இந்தியாவிலேயே முதன் முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார மேம்பாடு குறித்த முதுகலைப் பட்டபடிப்பு (எம்ஏ) வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக யுஜிசி முதல் கட்டமாக ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன்,பதிவாளர் மாணிக்கம் ஆகியோர் கூறுகையில்,
இந்திய கடற்கரை ஒருபுறம் குஜராத்திலும், மறுபுறம் கொல்கத்தாவிலும் தொடங்கி தமிழ்நாடு வரை சுமார் 7,500 கி.மீ. நீளமுடையது.
தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில்கள், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகின்றன.
குறிப்பாக தமிழக் கடற்கரை பகுதிகளில் கடல்பாசி, கடற் புல், கடற் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்று சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.
இத்தனை வளங்கள் இருந்த போதிலும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே இருக்கும் வளங்களை வைத்து இவர்களது ஏழ்மையை போக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆராய்ச்சிகள்
அவசியமாகின்றன.
இதற்காக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார வளம் மற்றும் மேம்பாடு குறி்த்த எம்ஏ பாடத் திட்டத்தை செயல்படுத்த யுஜிசியிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது இதற்கான அனுமதியை யுஜிசி வழங்கியதுடன் ரூ. 34 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் தான் இந்த பாடப்பிரிவு துவக்கப்படுகிறது என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக