

ஆந்திரா, அஸ்ஸாம், நேபால் போன்ற இடங்களில் தீவிரவாத செயல்களின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு கொன்றவர்களை அவர்களின் மதத்தை முன்னுறுத்தி அவர்களையும் “இந்து தீவிரவாதிகள்” என்றோ,

அல்லது

அயர்லாந்து, ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறைகளினால் மக்கள் கொல்லப்படும் போது அவர்கள் சார்ந்த மதத்தைக் குறித்து அவர்களைக் “கிறிஸ்தவ தீவிரவாதிகள்” என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.
பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் அத்தகைய தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் “இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். இது தான் முறையானது என்பதே நமது கருத்துமாகும். ஆனால் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், ஒரு சில அறிவிலிகளின் செயலுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தையே தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்தி அதன் மூலம் சத்திய ஜோதியாகிய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அவர்களின் கொள்கையைச் சார்ந்தவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த திட்டம் என்றுமே பலிக்காது. எனெனில் திட்டமிடுபவர்களுக்கெல்லாம் மேலான திட்டமிடுபவனாகிய அல்லாஹ் தன்னுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்:

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)

பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செய்ல்களாகும். இந்த மாதிரியான செயல்களைச் செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது. இவ்வித எச்சரிக்கைகளை மீறி செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. ஆனால் உண்மையான விசயம் என்னவென்றால் இஸ்லாத்தின் எதிரிகளே இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்களின் மீது போடுகின்றனர். (உதாரணம்: <சமீபத்தில் தென்காசியில் கைதானவர்கள் மற்றும் <மஹாராஸ்திரா மாநிலத்தில் கைதானவர்கள் ).

இதற்கு காரணம் சகோதர பாசத்துடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் மிக கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களே இவ்வாறு செய்கின்றனர்.

“இஸ்லாம்” என்ற சொல்லே “அமைதி” (Peace) என்ற பொருளைக் கொண்டது. எனவே “அமைதி” மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இதை நாம் கூறவில்லை! மனித குலம் முழுவதையும் படைத்து பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வே தன்னுடைய திருவேதத்திலே கூறுகிறான்: -

அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் மனிதர்கள் யாவரையும் கொலைச் செய்தவன் போலாவான்: -

இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை!

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும், சிறுவர்களையும் கொல்ல தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா, அஹ்மத், அல்முஅத்தா.

கொலை செய்யப்பட்டவரின் வாரிசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது!

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்-குர்ஆன் 17:33)

அநியாயமாக கொலை செய்பவனுக்கு கடுமையான தண்டணை இருக்கிறது!

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (அல்-குர்ஆன் 25:68)

இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது: -

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)

குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்: -

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல்-குர்ஆன் 4:93)

நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது கொலையைப் பற்றித்தான்!

(மறுமையில்) மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது (கொலை செய்து ஓட்டிய) இரத்தம் பற்றித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது.

ஆனால் இவைகளை நன்றாக அறிந்திருந்தும் மத துவேசிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் செயலோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது அல்லது தாங்களே தங்களின் கூலிகளின் மூலம் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அவற்றை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் செய்ததாக விளம்பரப்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் கண்டத்திற்குரியது மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் இருக்கிறது. நடுநிலையான பெரும்பாண்மை மக்கள் இத்தகைய மத துவேசிகளின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) இன்னும், ‘சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 17:81)

தொடர்பான கட்டுரைகளின் இணைப்புகள் - நன்றி: சத்தியமார்க்கம்.காம்

நன்றி : சுவன தென்றல்

முஸ்லிம்களின் நற்பண்புகள்!

ஸலாம் கூறுதல்!

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.

நாவைப் பேணுதல்!

‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.
வாக்குறுதியை நிறைவேற்றுதல்!

“(நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்” (அல்-குர்ஆன் 17:34)

கோபத்தை அடக்குதல்!

“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:134)

பொறுமையைக் கடைபிடித்தல்!

“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3:200)
நயவஞ்சகத் தன்மைகளை விட்டும் விலகியிருத்தல்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று. 1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், 3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல்!

“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 24:30)

வறியவர்களுக்கு உதவுதல்!

“மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்” (அல்-குர்ஆன் 76:8)

விருந்தினரைக் கண்ணியப்படுத்துல், மற்றும் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழுதல்!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

பிறர் வீடுகளில் நுழைவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறுதல்!

“ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)” (அல்-குர்ஆன் 24:27)

பெற்றோர்களைப் பேணுதல்!

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!

குணத்தில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி.

குடும்பத்தினர்களுக்கு செலவு செய்தல்!

தனது பொறுப்பிலுள்ளவர்களை ஒருவன் கவனிக்காமலிருப்பது அவன் பாவி என்பதற்கு போதுமான சான்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : அஹ்மத், அபூதாவுத்.

உறவினர்களைப் பேணுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்” (அல்-குர்ஆன் 16:90)

உறவினர்களுடன் சேர்ந்திருத்தல்!

தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) மற்றும்அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்:புகாரி

சகோதர முஸ்லிமுடன் நட்புறவு கொள்ளுதல்!

“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல்!

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)

நன்றி : சுவன தென்றல்

வெள்ளி, 29 மே, 2009

மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர்; கவர்னர் அறிவிப்பு


தமிழக துணை முதல்வராக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி வசமிருந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தொழில், சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட், சமூக சீரமைப்பு ஆகிய துறைகளையும் இனி மு.க.ஸ்டானின் கவனிப்பார் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உள்ளாட்சி மற்றும் ஊரக மேம்பாடு ஆகிய துறைகளை ஸ்டாலின் கவனித்து வருகிறார்.

பி.எஸ்.என்.எல். புதிய சலுகை: எஸ்.டி.டி. 25 பைசா; உள்ளூர் அழைப்பு 10 பைசா; மத்திய மந்திரி ராசா அறிவிப்பு

மத்திய மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்ப மந்திரியாக ஆ. ராசா நேற்று பதவி ஏற்றார். பதவியேற்ற பின் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடரும். தொலைபேசி கட்டணத்தை குறைக்க உரிய வழிகள் காணப்படும். சீரிய நிர்வாகத்தின் காரணமாக உள்ளூர் அழைப்பு நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்.டி.டி. அழைப்பு 25 பைசாவாகவும் குறையும்.

3ஜி அலைக்கற்றை ஏலம், வயர்லெஸ், விமாகஸ் அகண்ட அலைவரிசை, அரசு அலுவலகங்களில் கீழ்நிலை வரை கம்ப்யூட்டர் மயமாக்கல் ஆகியவற்றுக்கு எமது துறை முக்கியத்துவம் தரும். தபால் துறை சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

பி.எஸ்.என்.எல். வழங்கும் நோவா நெட் அதிவேக இன்டர்நெட் சேவை தூத்துக்குடியில் அறிமுகம்

தூத்துக்குடி மாவட்ட மக்களை கவரும் வகையில் இன்டர்நெட் சேவையை அதிகப்படுத்த நகர்புறம் மற்றும் கிராமப்புர மக்கள் பயன்படும் வகையில் நோவா நெட் சேவையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத் சஞ்சார் நிகாம் சார்பில் இன்று காலை 11மணியளவில் அதன் தூத்துக்குடி பொதுமேலளாளர் நடராஜன் நோவா நெட் என்ற தனி இன்டர்நெட் சேவையை துவக்கி வைத்தார். அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கமளித்த அவர், பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு நோவா நெட் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதற்கு முன் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் தேவை. இனிமேல் அது அவசியம் இல்லை வாடிக்கையாளர்களுக்கு நோவா நெட் பிசி என்ற கருவி, மானிட்டர் மற்றும் கீபோர்டு, பிராட் பேன்ட் இணைப்போடு வழங்கப்படுகிறது.


இந்த நோவா நெட் கம்ப்யூட்டரில் ஈமெயில், பிரவுசிங், சேட்டிங், மீடியா பிளேயர் மற்றும் ஆபிஸ் டாகுமென்ட் மேக்கர், பைல் மேனேஜர், பேரன்டல் கன்ட்ரோல், மல்டிபிள் யூசர் மேனேஜ்மென்ட், ரிமோட் சர்வில்லியன்ஸ் மற்றும் கேம்ஸ் போன்ற வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் உபயோகிக்கலாம்.

நோவா நெட் கம்ப்யூட்டருடன் பிராட்பேண்டுக்காக மாத வாடகையாக மூன்று திட்டங்களை பி.எஸ்.என்.எல்.நிறுவனம் வழங்குகிறது. ஹோம் பிளான் 125 வாடிக்கையாளர்களுக்கு ரூ.274ம், ஹோம் பிளான் 250 வாடிக்கையாளர்களுக்கு ரூ.374ம், அன்லிமிடெட் பிளானுக்கு ரூ.850ம் மாத கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இணைப்புடன் ரூ.1200 மதிப்புள மோடம் இலவசமாக வழங்கப்படும்.

நோவா நெட் கம்ப்யூட்டர் பெற விரும்புவோர் ரூ.6364 செலுத்த வேண்டும். இதில் பி.எஸ்.என்.எல். நோவாநெட் பிசி, கீபோர்டு உடன் மானிட்டர் வழங்கப்படும். மானிட்டர் தேவையில்லாதவர்கள் ரூ.2999 மட்டும் செலுத்தினால் இந்த இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் வீடுகளில் உள்ள LCD டிவி மூலமும் இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக நோவா நெட் பிசி, வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ், வை-பி அக்ஸஸ் ஆகியவைகளுக்கு கட்டணமாக ரூ.5193 செலுத்தி இன்டர்நெட் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகளை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், அதன்கீழ் இயங்கும முகவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என்று பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நோவா நெட் கம்ப்யூட்டர் தூத்துக்குடி மாவட்ட விற்பனைதாரராக தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள காயத்ரி இன்போடெக் என்ற கம்ப்யூட்டர் விற்பனை நிலையம் செயல்படுவதாக அதன் உரிமையாளர் ஏ.கே.ஜெயகுமார் தெரிவித்தார்
நன்றி : சிவராம், (படம்: இருதயராஜ்) , தூத்துக்குடி.

மத்திய அமைச்சர்கள் பட்டியல்- முழு விவரம்


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்து 79 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் குறித்த முழு விவரம்:

கேபினட் அமைச்சர்கள்:

1. மன்மோகன் சிங் - பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.

2. பிரணாப் முகர்ஜி - நிதி

3. ப.சிதம்பரம் - உள்துறை.

4. எஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவு.

5. மம்தா பானர்ஜி - ரயில்வே

6. ஏ.கே.ஆண்டனி - பாதுகாப்பு.

7. சரத்பவார் - விவசாயம்

8. வீர்பத்ரசிங் - எஃகுத் துறை.

9. விலாஸ்ராவ் தேஷ்முக் -கனரக தொழில் மற்றும் பொதுத்துறை.

10. குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்

11. சுஷில் குமார் ஷிண்டே - மின்சாரம்

12. வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதித்துறை.

13. பரூக் அப்துல்லா - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

14. ஜெய்ப்பால் ரெட்டி - நகர்புற வளர்ச்சி

15. கமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.

16. வயலார் ரவி - வெளிநாடுவாழ் இந்தியர் நலன்

17. மீரா குமார் - நீர் வள ஆதாரம்

18. தயாநிதிமாறன்- ஜவுளி.

19. ஆ. ராசா - தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்.

20. முரளி தியோரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.

21. அம்பிகா சோனி - தகவல் ஒலிபரப்பு.

22. மல்லிகார்ஜூன கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.

23. கபில்சிபல் - மனிதவள மேம்பாடு.

24. பி.கே. ஹண்டிக் - சுரங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு.

25. ஆனந்த் சர்மா - வர்த்தகம், தொழில்துறை.

26. சி.பி. ஜோஷி - கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்.

27. குமாரி செல்ஜா - வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா.

28. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்.

29. எம்.எஸ்.கில்- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு.

30. ஜி.கே.வாசன்- கப்பல் போக்குவரத்து.

31. பவன் கே. பன்சல் - நாடாளுமன்ற விவகாரம்.

32. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அமலாக்கம்.

33. காந்திலால் பூரியா-பழங்குடியினர் நலன்.

34. மு.க. அழகிரி- ரசாயனம், உரம்

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):

1. பிரபுஃல் படேல் - சிவில் விமானப் போக்குவரத்து.

2. பிரிதிவிராஜ் சவுகான் - விஞ்ஞானம், தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், ராணுவ வீரர் நலன், மக்கள் குறை கேட்பு, ஓய்வூதியம், நாடாளுமன்ற விவகாரம்.

3. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல், திட்ட அமலாக்கம்.

4. சல்மான் குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்.

5. தின்ஷா ஜே. படேல் - குறு, சிறு, நடுத்தர தொழில் துறை.

6. கிருஷ்ண தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.

7. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்.

இணை அமைச்சர்கள்:

1. ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம், உரம்.

2. ஈ. அகமது - ரயில்வே.

3. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் - உள்துறை.

4. வி.நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்.

5. ஜோதிர் ஆதித்ய சிந்தியா - வர்த்தகம், தொழில்துறை.

6. டி. புரந்தேஸ்வரி- மனிதவள மேம்பாடு.

7. கே.எச்.முனியப்பா- ரயில்வே.

8. அஜய் மக்கான்- உள்துறை.

9. பனபகா லட்சுமி- ஜவுளி.

10. நமோ நாராயண் மீனா- நிதித்துறை.

11. எம்.எம்.பல்லம் ராஜூ - பாதுகாப்பு.

12. சவுகதா ராய் - நகர்புற வளர்ச்சி.

13. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்- நிதி.

14. ஜிதின் பிரசாதா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.

15. ஏ.சாய் பிரதாப்- எஃகு

16. பிரனீத் கவுர்- வெளியுறவு.

17. குருதாஸ் காமத் - தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்.

18. ஹரீஷ் ராவத் - தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு.

19. கே.வி. தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது வினியோகம்.

20. பரத் சிங் சோலங்கி - எரிசக்தி

21. மகாதேவ் எஸ்.கந்தேலால்- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.

22. தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலன்.

23. சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு.

24. சுல்தான் அகமது- சுற்றுலா.

25. முகுல் ராய் - கப்பல் போக்குவரத்து.

26. மோகன் ஜதுவா- தகவல் ஒலிபரப்பு.

27. டி.நெப்போலியன் - சமூகநீதி, அமலாக்கம்.

28. எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல் ஒலிபரப்பு.

29. காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலன்.

30. துஷார் பாய் செளத்ரி - பழங்குடியினர் நலன்.

31. சச்சின் பைலட் - தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்.

32. அருண்யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு.

33. பிரதீக் பிரகாஷ்பாபு பாட்டீல் - கனரக தொழில் துறை, பொதுத்துறை.

34. ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.

35. சசிதரூர் - வெளியுறவு.

36. வின்சென்ட் பலா - நீர்வளம்.

37. பிரதீப் ஜெயின் - கிராமப்புற மேம்பாடு.

38. அகதா சங்மா - கிராமப்புற மேம்பாடு.

இணை தளத்தில் முத‌ல் முறையாக‌ தமிழ் குரான்

அஸ்ஸ‌லாமு அலைக்கும்

முத‌ல் முறையாக‌ த‌மிழ் குரானை அத‌ன் உண்மையான‌ புத்த‌க‌ வ‌டிவில் வ‌லை உல‌கில் அறிமுக‌ப் ப‌டுத்துகிறோம். குரானின் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து போல் நீங்க‌ள் புர‌ட்டி உங்க‌ளுக்கு தேவைப் ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளையோ, திருகுரானின் அத்தியாய‌ங்க‌ளையோ புர‌ட்டி பார்த்துக் கொள்ள‌லாம். நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌ முய‌ற்சிக்கு உங்க‌ள் முழுமையான‌ ஆத‌ர‌வே கார‌ண‌ம் திருகுரானை இந்த‌ புதிய‌ வ‌டிவில் காண‌ கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் அமுத்த‌வும்

http://tamilquranmp 3.com/

த‌ய‌வு செய்து இந்த‌ ம‌ட‌லை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கும் அனுப்பித் த‌ந்து அணைவ‌ரும் ப‌ய‌ன் பெற‌ செய்ய‌வும். என்றும் உங்க‌ள‌ ஆத‌ர‌வை நாடும் k@der Adminstrator

ஈமெயில் உதவி : Mr.Abubacker Siddique, Dubai

சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்


தேவ்பந்த்: ஏறத்தாழ 114 மொழிகளில் இதுவரை சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ள இறைமறையான குர் ஆன் தற்போது சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. புகழ்பெற்ற நூலாசிரியரும் பேராசிரியருமான முஹம்மது சுலைமான் அவர்களின் பேத்தியான ரஜியா சுல்தானா இப்பணியைச் செய்யத் துவங்கியுள்ளார்.
பேராசிரியர் முஹம்மது சுலைமான் ஏற்கனவே குர் ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் குர்ஆன் விரிவுரையையும் இரு பகுதிகளாக ஜம்மியத்-உலமா-யே- ஹிந்த் மூலம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது
21 வயதான சகோதரி ரஜியா சுல்தானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். இப்பணியினை மனதிற்கொண்டே தான் சமஸ்கிருதத்தில் M.A படிநிலையைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். இஸ்லாமிய நூல்கள் சமஸ்கிருதத்தில் மிகக் குறைந்து இருப்பதால் உயர்தர இத்தகைய நெறிமுறைகள் சமஸ்கிருதம் அறிந்த மக்களுக்குக் கொண்டு சேர்க்க தாம் விரும்பியதாகவும் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முழுமையான தொகுப்பிலும், பகுதி மொழிபெயர்ப்புகளும் சேர்த்து இறைமறை குர்ஆன் இதுவரை 114 மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன என்பது கூடுதல் தகவலாகும்
சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கத் துவங்கியுள்ள இச்சகோதரியின் தூய குறிக்கோள் சிறந்த முறையில் வெற்றி பெற இறை பிரார்த்தனைகளுடன் சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதனுடன் ஸ்ரீவை மக்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது
தகவல் : சத்தியமார்க்கம்

தமிழகத்தில் ஏழை இஸ்லாமிய மாணவியருக்கான விடுதிகள்!

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேரும் இஸ்லாமிய மாணவியரின் குடும்ப வருமான வரம்பை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் சிறுபான்மை இஸ்லாமிய மாணவிகள், தங்கிப் படிக்க திருச்சி, திருநெல்வேலி, கோவை, வேலூர் மற்றும் திண்டுக்கல்லில் புதிதாக ஐந்து மாணவியர் விடுதிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது நினைவிருக்கலாம்

இந்த விடுதிகளில் சேர, இஸ்லாமிய மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இதை தற்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை குடும்ப வருமானம் கொண்ட ஏழை இஸ்லாமிய மாணவியர் பெரிதும் பயனடைவர்.

இந்த உத்தரவை வழங்கிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றிகள்

வியாழன், 28 மே, 2009

தமிழகத்தில் நாட்டின் முதல் பெண் சிறைத்துறை டிஐஜி!

இந்தியாவின் முதல் பெண் சிறைத்துறை டிஐஜி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த ராஜ செளந்தரி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை புழல், வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கான மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றை தவிர்தது பெண் கைதிகளுக்கான 10 துணை சிறைகளும் இருக்கின்றன. இதில் சுமார் 855 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறைகளில் இதுவரை பெண்கள் அதிகபட்சமாக சூப்பிரண்டுகளாக மட்டுமே இருந்தனர். ஆனால், சிறைத்துறை டிஐஜிக்கள் அனைவரும் ஆண்களாக தான் இருந்தனர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதே நிலை தான் நீடித்தது.

இந்நிலையில் இந்த குறையை போக்கும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டிஐஜி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் ராஜ செளந்தரி.வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் 12 ஆண்டுகள் சூப்பிரண்டாக இருந்த இவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல்வர் கருணாநிதியின் உத்தரவையடுத்து முதல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதையடுத்து அவர் இந்தியாவின் முதல் சிறைத்துறை டிஐஜி என்ற பெருமை பெற்றுள்ளார்.

சிங்கப்பூரிலும் பன்றிக்காய்ச்சல்

சிங்கப்பூரில் ' ஸ்வைன் ஃபுளூ ' எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் 22 வயது பெண் ஒருவருக்கு தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்பிய அந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பெண்தான் சிங்கப்பூரின் முதல் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கிய நபர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நோய் தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண் கடந்த 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நியூயார்க்கில் தங்கியிருந்ததாகவும்,அப்போது அவருக்கு 'ஸ்வைன் ஃபுளூ ' தாக்கியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வைகாசி விசாகம், ஜூன் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூரில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஜூன் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை அளிக்கப்டுவதாக ஆட்சியர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அன்று செயல்படாது.

மாவட்ட கருவூலம், சார்புநிலை கருவூலம் குறைந்த அளவில் செயல்படும். ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக ஜூன் 13.6.2009 சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடுமுறை நாள் பொது விடுமுறை அல்ல என (Negotiable Instrument Act) அறிவிக்கப்படுகிறது.

திருச்செந்தூரில் 30-ல் இதய நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

திருச்செந்தூரில் இம் மாதம் 30-ம் தேதி பொதுமக்களுக்கான இதய நலன் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்செந்தூர் கிளை சார்பில் ஐஎம்ஏ திருமண மண்டபத்தில் அன்று மாலை 5 மணிக்கு கருத்தரங்கு நடைபெறுகிறது.

பிரபல இதய நல மருத்துவர் திருச்சியைச் சேர்ந்த சென்னியப்பன் பங்கேற்று மாரடைப்புக்கான காரணம், தடுக்கும் முறைகள் குறித்து பேசுவார். இதய நோய் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கமளிப்பார்.

பொதுமக்கள் பங்கேற்று இதய நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என திருச்செந்தூர் இந்திய மருத்துவ சங்கச் செயலர் டாக்டர் அ ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

காயல்பட்டினத்தில் மனித நேய கருத்தரங்கு

காயல்பட்டினத்தில் மனித நேய கருத்தரங்கு நடைபெற்றது.
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு ஷேகனா லெப்பை தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளைச் செயலர் டி.ஏ.எஸ். அபூபக்கர், அடைக்கலாபுரம் புனித சூசை அறக்கட்டளையைச் சேர்ந்த பிரான்சிஸ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஓய்வுபெற்ற மக்கள் தொடர்பு அலுவலர் இரா. கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத் தலைவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துளிர் நிறுவனம், நிரஞ்சனம் மனநல மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்

புதன், 27 மே, 2009

தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க முயற்சி; பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் அறிவிப்பு

திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே தற்போது வாரம் ஒருநாள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

அது போல வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3.40 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.

பயணிகள் வேண்டு கோளை ஏற்று இந்த ரெயிலை வாரத்தில் 5 நாட்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த அறிவிப்பை அதிகாரிகள் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்தனர்.

தற்போது கோடை விடு முறையில் தென்னகத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதாலும், தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்றதாலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை முன்பு திட்டமிட்டது போல் வாரத்திற்கு 5 நாட்கள் இயக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயதுரை எம்.பி. கூறும்போது, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இல்லாமல் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று கூறினார்.

தற்போது ரெயில்வே மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். விரைவில் இந்த துறைக்கு துணை மந்திரிகள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த முறை போல இந்த முறையும் ரெயில்வே துணை மந்திரி தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு மத்திய மந்திரிகள், மற்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்கிறார்கள்.

பின்னர் பாராளுமன்ற கூட்டம் வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் இதற்கான முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி ஓடும் என்று கூறப்படுகிறது.

இது போல் நெல்லையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம் கொங்கன் மலைப்பாதை வழியாக மும்பைக்கு வாரம் ஒரு ரெயில் விடவும் கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரெயிலையும் விரைவில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த ரெயிலையும் விரைவில் இயக்க ரெயில்வே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்

சென்னைஸ்ரீவைஜமாஅத் மாணவனின் படிப்புக்கு உதவியது

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை ஜமாஅத் சார்த்த 2வது தெருவில் வசிக்கும் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகன் பாதுஷா கடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 428 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் எடு‌த்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அந்த மாணவன் தொடர்த்து படிக்க பொருளாதார வசதி இல்லை என்பதை அறிந்த சென்னைஸ்ரீவைஜமாஅத் மாணவனின் படிப்பை தொடர தொழில் கல்வி அல்லது உயர் கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு எங்களது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்.

மாணவனின் பொருளாதார நிலையை,சென்னைஸ்ரீவைஜமாஅத் அமைப்புக்கு எடுத்து கூறிய ஸ்ரீவை ஊர் சார்த்த மர்ஹும் ஜனாப் R.M. பாட்சா அவர்களின் மகன் ஜனாப் R.M.B. ஜவ்ஹர் ஷா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளையும் , நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலாம்

srivaimakkal@gmail.com

வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை ஜமாஅத் சார்த்த 2வது தெருவில் வசிக்கும் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகன் பாதுஷா கடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 428 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் எடு‌த்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு எங்களது உள்ளங்கனிந்த, வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

தொலைக்காட்சியில் ஜவாஹிருல்லாஹ்


27.05.09 இன்று இரவு தமிழன் தொலைக்காட்சியில்,முனைவர்.பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்" மக்களவைத் தேர்தல் தோல்வி -- சுய விமரிசனம் "என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார்.காணத் தவறாதீர்கள்
இந்தியா ---- இரவு 10.30 முதல் 11.00 வரை
சவுதி , கத்தார்,பஹ்ரைன்,குவைத் ---- இரவு 8.00 முதல் 8.30 வரை
UAE (அமீரகம் ) மற்றும் ஓமன் --- இரவு 9.00 முதல் 9.30 வரைஅவசியம் பாருங்கள்.... பிறரையும் பார்க்கத் தூண்டுங்கள்.

காவல் துறைக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரிக்கை

காயல்பட்டினத்தில் நிகழ்ந்த கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்புடையோரை விரைந்து கண்டுபிடித்து சட்டப்பூர்வ தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரியுள்ளது.

இதுதொடர்பாக பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:

காயல்பட்டினத்தில் கடந்த 3-ம் தேதி கொலை முயற்சி, அரிவாள் வெட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், இப் பகுதி மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு காயல்பட்டினத்தில் உள்ள பிரபல வணிகர் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த 2 சம்பவங்களிலும் தொடர்புடையோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு சட்டப்பூர்வ தண்டனை கிடைக்க போலீஸôர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது

செவ்வாய், 26 மே, 2009

தூத்துக்குடி மாவட்டத்தில் சூறாவளி காற்றால் 2.5லட்சம் வாழைகள் சேதம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் சரிந்து சேதமடைந்தன. கடையனோடை, தென்திருப்பேரை பகுதியில் அதிகபட்சமாக 2 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்று சூறாவளியாக மாறியது. நேற்று மாலை வரை நீடித்த சூறாவளி காற்றால் பயிரிட்டுள்ள வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் பகுதியில் அதிக அளவில் வாழை பயிரிடும் பணி ஆத்தூர், ஆறுமுகநேரி, கீரனூர், தலைவன்வடலி, மேல ஆத்தூர், சுகந்தலை, மரந்தலை, சேர்ந்த பூமங்கலம், குரும்பூர் ஆகிய கிராமங்களில் பெருமளவில் விவசாயிகள் வாழையை நம்பி வருகின்றனர்.
நேற்று வீசிய சூறாவளிக் காற்றினால் தென்திருப்பேரை, கடையனோடை ஆகிய கிராமங்களில் வாழைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சுமார் 5லட்சம் வாழைகளில் சுமார் 2.5 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த வாழைகளில் தார்கள் குழை தள்ளிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குற்றாலம் மலையில் பரபரப்பு சம்பவம் காயல்பட்டினத்தை சேர்ந்த 4 பேரை மலை தேனீக்கள் கொட்டின

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மஜீத் மகன் நயினார் (20)பி.ஏ. படித்து வருகிறார்.

இவர் தனது நண்பர்கள் போஸ் முகமது (19), சுலைமான் (19), பீர்முகமது (14), ஆகியோருடன் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார்.

மலையில் உள்ள செண்பகாதேவி அருவிக்கு சென்ற அவர்கள் அங்கிருந்து தேனருவிக்கு சென்றனர். அதன் பின்னர் ஆசை அதிகரிக்கவே தேனருவியின் உச்சிக்கு சென்றனர். தேனருவியின் மேல் பகுதியில் தேன் கூடுகள் அதிக அளவில் உள்ளன. இதைபார்த்த 4 பேரும் தேன் எடுக்கும் ஆசையில் தேன் கூட்டின் மீது கல்லை வீசினர்.

இதனால் ஆயிரக்கணக்கான மலை தேனீக்கள் கூட்டில் இருந்து கலைந்து 4 பேரையும் விரட்டி விரட்டி கொட்டியது.

தேனீக்களிடம் இருந்து தப்பிக்க 4 பேரும் அலறியடித்து ஓடினர். அப்போது கல்லூரி மாணவர் நயினார் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

உயிருக்கு போராடிய அவரை மற்ற 3 பேரும் காப்பாற்ற முயன்றனர். அவர்களால் முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வந்து தகவல் தெரிவித்தனர். இது பற்றி தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நிலைய அதிகாரி ராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நயினாரை கயிறு மூலம் காப்பாற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தேனீ கொட்டியதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே நயினார் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது; சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


குற்றாலத்தில் வழக்கத்தை விட முன்கூட்டியே சீசன் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சீசனுக்கான அறிகுறிகள் தென்பட்டன. மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசிய வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியது.

மலைப்பகுதியில் மழை பெய்ததால் நேற்று மதியம் முதல் மெயின் அருவியிலும் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதனால் கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தென்காசி, குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் குளு, குளு கால நிலை நிலவுகிறது.

சுற்றுலா பயணிகள் வர தொடங்கியதையடுத்து குற்றாலத்தில் சீசன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீசன் தொடங்கியுள்ளதால் குற்றாலம் பகுதி வர்த்தகர்கள், சிறுவியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


ஜூன் 15 முதல் மின்வாரியம் மூன்று அரசு கம்பெனிகளாக பிரிப்பு

தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று அரசு கம்பெனிகளாக பிரித்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று அரசு கம்பெனிகளாக பிரிக்க, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் இத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது

இந்த நிலையில், தற்போது டிரான்ஸ்மிஷன் கம்பெனி, மின் உற்பத்தி கம்பெனி, மின் விநியோக கம்பெனி என்ற பெயர்களில் மூன்று அரசு கம்பெனிகளாக மின்வாரியம் பிரிக்கப்பட்டுள்ளது

இந்த மூன்று கம்பெனிகளும் ஜூன் 15-ம் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது

இதற்காக இந்த கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு ஆகியோரை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மின் வாரிய கம்பெனிகளின் பெரும்பான்மையான பங்குகளை அரசே வைத்து கொள்ள தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஒவ்வொரு கம்பெனிக்கும் நிர்வாக இயக்குநர் நியமனம் செய்வது, நிதி ஒதுக்குவது உட்பட அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருவதாக மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் எதிரொலி தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

பன்றிக் காய்ச்சல் எதிரொலி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநகராட்சி பகுதிகளில் தெருக்களிலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் பன்றிகள் சுற்றிவருவது கண்டறியப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்போர் பன்றிகளை மாநகராட்சி எல்லைக்கு வெளியே குடியிருப்பு பகுதிக்கு அப்பால் கொட்டகைகளில் விட்டு வளர்க்கவேண்டும்.

பன்றிக் காய்ச்சல் பொது மக்களுக்கு வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதை தடுப்பது அவசியமாகிறது.

எனவே, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 13-ன் கீழ், மாவட்ட நீதிபதிக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பன்றி வளர்ப்போர் உடனே அகற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையர் மூலமாக சுற்றித் திரியும் பன்றிகளை அகற்றிடவோ, அழித்திடவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

முதல் செயற்கைக்கோளை ஏவுகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முதல் செயற்கைக்கோளை வரும் அக்டோபர் மாதம் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இது அந்நாட்டு அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொலைத் தொடர்பு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக அல்-யாஹ் செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் மார்டின் ஜீ, கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், செயற்கைக்கோளின் வடிவம் மற்றும் அது சுமந்து செல்லும் பொருட்களின் எடை இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் தெரிவித்துள்ளார்
யாஷாட்-1ஏ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், அந்நாட்டின் தொலைத் தொடர்பு சேவைக்காக பயன்படுத்தப்படும் என்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு சேவையை வழங்க இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
யாஷாட்-1ஏ செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியாக யாஷாட்-1பி என்ற செயற்கைக்கோளை 2011ஆம் ஆண்டின் மத்தியில் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது

தூத்துக்குடியில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு


தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பிரகாஷ் கேடயம் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முத்து அரங்கில் மாவட்ட அளவில் பிளஸ்2, 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் பிரகாஷ் ரேங்க் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

இதில் மாவட்ட அளவில் பிளஸ்2 தேர்வில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி சி.பிரதீப், இரண்டாவது இடத்தை அதே பள்ளி மாணவர் பிரசாந்த், மூன்றாமிடம் பெற்ற கோவில்பட்டி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா, செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிராஸ்பர், தி விசாகா மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்கிரவர்த்தி, தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆனந்த் ஜானகிராம், மாணவி சௌமியா ஆகியோருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

10ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியாகிருஷ்ணா, 2ம் இடம் பெற்ற காயல்பட்டிணம் எல்.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர் அமானுல்லா, குலசேகரபட்டிணம் திருஅருள் மேல்நிலைப்பள்ளி மாணவி இசக்கிசெல்வி, 3ம் இடம் பெற்ற காயல்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷாபீவி, தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகானா சௌந்தரி, தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நட்டாச்சியம்மாள், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் வெங்கடேஷ் ஆகியோருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற எக்ஸ்.என்.மெட்ரிக் பள்ளி மாணவி பாலபிரியதர்ஷினி, 2ம் இடம் பெற்ற எக்ஸ்.என்.மெட்ரிக் பள்ளி மாணவி ஏஞ்சலின், தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி மாணவி கிப்டி, 3ம் இடம் பெற்ற கோவில்பட்டி ராவில்லா கே.ஆர்.ஏ.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லாரன்ஸ்ஏமிலி ஆகியோருக்கும், ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் இரு இடம் பெற்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ராபியாபேகம், ராஜபிரியா, 3ம் இடம் பெற்ற பிரியதர்ஷினி, சோனிகா வைசாலி ஆகியோருக்கும் கலெக்டர் பிரகாஷ் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் டி.ஆர்.ஓ.அன்பரசு, செய்தி மக்கள் தொடர்புதுறை பி.ஆர்.ஓ.சாரதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் பலர் உடனிருந்தனர்

திங்கள், 25 மே, 2009

தோழப்பன் பண்ணையில் புதிய டிரான்ஸ்பார்மர்

ஸ்ரீவைகுண்டம்,தோழப்பன் பண்ணையில் ஏற்கனவே உள்ள டிரான்ஸ் பார்மர் குறைந்த மின் அழுத்தத்தில் இருந்ததால், கிராம மக்களுக்கு போதுமான மின்சாரம் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊர் பொது மக்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து தற்போது மேலும் 100 கிலோ வாட் மின்சக்தி கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நடந்தது.

இந் நிகழ்ச்சிக்கு தோழப்பன் பண்ணை பஞ்சா யத்து தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். இ¢ந் நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, உதவி செயற்பொறியாளர் முத்தானந்தம், உதவி மின் பொறியாளர் உமை யொருபாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தென்மாவட்ட மாணவர்கள்

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தென்மாவட்ட மாணவர்கள் சாதித்துக் காட்டி பெருநகர மாணவர்களை பெருமூச்சு விடச் செய்துள்ளனர்.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமையைப் பெற்றது பாளையங்கோட்டை. அந்தப் பெருமை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுவதும் பரவி மூலைமுடுக்கெல்லாம் மணம் வீசி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பெருநகர மாணவர்களே சாதனைப் பட்டியலில் பெருமளவில் இடம் பிடித்து வந்தனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள சில பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே முதலிடத்தைப் பிடிப்பார்கள் என்ற மனநிலை மக்களிடம் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வந்தது.

ஆனால், அண்மையில் வெளியான பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அந்த மாயக்கோட்டையை தகர்த்து தரைமட்டமாக்கி விட்டது.

இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் நான்கு மாணவர்கள் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.

நால்வரும் அக்மார்க் கிராமப்புற மாணவர்கள்.

அவர்களில் பா.ரமேஷ் (1183 மதிப்பெண்கள்), தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள பள்ளியில் படித்தவர்.

அதேபோல், விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் பள்ளியைச் சேர்ந்த ஜெசிமா சுலைகாள், தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த யாழினி சி.பிரதீப் ஆகியோர் 1181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தச் சாதனை எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் எதிரொலித்துள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில், கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரையைச் சேர்ந்த பி.எம். ஜோஸ் ரிஜின் 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஏழை மீன் வியாபாரியின் மகனான அவர், தனது அயராத முயற்சியினால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மகுடம் சூட்டியுள்ளார். பாளையங்கோட்டை பள்ளி மாணவி ஜே.ஹெப்சிபா பியூலா, இரண்டாம் இடத்தைப் பிடித்து அந்நகரின் ஆக்ஸ்போர்டு தகுதியை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இவர்களைப்போல், இந்தாண்டு பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் குக்கிராம மாணவர்களே சிகரத்தை வென்று சாதித்துக் காட்டியுள்ளனர்.

டியூசன், தனிப்பயிற்சி உள்ளிட்ட எவ்வித சிறப்பு வசதிகளும் இன்றி பள்ளி ஆசிரியர்களின் அறிவுரை, பயிற்சியை வைத்தே இந்த மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

தங்களது குழந்தைகளின் படிப்புக்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்த பெற்றோர், தற்போது அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
நகரின் நச்சுக் கலாசாரத்துக்குள் சிக்காமல் கிராமப்புறங்களில் தனித்தன்மையுடன் வளரும் மாணவர்கள் வருங்காலத்திலும் வைரங்களாக ஜொலிப்பார்கள் என்று பொதுநல ஆர்வலர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆசிரியரின் அர்ப்பணிப்பும் இருந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் மாணவர்கள், சாதனைகளை நிகழ்த்தி காட்ட முடியும் என்றும் அவர்கள் ஆணித்தரமாக கூறினர்.

ஞாயிறு, 24 மே, 2009

பிழைச்செய்திகளும் தீர்வுகளும்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முற்றிலும் முழுமையான பாதுகாப்பான சிஸ்டம் இல்லை என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பல வேளைகளில் தேவையற்ற தொல்லைகளை விண்டோஸ் அளித்திடும். சில வேளைகளில் அவை சிறுவர்களின் சில்மிஷங்கள் போல் தோற்றமளித்திடும். இருந்தும் வேறு வழியின்றி அவற்றைப் பொறுத்துக் கொள்வோம். எடுத்துக் காட்டாக நாம் மறதியாய் ஒரு பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் விட்டிருப்போம்

அடுத்த முறை விண்டோஸை இயக்கும்போது NonSystem Disk or disk error என்று ஒரு செய்தி வரும். உடனே "கம்ப்யூட்டருக்குத்தான் தெரிகிறதே பிளாப்பி டிரைவில் ஒரு டிஸ்க் உள்ளது; அதனை விட்டுவிட்டு விண்டோஸை இயக்கலாமே' என்று எண்ணுவோம். இது என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே என்று நினைப்போம்.

இருந்தாலும் இது ஒரு தொல்லை தானே. இப்படி விண்டோஸ் கொடுக்கும் தொல்லைகள் சிலவற்றையும் அவை எதனால் ஏற்படுகிறது என்பதனையும் அவற்றை எப்படி சமாளிக்கலாம் என்பதனையும் இங்கு காணலாம்

1. நகராத மவுஸ் கர்சர்

கம்ப்யூட்டர் இயக்கம் உறைந்து போகும். மவுஸ் கர்சர் நகராது. என்ன செய்தாலும் ஒன்றும் இயங்காது. கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் அழுத்தினாலும் ஒன்றும் இயங்காது. வேறு வழியின்றி ரீ பூட் பட்டனை அழுத்தி மீண்டும் இயங்க வைப்போம். இதற்கு என்ன காரணம்? பெரும்பாலும் நீங்கள் புதியதாக கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த புரோகிராமாக இருக்கும். எனவே மீண்டும் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்தவுடன் கடைசியாக இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் மூலம் நீக்கவும். மீண்டும் அதே உறையும் பிரச்னை வரவில்லை என்றால் இந்த புரோகிராம் காரணமாக இருக்கலாம். இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் மவுஸின் பேட்டரி உயிருடன் இருக்கிறதா என்று பார்க்கவும்.பேட்டரியை மாற்றிப் பார்க்கவும். ஒரு வேளை மவுஸ் கர்சர் நகரலாம்.

2. திடீரென ரீஸ்டார்ட்
பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே திடீரென கம்ப்யூட்டர் தானே ரீஸ்டார்ட் ஆகும். கம்ப்யூட்டர் திரை கருப்பாக தோன்றி விண்டோஸை எவ்வாறு ஸ்டார்ட் செய்திட என்ற கேள்வியுடன் நான்கு ஆப்ஷன்ஸ் தரப்படும். அங்குStart Windows Normally என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். கம்ப்யூட்டர் வழக்கம்போல இயங்கத் தொடங்குகிறதா என்று பார்க்கவும். தொடங்கவில்லை என்றால் Last Known good configuration என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதுவும் சரியாகவில்லை என்றால் Safe Mode ல் தொடங்கவும். இது நிச்சயம் செயல்படத் தொடங்கும். இதனைப் பயன்படுத்தி முன்பு சொன்னது போல இறுதியாக இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடவும்.

3. NonSystem Disk or disk error
தொடக்கத்தில் சொன்ன NonSystem Disk or disk error என்ற பிரச்னை ஏற்படுகையில் டிரைவில் உள்ள டிஸ்க்கினை நீக்கினாலும் சில வேளைகளில் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. அப்படி என்றால் பிரச்னை மிகவும் சிக்கலானது தான். கம்ப்யூட்டரின் சிபியு கேபினைக் கழற்றி ஏதேனும் கேபிள் வயர் சரியாக இணைக்கப்படாமல் இருக்கிறதா என்று பார்க்கவும். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்கிற்குச் செல்லும் கேபிள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்கவும். அதனைச் சரி செய்தும் பிரச்னை தீரவில்லை என்றால் ஒரு ஹார்ட் வேர் டெக்னீஷியனை அழைத்துப் பார்க்கவும்

4. One of your disks needs to be checked for consistency
கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும்போது இந்த செய்தி திரை முழுவதும் ஊதா வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களில் தோன்றும். இந்த செய்தி வந்தால் அதற்கு முன் கம்ப்யூட்டரை இயக்கிய போது முறையாக அதன் இயக்கத்தினை நிறுத்தவில்லை என்று பொருள். அல்லது புரோகிராம் கிராஷ் ஏற்பட்டிருக்கலாம். அல்லது பவர் கட் ஆகி யு.பி.எஸ். கை கொடுக்காமல் கம்ப்யூட்டர் ஆப் ஆகி இருக்கலாம். இது போன்ற செய்திவந்து உங்கள் டிஸ்க்கைச் சோதிக்கும் பணி தொடங்கினால் அதனை நிறுத்த வேண்டாம். ஒரு சில நிமிடங்களில் இந்த சோதனை முடிந்து கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும். இது உங்கள் ஹார்ட் டிஸ்க் சரியாக உள்ளதா என்ற சோதனை என்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கும் நல்லதுதான்.ஆனால் ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும் போதும் இந்த செய்தி வந்தால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை நீங்கள் ஷட் டவுண் செய்திட நடவடிக்கைகள் எடுக்கையில் பின்புலத்தில் ஏதோ ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே ஷட் டவுண்ட் செய்வதற்கு முன்னால் கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் போட்டு எந்த எந்த புரோகிராம்கள் நீங்கள் அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பார்த்து அவற்றை நிறுத்தவும். அவை மீண்டும் தாமாக இயங்குவதனை நிறுத்தவும்.

5. Blue Screen of Death
ஆம், இப்படி ஒரு திரை நம் கம்ப்யூட்டரில் சில வேளைகளில் ஏற்படும். A fatal exception 0E has occurred என்று தொடங்கி அப்போது இயங்கிய அப்ளிகேஷன் புரோகிராமினை உடனே முடக்கிவிடு என்று கேட்கும். கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் கொடுத்து கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடச் சொல்லும். "நீங்கள் சேவ் செய்யாத தகவல் எல்லாம் அவ்வளவுதான் அம்போ' என்று ஒரு மிரட்டும் செய்தியும் வரும். என்ன செய்வது? வேறு வழியே இல்லை. போனால் போகட்டும் போடா ! என்று மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதுதான். இந்த டெத் ஸ்கிரீன் அடிக்கடி வந்ததென்றால் ரெஸ்டோர் பயன்படுத்தி முந்தைய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்ல வேண்டியதுதான். இதனைப் பெற Start, Accessories, System Tools, System Restore என வரிசையாகச் சென்று பெறலாம்.

6. End Program
சின்ன விண்டோ ஒன்றில் This program ‘Program has encountered a problem’ is not responding போன்ற பிழைச் செய்தி கிடைக்கும். புரோகிராமில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியாகத் தெரிந்தால் தொடர்ந்து அதனை இயக்கப் பார்க்கவும். ஆனால் ஏற்கனவே கம்ப்யூட்டர் முடங்கிப் போயிருந்தால் வேறு வழியின்றி புரோகிராமை மூடி வெளியேறி பின் மீண்டும் வரவும்.

7.‘Program has encountered a problem and needs to close’
அடிக்கடி கிராஷ் ஆகும் புரோகிராம்கள் இது போன்ற செய்தியைக் கொடுக்கும். இதை நீங்கள் ஒன்றும் செய்திட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. இதில் Send Error Report என்ற பிரிவில் கிளிக் செய்து இன்டர்நெட் இணைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பிழைச் செய்தி குறித்து தகவல் அனுப்பலாம். ஆனால் ஒரு சில சமயங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்திலிருந்து இந்த பிழை புராசசர் சிப்பினால் ஏற்பட்டது. இதற்கு இன்னும் நிவாரணம் இல்லை என்ற பதிலும் வரலாம்.

8. மெதுவாக இயங்குதல்
கம்ப்யூட்டர் வாங்கிய தொடக்கத்தில் மிக வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர் சில மாதங்களிலேயே மெதுவாக இயக்கத்திற்கு வரும். சி.பி.யு. பட்டனை அழுத்திய பின் விண்டோஸ் டெஸ்க்டாப் வர அதிக நேரம் பிடிக்கலாம். இதற்குக் காரணம் ஸ்டார்ட் அப் மெனுவில் நிறைய புரோகிராம்களை அமைத்திருப்பதுதான். இதனை எளிதாக சரி செய்துவிடலாம். இதற்கு ஸ்டார்ட் கிளிக் செய்து பின் ரன் விண்டோவில்msconfig என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Starup டேப்பினைத் தேர்ந்தெடுத்து வரும் விண்டோவைப் பார்க்கவும். அதில் உள்ள புரோகிராம் பட்டியலைப் பார்க்கவும். உங்கள் கம்ப்யூட்டர் அத்தனை புரோகிராம்களையும் தொடங்கி பின்னணியில் இயங்கிய பின்னரே உங்களுக்கு டெஸ்க் டாப்பைக் காட்டுகிறது. எனவே எந்த எந்த புரோகிராம் உங்களுக்குத் தேவையில்லையோ அவற்றை ஸ்டார்ட் அப் பட்டியலில் இருந்து நீக்கிவிடவும். இதற்கு அந்த புரோகிராமின் முன் உள்ள சிறிய கட்டத்தில் இருந்த டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும்.

9. Access Denied
இந்த பிழைச் செய்தி ஒரு குறிப்பிட்ட பைலை நோக்கி காட்டப்படும். ஒரு பைலில் திருத்தங்கள் செய்திட முயன்று அவற்றை சேவ் செய்திட முயற்சிக்கையில் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். பைல் அது போல மாற்றங்களை மேற்கொள்ளவிடாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனை எளிதாக ஏமாற்றலாம். குச்திஞு அண் கட்டளை கொடுத்து வேறு பெயரில் சேவ் செய்திடலாம்

10. Missing Shortcut
சில புரோகிராம்களை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும்போது டெஸ்க்டாப்பிலிருக்கும் ஷார்ட்கட் ஐகானும் நீக்கப்பட வேண்டும். சில வேளைகளில் அந்த ஷார்ட் கட் ஐகான் காட்டும் புரோகிராமினை வேறுடிரைவிற்கு மாற்றி இருப்போம். அப்போது இந்த பிழைச் செய்தி காட்டப்பட்டு Windows is searching for [File Name] To locate the file yourself click Browse என்ற செய்தி கிடைக்கும். புரோகிராம் நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிந்தால் இந்த ஷார்ட் கட் ஐகானையும் நீக்கிவிடுங்கள்சில புரோகிராம்களை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும்போது டெஸ்க்டாப்பிலிருக்கும் ஷார்ட்கட் ஐகானும் நீக்கப்பட வேண்டும். சில வேளைகளில் அந்த ஷார்ட் கட் ஐகான் காட்டும் புரோகிராமினை வேறுடிரைவிற்கு மாற்றி இருப்போம். அப்போது இந்த பிழைச் செய்தி காட்டப்பட்டு Windows is searching for [File Name] To locate the file yourself click Browse என்ற செய்தி கிடைக்கும். புரோகிராம் நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிந்தால் இந்த ஷார்ட் கட் ஐகானையும் நீக்கிவிடுங்கள்

11. "Can’t Boot from Windows CD”
விண்டோஸ் தொகுப்பினை ரிப்பேர், ரீ இன்ஸ்டால் அல்லது அப்கிரேட் செய்ய வேண்டியதிருந்தால் கம்ப்யூட்டரை விண்டோஸ் சிஸ்டம் சிடியிலிருது பூட் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அப்படி பூட் செய்திட முயற்சிக்கையில் இந்த செய்தி வரும். ஏன்? சிடியிலிருந்து பூட் செய்திட வகுத்திடும் வழி அடைக்கப்பட்டிருக்கும். இதனை எப்படி திறப்பது? விண்டோஸ் இயங்கத் தொடங்குகையில் Delete பட்டனை அழுத்தவும். BIOS ஸ்கிரீன் தோன்றும். அப்படித் தோன்றவில்லை என்றால் டெலீட் கீக்குப் பதிலாக F2 கீயை அழுத்தவும்.கர்சர் கீ மூலம் பூட் செக்ஷன் சென்று என்டர் அழுத்தவும். உடன் கம்ப்யூட்டர் பூட் செய்ய எந்த வரிசையில் செயல்பட வேண்டும் என்ற வரிசை கிடைக்கும். நீங்கள் முதலில் சிடி, பின் ஹார்ட் டிஸ்க் வழியாக என்றால் அதற்கேற்ப வரிசையினை மாற்றி அமைக்கவும். வேறு எதனையும் மாற்ற வேண்டாம். இந்த மாற்றத்தை சேவ் செய்து வெளியேறி விண்டோஸ் சிடியை டிரைவில் போட்டு பின் பூட் செய்தால் கம்ப்யூட்டர் சிடி டிரைவில் உள்ள விண்டோஸ் சிடி வழியாக பூட் ஆகும்.

12. டாஸ்க் பார் பட்டனில் புரோகிராம்கள் அடுக்கு
சில வேளைகளில் ஒரே புரோகிராம்களில் பல திறக்கப்படுகையில் அவைடாஸ்க் பாரில் ஒரு பட்டனில் அடுக்கப்படும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் பல டாகுமெண்ட்டுகள் திறக்கப்பட்டால் அவை வேர்ட் என்ற பட்டனிலேயே அடுக்கப்படும். எத்தனை புரோகிராம்கள் உள்ளன என்று எண் காட்டப்படும். இவற்றில் ஏதேனும் ஒன்றைத் திறந்து பயன்படுத்த எண்ணினால் பட்டனைக் கிளிக் செய்து பின் கிடைக்கும் அடுக்கில் நாம் விரும்பும் புரோகிராமினை கிளிக் செய்து இயக்க வேண்டும். இது நேரம் எடுக்கும் வேலை. டாஸ்க்பாரில் ஒவ்வொரு டாகுமெண்ட்டும் காட்டப் பட்டால் இந்த வேலை மிச்சமாகும். என்ன செய்யலாம்? டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Group similar Taskbar buttons என்ற இடத்தில் டிக் அடையாளத்தை எடுத்து விடுங்கள். இனி பைல்கள் அடுக்கப்பட மாட்டாது.

13. Low Disk space warning
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் திடீரென திரையில் வலது மூலையில் ஹார்ட் டிஸ்க்கில் இனி ஸ்பேஸ் இல்லை என்ற பொருள் பட இந்த செய்தி கிடைக்கும். இதனால் பெரிய விபத்து இல்லை. உடனே சி டிரைவில் தேவையற்ற பைல்கள், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்கள் ஆகியவற்றைக் காலி செய்யவும். முக்கிய பைல்கள் இருந்தால் அவற்றை வேறு டிரைவிற்கு மாற்றவும். இவ்வாறு செய்து ஓரளவிற்கு டிஸ்க்கில் ஸ்பேஸ் உண்டாக்கினால் இந்த எச்சரிக்கை செய்தி வராது.

தகவல் S.M.S. ஹமீது , துபாய்

10ஆ‌ம் வகு‌ப்பு: த‌க்கலை மாணவ‌ர் 496 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்று முத‌லிட‌ம்

10ஆ‌ம் வகு‌ப்பு தேர்‌வி‌ல் ‌‌க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் த‌க்கலை செ‌யி‌ன் ஜோச‌ப் மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌ளி மாணவ‌ர் ஜோ‌ஸ் ‌ரிஜா‌‌‌ன் 496 ம‌தி‌ப்பெ‌‌ண் பெ‌ற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாளைய‌ங்கோ‌ட்டை சாரா‌ள் த‌க்க‌ர் ப‌ள்‌ளி மாண‌வி ஹெப்சிபா பியூலா, பாளைய‌ங்கோ‌ட்டை செ‌யி‌ன் ஜோச‌ப் ப‌ள்‌ளி மாணவ‌ர் ஜே‌ம்‌ஸ் மா‌ர்‌‌ட்டி‌ன், கோ‌பிசெ‌ட்டிபாளைய‌ம் சாரதா ப‌ள்‌ளி மாண‌வி எ‌ஸ்.சு‌‌‌ஷ்மா, நாம‌க்க‌ல் கு‌றி‌ச்‌சி ப‌ள்‌ளி மாண‌வி அ‌பிநயா, ப‌ட்டு‌க்கோ‌ட்டை மாண‌வி துள‌சிரா‌ஜ் ஆ‌கியோ‌ர் 495 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் எடு‌த்து 2வது இட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

ஸ்ரீவை பள்ளிகள் 10ம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 90.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் ஸ்ரீவைகுண்டம் பள்ளிகள் 10ம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அவை

1. ஸ்ரீவைகுண்டம் சென்ட்ஸ் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி

2 ஸ்ரீவைகுண்டம் T.V.R. கிருஷ்ணம்மாள் மெட்ரிக் பள்ளி மற்றும்

3. பேட்ட்மாநகரம் M.K. உயர் நிலைப்பள்ளி

நாகர்கோவில் திருக்குர்ஆன் மாநாடு

நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை ஐஎஸ்இடி நகரில் திருக்குர்ஆன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறுகிறது.


இதுகுறித்து ஜம்யியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜே.ஏ.கியூ.எச்) மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன்மதனி, கோவை எஸ். அய்யூப் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மனித சமுதாயம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி அறிந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே இறைவனுடைய படைப்புகள், எல்லோரும் ஒருதாய் மக்கள், பிறப்பால் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, எல்லோரும் படைத்த இறைவனித்திலேயே போய் சேரவிருக்கிறோம் என்ற உண்மையை மனித சமுதாயத்துக்கு திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.
இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக இம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இம் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்குபெற்று சிறப்புரையாற்ற இலங்கையிலிருந்து இஸ்மாயில் ஸலபி, கேரளத்திலிருந்து அப்துஸ்ஸலாம் மோங்கம், சென்னையிலிருந்து முப்தி உமர் ஷரீப், மதுரையிலிருந்து ரஹ்மதுல்லாஹ் பிர்தவ்ஸி உள்ளிட்ட பல அறிஞர்கள் வருகிறார்கள்.

மாநாட்டுக்கு ஓய்வுபெற்ற காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. மலுக்குமுதலி தலைமை வகிக்கிறார். மாநாட்டின்போது புதிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சூறாவளியில் வாழைகள் நாசம்: இழப்பீடு கோரி 26-ல் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, இம் மாதம் 26-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

இப் பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வீசிய சூறாவளிக் காற்றில் முத்தாலங்குறிச்சி, மணக்கரை, கொங்கராயகுறிச்சி, தூதுகுழி, செய்துங்கநல்லூர், கருங்குளம், கால்வாய், புளியங்குளம், தென்திருப்பேரை, ஆதிச்சநல்லூர், கடையநோடை, செம்பூர் உள்பட பல கிராமங்களில் பெருமளவில் வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வியாழக்கிழமை மாவட்ட தலைவர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் முத்துகாந்தாரி, கருங்குளம் மாரியப்பன், ஆழ்வை ஜெயராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் சேதமடைந்த வாழைகளுக்காக விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி, இம்மாதம் 26-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சண்முகையா தெரிவித்தார்.

சனி, 23 மே, 2009

இன்று 10ம் வகு‌ப்பு‌த் தே‌ர்வு முடிவுக‌ள் ஸ்ரீவை மக்களில் பார்க்கலாம்

த‌மிழக‌த்‌தி‌ல் ந‌ட‌ந்து முடி‌ந்த 10ம் வகு‌ப்பு‌த் தே‌ர்வு முடிவுக‌ள் இன்று வெ‌ளி‌யிட‌ப்பட உ‌ள்ளது

காலை 9 மணிக்கு வெளியிடப்படும். அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், இணையதளங்கள், செல்போன் எண்கள், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இணையதளங்கள் :

www.pallikalvi.in

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

www.maalaimalar.com

www.result1.dinamalar.com

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் எது?

1
2
3
பெரிதாக பார்க்க ஒரு கிளிக் செய்ய வேண்டும் .
நன்றி : adiraipost

ஷார்ஜாவில் ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி


ஷார்ஜாவில் ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி செவ்வாய்க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.
நிக‌ழ்ச்சிக்கு முஹ‌ம்ம‌து அலி த‌லைமை தாங்க அஹ்ம‌த் இம்தாதுல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். அலி பாதுஷா ம‌ன்ப‌யீ ச‌ம‌வுரிமை இத‌ழ் குறித்து அறிமுக‌ம் செய்து வைத்தார்.
க‌விக்கோ அப்துல் ர‌குமானை சிற‌ப்பாசிரியராக‌வும், எஸ்.எம். இதாய‌த்துல்லாவை ஆசிரிய‌ராக‌வும், துணை ஆசிரிய‌ர்க‌ளாக‌ பி. அப்துல் காத‌ர், ஜி.அத்தேஷ் உள்ளிட்ட‌ குழுவின‌ரைக் கொண்டு ச‌ம‌வுரிமை மே மாத‌ம் முத‌ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கிற‌து
ச‌மவுரிமை இத‌ழை முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ வெளியிட‌ முத‌ல் பிர‌தியை முஹ‌ம்ம‌து அலி பெற்றுக் கொண்டார்.
அத‌ைத் தொட‌ர்ந்து பொறியாள‌ர்க‌ள் எஸ்.என்.ப‌க்ருதீன், இம்தாத், ர‌வூஃப் நிஸ்த‌ர், ம‌வ்ல‌வி அலிபாதுஷா, த‌மீம் அன்சாரி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.
ச‌ம‌வுரிமை இத‌ழுட‌ன் samaurimai@gmail.com எனும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரியுட‌ன் தொடர்பு கொள்ள‌லாம்.

பாரமெளண்ட் விமானங்களில் செல் போனில் பேசலாம்!

சென்னை மற்றும் டெல்லி இடையே புதிய விமான சேவையை துவக்கியுள்ள பாரமெளண்ட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானங்களில் செல்போனில் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்லது
தென் இந்தியாவில் தனது விமான சேவையை நடத்தி வரும் இந்த நிறுவனம் வட இந்தியாவிலும் விரிவாக்கத்தைத் துவங்கியுள்ளது

இதன் ஒரு பகுதியாக சென்னை-டெல்லி இடையே தினசரி விமான சேவையை துவக்கியுள்ளது. இந்த விமானம் சென்னையிலிருந்து தினமும் மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு டெல்லி சென்றடையும். அங்கிருந்து இரவு 7.40 மணிக்கு கிளம்பி, 9.55 மணிக்கு சென்னை வருகிறது.

சுமார் 75 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய எம்பரர் 170 ஜெட் ரக விமானத்தை இந்த சேவைக்காக பயன்படுத்தி வருகிறது.

மேலும், இந்த நிறுவனம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சி , விசாகப்பட்டிணம், பெங்களூர் , ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ஆரம்பிக்க இருக்கிறது

இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் கூறுகையில்

டெல்லியில் இருந்து பெரும்பாலான தென் இந்திய நகரங்களுக்கு விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ளோம். 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுமையையும் எங்களால் சேவையால் இணைக்க திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து ஜெய்பூர், லக்னெள், சண்டிகர் ஆகிய நகரங்களுக்கும் சேவையை துவக்கும் எண்ணம் உள்ளது.

இந்தியா வில் முதன் முறையாக எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார்

தகவல் : தட்ஸ்தமிழ்

வெள்ளி, 22 மே, 2009

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினோம்: ராஜபட்ச

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினோம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச கூறியுள்ளார்.
இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளது:

பிரபாகரனை உயிருடன் பிடித்து விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். எனெனில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தவர் பிரபாகரன். இது தொடர்பாக இந்தியாவில் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் நினைத்தேன் என்றார் ராஜபட்ச.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகாலமாக வேரூன்றி இருந்த பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டது. நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு விட்டோம். இப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.முப்படையினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்.

முக்கிய ராணுவ தளபதிகளும் போர்க்களத்துக்கு நேரடியாகச் சென்று விடுதலைப் புலிகளை ஒடுக்கினர். ராணுவ நடவடிக்கைகளுக்கு நான் முழுமையாக ஆதரவு கொடுத்தேன் என்றார்.

19 அமைச்சர்களுடன் பிரதமர் இன்று மாலை பதவியேற்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் 19 பேருடன்கூடிய சிறிய அமைச்சரவையுடன் பிரதமர் பதவியேற்க உள்ளதாக அவரது ஊடக ஆலோசகர் தீபக் சாந்து தெரிவித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஏ.கே.அந்தோனி, ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம் நபி ஆஸôத், , சுஷில்குமார் ஷிண்டே, வீரப்ப மொய்லி, ஜெய்பால் ரெட்டி, கமல்நாத், வயலார் ரவி, மீரா குமார், முரளி தியோரா, கபில் சிபல், அம்பிகா சோனி, பி.கே.ஹண்டிக், ஆனந்த சர்மா மற்றும் சி.பி.ஜோஷி ஆகியோர் அமைச்சரவைப் பட்டியலில் உள்ளதாக தீபக் சாந்து வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அமைச்சரவை மேலும் விரிவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி தூத்துக்குடியில் கண்டன பேரணி

இலங்கை இனப்படுகொலையை நடத்தி வரும் சிங்கள அரசையும், ராணுவத்தையும் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கக்கோரி நேற்று தூத்துக்குடியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

திட்டமிட்டு இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பேரணி நடைபெறும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

இலங்கையில் கடந்த 5 மாத காலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகாயமடைந்து உயிருக்காகப் போராடி வருகின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். போர் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் தமிழ் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை இலங்கை ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதில் ஐ.நா.சபை நேரடியாகத் தலையிட்டு மக்களை காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். போரில் இறந்தவர்களின் குடும்பத்துக்கும், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்ட இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபட்ச, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் நேற்று பாலவிநாயகர் சாலையிலிருந்து மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்நேயன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், மதிமுக கட்சி நாசரேத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் மோகன்ராஜ், பா.ம.க. பிரான்சிஸ், பெரியார் திராவிட கழகம் பால் பிரபாகரன், ஆதிதமிழர் பேரவை மனோகரன் உள்ளிட்ட முக்கிய கட்சியினரும், அரசியல் சார்பற்ற அனைத்து தரப்பினர் மற்றும் பெண்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

தமிழக 10‌ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு நாளை வெளி‌யீடு

தமிழகத்தில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழு‌திய 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. அன்றைய தினமே பள்ளிகளில் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10ஆ‌ம் வகு‌‌ப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆ‌ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,541 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வு எழுதின‌ர். இவர்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 838 பேர் மாணவிகள். 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள்.

சென்னையில் மட்டும் 18,697 மாணவிகள் உள்பட 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 18ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆ‌ம் தேதி வரை நடந்தன. மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 பேரும், ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,697 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,361 பேரும் எழுதின‌ர்.
பிளஸ்2 தேர்வு கடந்த 14ஆ‌ம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்த்து கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

இந்த நிலையி‌ல், 10‌ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''10ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23ஆ‌ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும். அதேநேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

தூத்துக்குடியில் நாளை சுப்பையா வித்யால‌ய‌ம் ம‌க‌ளிர் மேல்நிலைப்ப‌ள்ளியில் காலை 9.30 ம‌ணிக்கு தூத்துக்குடி மாவ‌ட்ட‌ முத‌ன்மை க‌ல்வி அலுவ‌ல‌ர் பிரைட்சேவிய‌ர் வெளியிடுகிறார்

அரபு நாட்டு சிறைகளில் வாடும் 1500 தமிழர்கள் மீட்கப்படுவார்களா?-

அனுமதியின்றி தங்கியதாக அரபு நாட்டு சிறைகளில் 1500 தமிழர்கள் வாடுகின்றனர்.

தமிழர்களின் வெளிநாட்டு மோகம் அவர்களை பல இன்னல்களில் மாட்டி விடுகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் பலர் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து வேறு நிறுவனத்திற்கு செல்லும் போது அரபு நாட்டு சட்டப்படி அவர்களது விசா காலாவதி ஆகிவிடுகிறது.

இந்த வேளையில் அனுமதி இன்றி அந்த நாட்டில் தங்கியதாக அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அங்குள்ள சிறைகளில் அடைக்கப்படும் அவர்கள் போதிய குடிநீர், உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள்.

இவர்களை நம்பி ஊரில் வசிக்கும் பெற்றோர் குடும்பத்தினரும் அவதிப்படுகின்றனர்.

பொதுவாக அரபு நாடுகளில் வேலைக்கு செல்வோர் விசா வழங்கிய உரிமையாளரிடம்தான் வேலை பார்க்க வேண்டும் என்பது சட்டம்.

அந்த நிறுவனத்தினர் ஏதாவது காரணத்தால் பணியை விட்டு நீக்கினாலோ அல்லது கூடுதல் பணம் கிடைக்கும் என்றும் ஓய்வு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வீடுகளை சுத்தம் செய்வது கார் கழுவுவது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும்போதுதான் போலீசில் பிடிபடு கிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த நயினாமுகமது என்பவர் இது போன்று சவூதி அரேபியாவில் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2 மாதமாக சிறையில் வாடும் அவர் இருண்ட அறையில் குடிநீர், உணவின்றி அல்லல் படுகிறார். இது பற்றிய தகவல் ஊரில் உள்ள நயினாமுகமதுவின் குடும் பத்தினருக்கு தெரிய வந்தது.

அவர்கள் நயினா முகமதுவை மீட்க கோரி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நெல்லை மாவட்ட செயலாளர் மில்லத் இஸ்மாயில் கூறியதாவது:-

அரபு நாடுகளில் வேலைக்கு சென்ற சுமார் 1500 தமிழர்கள் அங்குள்ள சிறைகளில் வாடுகின்றனர். முஸ்லிம் மட்டுமல்லாத இந்து, கிறிஸ்தவ மதத்தினரும் இதில் அடங்குவர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் இவ்வாறு சிறையில் உள்ளனர்.

கொடுமை தாங்காமலும், குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லையே என்றும் பலர் தற்கொலை செய்துள்ளனர். இது பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் வாடுபவர்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட துணை செயலாளர்கள் பாட்டப்பத்து முகமது அலி, ஐதர் அலி, சங்கை சேனா, திவான், ஹாஜி மசூது ஆகியோர் உடன்
இருந்தனர்

வஃபாத்து செய்தி :

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை 2வது தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் K.P, சாகிப் ( ஓலைபி அப்பா ) அவர்களின் மகன் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகள் ஜனாபா சாபிரா அவர்கள் ஸ்ரீவையில் இன்று காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இன்று(22-05-2009) பெரிய பள்ளிவாசலில் லுஹர் தொழுகைக்கு முன் நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.கம

வியாழன், 21 மே, 2009

கடைசி நேரத்தில் 2000 ராணுவத்தினரைக் கொன்ற புலிகள்-படகு மூலம் தப்பினார் பிரபாகரன்-நக்கீரன்

விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த கடைசி நேர மோதலின்போது 60 கரும்புலிகள் (தற்கொலைப் படையினர்) சேர்ந்து கிட்டத்தட்ட 5000 கிலோ வெடி மருந்துகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு ராணுவத்தினர் மீது நடத்திய அதி பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 3000க்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டனராம்

இதை விட முக்கியமாக, இந்த அதி பயங்கர தாக்குதலால் ராணுவம் நிலை குலைந்ததைப் பயன்படுத்தி அதி நவீன படகு மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் தப்பி விட்டதாகவும் நக்கீரன் வார இதழ் செய்தி
வெளியிடப்பட்டுள்ளது

பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் என்று கூறி இலங்கை ராணுவம் ஒரு செய்தியை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நக்கீரன் கூறுவதாவது...

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம்.

மே 16ம் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பெரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள் . நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்

புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் லட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.

பிரபாகரன் வெளியேற கட்டளையிட்ட தளபதிகள்..

அதனால், மே 17ம் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்

தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏனென்றால், சிங்கள ராணுவம் தனது பெரும் படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய லட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம்

நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழ மண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லி விட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17ம் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம்.

மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 புலிகள்-5000 கிலோ வெடிகுண்டுகள்..

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 60க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட்டத்தின்படி இருவரணி, மூவர் அணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்கவில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

தப்பினார் பிரபாகரன்...

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்

அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழைய காலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்

பொட்டு அம்மான் வெளியேறினார்..

அதே வேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி.

சூசையும் வெளியேறினார்...

புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, லட்சியத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

2,000 ராணுவத்தினர் சிதறிப் பலி...

புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்புலித் தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர்.

பலியானார் சார்லஸ் அந்தோணி...

இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார்.

புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்

வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கி விடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற்றத்தை முடக்கியது.

அதிவேக படகில் தப்பினர்..

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகியோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன்படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக் கூடியது.

உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமிடங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விடலாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையிலிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படை தடுக்கவில்லை?

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது.

ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுத்தங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது.

அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத் தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது.

பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டலமாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக்குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன

ஞாயிறு இரவிலும் திங்கள் காலையிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெருமளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதிகளின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது

புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்

மொக்குச் சிங்களவர்கள்.. கருணா புலம்பல்

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர்களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.

புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள் எனத் தனது சகாக்களிடம் சொன்னாராம்

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது

பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்பிங்குகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக்கெட்டில் சயனைடு குப்பி வைத்திருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. அடையாள அட்டை காட்டப்பட்டது

இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்பிங்குகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தசாவதாரம் படம் போல...

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது.

இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதியான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான்

அதேபோல, பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்ட பிறகு, பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங்களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கிறார்கள் மிகமிக முக்கியமானவர்கள்.

இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நக்கீரன் செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது

தகவல் : நக்கீரன் & தட்ஸ்தமிழ்

LinkWithin

Blog Widget by LinkWithin