வெள்ளி, 20 நவம்பர், 2009

ஸ்ரீவை, எம்.எல்.ஏ., தமிழக துணைமுதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தார்,


ஸ்ரீவை அருகேயுள்ள தோழப்பண்பண்ணையில் புதியதாக மணல்குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக துணைமுதல்வருக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.,சுடலையாண்டி கோரிக்கை விடுத்து மனு கொடுத்தார்.

தூத்துக்குடியில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக துணைமுதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசினார். விழாவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.,சுடலையாண்டி கலந்துகொண்டு பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாமிரபரணி ஆற்றை நம்பியே விவசாயப்பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. ஸ்ரீவை அருகேயுள்ள தோழப்பண்பண்ணை கிராமப்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் புதியதாக மணல்குவாரி அமைப்பதற்கு அரசிடம் சிலர் கோரிக்கை விடுத்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்

புதியதாக மணல்குவாரிகள் அமைக்கப்பட்டால் ஸ்ரீவையை சுற்றி உள்ள சுமார் 83 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தேவையான குடிநீரை பெறமுடியாமல் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும். எனவே தமிழக அரசு தாமிரபரணி ஆற்றில் புதியதாக மணல்குவாரிகள் எதுவும் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்ககூடாது என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் சார்பில் தங்களிடம் கேட்டுகொள்கிறேன் என்று பேசினார்.

பின்னர் ஸ்ரீவை எம்.எல்.ஏ., தனது கோரிக்கை தொடர்பான மனுவை தமிழக துணைமுதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin