செவ்வாய், 31 மார்ச், 2009

நாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்!உண்மை பேசுக!

அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119


நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83


கனிவாகப் பேசுக!

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152


அன்பாகப் பேசுக!

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36


வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68


பொய் பேசாதீர்!

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116


புறம் பேசாதீர்!

உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!

யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35


அவதூறு பேசாதீர்!

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23


'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

நன்றி : A C M இப்ராஹிம் , சவுதி அரேபியா

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'


முன்னுரை:


சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.


1. வட்டி என்றால் என்ன?:


அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.


'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279


இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.


'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)


2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:


வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது


'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)


வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.


1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.


2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.


3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.


3. வட்டி ஒரு பெரும் பாவம் :


'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது,

'1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
2.சூனியம்.
3.கொலை
4.வட்டி உண்பது
5.அனாதைகளின் சொத்தை உண்பது
6.போரில் புறமுதுகு காட்டுவது
7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


4. வட்டி ஒரு கொடிய குற்றம்


'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)


மற்றொரு அறிவிப்பில்,


'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்


5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :


'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)


6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:


1. நிரந்தர நரகம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)


நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்..


1.கொலையாளி,
2.காபிர்கள்
3.வட்டி உண்பவர்.


ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.


7. போர்ப் பிரகடணம்:


வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.


'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)


அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.


8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :


1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)


2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)


3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)


4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)


9. அடமானம்:


அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.


இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.


முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.


நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)


நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.


'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


10. ஒத்தி வட்டியா?:


ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.


ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..


'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


11. பேங்க்கில் பணம் போடலாமா? :


வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம்.
முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது.
இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.


இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.


இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.


12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:


ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.


இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

13. குலுக்கல் சீட்டு:

குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.

அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

14. தவணை முறையில் பொருள் வாங்குவது:

இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.

இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது

15. வங்கியில் வேலை செய்வது:

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

16. பகடி கூடுமா?:

பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.

17. முடிவுரை:

பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!

நன்றி : முஹம்மத் நியாஸ், சவுதி அரேபியா.Emai : iamniyaz@gamil.com

இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் நீதிபதி வஹாப்

சென்னையில் ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ த‌லைவ‌ராக‌ நீதிய‌ர‌ச‌ர் அப்துல் வ‌ஹாப் தேர்வு செய்யப்பட்டார்.

ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ராக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ நீதிய‌ர‌ச‌ர் அப்துல் வஹாப் அவ‌ர்க‌ளுக்கு பொதுச்செய‌லாள‌ர் சேமுமு முஹ‌ம்ம‌த‌லி பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார்.

பொருளாள‌ர் ஏ.வி.எம். ஜாப‌ர்தீன், சென்னை புதுக்க‌ல்லூரி பேராசிரிய‌ர் முனைவ‌ர் ஹ‌.மு.ந‌த்த‌ர்ஷா, ஆலிமான் ஜியாவுத்தின் ம‌ற்றும் க‌ழ‌க‌த்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

BSNL. அறிமுகம் !இன்டர்நெட் சேவையை பயன்படுத்த ரூ.3 ஆயிரம் விலையில் கம்ப்ïட்டர்!


இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் நடுத்தர மக்களின் வசதிக்காக ரூ.3 ஆயிரம் விலையில் நோவாட்டியம் நெட் கம்ப்ïட்டரை நேற்று மதுரையில் பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியது.

இண்டர்நெட் சேவையை பயன்படுத்தும் நடுத்தர மக்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குறைந்த விலையிலான கம்ப்ïட்டரை தொலை தொடர்புத்துறை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கம்ப்ïட்டரின் அறிமுக விழா நேற்று மதுரையில் நடந்தது. விழாவில் தமிழக பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் டி.வரதராஜன் கலந்து கொண்டு நவீன கம்ப்ïட்டரை அறிமுகப்படுத்தி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் நடுத்தர மக்களின் இன்டர்நெட் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நோவாட்டியம் சொலுசன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நவீன கம்ப்ïட்டர் மூலம் பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவையை ஏற்கனவே சென்னை, பெங்களூர் மற்றும் புனே போன்ற நகரங்களில் அளித்து வருகிறது.

தற்போது சென்னையில் மட்டும் 300 வாடிக்கையாளர்கள் நோவா நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை விரைவில் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிராட்பேண்ட் சேவைக்கு மாதம் 200 ரூபாய் மட்டுமே பி.எஸ்.என்.எல் வசூலிக்கிறது. இந்த பிராண்பேன்ட் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு கம்ப்ïட்டர் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதன்காரணமாகவே பிராட்பேண்ட் சேவையை பலர் பயன்படுத்த முடியவில்லை. அனைவருக்கும் பிராட்பேன்ட் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.3 ஆயிரத்துக்கு நோவா நெட் கம்ப்ïட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சேவை குறித்து நோவாட்டியம் சொலுசன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.கணபதிராம் கூறும் போது, "இந்த கம்ப்ïட்டரில் வை-பி மற்றும் லான் இணைப்பும் கொடுக்கலாம். அலுவலக பயன்பாட்டிற்காக ஹார்டு டிஸ்க்கை தனியாக பொருத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் கம்ப்ïட்டர் திரையை(மானிட்டர்) தனியாக வாங்கி கொள்ள வேண்டும். தற்போது சென்னை, மதுரை உள்பட 7 நகரங்களில் மட்டும் இந்த கம்ப்ïட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கும்" என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

தம்மாமில் ஏப். 3ல் இஸ்லாம் ஒரு அறிமுகம்

ச‌வுதி அரேபியாவின் கிழ‌க்குப் பிராந்திய‌மான‌ த‌ம்மாமில் ஏப்ர‌ல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணி முத‌ல் 8 ம‌ணி வ‌ரை பார‌கான் ரெஸ்டார‌ண்டில் இஸ்லாம் ஓர் அறிமுக‌ம் என்ற‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ள‌து.

நிகழ்ச்சியின் முடிவில் போட்டிக‌ள் ந‌டைபெறும் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இர‌வு உண‌வுக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இஸ்லாமிய‌ க‌லாச்சார‌ மைய‌த்தின் த‌மிழ்ப் பிரிவு இந்நிக‌ழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ள‌து.

இந்நிக‌ழ்வில் ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்டு ப‌ய‌ன்பெற‌லாம்

திங்கள், 30 மார்ச், 2009

ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

நேற்று மாலை ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் சின்னபள்ளிவாசல் அடுத்த மண்டப்பத்தில் வைத்து திருகுரான் மற்றும் தொழுகை பற்றி எளிதில் புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது..

நேற்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது.. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட சும்மர் 100 பேர் கலத்துக் கொண்டனார்.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் களம் சிறப்பு கண்ணோட்டம்

பாராளுமன்ற தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தி.மு.க. கூட்டணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, தென்காசி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தொகுதி ஒதுக்கப்பட்டதையடுத்து வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று தெரிகிறது. தூத்துக்குடி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படலாம்.

நெல்லை தொகுதி1952-ல் உருவாக்கப்பட்டது. 14 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது.தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில்1951-ம் ஆண்டிலும், 1957-லும் ப.டி.தாணுப்பிள்ளை வெற்றி பெற்றார்.

1967-ல் தி.மு.க. கூட்டணியில் இருந்த சுதந்திரா கட்சியும், 1971-ல் தி.மு.க., இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்டும் வெற்றி பெற்றன.

1967-ல் சுதந்திரா கட்சி சார்பில் சேவியர், 1971-ல் இந்திய கம்யூனிஸ்டு முருகானந்தமும் வெற்றி பெற்றார்கள்.

1977-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் கதிரவனும், அ.தி.மு.க. சார்பில் ஆலடி அருணாவும் நேரடியாக மோதினர். இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணா வெற்றி பெற்றார்.

1980-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. அணியில் ஆலடி அருணாவும், தி.மு.க. சார்பில் சிவப்பிரகாசமும் களம் கண்டனர்.இதில் தி.மு.க. சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார்.

1984, 1989, 1991 தேர்தல்களில் இந்த தொகுதியை அ.தி.மு.க. தக்கவைத்தது. 3 முறையும் கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. போட்டியிட்டது.

1996-ல் மீண்டும் இங்கு தி.மு.க. வெற்றிபெற்றது. சிவப்பிரகாசம் மீண்டும் எம்.பி. ஆனார். 1998-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் நடிகர் சரத்குமாரும், அ.தி.மு.க. சார்பில் மீண்டும் கடம்பூர் ஜனார்த்தனனும் போட்டியிட்டனர். இதில் கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார்.

1999-ல் அ.தி.மு.க. சார்பில் பி.எச்.பாண்டியனும், தி.மு.க. சார்பில் இன்றைய அமைச்சர் கீதாஜீவனும் போட்டியிட்டனர். இதில் பி.எச். பாண்டியன் வெற்றி பெற்றார்.

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் அமிர்தகணேசன் போட்டியிட்டார். இதில் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றி பெற்றார்.இந்த முறை நெல்லை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் நெல்லையில் அ.தி.மு.க. போட்டியிட வாய்ப்பு உள்ளது.தே.மு.தி.க. சார்பில் மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கி விட்டார். பா.ஜனதா கூட்டணியில் இங்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் போட்டியிட உள்ளார்.

இதே போல் தென்காசி தொகுதியில் 1957 முதல்1991-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.1957-ல் சங்கரபாண்டியனும், 1962-ல் எம்.பி. சாமியும், 1967-ல் ஆர். எஸ். ஆறுமுகமும், 1971-ல் தி.மு.க. கூட்டணியில் காங். சார்பில் செல்லச்சாமியும் வெற்றி பெற்றார்கள்.

1977, 1980, 1984, 1989, 1991 தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் எம். அருணாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1996-ல் தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு அருணாசலம் வெற்றி பெற்றார்.

1998-ல் இந்த தொகுதி அ.தி.மு.க.வசம் சென்றது. 1998, 1999- தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் முருகேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2004 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டும், அ.தி.மு.க. சார்பில் முருகேசனும் போட்டியிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட அப்பாத்துரை வெற்றி பெற்றார்.

10 முறை காங்கிரஸ் வசம் இருந்த தென்காசி தொகுதி 3 தேர்தலுக்கு பின் தற்போது மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என காங்கிரசார் சுறுசுறுப்பாக தேர்தல் பணியில் இறங்கி விட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்றதால் இம்முறை அ.தி.மு.க. கூட்டணியில் இதை தக்கவைக்க இந்திய கம்யூனிஸ்டு திட்டமிட்டுள்ளது.

1998 முதல் 3 தேர்தல்களில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த முறையும் இங்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது. தே.மு.தி.க.வும் இங்கு தனித்து களம் காணுகிறது.

பா.ஜனதா- ச.ம.க. கூட்டணியும் தென்காசியை குறிவைத்துள்ளது. இதனால் தென்காசி தொகுதி 5 முனை போட்டியை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்த திருச்செந்தூர் தொகுதி தற்போது தொகுதி மறுசீரமைப்பில் தூத்துக்குடி தொகுதிஆகி உள்ளது. இதில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகள் உள்ளன.

முன்பு திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்த சாத்தான்குளம், சேர்மாதேவி சட்டசபை தொகுதிகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி 1957, 1962 ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கணபதி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோரை போட்டியின்றி தேர்ந்தெடுத்த பெருமைக்கு உரியது.

இதன் பிறகு 1996வரை காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதி 1998-ல் அ.தி.மு.க. வசம் ஆனது. அப்போது நடிகர் ராமராஜன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1999-ல் இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.டி.கே. ஜெயசீலன் வெற்றிபெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராதிகா செல்வி வெற்றி பெற்றார்.

இந்த முறை தொகுதி மறுசீரமைப்பில் தூத்துக்குடி தொகுதி முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இங்கு தற்போது தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு போகலாம் என தெரிகிறது.

தே.மு.தி.க. சார்பில் எம்.எஸ். சுந்தர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா- ச.ம.க. கூட்டணியில் இங்கும் ச.ம.க. களம் இறங்கலாம் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


தகவல் : மாலைமலர்

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"

(அல்-குர்ஆன் 10: 92)இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)
நன்றி : http://irudithoodu.blogspot.com/

மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க.,உடன் கூட்டணியா?

தி.மு.க.,கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி நீடிக்க முடியாத சூழலில் அ.தி.மு.க.,வில் இரண்டு சீட்கள் பெற முயற்சிகள் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மனித நேய மக்கள் கட்சி 2 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோரிடம் தி.மு.க.,தரப்பினர் போனில் பேசினர்.

ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதநீதி கட்சிக்கு எந்ததொகுதியும் ஒதுக்கப்படவில்லை. அக்கட்சியை பொறுத்தவரை முதன்முதலாக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதால் 2 சீட் பெறுவதோடு தங்களின் சொந்த சின்னத்திலேயே போட்டியிடவும் தீர்மானித்திருந்தனர். தி.மு.க.,கூட்டணியில் இருந்து கடைசிநேரத்தில் கழற்றிவிடப்பட்டால் அ.தி.மு.க.,கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தி.மு.க.,விற்கு விதித்த அதே கண்டிசன்களை அ.தி.மு.க.,ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெரும் திருப்பமாக அ.தி.மு.க.,அணி பலம்பெறும். தி.மு.க.,அணியில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் ம.ம.க,,போட்டியிட வாய்ப்புள்ளது.

இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும்.

தகவல் :அதிரை எக்ஸ்பிரஸ்

முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?


"இஸ்லாம்" - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - பெரியார் பேசுகிறார்
தோழர்களே!
எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.

இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.
இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.
ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.

அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.

சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.

சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

'இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)

எச்சரிக்கை ஏப்ரல் 1ல் வைரஸ்

இணையதளத்தில் பரப்பி விடப்பட்டுள்ள கான்பிகர் சி என்ற கம்ப்யூட்டர் வைரஸ் ஏப்ரல் 1ல் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கான்பிகர் சி வைரஸ் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் பல கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கச் செய்யும் வகையில் அது புரோகிராம் செய்யப்பட்டிருக்கலாம் என்று லண்டன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆதலால் எச்சரிக்கையாக இருங்கள்…


தகவல் : http://www.kiliyanur-ismath.blogspot.com/

21 தொகுதிகள் தி.மு.க., 16 காங்கிரசுக்கு ஒதுக்கீடு முடிந்தது

தொகுதிகள் முழுவிவரம்


தி.மு.க., - 21

1. திருவள்ளூர்(தனி)

2. வடசென்னை

3. தென்சென்னை

4. மத்திய சென்னை

5. ஸ்ரீபெரும்புதூர்

6. அரக்கோணம்

7. கிருஷ்ணகிரி

8. தர்மபுரி

9. திருவண்ணாமலை

10. கள்ளக்குறிச்சி

11. நாமக்கல்

12. நீலகிரி(தனி)

13. பொள்ளாச்சி

14. கரூர்

15. பெரம்பலூர்

16. நாகை(தனி)

17. தஞ்சை

18. மதுரை

19. ராமநாதபுரம்

20. தூத்துக்குடி

21. கன்னியாகுமரி


காங்கிரஸ் - 16

1. காஞ்சிபுரம்(தனி)

2. ஆரணி

3. சேலம்

4. ஈரோடு

5. திருப்பூர்

6. கோவை

7. திண்டுக்கல்

8. திருச்சி

9. கடலூர்

10. மயிலாடுதுறை

11. சிவகங்கை

12. தேனி

13. விருதுநகர்

14. தென்காசி(தனி)

15. நெல்லை

16. புதுச்சேரி


விடுதலைச் சிறுத்தைகள் - 2


1. விழுப்புரம்(தனி)

2. சிதம்பரம் (தனி)


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1

1. வேலூர்

தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் பள்ளித் தாளாளர்தேமுதிகவின் தூத்துக்குட வேட்பாளராகியுள்ள எம்.எஸ்.சுந்தர், பள்ளிக்கூட நிர்வாகி ஆவார்.

மதுரை கே.புதூரில் பிரபலமான பள்ளிக்கூடம் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி. இதன் நிர்வாகிதான் சுந்தர். மதுரையில் தற்போது இருந்தாலும் கூட இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆகும்.

எட்டயபுரம் அருகே உள்ள குளத்துல்வாய்பப்ட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பி.இ படித்துள்ள பொறியாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில், கல் குவாரி காண்டிராக்டர், கட்டுமானப் பணி என பன்முகம் கொண்ட சுறுசுறுப்பான மனிதர் ஆவார்.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் இணையாக செலவிடக் கூடிய திடமான வேட்பாளரான சுந்தர், சொந்த மாவட்டத்தின் வேட்பாளராகக் கூடிய வாய்ப்பை தனக்கு அளித்த கேப்டனுக்கு நன்றி கூறுகிறார்

360 ஊழியர்களை வாடகைக்கு அமர்த்தும் கூகுள்இந்த வாரம் 200 மார்கெட்டிங் அலுவலர்களை வேலையை விட்டு நீக்கிய கூகுள் நிறுவனம், இப்போது 360 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் 'வாடகைக்கு' பணியமர்த்துகிறது.

20 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை மூன்று கட்டமாக வேலை நீக்கங்களை அமல்படுத்தியுள்ளது. பல ஆயிரக் கணக்கான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

போனவாரம்தான் 200 மார்க்கெட்டிங் அலுவலர்களை நீக்கியது கூகுள். ஆனால் இப்போது வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதாம். இதனால் இப்போது 360 பேரை வேலைக்கு எடுத்தாக வேண்டிய சூழ்நிலை.

எனவே இவர்கள் அனைவரும் வாடகைக்கு அமர்த்துகிறது கூகுள். அதாவது குறித்த காலம் வரை மட்டுமே இவர்கள் பணியிருப்பார்கள். அதன்பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் வெளியேறிவிட வேண்டும் என்பது கண்டிஷன். காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தனது வெப்சைட்டில் விளம்பரமும் வெளியிட்டுள்ளது கூகுள்.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக கூகுள் நிறுவனம் தனது ரேடியோ ஓலிபரப்பை
நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏப். 1 முதல் அனைத்து ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்!


மும்பை: எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அவற்றை எல்லா ஏடிஎம்மிலும் செலுத்திப் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய ஆணை அமலுக்கு வருகிறது.


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின் ஏடிஎம்மில் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.


இதன்மூலம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இப்போது பிடிக்கப்படும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.


எனவே, அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் எதனுடைய ஏடிஎம்மிலும் கார்டை நுழைத்து கட்டணம் இன்றி கரன்ஸி நோட்டுக்களை எண்ணியபடி வெளியேறலாம்.


தவிர, பண இருப்பை அறிவது, மினி ஸ்டேட்மென்ட்டின் பிரின்ட் பெறுவது என அனைத்து சேவைகளும் ஏற்கனவே உள்ளதுபோல இலவசமாகவே நீடிக்கும்.


இந்த புதிய அறிவிப்பு மூலம் சிறு பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது வெகுவாகக் குறையும். நேர விரையம் தவிர்க்கப்படும்.


ஞாயிறு, 29 மார்ச், 2009

நபிமொழி : 204 - NABIMOZI – 204 – PART - II

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)(இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி : 204 - NABIMOZI – 204 – PART - II

நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விட்ட ஒரு கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா நபி வருவார்கள். அவர்களின் முகங்களை தடவும் ஈஸா நபி அவர்கள், அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய தகுதிகளைப் பற்றிக் கூறுவார்கள்... அது சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ் ''நான் என் அடியார்கள் சிலரை வெளியாக்கி உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக'' என்று கூறுவான்.

பின்பு யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தாரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதல் கூட்டத்தார், ''தப்ரீயா'' எனும் சிறு கடலைக் கடந்து செல்வார்கள். அதில் உள்ள தண்ணீர் முழுவதையும் குடித்து விடுவார்கள். அவர்களின் அடுத்தக் கூட்டம் வருவர் ''இங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது'' என்று கூறுவார்கள். (அந்த அளவுக்கு வறண்டு போய் கிடக்கும்).

அல்லாஹ்வின் நபியான ஈஸா(அலை) அவர்களும், அவர்களின் தோழர்களும் (ஒரு மலையில்) தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். இன்று உங்களிடம் 100 தீனார் (பொற்காசு) இருப்பதைவிட, அவர்களில் ஒருவருக்கு ஒரு மாட்டின் தலை இருப்பது சிறந்ததாக இருக்கும். ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள். உடனே அல்லாஹ் அவர்களின் கழுத்துகளில் அமர்ந்து கொத்தும் பறவைகளை அனுப்புவான். அப்போது அவர்கள் ஓர் உயிர் இறப்பது போல் ஒரே சமயத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள்.

பின்பு ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள். பூமியில் ஒரு சாண் இடம் கூட மீதமில்லாமல் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினரின் சடலங்களும், துர்நாற்றமும், பிணவாடையுமே இருக்கும். உடனே ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள். ஒட்டகத்தின் கழுத்துக்களைப் போல் உள்ள பறவையை அல்லாஹ் அனுப்புவான். அது அவர்களின் உடல்களைச் சுமந்து சென்று, அல்லாஹ் நாடிய இடத்தில் தூக்கிப் போட்டு விடும்.

பின்பு அல்லாஹ் மழையைப் பொழியச் செய்வான். எந்த ஒரு வீடும், கூடாரம் அதிலிருந்த தப்பித்து விடாது. இதனால் கண்ணாடி போல் பூமி ஆகும் வரை மழை சுத்தமாக்கிவிடும். பின்பு பூமிக்கு ''உன் விளைச்சல் பொருட்களை வெளிப்படுத்து, உன் பரக்கத்தை மீண்டும் வெளியாக்கு'' என்று கூறப்படும். அன்றைய நாளில் ஒரு கூட்டம் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிடும். அதன் தோலின் கீழ் மக்கள் இளைப்பாறுவார்கள்.

(அவர்களின்) கால் நடைகளிலும் பரக்கத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தின் பாலை, மனிதர்களில் பெரும் கூட்டம் குடிக்கும் அளவுக்கு இருக்கும். மேலும் ஒரு பசுமாட்டின் பாலை, மக்களில் ஒரு பிரிவினர் குடிக்கும் அளவுக்கு இருக்கும். ஓர் ஆட்டின் பாலை ஒரு குடும்பமே குடிக்கும் அளவுக்கு இருக்கும்.

இது மாதிரியான நிலையில் அல்லாஹ் குளிர்ந்த காற்றை வீசச் செய்வான். அவர்களின் அக்குள்களுக்குக் கீழ் அவர்களை வந்து சேரும். அனைத்து முஸ்லிமான, மூஃமினான உயிர்கள் அப்போது கைப்பற்றப்படும். மக்களில் கெட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள். கழுதைகளின் நடத்தை போல் வெட்கமுற்று இருப்பார்கள். (அப்போதுதான்) அவர்களிடம் மறுமை ஏற்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன் 1808 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்

நன்றி : Z.M அப்துல் காதர், அபுதாபி.
தகவல் : ஆறாம்பன்னைவாசிகள் குரூப்

பாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு!

சென்னை: 1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.

2001 ...

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.

ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.

காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.

அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.

2004...

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.

இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.

2006...

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008 ...

2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

2009...

2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:

கூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.

இதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்

நன்றி : A.C.M. இப்ராஹிம், சவுதி அராபிய

Free ATM cash withdrawal from April 1, 2009_CIRCULARDear All,

Please note that wef 01st April, 2009 ATM cards can be used in any bank’s ATM for withdrawing cash without any charges.
RBI circular in this regard is provided below. Hope you find this useful

For your information.
Date: Mar 10, 2008

Customer charges for use of ATMs for cash withdrawal and balance enquiry

RBI/2007-2008/260
DPSS No.1405 / 02.10.02 / 2007-2008


March 10, 2008


The Chairman / Chief Executive Officer
(All Scheduled commercial banks including RRBs)
Dear Sir
Customer charges for use of ATMs for cash withdrawal and balance enquiry
1. Automated Teller Machines (ATMs) have gained prominence as a delivery channel for banking transactions in India. Banks have been deploying ATMs to increase their reach. While ATMs facilitate a variety of banking transactions for customers, their main utility has been for cash withdrawal and balance enquiry. As at the end of December 2007, the number of ATMs deployed in India was 32,342. Commensurate with the branch network, larger banks have deployed more ATMs. Most banks prefer to deploy ATMs at locations where they have a large customer base or expect considerable use. To increase the usage of ATMs as a delivery channel, banks have also entered into bilateral or multilateral arrangements with other banks to have inter-bank ATM networks.

2. It is evident that the charges levied on the customers vary from bank to bank and also vary according to the ATM network that is used for the transaction. Consequently, a customer is not aware, before hand, of the charges that will be levied for a particular ATM transaction, while using an ATM of another bank. This generally discourages the customer from using the ATMs of other banks. It is, therefore, essential to ensure greater transparency.

3. International experience indicates that in countries such as UK, Germany and France, bank customers have access to all ATMs in the country, free of charge except when cash is withdrawn from white label ATMs or from ATMs managed by non-bank entities. There is also a move, internationally, to regulate the fee structure by the regulator from the public policy angle. The ideal situation is that a customer should be able to access any ATM installed in the country free of charge through an equitable cooperative initiative by banks.

4. In view of this, RBI had placed on its website an Approach paper and sought public comments. The comments received have been analysed. Based on the feed back a framework of service charges would be implemented by all banks as under:Sr.No.
Service
Charges

(i)
For use of own ATMs for any purpose
Free (with immediate effect)

(2)
For use of other bank ATMs for balance enquiries
Free (with immediate effect)

(3)
For use of other bank ATMs for cash withdrawals
No bank shall increase the charges prevailing as on December 23, 2007 (i.e. the date of release of Approach Paper on RBI website)
Banks which are charging more than Rs.20 per transaction shall reduce the charges to a maximum of Rs.20 per transaction by March 31, 2008
Free - with effect from April 1, 2009.5. For the services at (1) and (2) above, the customer will not be levied any charge under any other head and the service will be totally free.
6. For the service number (3) the charge of Rs.20/- indicated will be all inclusive and no other charges will be levied to the customers under any other head irrespective of the amount of withdrawal.
7. The service charges for the following types of cash withdrawal transactions may be determined by the banks themselves:
(a) cash withdrawal with the use of credit cards
(b) cash withdrawal in an ATM located abroad.
8. Please acknowledge the receipt of the circular. A copy of the circular issued to your branches on this subject may please be submitted to us in due course.


Yours faithfully
(Arun Pasricha)
General Manager

Thanks To A.C.M. IBRAHIM, SAUDI ARABIA,

சனி, 28 மார்ச், 2009

நானோ கார் : மலிவின் பயங்கரம் !
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி இறந்த பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள்.

உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது.

அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உள்ளுர் அழைப்புக்களாக மாற்றி பொய் எண் கொடுத்து பல நூறு கோடி ரூபாயை ஏப்பம் விட்டது, அரசியல் செல்வாக்கினால் அந்த திருட்டுத்தனத்திற்கு அபராதம் கட்டியது எல்லாம் வெளிவந்த பிறகு திருபாய் அம்பானியல்ல, திருடும் திருட்டுபாய் அம்பானி என்பது சந்திக்கு வந்தது.
திருபாய் அம்பானியின் கனவைப் போல ரத்தன் டாடாவும் ஒரு கனவு கண்டார்.

மும்பையின் மழைக்கால நாள் ஒன்றில் காரில் பயணம செய்த ரத்தன் டாடா ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம். உடனே ஸ்கூட்டர் விலையில் அல்லது சற்று அதிகமாக ஒரு இலட்சத்தில் கார் தயாரித்து நடுத்தர வர்க்கத்தை கடைத்தேற்றுவது என்று முடிவு செய்தாராம்.

இதைக் கேள்விப்பட்ட மக்களும், அவர்களுக்கு முன்னரே டாடாவின் அருளுள்ளத்தை ஊதி விட்ட ஊடகங்களும் இந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள கார் சாத்தியம்தானா என்று கொஞ்சம் சந்தேகத்துடனும், நிறைய சந்தோஷத்துடனும் காத்திருந்தார்கள்.
டாடாவின் கனவை நனவாக்குவதற்கு மேற்கு வங்கத்தின் டாடா கம்யூனிஸ்டுகள் ஓடோடி வந்தார்கள்..

சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 950 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாக பிடுங்கி பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு டாடவுக்கு விற்றார்கள். இதுபோக டாடாவுக்கு சில ஆயிரம் கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது.

என்ன ஏது என தெரியாமல் தமது நிலங்களை மார்க்சிஸ்டு அரசு பிடுங்கியதைக் கண்ட விவசாயிகள் அதை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடினார்கள். அதையைம் மீறி டாடா, தமது பங்காளி புத்ததேவுடன் இணைந்து ஆலையை நிறுவினார். இடையில் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவிய மேற்கு வங்க அரசைக் கண்டித்து விவசாயிகள் போர்க்குணத்துடன் போராட, மார்க்சிஸ்டு அரசு போலீசு மூலம் பலரைச்சுட்டுக் கொன்றது. இதன் மூலம் சிங்கூருக்கும் இதுதான் பாடமென்று எச்சரிக்கையும் விடுத்தது.

ஆனால் சிங்கூர் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உதவியுடன் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராடினார்கள். பலநாள் நீடித்த இந்தப் போராட்டத்தைப் பார்த்து டாடாவுக்கு பெருங்கோபம் வந்தது. உடனே தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவும் அறிவிக்கப்பட்ட தேதியில் நானோ கார் வெளிவரும் எனவும் சபதம் செய்தார். அதுவரை உத்தரகண்டில் இருக்கும் டாடா மோட்டார் தொழிற்சாலையில் தற்காலிகமாக நானோ கார் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிக் கம்யூனிஸ்டு அரசு ரத்தன் டாடாவிடம் மண்டியிட்டு போகாதே என் கணவா என்று சென்டிமெண்டாகவும் புலம்பிப் பார்த்தது. விவசாயிகளை நந்திகிராம் போல அடக்குவதற்குத் துப்பில்லையென முறைத்துக் கொண்ட டாடா டூ விட்டுவிட்டு நடையைக் கட்டினார். அப்போதும் டாடாயிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேல் எந்தத் தவறுமில்லையென பாராட்டுப் பத்திரம் அளித்துவிட்டுத்தான் சென்றார்.

ரத்தன் டாடவுக்கும், புத்ததேவ் பட்டாசார்யாவுக்கும் எந்த அளவு தோழமை உறவு இருந்ததோ அதற்கு கடுகளவும் குறையாமல் டாடாவுக்கு மோடியுடனும் நட்பிருந்தது. மேற்கு வங்கம் கைவிட்டால் என்ன குஜராத் காத்திருக்கிறது என்று மோடி கம்பளம் விரித்தார்.

இமைப்பொழுதில் டாடா என்ற முதலாளிக்கும், மோடி எனும் பாசிஸ்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்து சடுதியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இனிமேல்தான் இலட்ச ரூபாய்க்கு விற்கப்படும் நானோ கார் மக்களுக்கு பட்டை நாமம் போட்ட கதை வருகிறது. நானோ காரின் மலிவு விலைக்கும், அதை சாத்தியமாக்கிய டாடாவின் அளப்பரிய ‘சமூக’ சேவைக்கும் மயங்கிப்போன நடுத்தர வர்க்கம் தங்களிடமிருந்து பிடுங்கப்ட்ட பணம் டாடாவின் மலிவு விலை காருக்கு எப்படி போய்ச் சேருகிறது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

10.8.2008 அன்று குஜராத் அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம் யார் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பதை போட்டுடைக்கிறது.

குஜராத்தின் சதானந்த் இடத்தில் அமைய இருக்கும் டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு 1100ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டு அதுவும் மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடவுக்காக ரத்து செய்யப் பட்டது.

2000 மக்களை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கியிருக்கும் மோடிக்கு அப்பாவி விவசாயிகளை மிரட்டத் தெரியாதா என்ன? மேலும் மேற்கு வங்கம் போல அரசியல் ரீதியாக அணி திரள இயலாத அந்த அப்பாவிகள் தமது நிலத்தை கொடுத்துவிட்டு இன்றும் புழுங்குகின்றனர். அடுத்து இந்த நில விற்பனைக்கான பத்திரப்பதிவுக்கான 20 கோடி ரூபாயை மாநில அரசு ரத்து செய்து இலவசமாக பதிவு செய்து கொடுத்திருக்கிறது.

டாடா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கு 9570 கோடி ரூபாயை குஜராத் அரசு 0.1% வட்டிக்கு கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் 2330 கோடிரூபாயும் அடக்கம். இந்த 9570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் அதுவும் பல தவணைகளில் திருப்புமாம். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்கும். மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு செலவு செய்யப்போகும் அல்லது இழக்கப்போகும் பணத்தின் மதிப்பு 30,000 கோடி ரூபாய்.

ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் நானோ காரை ஒரு இலட்ச்திற்குப்பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம் நானோ காருக்கு நாம் கொடுக்கும் ஒரு இலட்சத்திற்கும் பின்னால் நமது பணம் இரண்டு இலட்சம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் எட்டு மாதங்களில் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலையில் முதலில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் கார்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.

விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்?

மற்றபடி டாடாவுக்கும், குஜராத் அரசுக்கும் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரகசியமாகும். இதை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசு தனது அரசியலுக்காக வெளிக் கொணர்ந்திருக்கிறது. இப்படி அரசு இரகசியம் எப்படி வெளியே போனது என மோடியின் அரசு விசாரிக்கிறதாம். இந்த விவரங்கள் அனைத்தும் 12.11.2008 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்திருக்கிறது.

நானோவின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்கு காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு முப்பதாயிரம் கோடி இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘ மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?

தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் டாடாவின் நானோ கார் crash test எனப்படும் விபத்து சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் காரை ஒரு டூ வீலர் கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். நடுத்தர வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை நானோ ஏற்படுத்தித் தருகிறது.

உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வரும வேளையில் டாடவின் நானோ கார் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்தக் காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் டாடவிற்கு இருக்கிறதாம். 2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான கார் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதை பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல டாடவும செய்கிறது.

இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதததைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது கார்கள் மக்களில் 5 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் நானோவால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான்.

அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போதும் திவால் நிலைக்கு வந்திருக்கும் போர்டு கம்பெனிக்கு அமெரிக்க அரசு நிவாரணத் தொகை வழங்கி காப்பாற்றுகிறது. இந்தியாவில் தொழிலை ஆரம்பிப்பதற்கே அரசு போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வழங்குகிறது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

இறுதியாக நானோ கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட24.3.08 திங்கட்கிழமை மேற்கு வங்கத்திற்கு ஒரு சோகமான நாளென்று சி.பி.எம்.டாடயிஸ்டு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் நிருபம் சென் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.. மேற்கு வங்கம் சிங்கூரில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய நானோ கார் மோடியின் மண்ணிற்கு சென்றது குறித்துத்தான் இந்த வருத்தம். குஜராத் அரசு செலவிடப்போகும் முப்பதாயிரம் கோடி ரூபாயை டாடா என்ற முதலாளிக்காக மேற்கு வங்கம் செலவிட முடியவில்லையே என பாட்டாளிகளின் தோழன் இல்லையில்லை டாட்டாக்களின் தோழன் வருத்தப்படுகிறார். ஆனால் டாட்டாக்களை கைவிடாமல் இந்துக்களின் தோழன் உதவியிருப்பதால், டாட்டாக்களின் தோழன் அடுத்த தேர்தலில் இந்துக்களின் தோழனோடு கூட்டணி வைத்துக்கொண்டால் யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நானோ காரின் மலிவும், அரசியலும், திரைமறைவுச்சதிகளும், ஒன்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அது இந்திய மக்களை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவதில் வலதும் இடதும் சேர்ந்து தரும் ஆதரவில் முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதென உணர்த்துகின்றது.

ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். டாடாவின் நானோ காருக்கு வினவின் இலவச ‘விளம்பரம்’ !

நன்றி : நூர் முஹம்மத்

தகவல் : ஆறாம்பன்னைவாசிகள் குரூப்.

இன்றிரவு 8.30க்கு விளக்குகளை அணையுங்கள்!


உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை தினத்தன்று அனுஸ்டிக்கப்படும் புவி நேரம் என்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

இன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது இந்நிகழ்வின் எதிர்பார்க்கையாகும்

. 2007ம் ஆண்டு முதல் இந்த புவி நேரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள்இ இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குகளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்தப் புவி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டதாகவும தெரிவிக்கப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிக்காவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

இந்த ஆண்டு புவி நேரம், இன்று சனிக்கிழமை இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது. இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த பல கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துபாய் அமீர‌க‌ த‌மிழ்க் க‌விஞ‌ர் பேர‌வை சார்பில் க‌ருத்த‌ர‌ங்கு

துபாய் அமீர‌க த‌மிழ்க் க‌விஞ‌ர் பேர‌வையின் சார்பில் 'க‌ல்வியும் க‌விதையும்' எனும் த‌லைப்பில் க‌ருத்த‌ர‌ங்கு அஸ்கான் டி பிளாக்கில் ச‌னிக்கிழ‌மை ( 28 மார்ச் 2009 ) மாலை எட்டு ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் துணை முத‌ல்வ‌ரும், எம்.ஐ.இ.டி. க‌லைக்க‌ல்லூரியின் முத‌ல்வ‌ருமான‌ முனைவ‌ர் பேராசிரிய‌ர் பீ.மு. ம‌ன்சூர் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ உள்ளார்.

அமீர‌க‌ த‌மிழ்க் க‌விஞ‌ர் பேர‌வை த‌லைவ‌ர் க‌விஞ‌ர் எம். அப்துல் க‌த்தீம்,செய‌லாள‌ர் அச‌ன்ப‌ச‌ர், திருச்சி ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்த உள்ள‌ன‌ர்.

நிக‌ழ்ச்சி குறித்த‌ மேல‌திக‌ விப‌ரம் பெற‌ : 050 45 47 046 / 050 5489609 ஆகிய‌ எண்க‌ளைத் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

துபாயில் இஸ்லாமிய‌ க‌ண்காட்சி ம‌ற்றும் சொற்பொழிவு

துபாய் ஜ‌ம்மிய்ய‌த்து அஹ்லில் குர்ஆன் வ‌ல் ஹ‌தீஸ் அமைப்பின் சார்பில் ஹெரிடேஜ் வில்லேஜ் ஆடிட்டோரிய‌த்தில் இஸ்லாமிய‌ க‌ண்காட்சி ம‌ற்றும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இன்று மாலை ஐந்து ம‌ணி முத‌ல் ஒன்ப‌து ம‌ணி வ‌ரை ந‌டைபெற‌ இருக்கிற‌து.

ஜ‌ம்மிய்ய‌த்து அஹ்லில் குர்ஆன் வ‌ல் ஹ‌தீஸ் அமைப்பின் த‌மிழ‌க‌த் த‌லைவ‌ர் ஷெய்க் எஸ். க‌மாலுத்தீன் ம‌த‌னீ அவ‌ர்க‌ள் இஸ்லாம் ஓர் அறிமுக‌ம் எனும் த‌லைப்பிலும், ஜ‌ம்மிய்ய‌த்து அஹ்லில் குர்ஆன் வ‌ல் ஹ‌தீஸ் அமைப்பின் மாநில‌ப் பேச்சாள‌ர் கோவை அய்யூப் குர்ஆன் அற்புத‌ இறைவேத‌ம் எனும் த‌லைப்பிலும் உரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

மாலை ஐந்து ம‌ணி முத‌ல் க‌ண்காட்சியும், ஏழு ம‌ணி முத‌ல் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெறும்.

இந்நிக‌ழ்வில் அனைத்து ச‌மூக‌த்தின‌ரும், பெண்க‌ளும் க‌ல‌ந்து கொள்ள‌லாம்.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ 050 271 6801 , 050 8813666 ஆகிய‌ எண்க்ளிலும், jaqhdubai@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரியிலும் தொட‌ர்பு கொள்ள‌லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

என் பிரிய துபை

கணத்த மனத்துடனும்எதிர்கால கனவுடனும்என் இளமை காலஏக்கங்களுடனும் உன்னில் நான் காலடி வைத்தேன்

என் மண்ணில் கிடைக்காத அங்கிஉறாரம்இம் மண்ணில் நீ எனக்குத்தந்தாய்

தவிப்புடன் தாவியகுழந்தையாய் நான்ஆதரவுடன் அள்ளிய அன்னையாய் நீ

எத்துணை மன போரட்டம்என்னில்அத்துணைக்கும் மருந்தெடுத்துதந்தாய் உன்னில்

எத்துணை முறை என் வேதனை மனத்திற்குவெண் சாமரம் வீசியிருக்கும்உன் கடற்கரைக் காற்று

சோகமாய் வந்த என்னைஎத்துணை முறை உன் கடற்கறை மடியால்தாலாட்டி இருக்கிறாய்

நான் இந் நாட்டில் இருக்கும் போது தானேஎன் வீட்டில் இருப்பது போல்உணர்ந்தேன்

நான் எந் நாட்டில்உறங்கியதை விடஇந் நாட்டில் உறங்கிய வருசங்கள் தானே அதிகம்

எப்போதும் களிப்புடனேபார்த்த உன் முகத்தில்இன்று கலக்ககம் ஏன்அள்ளி அள்ளி கொடுத்த பூமி நீ

எத்தனை குடும்பங்ளி;ல் நீமகிழ்ச்சி விளக்கு ஏற்றி இருக்கிறாய்எத்தனை இல்லங்களில்சந்தோசச் சலங்கைஒலிக்கச் செய்தாய்

இன்று உன்னில் ஏன் இந்த நிசப்தம்

என்னை சீராட்டி , பாரட்டிமெருகூட்டியது நீஉன் ஆரவார முகத்தில்சோகத் துளிகள் ஏன்?

நிதம் ஒரு நிகழ்ச்சியால்எத்தனை சந்தோசப் பூக்களை தூவியிருக்கிறாய்உனக்கு இன்று பொருளாதார நெருக்கடியாம்

விசா இல்லாதவர்கெல்லாம்வேலை தந்த நீஇன்று விசா உள்ளவர்கேவேலையில்லை என்கிறாயாம்

அள்ளி சென்றவரெல்லாம்எள்ளி நகையாடுகிறார்காலம் விரைவில் மாறும்வசந்தம் மீண்டும் வீசும்

உன் வானில் மகிழ்ச்சிமீண்டும் சிறகடிக்கும்நீயே இன்றும் என்றும் அரபு நாடுகளின்அழகு ராணி.

நன்றி : ராஜா கமால் - rajakml@yahoo.com

தொழுவோம் வாரீர்

தொழுவோம் வாரீர்தொழுதால் தீரும் தொல்லைகள் யாவும்

தினம் ஐவேளை தொழுதிட வேணும்

மறந்தால் நாசம் மறுமையில் மோசம்

மஹ்ஷர் வெளியில் மருகிட நேரும்

படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்

பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்

கருவில் உருவாகி நாமிருந்தபோது

கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்

அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்

பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே

மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று

மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று

மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே

மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை

மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு

மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு

முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி

முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி

இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்

இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்

குப்ரின் தீங்கான செயலின்றி வாழ

கப்ரின் வேதனையில் வீழாது மீள

சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி

கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி

மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்

மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும்

மண்ணில் உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்

உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.

நன்றி : muslim_guys@yahoo.காம்

சென்னையில் 25% எச்1பி விசா வினியோகம்

இந்தியாவில் வழங்கப்படும் எச்1பி விசாக்களில் 25 சதவீதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அளிக்கப்படும் என்று அமெரிக்க துணைத் தூதர் ஆன்ட்ரூ சிம்கினின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எச்1பி விசாக்களில் நான்கில் ஒரு பகுதி, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மூலம் விநியோகிக்கப்படும்.

அமெரிக்காவில் ஆறு வருடங்கள் தங்கியிருந்த பின்னர் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்க வழி உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு, எச்1பி விசா மூலம் அங்கு செல்வோர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. இதனால்தான் எச்1பி விசாக்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் திட்டத்துடன் இருப்பதாக சந்தேகப்பட்டால் அவரது விசா விண்ணப்பத்தை நாங்கள் நிராகரித்து விடுவோம்.

இந்தியாவும், அமெரிக்காவும் பல விஷயங்களில் பொதுவானவையே. இரு நாடுகளிலும் வர்த்தகத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார் சிம்கின்.

கிரிமினல் வேட்பாளர்களை அறிய வெப்சைட்!

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் யார் யார் என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் கிரிமினல் ரெக்கார்ட் உள்ளி்ட்டவற்றுடன் கூடிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அந்த அருமையான தளத்தின் பெயர் http://www.nocriminals.org/

டெல்லியைச் சேர்ந்த பொது நலன் அறக்கட்டளை என்ற அமைப்பு இந்த இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த அமைப்பு கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர்.

அதில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சீட் தரக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும் இந்த இணையத்தில் போட்டு வைத்துள்ளனர்.

வேட்பாளர்களின் பெயர், தொகுதி உள்ளிட்டவற்றை இடுகையிட்டு கேட்டால் அவரது பின்னணித் தகவல்களை இந்த இணையதளம் தருகிறது.

நமக்குள் இஸ்லாம் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுவதுதான் எப்போது?


கந்தூரி கொடியேற்றம் ஒருபுறம், அதை கரத்தலும், நாவாலும், மனதாலும் தடுக்கநினைக்கும் கூட்டம் மறுபக்கம்.

இதன் விளைவு காபிர்-ஐ "மாற்றுமத சகோதரன்"என்று கூற துடிக்கும் நம்முடைய்ய நாக்கு கலிமாவை மொழிந்துள்ள நம்இஸ்லாமிய சகோதரனுக்கு சலாம் சொல்ல கூட எழுவதில்லை.

உன்னுடைய தாஃவாஎங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் உன்னுடைய்ய சகோதரனிடம் இருந்து, அதைவிட்டு விட்டு அவனை முஷ்ரிக் என்று புறம் தள்ளி ஒட்டுமொத்த முஸ்லிம்உம்மா விற்கும் இடையில் பிளவு,பகைகளை உருவாக்கும்

இந்த தாஃவா-வைஅல்லாஹ், ரசூல் இவர்களில் யார் நமக்கு கற்று தந்தது? கியாமத் நாள் வரைஇந்த நிலைதான் நீடிக்குமா? அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுவதுதான் எப்போது?


நன்றி : K. சுலைமான் காஜா

தகவல் : ஆறாம்பன்னைவாசிகள் குரூப்.

காலச் சுவடுகள் - இந்தியா மீது பாகிஸ்தான் திடீர் படையெடுப்பு

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வரலாற்று புகழ் பெற்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் மிக முக்கியமானது 1971 டிசம்பரில் பாகிஸ்தானுடன் நடந்த போரில் மகத்தான வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை விடுவித்து, "வங்காளதேசம்" என்ற பெயரில் தனி சுதந்திர நாடாக்கியதாகும்

1947 ஆகஸ்ட் 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்தது. பாகிஸ்தானில் மேற்குப் பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் என்று இரண்டு பகுதிகள். மதம் இரண்டு பகுதிகளையும் ஒன்றுபடுத்தினாலும், மொழி அவர்களை வேறு படுத்தியது. மேற்குப் பாகிஸ்தானில் வசிப்பவர்கள் உருது பேசும் முஸ்லிம்கள், கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள். மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
1970_ல் பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் நீண்ட இடைவெளிக்குப்பின் நடந்தது. மொத்தமுள்ள 313 இடங்களில் 167 இடங்களை கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த முஜிபுர் ரகிமானின் "அவாமி லீக்" கட்சி கைப்பற்றியது. மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவரான பூட்டோவின் பாகிஸ்தான் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்திலிருந்தது. முறைப்படி மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்ற முஜிபுர் ரகிமான்தான் பாகிஸ்தான் முழுமைக்கும் பிரதமராக வேண்டும். ஆனால் அவர், கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆயிற்றே. அதனால், முஜிபுர் ரகிமானிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு பூட்டோவும், மேற்கு பாகிஸ்தானின் இதரத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாகிஸ்தான் அதிபராக (ராணுவ சர்வாதிகாரியாக) இருந்தவர் யாகியா கான்.
"பூட்டோவும், நீங்களும் சேர்ந்து ஆட்சி அமையுங்கள்" என்று யோசனை கூறினார். ஆனால் அதற்கு ரகிமான் ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தானில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. மார்ச் 3_ந்தேதி பாராளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தள்ளி வைக்கப்பட்டது. மார்ச் 26_ந்தேதி நள்ளிரவு முதல் கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவம் பயங்கர அடக்கு முறையில் ஈடுபட்டது.
முஜிபுர் ரகிமானும், அவாமி லீக் தலைவர்களும், பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். ரகிமானின் ஆதரவாளர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஓடிவந்தனர். ஜுன் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டது. இதனால் இந்தியாவுக்குப் பெரும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. இந்த அகதிகள், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டனர். "கோடிக்கு மேற்பட்டவர்கள் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க நேரிடும்" என்று பாகிஸ்தானை இந்திரா எச்சரித்தார்.
அகதிகள் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உறவு சீர்கேடு அடைந்தது. இந்நிலையில், 1971 டிசம்பர் 3_ந்தேதி மாலை இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென்று தாக்குதல் நடத்தியது. அமிர்தசரஸ், பதன் கோட், ஸ்ரீநகர், ஜோத்பூர், ஜாம்நகர், அம்பாலா, ஆக்ரா ஆகிய நகரங்களில் உள்ள விமான தளங்கள் மீது பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசின. விமானத்தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரும் எல்லை நெடுகிலும் சுடத்தொடங்கினர். அது மட்டுமின்றி, போர் நிறுத்த எல்லைக்கோட்டைத் தாண்டி காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. பதிலடி பாகிஸ்தான் இந்தத் தாக்குதலைத் தொடங்கியபோது பிரதமர் இந்திரா காந்தி கல்கத்தாவில் இருந்தார்
அவரும், வெளிïர்களில் இருந்த மற்ற அமைச்சர்களும் அவசரமாக டெல்லி திரும்பினர். மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்திரா காந்தி தலைமையில் நள்ளிரவில் நடந்தது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது என்றும், இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மேற்குப் பாகிஸ்தானில் உள்ள சர்கோதா, மூரித், மியான்லால், ஹார் முதலிய இடங்களில் உள்ள விமான தளங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. லாகூர் அருகில் உள்ள விமான தளங்கள் மீதும் விமானத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலால், பாகிஸ்தானின் ஏராளமான போர் விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்தியா _ பாகிஸ்தான் போர் முழு அளவில் மூண்டது
நன்றி : மாலைமலர்

இறை வசனம் :

அல்லாஹ்வால் மட்டுமே முடியும் மகத்தான பணிகள்!

“துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (அல்குர்ஆன்: 27:62).

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

”விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.” (அல்குர்ஆன்: 53:1-4)

அல்லாஹ்வின் மகத்தான ஞானம்!

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (திருக்குர்ஆன்: 6:59)

அல்லாஹ்வை எப்படி மறுக்க முடியும்?

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:28)

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனை அறிந்து கொள்ளுதல்!

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள்ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன்: 88:17-20)

காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்

20-25 வருடங்களுக்கு முன்பு வரதட்சினை வாங்கக்கூடாது, கொடுக்கக்கூடாது, கந்தூரிக் கடைக்குப் போகக்கூடாது, தொழும்போது தொப்பி அவசியமில்லை, அத்தஹியாத்தில் கலிமா விரலை ஆட்டனும், கூட்டு துவா கூடாது இப்படியெல்லாம் சொல்லிகொண்டு சிலர் பலே, பழைய ஆலிம்சாக்களை கேள்வி கேட்டும், ஆதாரம் கேட்டும் முஸ்லிம்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தங்களை குர்.ஆன் ஹதீஸை மட்டும் ஆதாரமாகக் கொள்ளும் "தவ்ஹீது"வாதிகள் என்றும் சொல்லி புரட்சி செய்தார்கள்.

தலைப்பா கட்டியவரையும்,தாடி வைத்தவரையும்,கோழி அறுப்பவரையும், தாயத்து முடிந்து கொடுப்பவரையுமே மார்க்கம் அறிந்தவர்களாக நம்பிக் கொண்டு, மாதம் ஒரு சிறப்பு தினம் உருவாக்கி ஆயுத பூசைக்கும் பாத்திஹா ஓதி ஜீவனம் நடத்தியவர்கள் தாழ்வு மனப்பன்மை கொள்ளும்வகையில் சமுதாயத்தில் சத்தியமார்க்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.

குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே முன்னிறுத்திய பாவத்திற்காக?! சமூக பகிஷ்கரிப்பு செய்யப்பட்டார்கள்.வரதட்சினை வாங்கும் 95% திருமணங்களைப் புறக்கனித்து சமபந்தி/வலீமா விருந்துகளைத் துறந்தார்கள். சுருக்கமாகச் சொல்வதெனில் நபித்துவத்திற்கு முந்தைய பத்து வருட மக்கா வாழ்க்கையைப்போல் எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளானர்கள்.

ஏழெட்டு வருடங்கள் மதறஸாவில் ஓதிக்கற்று பக்தியுடன் பரனில் அடுக்கப்பட்ட கிதாபுகளை தூசிதட்டி ஆதாரங்களைத் தேடச் செய்தார்கள். தராவிஹ் எத்தனை ரக்காத்துகள் என்பதற்கு விடைதேட சமுதாயத்தைக் கிட்டத்தட்ட சஹாபாக்கள் காலத்திற்கே அழைத்துச் சென்றார்கள். எங்கு சென்றார்கள் இந்த அக்மார்க் தவ்ஹீதுவாதிகள்? என்று தேடிக்கண்டுபிடிப்பதே இப்பதிவின் நோக்கம்.

நான்கு மத்ஹபுகளால் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்று முழங்கிய இவர்கள் இன்று நான்குக்கும் மேற்பட்ட மத்ஹபுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இமாம்களைக் கேலிபேசிய இவர்கள் இன்று கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தஹியாத்தில் விரலை ஆட்டலாமா வேண்டாமா என்று விவாதத்தை தொடங்கியவர்களால் இன்று சமுதயமே ஆடிப்போயுள்ளது!பச்சைப் பிறைக்கொடியை கிண்டலடித்தவர்களே இன்று பச்சையை தங்கள் கொடியில் வைத்துக் கொண்டு தவ்ஹீது அரசியல் செய்துவருகிறார்கள். தனது ஒரு கண்போனாலும் பரவாயில்லை-தன்னை எதிர்த்த சகோதரனுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

நம்பி வந்தவர்களை அரசியல்வாதிகளிடம் கூட்டம் காட்டி அரசியல் பேரம் பேசிப் பலனடைகிறீர்கள்! பஞ்சப்பரதேசிகளைப் போலிருந்த நீங்கள் புத்தகம் எழுதியும் டிஜிட்டல் பிரச்சாரம் செய்தும் பணம் சேர்த்து விட்டு ஆயுளில் ஒருமுறை ஜகாத் போதுமென்கிறீர்கள்!

செங்கதிரும் விண்மதியும் சேர்ந்தே கையில் தந்திடினும் எம்கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நபிவழி எங்கே? வின்டிவீயில இடம்தந்தால் எங்கள் கொள்கையை கிடப்பில்போட்டு கூட்டணிப் பிரச்சாரம் செய்வோம் என்று சோரம்போன உங்கள் வழி எங்கே?

போதும் உங்கள் சமுதாயச்சேவை! இனி குடும்பத்துடன் கந்தூரிக்கும் செல்ல மாட்டோம் நீங்கள் குடும்பத்துடன் அழைக்கும் பேரணிக்கும் செல்ல மாட்டோம் என்ற மனநிலைக்கு பக்குவப்பட்டுவிட்டோம். எங்களிடம் வலியுறுத்திய தூய இஸ்லாத்தை இனிமேலாவது நீங்களும் பின்பற்றுங்கள்! உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வெளிஆதாரம் கேட்டு விவாதத்திற்கு அழைக்காமல், எஞ்சிய காலத்திலாவது அரசியல் சாக்கடையில் வீழ்ந்த தவ்ஹீதுக் கொள்கையை மீட்டெடுக்க ஒன்றுசேருங்கள்!

அன்புடன்,

அபூஅஸீலா-துபாய்

தகவல் : http://adiraixpress.blogspot.com/2009/03/blog-post_24.html

நாள் : 24 - 03 - 2009.

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
அறியாமைக் கால அரேபியர் பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, ஜமாஅத்துக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்."அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

மனித நேய மக்கள் கட்சியை எதிர்க்க ஜமாத்துக்கள் முடிவு

உச்சிப்புளி: மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் அதை எதிர்த்து ஜமாத்துக்கள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் கவுரவ ஆலோசகர் அப்துல் நாபிக் கூறுகையில், " லோக்சபா தேர்தலை குறிவைத்து த.மு.மு.க., சார்பில் மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டது.

தி.மு.க., உடன் கூட்டணி ஏற்படுத்தி தொகுதியை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு "சீட்' தருவதை எதிர்த்து தி.மு.க., தலைமைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் ஜமாத்துக்கள் சார்பில் தந்தி அனுப்பி வருகின்றன.

5000 அமெரிக்க ஊழியர்களை நீக்கும் IBM

நியூயார்க்: சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனமான ஐபிஎம், விரைவில் தனது 5000 அமெரிக்கப் பணியாளர்களை நீக்குகிறது.

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள தனது ஊழியர் எண்ணிக்கையை நிலையாக அதிகரி்த வண்ணம் உள்ளது ஐபிஎம். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனத்தில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் இருந்தனர்.

இப்போது சில பணிகள் முற்றுப் பெற்றதாலும், அந்தப் பணிகளுக்கான க்ளையண்டுகள் இல்லாமல் போனதாலும், அந்தப் பிரிவுகளில் பணியாற்றியவர்களை நீக்குகிறது ஐபிஎம்.

கடந்த ஜனவரியில் மொத்தம் 4600 பேருக்கு வேலை நீக்க கடிதம் அனுப்பியது ஐபிஎம். மேலும் சர்வதேச அளவில் ஐபிஎம் கிளைகளில் உள்ள பல்வேறு வேலைகளுக்கு இவர்கள் விண்ணப்பித்தாலும் பரிசீலிக்கப்படும், ஆனால் உள்ளூர் சம்பளமே வழங்கப்படும் என ஐபிஎம் அறிவித்திருந்தது.

வேலை நீக்கத்தை விட இது பெட்டராக உள்ளதே என்று பலர் ஐபிஎம்மில் புதிய வேலைகளுக்கும் விண்ணப்பித்து வருகிறார்களாம்.

இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்கர்கள்தான். தப்பித்தவர்கள் இந்தியர்கள். எந்தக் கிளையில் வேண்டுமானால் பணியாற்றத் தயாராக இந்தியப் பணியாளர்கள் இருப்பதால், இந்தியாவில் பணி நியமன உத்தரவு கொடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.

LinkWithin

Blog Widget by LinkWithin