வெள்ளி, 13 நவம்பர், 2009

ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார்


ஹாங்காங்கில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்நுட்பம் மற்றும் புதுப்பித்தல் அமைப்பு மற்றும் ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைகழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறிய சீட்டுகளைக் கொண்ட இந்த கார் பேட்டரியால் இயக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கார், சுற்றுப்புறத்திற்கு கேடு விளைக்காதது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக 7 சீட்டுகள் கொண்ட காரில் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்வதற்கான தேவையான பெட்ரோலுக்கு 2.20 ஹாங்காங் டாலர் செலவாகும். ஒரு சீட் கொண்ட காராக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 1ஹாங்காங் டாலர் செலவாகும். ஆனால் இந்த மின்சாரக் காரிற்கு வெறும் 10 ஹாங்காங் சென்ட் மட்டுமே செலவாகுமாம்.

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு 10 ஹாங்காங் டாலர் செலவாகிறது. இதில் சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பேருந்தில் பயணம் செய்வதை விட குறைந்த செலவுதானாம். இந்த காரின் விலை 90,000 ஹாங்காங் டாலர் என பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் பவர் எலக்ரானிக் ரிசர்ச் சென்டர் தெரிவித்துள்ளது.

செய்தி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin