செவ்வாய், 30 ஜூன், 2009

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க


இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க

நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.

இந்த மென்பொருளின் பெயர் - டபுள் டெஸ்க்டாப் - DoubleDesktop 1.1

மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே

புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க

சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள். அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

ஆப்பிள் சபாரி உலாவி உபயோகிப்பவர்கள்

சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தகுதியின்மைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க இம் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே முறையீட்டு மனு அளிக்கலாம். என மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் தலத்தணிக்கை மூலம் 100 சதவிகிதம் வீடுவீடாகச் சென்று சரிபார்க்கப்பட்டன. இதில், தகுதியின்மை எனக் கருதுவதற்குரிய நிலையில் உள்ள குடும்ப அட்டைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பட்டியலில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு 16.2.2009 முதல் பொருள் நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. அக் குடும்ப அட்டைதாரர்கள் பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் குடும்ப அட்டைகளை களப்பணிக் கணக்கெடுப்பாளர்களிடம் தணிக்கைக்கு ஆஜர்செய்ய முடியாத காரணத்தால் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள், புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்து முறையீட்டு மனுக்கள் 17.2.2009 முதல் 16.3.2009 வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேல்முறையீட்டு மனு பெறும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் பணி நிறைவுற்ற நிலையில் மீண்டும் பொருள் நிறுத்தப் பட்டியலில் கண்ட மேல்முறையீட்டு மனுச் செய்யத் தவறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேல்முறையீட்டு மனுவை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் 30.6.2009 வரை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரையும் முறையீட்டு மனுவை சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவர் அல்லது குடும்ப அட்டையிலுள்ள வயது வந்த நபர் எவரேனும் ஒருவர் மட்டுமே தங்கள் அசல் குடும்ப அட்டை மற்றும் இருப்பிடத்துக்கு ஆதாரமான வாக்காளர் அடையாள அட்டை, மின்னீட்டு நகல், தொலைபேசி பில், கடவுச்சீட்டு, குடிசை மாற்று வாரிய ஒதுக்கீட்டு ஆணை, வீட்டுவரி ரசீது ஆகியவைகளில் எவையேனும் ஒன்றின் நகலுடன் மேல்முறையீட்டு மனு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 30ம் தேதிக்கு பின்னர் வழங்கப்படும் முறையீட்டு மனு பெறப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் நாளை தேசிய கமாண்டோ படை மையம் தொடக்கம்

சென்னையில் புதன்கிழமை தேசிய கமாண்டோ படை மையம் தொடங்கப்படுகிறது.


மும்பையில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து அத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ள முக்கிய நகரங்களில் தேசிய கமாண்டோ படை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா, ஆகிய நகரங்களில் தேசிய கமாண்டோ படை மையம் தொடங்கப்படுகிறது.

தில்லி மற்றும் மும்பையில் செவ்வாய்க்கிழமை (இன்று) இந்த மையம் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது. சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய இடங்களில் தேசிய கமாண்டோ படை மையம் புதன்கிழமை செயல்படத் தொடங்குகிறது.

சென்னையில் நெற்குன்றத்தில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் மாநில அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்

திங்கள், 29 ஜூன், 2009

சென்னையில் ஏர் இந்தியா விமான நேரங்களில் மாற்றம்


சென்னையிலிருந்து செல்லும், வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிதாக ஒரு ரன்வே உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரன்வேயை முக்கிய ரன்வேயுடன் இணைக்கும் பாதை அமைக்கப்படவுள்ளது.

இதற்காக ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை விமான நிலையத்தின் முக்கிய ரன் வே தினசரி 6 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது.

இதையொட்டி விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முக்கிய ரன்வே மூடப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் அது போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்.

இதன் அடிப்படையில் விமானங்களின் புறப்பாடு, வருகை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த நேர மாற்றத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து விமான நிறுவனங்களும் ஒப்புதல் கொடுத்துள்ளனவாம்.

இந்த நேர மாற்றம் காரணமாக விமானப் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு காலை 11 மணிக்குள்ளும், பிற்பகல் 5 மணிக்கு மேலும் இருக்குமாறு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை - சிங்கப்பூர் இடையிலான ஐசி 555 விமானம் இந்தக் காலகட்டத்தில் சென்னையிலிருந்து 12.50 மணிக்குப் பதில் 12.15 மணிக்குக் கிளம்பும்.

ஐசி 566 காலை 9.45 மணிக்குப் பதில் 9 மணிக்கு வந்து சேரும்.

அதேபோல, ஐசி 557 சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு பிற்பகல் 1.25 மணிக்குப் பதில் 10.15க்குக் கிளம்பும். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ஐசி 558 விமான நேரத்தில் மாற்றம் இல்லை.

ஏஐ 817 சென்னையிலிருந்து டமாமுக்கு காலை 11.45 மணிக்குப் பதில் 10.30க்குக் கிளம்பிச் செல்லும்.

சென்னை - கோலாலம்பூர் இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 9 -622 விமானம் பிற்பகல் 2.30க்குப் பதில் 12.30மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

பிளைட் 9-671 சென்னை - கொழும்பு விமானம் காலை 7.30 மணிக்குப் பதில் 5.15 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

ஐசி 611 சென்னை - துபாய் மார்க்கத்திலான விமானம் பிற்பகலுக்குப் பதில் காலை 9.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல, IX 631 சென்னை - துபாய் விமானம் முற்பகல் 11.35 மணிக்குப் பதில் 10.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

IX 682 விமானம் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு பிற்பகல் 2.10 மணிக்குப் பதில் 11.05 மணிக்குப் புறப்பட்டுச் ெசல்லும்.

IX 684 விமானம் பிற்பகல் 2.25 மணிக்குப் பதில் காலை 9.40 மணிக்குக் கிளம்பும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 613 விமானம் பிற்பகல் 12.50 மணிக்குப் பதில் காலை 10.25 மணிக்கு அபுதாபிக்குப் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் பெண்களுக்கு சிறப்பு வசதி: கருப்பசாமி பாண்டியன்


குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்ட துவங்கி விட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோசமடைந்துள்ளனர். குற்றாலத்தில் பெண்களுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் ஆய்வு செய்தார்.

இம்மாத துவக்கத்தில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து வெயில் அடித்ததால் சீசன் டல்லடித்தது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இன்று காலையில் குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் குறைவாகவே விழுகிறது.
நேற்றும் இன்றும் விடுமுறை நாளாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இன்று காலையில் லேசான வெயில் அடித்தது. சாரல் இல்லாவிட்டாலும், இதமான தென்றல் குற்றாலம் சுற்றுபுறத்தில் வீசியது. சுற்றலுலாப் பயணிகள் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

இதனிடையே தென்காசி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் இன்று காலை குற்றாலம் அருவி பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம், பெண்கள் குளிக்கும் இடத்திற்கு அருகே தற்காலிக உடை மாற்று அறை அமைக்க உத்தரவிட்டார்.

அலெக்ஸ், தென்காசி

நெல்லை மருத்துவக் கல்லூரி கலைவிழா இன்பினிட்டி- 2009 : மதுரை சாம்பியன் கல்லூரி


திருநெல்வேலியில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கான "இன்பினிட்டி- 2009' கலை விழா போட்டிகளில் மதுரை மருத்துவக் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 26ஆம் தேதி துவங்கிய "இன்பினிட்டி-2009' கலை விழாவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 15 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிற்பம் செதுக்குதல், ரங்கோலி, போஸ்டர் டிசைன் வரைதல், ஆங்கில கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என 30 வகையானப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, மதுரை மருத்துவக் கல்லூரி வென்றது. இரண்டாவது பரிசை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தட்டிச் சென்றது.

நேற்று நடைபெற்ற நிறைவு விழாவிற்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கே. கனகராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே. மீர் முஸ்தபா உசேன், வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் என். பழனியப்பன், உறைவிட மருத்துவர் மோகன், பேராசிரியர்கள் முகமதுதம்பி, நம்பியப்பன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செல்வா, திருநெல்வேலி

ஜூலை 6ம் தேதி ஸ்டிரைக் - ஸ்டேட் வங்கி ஊழியர்கள் அறிவிப்பு


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆறு தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஆறு துணை சங்கங்கள் இணைந்து ஜூலை 6ம் தேதி ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்துள்லன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூரையும், பிற ஸ்டேட் வங்கிகளையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைப்பதை எதிர்த்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டிரைக் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத் தலைவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர், ஸ்டேட் வங்கியின் ஆறு துணை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் தரபப்ட்டுள்ளது.

ஞாயிறு, 28 ஜூன், 2009

முஸ்லீம் நாடுகளுக்கான யு.எஸ். பிரதிநிதியாக இந்தியப் பெண் பாரா தேர்வு

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் முஸ்லீ்ம் பிரதிநிதியாக ஜம்மு காஷ்மீரைப் பூர்வீமாகக் கொண்ட பாரா பான்டித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள முஸ்லீம்களுக்கும், ஹில்லாரிக்கும் இடையிலான பாலம் போல செயல்படப் போகிறார் பான்டித். இதற்காக இவருக்கு முஸ்லீம் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி என்ற பதவி தரப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம்தான் பான்டித்தின் பூர்வீகமாகும். இந்த வாரத் தொடக்கத்தில் பான்டித்தின் நியமனம் அறிவிக்கப்பட்டது.

உலகெங்கும் உள்ள முஸ்லீம் சமுதாயத்தினரை அமெரிக்காவின் நண்பர்களாக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளார். அதன் ஒரு படியாகவே தற்போது பான்டித் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹில்லாரி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதியாக இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பாரா பான்டித்தை நியமிப்பதில் பெருமை அடைகிறேன்.

தனது முழு அனுபவத்தையும் இந்தப் புதிய பணிக்கு பாரா பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். உலகெங்கும் உள்ள முஸ்லீம்களை இணைக்கும் முயற்சிக்கு அவர் பெரும் பங்காற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய 60 பேருக்கு அபராதம்

நெல்லையில் வாகனங்களில் செல்லும்பொழுது செல்போனில் பேசியதற்காக 60பேருக்கு காவல்துறை அபாரதம் விதித்துள்ளது.

கடந்த வாரம் சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகன லைசன்ஸ் ரத்து செய்யப்படும். மேலும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நெல்லையில் திடீரென போக்குவரத்து போலீசார் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 60பேருக்கு அபாரதம் விதித்தனர். இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் ஜெயசந்திரன் கூறுகையில், தினமும் இந்த சோதனை நடத்தப்படும். மேலும் நடந்து கொண்டே செல்போனில் பேசியவாறு சென்றவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

செல்வா, திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ரயில் முன்பதிவு மையம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

மேலப்பாளையத்தில் முழுநேர ரயில் முன்பதிவு மையம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அதன் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் பிர்தவ்ஸி, மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலி ஆகியோர் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்புவை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி கடந்த 2004 தேர்தலில் வாக்குறுதி அளித்தது. அதுகுறித்து மக்களவையில் முறையிட வேண்டும்.

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலப்பாளையத்தில் முழுநேர கணினி முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும். நெல்லையில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க காவல்துறையினரின் தடையின்மை சான்றுப் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )


இன்று ( 28 -06- 2009 ) நமது ஊரை சார்த்த ஜனாப் அப்துல்காதர் ( சதக்கதுல்லா அப்பா கல்லூரி, நூலகர் ) அவர்களின் மகனுக்கும், கொங்கராயகுறிச்சி சார்த்த ஜனாப் அலி அக்பர் ( கன்னியாகுமரி துணை ஆட்சியாளர் ) அவர்களின் மகளுக்கும், பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள இதய திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.


மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.


மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்


வஸ்ஸலம்:

srivaimakkal@gmail.com

சனி, 27 ஜூன், 2009

நீண்டகால வசிப்பிட அனுமதி: துபாய் இந்தியர்கள்

மூதலீடு செய்துள்ள இந்தியர்கள், நீண்ட கால வசிப்பிட அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு குடியரசுகளில் ஒன்றான துபாயில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கோடிக்கனக்கான தினாரை முதலீடு செய்துள்ளனர். அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகளவு பங்களிப்பு வழங்கியுள்ளனர். அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நீண்ட கால வசிப்பிட அனுமதியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

துபாயில் நீண்ட காலமாக தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களின் அமைப்பான இந்தியன் பிசினஸ் அண்ட் புரபஷனல் கவுன்சிலைச் [The Indian Business and Professional Council (IBPC)] சேர்ந்த பிரதிநிதிகள், புதன்கிழமையன்று துபாய் குடியுரிமை மற்றும் வசிப்பிட உரிமை துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அகமது அல் மர்ரியை சந்தித்து விவாதித்தனர்.

அப்போது இந்தியன் பிசினஸ் அண்ட் புரபஷனல் கவுன்சில் தலைவர் பராஸ் சகாத்புரி பேசுகையில், ஐக்கிய அரபு குடியரசில் உள்ள இந்திய வர்த்தகர்கள் மிக நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் மூன்று வருட வசிப்பிட அனுமதியால், அவர்கள் மத்தியில் நிலையில்லா தன்மை ஏற்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள், நிபுணர்கள் கோடிக்கான தினாரை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக துபாய், ஜிபில் அலி, சார்ஜா ஆகிய இடங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், நீங்கள் ஏன் நீண்ட கால வசிப்பிட அனுமதி கொடுக்க கூடாது? சுற்றுலா பயணிகள், பொருட்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விசாவுக்கான டிபாசிட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு துபாய் குடியுரிமை மற்றும் வசிப்பிட உரிமை துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அகமது அல் மர்ரி பதிலளிக்கையில், எனது துறை முடிந்த உதவிகளை செய்யும். உங்கள் கோரிக்கையில் பெரும்பாலவை, எனது துறையின் அதிகார வரம்பில் இல்லை. இதற்கு பெடரல் (மத்திய) அரசு தான் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்தியர்கள் முன்னதாகவே விசா எடுக்காமல், துபாயில் வந்து இறங்கிய உடன் விசா வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படுமா என்று கேட்டதற்கு, இது நல்ல யோசனை. இதை பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கான்சல் ஜெனரல் வேனு ராஜமோனி, சிங்கப்பூர் கான்சல் ஜெனரல் தில்லிப் நாயர், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவையில் இன்று சிறப்பு பாயன் நடைப்பெறுகிறது

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவையில், இன்று சென்னை ஸ்ரீவை ஜமாஅத் சார்பாக சிறப்பு இஸ்லாமிய பாயன் நடைப்பெறுகிறது.

சென்னை புரசைவாக்கம் பள்ளியில் இருத்து ஆலிம்களை வரவழைத்து ஸ்ரீவை சின்ன பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்களுக்கு காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 வரையும், பிறகு மதியம் 2.00 மணி முதல் 4.30 மணி வரையும் சிறப்பு பாயன் நடைப்பெறுகிறது.

ஸ்ரீவை மக்கள் அனைவரும் கலத்து கொண்டு பயன் பெற அன்புடன் கேட்டு கொள்கிறோம்

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

குற்றாலத்தில் களை கட்டும் சீசன்

குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது. அருவிகளில் வெள்ளிக்கிழமை தண்ணீர்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும் சாரல் மழை பெய்தது.

நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் மனதுக்கு இதமளிக்கும் குளுகுளு தென்றல் காற்றும் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது.

பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் வியாழக்கிழமையை விட தண்ணீர் அதிகளவில் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

இருப்பினும், பழைய குற்றாலம் அருவியில் மட்டும் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது.

அதே வேளையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உயர்கல்வி பயில சீன கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளை கல்லூரியில் உயர்கல்வி பயில சீன நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில சீன நாட்டைச் சேர்ந்த பீஜிங் ராங்-ஷிருட்டாங் கல்வி நிறுவனம் 25.06.2009 அன்று நூருல் இஸ்லாம் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவர் ஜியோ வெய்கோங், பொது மேலாளர் ஜியோ வெய்டோங், டீன்டாங்க் ஜெய்ங், சென்டே செங் ஆகியோர் என்.ஐ. அறக்கட்டளையின் தலைவர் மஜீத்கானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். என்.ஐ. பல்கலை. இணை வேந்தர் முத்துநாயகம், துணைவேந்தர் சிவசுப்பிரமணியன், இணைப் பதிவாளர் ஜனார்த்தனன், ராம்தாஸ், சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

வெள்ளி, 26 ஜூன், 2009

ஸ்ரீவை, ஆதிச்சநல்லூர்: புதைந்திருக்கும் தமிழர் வரலாறு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மண் மேடாக காட்சியளிக்கும் ஆதிச்சநல்லூரில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் நெல் பயிரிட்டு வந்துள்ளனர்.

தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அப்பகுதியில் முழுவீச்சில் ஆய்வுகள் நடைபெற்றால் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் பல அரிய வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.

இப்பகுதியில் இதுவரை சுமார் 160 சுடுமண் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன.

ஆதிச்சநல்லூர் அக்காலத்தில் பெரும் நாகரீகத்தைக் கொண்ட நகரமாக விளங்கியுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதிச்சநல்லூரில் பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்த தகவலை முதலில் கண்டுபிடித்து வெளி உலகுக்கு தெரிவித்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாகர். இவர் பெர்லின் அருங்காட்சியகத்தில் பணியாற்றி வந்தார்.

1876ம் ஆண்டு ஏதோவொரு குறிப்பு மூலம் ஆதிச்சநல்லூர் குறித்து கேள்விப்பட்டவர் இங்கு நேரடியாக வந்து அப்பகுதியை ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்.

1910ல் பிரிட்டிஷ் அரசு இங்கு பல்வேறு சோதனைகளை நடத்தியபோது பழங்கால மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 2002 முதல் 2005 வரை இங்கு நடத்திய தீவிர ஆய்வில் பல வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்தன.

இங்கு 600 சதுர மீட்டர் அளவிலான பகுதி மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 160க்கும் மேற்பட்ட பழங்கால மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

இலவச இதய அறுவை சிகிச்சை

ஒரு கிளிக் செய்தல் பெரிதாக பார்க்கலாம்

ஈமெயில் உதவி : ACM இப்ராகிம் , சவூதிஅரேபியா

தூத்துக்குடியில் சிறுதொழில் கடன் வாங்க குவிந்த இளைஞர்கள்


தூத்துக்குடி சிறுதொழில் சங்க அலுவலகத்தில் பிரதமரின் வேலை உருவாக்கும் கடன் திட்ட பற்றிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் சார்பில் நகரம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு பிரதமரின் தொழில் வேலைவாய்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடன் வழங்கும் முகாம் இன்று தூத்துக்குடி சிறுதொழில் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 200க்கும் அதிகமான பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு முகாம் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர். இதில் புதிததாக தொழில் துவங்குவதன் மூலம் பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் கடன் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.10லட்சம் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமப்புற பயனாளிகளுக்கு 25சதவீத மானியமும், சிறப்பு பிரிவினருக்கு 35 சதவீத மானியமும் வழங்கப்படும். பொது பிரிவினர் 10சதவீத தொகையையும், சிறப்பு பிரிவினர் 5சதவீத தொகையையும் பங்குத் தொகையாக கடன் பெறும் வங்கியில் செலுத்த வேண்டும்.

மொத்த மதிப்பீட்டில் 90 முதல் 95 சதவீதம் வரை வங்கி கடன் கிடைக்கும். 2009-10ம் ஆண்டிற்கான விண்ணப்பங்களின் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் சிறுதொழில் சங்க செயலாளர் என்.ஜெயராமன், மாவட்ட தொழில் மையத்தின் உதவி செயற் பொறியாளர் சொர்ணலதா, சிறுதொழில் சங்க ஆலோசகர் ஆ.ராசையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளிடம் தொழில் மற்றும் கடன் வசதி பற்றிய ஆலோசனைகளை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை சிறுதொழில் சங்க பொதுச் செயலாளர் கே.நேருபிரகாஷ், திட்ட அலுவலக மேலாளர் குணதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

பாரத பிரதமரின் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் தொகை பெறுவதற்கும், அதற்கான பயிற்சி பெறுவது உள்ளிட்ட விபரங்கள் தெரிந்துகொள்ள தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம், 15சி, நந்தகோபாலபுரம், தூத்துக்குடி என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 0461-2336005 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

முருகன்.ஆர் (படம்: இருதயராஜ்

தூத்துக்குடியில் ஓட்டகத்தை வைத்து நூதன பிச்சை


தூத்துக்குடியில் குரங்கு, கரடி, யானை என பிச்சை எடுத்து வந்தவர்கள் தற்போது ஓட்டகத்தை வைத்து பிச்சை எடுத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக ராஜாஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஓட்டகத்தை வைத்து பிச்சை எடுத்து வருகின்றனர். ஓட்டகத்திடம் ஒரு தகடை காண்பித்து ஆசி பெற்றுத் தறுவது போல நூதன முறையில் பணம் வசூல் செய்து வருகின்றனர்.

பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. தூத்துக்குடியில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பிராதன சாலைகளில் ஓட்டகத்தை நிறுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

வன உயிரினங்களை வைத்து பிச்சையெடுக்க கூடாது என அரசு தடை விதித்துள்ளபோதும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஓட்டகத்தை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் புதிதாக தெரிவதால் தூத்துக்குடி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

முருகன்.ஆர்

பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்


உலகம் முழுவதும் கோடிக்கணக் கான ரசிகர்களை தன்னுடைய இசை யால் மயக்கி வந்த பாப் இசை அரசன் என்று பாராட்டப்பட்ட மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பால் மரணமடைந் தார்.

அவருக்கு வயது 50. அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தது, அவரது ரசிகர்களையும், இசை யுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஜாக்சன் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

* ஆகஸ்ட் 29, 1958ல் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள கேரியில் பிறந்தார்.

* 1962ல் தன்னுடைய 4 சகோதரர்களோடு இணைந்து ஜாக்சன்5 எனும் இசைக்குழு மூலம் அறிமுகமானார்.

* 1969ல் ஜாக்சன் குழுவுக்கு டெட்ராய்ட் நகரை சேர்ந்த இசைத்தட்டு நிறுவனத்திடமிருந்து முதல் ஒப்பந்தம் கிடைத்தது. மைக்கேல் ஜாக்சனின் குரல் அவரது இசைக்குழுவை புகழ் பெற வைத்தது.

* 1970ல் மைக்கேல் ஜாக்சன் தனியேவும் பாடத் தொடங்கினார்.

* 1979ல் குவின்சி ஜோன்ஸ் தயாரிப்பில் "ஆப் தி வால்' ஆல்பம் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் விற்பனையானது.


* 1982ல் திரில்லர் ஆல்பம் வெளியானது. பீட் இட், பில்லி ஜீன் உள்ளிட்ட பாடல்களை கொண்ட இந்த ஆல்பம் 5 கோடிக்கு மேல் விற்பனையாகி அவரை இசையுலகின் ஆக சிறந்த பாடகர்களில் ஒருவராக உயர்த்தியது.

* 1984ல் பெப்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதே ஆண்டில் 8 கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

* 1985ல் ஏடிவி மியூசிக் எனும் இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு "வி ஆர்த வேர்ல்டு' எனும் பாடலை ஆப்பிரிக்க வறுமையை போக்குவதற்காக எழுதினார்.


* 1987ல் "பேட்' எனும் ஆல்பம் வெளியானது. 2.60 கோடிக்கு மேல் விற்பனையானது.

* 1988ல் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதை "மூன் வாக்' வெளியானது.

* 1990ல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக அறுவை சிகிச்சை முகமூடி அணிந்து காணப்பட தொடங்கினார்.

* 1992ல் டேஞ்சூரஸ் ஆல்பம் வெளியானது.

* 1992ல் 13வது சிறுவனின் தந்தை ஜாக்சன் தன்னுடைய மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


* 1994ல் மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரியை மணந்து கொண்டார். 2 ஆண்டுகளில் விவாகரத்து.

* 1995ல் ஹிஸ்டரி ஆல்பம் வெளியானது.

* 1996ல் டெபி ரோ எனும் நர்சை மணந்து கொண்டார். 3 ஆண்டுகள் கழித்து விவாகரத்தானது.

* 2001ல் "இன்வின்சிபில்' ஆல்பம் வெளியானது.

* 2002ல் இசைத்தட்டு நிறுவனங்கள் பாடகர்களை குறிப்பாக கருப்பின பாடகர்களை சுரண்டுவதாக மைக்கேல் ஜாக்சன் போர்க்கொடி எழுப்பினார்.
* அதே ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் ஜாக்சன் ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது தன்னுடைய 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை தலைகீழாக தொங்கவிட்டு பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

* 2003ல் ஏல நிறுவனம் ஒன்று அவர் வாங்கிய ஓவியங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.

* இதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ டிவியில் மைக்கேல் ஜாக்சன் தொடர்பான செய்திப்படம் வெளியானது. அவருடைய மேலாளர் சம்பள பாக்கிக்காக வழக்கு தொடர்ந்தார். நவம்பர் மாதம் ஜாக்சனின் கலிபோர்னியா பண்ணை வீட்டில் ரெய்டு நடைபெற்றது. சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் ஜாக்சன் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 20ந் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். டிசம்பர் மாதம் அவர் மீது இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.


* 2004ல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மீதான புகாரை மறுத்தார்.

* 2005ல் ஜாக்சன் வழக்கில் விசாரணை தொடங்கியது. அனைத்து புகாரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

* இந்த ஆண்டு மார்ச் மாதம் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில் கால தேவன் அவரை உலகிலிருந்து பிரித்து சென்றார்.ஜாக்சனின் பல முகங்கள்

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை மாற்றி அமைத்து வந்த மைக்கேல் ஜாக்சன், உண்மை யிலேயே பல முகங்களை கொண்டவர். 5 வயதில் இசையுலகில் அடியெடுத்து வைத்த அவர், அறிய ஆற்றல் கொண்ட குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.
.
கணக்கில்லாமல் செலவு செய்த அவர், நன்கொடையாகவும் வாரி வழங்கியிருக்கிறார். நீரிழிவு ஆய்வு மற்றும் புற்றுநோய் கழகத்திற்காக அவர் கோடிக்கணக்கான தொகையை நிதியாக திரட்டி தந்தார்.

பெப்சி நிறுவனம் நஷ்டஈடாக அளித்த 1.5கோடி டாலர்களை அவர் நன்கொடையாக வழங்கி விட்டார். இப்படி மனிதநேயம் மிக்கவராக விளங்கிய ஜாக்சன், இசையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் புகழ் பெற்றார். தன்னுடைய நடனத் திறமையின் மூலம் வீடியோ நட்சத்திரமாகவும் அவர் உருவானார்.

இவற்றை தவிர ஜாக்சன் அதீதமான பழக்க வழக்கங்களை கொண்ட புரிந்து கொள்ள முடியாதவராகவும் கருதப்பட்டார்.

கடைசியில் கடனாளி

மைக்கேல் ஜாக்சன் இசையின் மூலம் புகழ் பெற்றதோடு கோடி களுக்கு அதிபராகவும் விளங்கியவர். பாப் இசை ஆல்பம் வெளியீட்டை மாற்றியமைத்த மைக்கேல் ஜாக்சன், கோடிகள் புரளும் வர்த்தகத்தின் மையமாகவும் விளங்கினார்.
.
அவருடைய பாடல்கள் ஒவ் வொன்றும் விற்பனையில் சாதனை படைத்து வருவாயை குவித்தது. ஆல்பங்கள் அள்ளித் தந்தன.
இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன் மூலம் மேலும் செல்வந்தரானார். 1988ல் அவர் நவர்லாண்டு பண்ணை வீட்டை விலைக்கு வாங்கினார். 2500 ஏக்கர் பரப்பில் சொர்க்கலோகம் போல இந்த வீடு அமைந்திருந்தது.

ஆனால் கோடிகளுக்கு அதிபராக விளங்கிய அவர் பின்னர் சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி கடனாளி ஆனார். சமீப ஆண்டுகளில் மேடை யேறுவதை விட கோர்ட் படிகளில் அதிகம் ஏறி இறங்கிய மைக்கேல் ஜாக்சன், வழக்கு செலவுகளுக்காக கணக்கில்லாமல் கடன் வாங்கினார். இதனால் இறக்கும் போது அவர் கடனாளியாகவே இறந்ததாக கூறப்படுகிறது.

ஐம்பதுகளி்ல் புகழ்பெற்று வாழ்ந்த அமெரிக்க இசைக்கலைஞர், நடிகர் சம்மி டேவிஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1990-ல் மைக்கேல் ஜாக்சன் பாடிய கவிதை வரிகள், தமிழில்...

நீ இருந்தாய்!


நாங்கள் வருவதற்கு முன்பே நீ இருந்தாய்.

வலியையும் அவமானத்தையும் தாங்கிக் கொண்டாய்.

உனது வழியில் பலர் தடைகளை எழுப்பினர்.

அவர்களை வீழ்த்தினாய். நீயே வென்றாய்.

இது சரியல்ல என அவர்களுக்குப் போதித்தாய்.

அவர்களையே உன்னைக் கொண்டாடச் செய்தாய்.

ஆம். அப்போது நீ இருந்தாய்.

இப்போது நாங்கள் நடந்து செல்ல வழி இருக்கிறது.

எல்லோரும் பார்க்கும்படியாக

முடிந்தவரை நன்றாகவே நாங்கள் இருக்கிறோம்.

இதோ நானும்கூட இருக்கிறேன்.

ஏனெனில், நீ இருந்தாய்.

"ஒரு கருப்புக் குயிலின் கானம் ஓய்ந்து விட்டது. ஒரு கருப்பனின் மரணம் வெள்ளை மனிதனின் கண்ணில் கூட நீரை வரவழைத்து விட்டது. இசையின் மகத்துவம் தான் இது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற சீர்காழியின் அந்த வரிகள் காதில் கேட்கிறது" கருத்துக்கு நன்றி:ரவிக்குமார்

மாணவருக்கு தேசிய விருது

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான கண்காட்சி கொல்கத்தாவில் நடந்தது. இந்த கண்காட்சியில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ஜெ.விஷ்ணு தேசிய விருது பெற்றார்.

அமெரிக்காவில் நெவடாவில் நடைபெற்ற ப்ரீ-காலேஜ் சயின்ஸ் கண்காட்சியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். மைக்ரோ பல் எரிபொருள் செல் என்னும் விஷ்ணுவின் ஆய்வுத்திட்டம் நடுவர்களால் பாராட்டப்பட்டது.

காயல்பட்டினத்தில் ஜூலை 18-ல் வெளிநாடு வாழ் முன்னாள் மாணவர் சந்திப்பு

வெளிநாட்டில் வாழும் காயல்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜூலை 18-ம் தேதி காயல்பட்டினத்தில் நடைபெறுகிறது.

2-வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை அமீரக காயல் நல மன்றமும், தி. காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்டும் நடத்த உள்ளனர்

கைதியாக இருந்து பட்டம் பெற்ற 2 பேருக்கு சுந்தரனார் பல்கலை.யில் வேலை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தபோது முதுகலைப் பட்டம் பெற்ற 2 பேருக்கு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் வியாழக்கிழமை வழங்கினார்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தொலைநெறி தொடர்கல்வி மூலம் சிறைக் கைதிகள் சிறப்பு கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் முதுகலை மற்றும் எம்.ஃபில் பட்டம் பெற்ற 36 பேருக்கு கடந்த ஆண்டு சிறை வளாகத்திலேயே பட்டமளிப்பு விழாவை நடத்தினார் துணைவேந்தர் சபாபதி மோகன்.

அப்போது விழாவில் பேசிய துணைவேந்தர், பட்டம் பெற்றுள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரவும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தார்.

அதன்படி, முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் அனந்தநாடார் குடியிருப்பைச் சேர்ந்த தாணுலிங்கம் (45), பள்ளிவிளையைச் சேர்ந்த மோசஸ் அருள் ஆண்டோ (45) ஆகிய இருவருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளில் அடங்குவர்.

பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொலைதூரக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், அவர்கள் இருவருக்கும் பணி நியமன ஆணையை துணைவேந்தர் வழங்கினார்.

பார்வையற்றோர் சேர்க்கை: மேலும், தொலைநெறி தொடர்கல்வியில் பி.ஏ. தமிழ் இலக்கிய பாடத்தில் சேர்ந்த பார்வையாற்ற மாணவர்களான கோட்டையூரைச் சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆண்டோ டொஸ்பின், கோலியன்குளத்தைச் சேர்ந்த லிங்கதுரை ஆகிய 3 பேருக்கும் சேர்க்கை அனுமதி அட்டையையும், பாடப் புத்தகங்களையும் அவர் வழங்கினார்.

மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு அரசின் கல்வி கட்டணச் சலுகை, பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணச் சலுகை ஆகியவற்றால் இந்த 3 மாணவர்களும் கட்டணம் எதுவுமின்றி கல்வி பயில உள்ளனர்.

பின்னர் அவர் பேசியதாவது: நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பின்பு தொலைநெறி தொடர்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி வாய்ப்பைப் பெருக்க தொலைநெறி தொடர்கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும்.

தொலைநெறி தொடர்கல்வியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை சுமார் 50 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கே தொலைநெறி தொடர்கல்வியில் சேர்ந்துள்ள 3 மாணவர்களுக்கும் அவர்களது பாடத்திட்டங்கள் "பிரெய்லி' முறையில் வழங்கப்படும் என்றார் துணைவேந்தர்.

பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கா.அ. மணிக்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) நா. கண்ணன், துணை அலுவலர் முனைவர் எஸ். பிரபாகர், நிதி அலுவலர் பி. செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஜே. பால்ராஜ் ஜோசப் வரவேற்றார்.

இக் கூட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள படிப்பு மையங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.

Prayers

As-salaamu-alaikum,


Fajar is spent in sleep.

Zuhr in college or at job.

Asr in relaxing.

Maghrib busy doing stuff...

Ishaa watching TV.

Jumaah salaat is only 2 rakaat, that too engrossed in worldly thoughts.

If anyone prays tahajjud, that is considered astonishing!


Please remember...

The first question asked in the grave will be concerning prayer.

It is a request to everyone to invite others for prayer. Insha-Allah, you will be rewarded for this!

May Allah fulfill the legitimate wishes of the person who sends this message to all...Ameen!There are 8 doors of Jannat:

1. Jannat-ul-mava

2. Dar-ul-maqaam

3. Dar-ul-salaam

4. Dar-ul-khuld

5. Jannat-ul-adaan

6. Jannat-ul-naim

7. Jannat-ul-kasif

8. Jannat-ul-firdausInsha-Allah, on the day of qayamat may your name be called from all the doors...Ameen!


Islamic note...


First farishta: Today I came so close to Allah that there were only 70 veils between me and Allah Ta-ala.


Second farishta: But when a momin stands for prayer, he comes so close to Allah that even those 70 veils are removed!!


Rasool Allah ( S.A.W.) has proclaimed:

1. The person who is always in a state of wazoo, Allah will increase his livelihood!

2. The person who doesn't reveal his needs to others, his needs are soon fulfilled!

3. Allah Ta-ala keeps that person healthy and happy (abaad) who after listening to Hadith forwards it to others!


Subhan-Allah, to propagate a good thing is Sadqa Jaaria. So please don't let it stop...forward it to all your friends and relatives...Jazak-allah.


Warm Regards,

S.Saleem Kasaly

IT IS Network Support Engg

4,Swamy Sivananda salai ,Chennai -02

Direct (91) (44) 66774101 | Fax - (91) (44) 25383838 | Mobile - (91) (44) 9841234511

வியாழன், 25 ஜூன், 2009

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறும் இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 11.7.2009 (சனிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பணிபுரிய ஆணை பிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை ஏற்று 2-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 11.7.2009 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறி விக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; உதவி கலெக்டர் வழங்கினார்

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அன்பரசு தலைமையில் கடந்த 16 நாட்களாக நடந்தது. ஜமாபந்தியில் கிராம கணக்குகளை வருவாய் அலுவலர் சரி பார்த்தார்.

அப்போது பொதுமக்களிடமிருந்து பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, குடும்ப அட்டை கேட்டு ஆயிரத்து 31 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் சிறப்பு நிவாரண தொகையாக ஸ்ரீமூலக்கரை பேச்சியம்மாள், தெய்வ செயல்புரம் சங்கரம்மாள், செய்துங்கநல்லூர் பரமேஸ்வரி, செக்காரக்குடி சிவனஞ்சி, சிறுத்தொண்டநல்லூர் ரெஜினா, வாழவல்லான் ராஜேஸ்வரி, சிறுத்தொண்ட நல்லூர் ஜெயராணி, செக்காரக்குடி உமையாள் ஆகியோருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.

விபத்து நிவாரண உதவித்தொகையாக வாழவல்லான் இசக்கி ஆசாரிக்கு ரூபாய் 15 ஆயிரமும், விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகையாக விவசாய தொழிலாளர்கள் ஆழ்வார்கற்குளம் மாடசாமி, வெள்ளையம்மாள், வல்லகுளம் ஆறுமுகயா தவ் ஆகியோருக்கு உதவித் தொகையாக மாதம் ரூபாய் 400ம் உதவி கலெக்டர் அன்பரசு வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பரமசிவன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இளங்கோ மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ

'.....அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்'. (அல்குர்ஆன் 2:102)

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.

ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.

இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.

நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.

இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.

எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் 'நீ ஒன்றுமே செய்யவில்லை' எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து 'நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்' என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.

மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! 'அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்

அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)

அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.

மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.

அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.

தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி

பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.

இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.

இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.

நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)

ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.

வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்

வேதத்தை வியாபாரமாக்குதல்

وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ

உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன் 2:41)

தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)

இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள். இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.

நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.

குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.

தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.

பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.

'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.

மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.

நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.

ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.

எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.

மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.

நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.

நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.

வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை

வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்

பிரான்ஸ் : ' பர்கா ' உடை குறித்து ஆராய குழு அமைப்பு


பிரான்ஸ் நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் அணியும் 'பர்கா ' உடை குறித்து ஆராய 32 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ' பர்கா' உடை இஸ்லாமிய பெண்களை சிறைப்படுத்துவதாகவும், பொது இடங்களில் 'பர்கா ' அணிவதற்கு தடை விதிப்பதை தாம் ஆதரிப்பதாகவும் கூறினார்.

பிரான்ஸ் குடியரசில் , பெண்கள் அனைத்து சமூக வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டும், தங்களது அனைத்து அடையாளங்களை இழந்தும் , திரைக்கு பின்னால் சிறையிடப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சர்கோஸி மேலும் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சை தொடர்ந்து 'பர்கா' உடை குறித்து ஆராய பிரான்ஸ் நாடாளுமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் பிரான்ஸ் நாட்டின் பிரதான நான்கு கட்சிகளைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, இஸ்லாமிய பெண்கள் மற்றும் மத குருமார்கள் உள்ளிட்டவர்களிடம் ' பர்கா ' அணிவது குறித்து அவர்களது கருத்தை கேட்டறிவதோடு, அரசியல, சமூக மற்றும் பெண்கள் அமைப்புகளிடமும் இது குறித்த கருத்தை கேட்டறிந்து 6 மாத காலதிற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 'பர்கா' அணிய தடை விதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஏறக்குறைய 5 மில்லியன் இஸ்லாமியர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களில் ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் பிரிவினர்தான் 'பர்கா' அணிகிறார்கள்.

இந்நிலையில், 'பர்கா' அணிவது குறித்து ஆராய குழு அமைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ள சில பிரானஸ் இஸ்லாமிய மத குருமார்கள், இது இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டுகிற செயல் என்றும் எச்சரித்துள்ளனர்

நெல்லை பொருள்காட்சி: இன்று முதல் நுழைவுக் கட்டணம்

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் அரசு பொருள்காட்சியில் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி பொருள்காட்சித் திடலில் அரசு பொருள்காட்சி கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், செய்தி-மக்கள் தொடர்பு, காவல் துறை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வனத் துறை, வேளாண்மை, மீன்வளம், வருவாய், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் மூலம் 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர தனியார் நிறுவனங்களாலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் பொழுதுபோக்குக்காக ராட்சத ராட்டினங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இப் பொருள்காட்சியில் வியாழக்கிழமை முதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். பெரியவர்களுக்கு ரூ. 5-ம், சிறுவர்களுக்கு ரூ. 3-ம் வசூலிக்கப்படும். தினமும் மாலை அங்குள்ள கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருள்காட்சி 45 நாள்கள் நடைபெறும். பொருள்காட்சியைப் பார்க்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

துபாயில் பனாத்வாலா நினைவு நாள் நிகழ்ச்சி

துபாயில் அமீர‌க காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் ப‌னாத்வாலா நினைவு நாள் இன்று மாலை கடைப்பிடிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை 9 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக், அல் முத்தீனா ப‌குதியில் நடைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் முஜாஹிதேமில்ல‌த் ம‌ர்ஹும் ப‌னாத்வாலா சாஹிப் சிந்த‌னைக‌ளை அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வை செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, இணைச்செய‌லாள‌ர் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்லவி ஜஹாங்கீர் அரூஸி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

நிக‌ழ்ச்சி குறித்த‌ மேல‌திக‌ விபர‌ங்க‌ள் பெற‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுயாசின் 050 2533712.

இணைய‌த்த‌ள‌ம்:

http://muslimleaguetn.com
www.mudukulathur.com
http://quaidemillathforumuae.blogspot.com

தூத்துக்குடி, நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்


தூத்துக்குடி, நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 6வது ஊதியக் குழுவைக் கண்டித்து நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை துவங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.மாரியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் டெரன்ஸ், உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

6-வது ஊதியக்குழு அறிவிப்பு சத்துணவு ஊழியர்களுக்கு வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. சத்துணவு அமைப்பாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையிலும், சமையலருக்கு பதிவு எழுத்தர் நிலையிலும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையிலும் உள்ள ஊதிய விகித முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் உண்ணாவிரதத்தை நடத்துகிறோம் என்றார் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 200 சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். இந்த தொடர் உண்ணாவிரதம் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லநாடு அருகே மாட்டுவண்டி போட்டி: செக்காரக்குடி முதலிடம்


வல்லநாடு அருகே கலியாவூரில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் செக்காரக்குடி அணி முதல் பரிசை வென்றது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கலியாவூரில் கல்யாணி அம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசை ரூ.10ஆயிரத்தை செக்காரக்குடியைச் சேர்ந்த முருகேஸ்வரி மாட்டு வண்டி பெற்றது. பரிசினை கலியாவூர் பஞ்சாயத்து தலைவி பொன்கனி தமிழ்ச் செல்வி வழங்கினார்.

இரண்டாவது ரூ.7ஆயிரம் பரிசை சங்கரப்பேரியைச் சேர்ந்த மணி என்பவரது மாட்டு வண்டி பெற்றது. 3வது பரிசாக ரூ.5ஆயிரத்தை குறுக்குச்சாலையைச் சேர்ந்த நந்தகுமாரி மாட்டு வண்டி பெற்றது.

இதனை தொடர்ந்து சிறிய மாட்டுவண்டிகள் பிரிவில் செக்காரக்குடி, வரதராஜபுரம், தச்சநல்லூர், கரையிறுப்பு, திருநெல்வேலி டவுண் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கலந்துகொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கலியாவூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

புதன், 24 ஜூன், 2009

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு ஜமாத் பேரவை கண்டனம்

நபிகள் நாயகத்தின் பெயரை பட விளம்பரத்திற்குப் பயன்படுத்திய செயல் கண்டனத்துக்குரியது என்று ராஜாதி ராஜா பட இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு, சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜாதி ராஜா படம் சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

முதலில் இப்படத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை சுஹாசினி. இதற்குக் கண்டனம் தெரிவித்த ஷக்தி சிதம்பரம், சுஹாசினியின் கணவர் மணிரத்தினம் மட்டும் காப்பி அடிக்காமலா படம் எடுக்கிறார் என்று விளாசியிருந்தார்.

இந் நிலையில் ராஜாதி ராஜா படம் தொடர்பான விளம்பரங்கள் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

மற்ற படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்வது போல ராஜாதி ராஜ பட விளம்பரங்கள் இருப்பதாக ஏற்கனவே திரையுலகில் முனுமுனுப்பு நிலவுகிறது.

இந் நிலையில் மதச் சிக்கலில் மாட்டியுள்ளார் ஷக்தி சிதம்பரம். சில நாட்களுக்கு முன்பு இயேசு நாதர் படத்தைப் போட்டு, சிலுவைன்னா ஏசு, ராஜான்னா மாஸு என்று ஒரு விளம்பரம் வந்தது.

அதேபோல விஷ்னுன்னா அவதாரம், ராஜான்னா ஆரவாரம், ஐயப்பன்னா பள்ளிக்கட்டு, ராஜான்னா ஜல்லிக்கட்டு என்று குண்டக்க மண்டக்க விளம்பரத்தைக் கொடுத்துத் தள்ளியிருந்தனர்.

இந் நிலையில் தற்போது நபிகள் நாயகத்தின் பெயரையும் தனது விளம்பத்தில் சேர்த்து சிக்கலில் மாட்டியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

இதற்கு சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் மேலை நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜா தி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் மெக்கா, மதினா' படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, ஒரு அவதூரான வசனத்தையும் சேர்த்து வெளியாகியுள்ள விளம்பரம் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.

இச்செயலை செய்த படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல, சென்னை சுன்னத் வல் ஜமாஅத் மசூதி கூட்டமைப்புத் தலைவர் முகம்மது சிக்கந்தரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் உடனடியாக இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிஎஸ்என்எல் பங்குகளையும் விற்கிறது மத்திய அரசு!

லாபம் தரும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் இன்னொரு கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் பொது விற்பனைக்குக் கொண்டுவருகிறது மன்மோகன் அரசு.

அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் ஜரூராக இறங்கியுள்ளது மத்திய அரசு. முன்பு மன்மோகன் சிங் அரசு இதைச் செய்ய முயன்ற போது, கம்யூனிஸ்டுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பணிந்து போக வேண்டி வந்தது.

இப்போது முன்பை விட பலமாக அமைந்துள்ளது மத்திய அரசு. என்ன எதிர்ப்பு வந்தாலும் முழுமையாக அலட்சியம் செய்யும் மனநிலையில்தான் ஆட்சியாளர்களும் உள்ளனர்.

கடந்த ஆட்சியின்போது செய்ய நினைத்து, முடியாமல் போன பங்கு விற்பனையை இந்த ஆண்டு செய்தே தீருவது என ஒற்றைக் காலில் நிற்கிறது அரசு.

சில தினங்களுக்கு முன் என்எல்சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்கப்போவதாக அறிவித்தது மத்திய அரசு. அடுத்து இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் விற்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தப் பங்குகளை விற்று 10 பில்லியன் டாலர்களை திரட்டப் போகிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார் பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜன்னலோர படுக்கை வசதி: ஜூலை 13 முதல் முன்பதிவு ரத்து


நாடு முழுவதும் முக்கிய ரயில்களில் ஜன்னலோர 3-வது படுக்கை வசதி (பெர்த்) ரத்து செய்யப்படுகிறது.

வரும் ஜூலை 13-ம் தேதி முதல் இந்த படுக்கை வசதிகளுக்கு முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3-வது படுக்கை வசதி செய்யப்பட்டது.

பயணிகளின் தேவையைச் சமாளிக்க இந்த வசதியை ஏற்படுத்த ரூ. 38 கோடி ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) அனுமதியுடன் ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது.
மிகவும் குறுகலாகவும், காற்றோட்டம் இல்லாமலும் இருந்ததால் இந்த 3-வது படுக்கை வசதி பயணிகளிடையே வரவேற்பைப் பெறவில்லை. இதனால், பெரும்பாலான பயணிகள் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரயில்களின் ஜன்னலோரத்தில் 3-வது படுக்கை வசதிகள் விரைவில் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது அறிவித்தார்.

இந்நிலையில், வரும் ஜூலை 13-ம் தேதி முதல் அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த 3-வது படுக்கை வசதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த படுக்கைகளுக்கு முன்பதிவு செய்வதும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த படுக்கை அகற்றப்பட்டு முன்பு போல ரயில்களின் ஜன்னலோரத்தில் இனி 2 படுக்கைகள் மட்டுமே இருக்கும். இதையடுத்து தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டிகளில் இனி மொத்த படுக்கைகளின் (பெர்த்) எண்ணிக்கை 72 ஆகக் குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

இலவச ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்: மைக்ரோசாஃப்ட் திட்டம்

தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்களை அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தற்போது சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்டி-வைரஸ் வாங்குவதைத் தவிர்க்கின்றனர்.


எனவே இவற்றை இலவசமாக அளிக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.


மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளிக்கும் சாஃப்ட்வேர்களைக் காக்கும் வகையில் இந்த ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர்கள் இருக்கும். இத்தகைய சாஃப்ட்வேரை மக்கள் இணையதளம் மூலம் இலவசமாக பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக அமெரிக்கா, பிரேஸில், இஸ்ரேலில் உள்ளவர்கள் இம்மாதம் 23-ம் தேதி முதல் இத்தகைய இலவச சாஃப்ட்வேரைப் பெறலாம். பிற நாடுகளில் உள்ளவர்கள் இந்த ஆண்டு இறுதியில் இத்தகைய இலவச சாஃப்ட்வேரைப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது

செந்தூர் ரயிலை தினசரி இயக்க கோரிக்கை

திருச்செந்தூர்-சென்னை செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் எம். சொக்கலிங்கம், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய தந்தி:

திருச்செந்தூருக்கும், சென்னைக்கும் இடையே தற்போது வாரத்தில் ஒருநாள் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் செந்தூர் விரைவு ரயில் வாரத்தில் 5 நாள் இயக்கப்படும் என முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால் உடனடியாக ரயில்வே அமைச்சரின் ஆணை செயல்படுத்தப்படவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவடைந்து புதிய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்குப் பதில் ரயில்வே நிர்வாகம் செந்தூர் விரைவு ரயிலை வாரத்தில் 2 நாள்கள் மட்டும் இயக்க இருப்பதாகத் தெரிகிறது. அது சரியல்ல. அதனால், ரயில் பயணிகள் மிகவும் கஷ்டப்படுவதுடன் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்றார் அவர்.

செவ்வாய், 23 ஜூன், 2009

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நடிகர்கள்: நெல்லையில் பரபரப்பு


திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை மேடை நடன நிகழ்ச்சி நடத்தும் நடிகர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, மேடை நாடக நடிகர் மன்ற பொறுப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமையில் பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்று வேடமணிந்து வந்திருந்த கலைஞர்கள் ஆட்சியர் மு. ஜெயராமனிடம் அளித்த மனு அளித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மேடை நடனக் கலைஞர்கள் உள்ளனர். சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத் தொழிலை நம்பி இருக்கிறோம். இதில், படித்த இளைஞர்கள், உடல் ஊனமுற்றோர் என அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளோம். இந்தக் கலைஞர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையில் உறுப்பினராக இருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேடை நடன நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. இதனால், எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. எங்கள் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மனு அளிக்க வந்திருந்தவர்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், வடிவேலு போன்று வேடமணிந்து வந்திருந்த கலைஞர்களை ஆட்சியர் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தகவல் : செல்வா, திருநெல்வேலி

வேலைஉத்தரவாதம் இல்லாத ஒருலட்சம் தொழிலாளர்களை திருப்பிஅனுப்ப குவைத் முடிவு

குவைத்தில் வேலை உத்தரவாதம் இல்லாத சுமார் ஒரு லட்சம் அயல்நாட்டுத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கே அனுப்ப குவைத் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குவைத் அமைச்சர் பாதில் சபர், முறைகேடாக அயல்நாட்டுத் தொழிலாளர்களை குவைத் வரவழைத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குவைத் அரசாங்கம் தீர்மானித்து உள்ளது.

அதோடு இப்படி முறையான வேலை உத்தரவாதம் இல்லாமல் வேலை பார்க்கும் அயல்நாட்டு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரை அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்புவது என்று அரசு தீர்மானித்துள்ளது.

அவர்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் இருக்கிறார்கள். மேலும் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக வசிக்கும் அயல்நாட்டு தொழிலாளர்கள், தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அப்படி குடியிருப்பு பகுதியில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் பாதில் சபர் தெரிவித்தார்.

இஸ்லாமிய வங்கி இரண்டாவது மண்டல மாநாடு மற்றும் கண்காட்சி


தனிநபர் பொருளாதாரத்தை வட்டியில்லா வங்கி உள்ளிட்ட அமைப்புகள் உயர்த்தப் பாடுபட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய "வட்டியில்லா வங்கியை நோக்கி' எனும் இரண்டாவது மண்டல மாநாடு மற்றும் கண்காட்சியை, திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்து, அவர் பேசியது:

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது நாணயம் ஆகும். சக்கரத்தைப் போன்று அதை உருண்டை வடிவில் அமைத்ததன் காரணம், நாணயம் உருண்டோடி எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். "நா நயம்' கெடும் போது தான் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் வட்டியின் கொடுமை குறித்து கண்கூடாக அறிய முடிகிறது. இதனாலேயே கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் வட்டியை குறைக்கக் கூடிய அதிகாரம் கூட நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வட்டியானது சமுதாயத்தில் சீரழிவினை ஏற்படுத்துகிறது. வட்டியில்லாமல் பணத்தைக் கடனாகக் கொடுக்க முடியுமா என்பதையும், அவ்வாறு கொடுத்தப் பணத்தை திரும்பப் பெற முடியுமா என்பதையும் ஆராய வேண்டும்.

தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்த இதுபோன்ற வட்டியில்லா வங்கிகள் உதவி செய்யவேண்டும் என்றார் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி.

இந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத் தலைவர் கே.எம். முகம்மது அலி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட ஹாஜி. மௌலானா அப்துல் ரஹீம் ரஷாதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் சமது, ஜே.ஏ.ஓ.ஹெச் அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசிம், இலங்கை அமானா இஸ்லாமிய வங்கி ஆலோசகர் முகமது மர்ஷீத், அகமது மஃபாஸ் யூசுபி, சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் பொருளாதாரத் துறைத் தலைவர் டி. அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாநாட்டில், ஒவ்வொரு முகல்லா பள்ளிவாசல் ஜமாத்திலும், பள்ளிக்குச் சொந்தமானப் பணத்தை வட்டியில்லாக் கடன் கொடுத்து இஸ்லாமிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். மத்திய அரசு இந்தியாவில் இஸ்லாம் வங்கியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ரகுராம் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தூத்துக்குடியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி : ஜெயதுரை எம்.பி. துவக்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்ட காசநோய் விழிப்புணர்வுக்கான மோட்டார் வாகன பிரச்சாரத்தை தூத்துக்குடி தொகுதி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் சார்பில் நான்கு நாள் விழிப்புணர்வு மோட்டார் வாகன பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் (காசநோய்) சுப்பையா முன்னிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்

எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி., மோட்டார் சைக்கிள் பிரசாரப் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சுற்றுப் பயணம் வரும் 25-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.

ஏரல், தென்திருப்பேரை, சோனகன்விளை, காயாமொழி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் ஆகிய இடங்களில் முதல் நாள் பிரசாரம் நடைபெற்றது. 2-ம் நாளில் சாத்தான்குளம், நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், வல்லநாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், 3-ம் நாளில் மாப்பிள்ளையூரணி, குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், கடலையூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கடைசி நாள் நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் வழியாக தூத்துக்குடியில் முடிவடைகிறது. 20 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

திங்கள், 22 ஜூன், 2009

குற்றாலத்தில் இதமான காற்றுடன் லேசான சாரல்


குற்றாலத்தில் இன்று காலை நேர நிலவரப்படி மழை மேக கூட்டங்கள் பொதிகை மலையை சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது வெயிலடித்தாலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிக குறைவாகவும், ஐந்தருவியில் 3 கிளைகளில் குறைவாகவும், செண்பகாதேவி அருவியில் மிதமாகவும் தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்தனர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு 65% சம்பளக் குறைப்பு!


உலகம் முழுக்க விமானப் போக்குவரத்தில் பெரும் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் பல விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்துள்ளன.

இதில் லேட்டஸ்ட் வரவு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

இந்த நிறுவனம் நேற்று தனது விமானிகள் மற்றும் ஊழியர்களுடன் சம்பளக் குறைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துட்டுள்ளது.

அதன்படி பைலட்டுகள் மற்றும் கேபின் ஊழியர்கள் 65 சதவிகித சம்பளக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும் மாத்துக்கு ஒருமுறை சம்பளமின்றி விடுப்பு எடுத்துக் கொள்ளவும் சம்மதித்துள்ளனர்.

நிர்வாகப் பிரிவின் கீழ் வரும் 2000 ஊழியர்கள் 10 முதல் 20 சதவிகித சம்பளக் குறைப்புக்கும், ஒரு நாள் சம்பளமற்ற விடுப்புக்கும் சம்மதித்துள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வருமானம் இந்த ஆண்டு மட்டும் 92 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டு இறுதியில் நிலை இன்னும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தூத்துக்குடியில் தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப்பேரவை பேரணி

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்கக் கோரி, தூத்துக்குடியில் தென்மாவட்டங்களை சேர்ந்த சிறுபான்மையினர் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.

தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கியது.தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மைக் குரு வி.பி. ஆஸ்வால்ட், இந்த பேரணியைத் தொடக்கிவைத்தார்.

தூத்துக்குடி மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருள்தந்தை குமார்ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம்.எஸ். தூராப் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவர் ஜே.ஜே. கிறிஸ்துதாஸ், திருமண்டல பள்ளிகள் மேலாளர் ஏ. பீற்றர் தேவதாஸ், தூத்துக்குடி மறைமாவட்ட கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை ஜேம்ஸ் விக்டர், தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜெயக்குமார், செயலர் எம். பங்கராஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சுய நிதிப்பிரிவில் பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கிய இப் பேரணி, பாளையங்கோட்டை சாலை, அண்ணா சிலை சந்திப்பு, பாலவிநாயகர் கோவில் தெரு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, ரங்கநாதபுரம், மாநகராட்சி அலுவலகம், தெற்கு காட்டன் சாலை, ஜார்ஜ் சாலை வழியாக புனித லசால் மேல்நிலைப் பள்ளியைச் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகளில் சுய நிதிப் பிரிவுகளில் கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித ஊதியமும் இல்லாமல் பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

நெல்லையில் அரசு பொருட்காட்சி துவக்கம்


தமிழக அரசு சார்பில் 45 நாட்கள் நடக்கும் அரசு பொருட்காட்சி நெல்லையில் துவங்கியது.

நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு பொருட்காட்சி வழக்கமாக நடந்து வருகிறது. நெல்லையில் இந்த ஆண்டு 13வது அரசு பொருட்காட்சி சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் பரிதிஇளம்வழுதி தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

பொருட்காட்சியில் அரசு துறையின் சார்பில் கல்விதுறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, வேளாண்துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 20 அரங்குகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


45 நாட்கள் நடக்கும் இந்த பொருட்காட்சியில் ராட்டினங்கள் உள்ளிட்ட தனியார் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறுகின்றன. பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு ரூ.5ம், சிறியவர்களுக்கு ரூ.3ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் பொருட்காட்சியை கண்டுகளிக்க வசதியாக தினமும் மாலை 3மணி முதல் இரவு 11மணி வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

செந்தூர் ரயில் வாரத்தில் இருமுறை இயக்க ஆய்வு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி

திருச்செந்தூர்-சென்னை இடையேயான செந்தூர் விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாள்கள் இயக்க ஆய்வு செய்யப்படும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வாராந்திர ரயில் சேவையை ரயில்வே முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 8.2.2009-ல் தொடக்கி வைத்தார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், அதே விழா மேடையில் இந்த ரயில் வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

தற்போது வாராந்திர ரயில் (எண் 6735) சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேருகிறது. அதுபோல் திருச்செந்தூரில் இருந்து (எண் 6736) இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த ரயில்சேவை தொடக்கப்பட்ட பிறகு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவுகள் 10 நாள்களுக்கு முன்பே முடிந்து விடுகின்றன.

இதனால் வாரத்தில் 5 நாள்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ரயில்சேவையை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்தை கோரி வருகின்றனர்.

பயணிகள் அதிர்ச்சி

5 நாள் ரயில்சேவை தொடங்கும் நாளை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் வாரத்தில் 2 நாள்கள் இயக்க ஆய்வு செய்யப்படும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்டு வரும் திருச்செந்தூர் ரயில், மற்ற நாள்களில் பிலாஸ்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் திருச்செந்தூர், காயப்பட்டினம், நாசரேத், ஆறுமுகநேரி, ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் போதிய ரயில் வசதியின்றி நாகர்கோவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்களிலும் ஏனைய விரைவு ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேம் நடைபெற உள்ள நிலையில், வாரத்தில் 5 நாள் ரயில்சேவை தொடக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகத்தின் தற்போதைய அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நெல்லையில் ரஷ்ய கல்வி விழிப்புணர்வு முகாம்

ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையம் சார்பில் திருநெல்வேலியில் கல்வி விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய மாணவர்கள் ரஷ்யாவுக்கு சென்று அங்கு ஆங்கில வழியில் பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பதற்கான ஆலோசனைகள் இம் முகாமில் வழங்கப்பட்டன.

ஞாயிறு, 21 ஜூன், 2009

சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை 10 நாள்கள் நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சில பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கா.அ. மணிக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கடல்வாழ் உயிர்த் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பவியல், வணிகவியல், உடற்கல்வியியல் நீங்கலாக பிற அனைத்து முதுகலை மற்றும் இளமுனைவர் (எம்பில்) பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பங்களைப் பெறவும், விண்ணப்பிக்கவும் கடைசிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியான 10 தினங்கள் வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும்

விவரங்களை பல்கலைக்கழக இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ்.ண்ய் -ல் அறிந்து கொள்ளலாம் என்றார் மணிக்குமார்.

சனி, 20 ஜூன், 2009

துபாய் அமீர‌க‌ த‌மிழ் ம‌ன்ற‌ம் ந‌ட‌த்திய‌ நேருக்கு நேர் நிக‌ழ்ச்சி

துபாயில் அமீர‌க‌ த‌மிழ் ம‌ன்ற‌த்தின் சார்பில் வியாழ‌க்கிழ‌மை மாலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌ன் உண‌வ‌க‌த்தில் நேருக்கு நேர் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

அறுப‌து ஆண்டு ஊடக‌த்துறைத்துறை அனுப‌வ‌ம் வாய்ந்த‌ சாத்தான்குள‌ம் அப்துல் ஜ‌ப்பார் ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள‌து கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளித்தார்.

இல‌ங்கையில் வாடும் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இந்திய‌ அர‌சு உத‌விப் பொருட்க‌ளை அனுப்ப‌ வேண்டும் என்ற அவர் அத‌ற்காக‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் முழுமுய‌ற்சி மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.

த‌மிழின் பெருமையை விளக்கும் பாட‌லை கும‌ரி அபுபக்க‌ர் பாடினார்.

அமீர‌க‌ த‌மிழ் ம‌ன்ற‌ த‌லைவ‌ர் ஜெஹ‌ப‌ர், அப்துல் ஜ‌ப்பாருக்கு நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கினார். கூட்ட‌த்தில் நிர்வாகிக‌ள் அஹ‌ம‌து முஹைதீன், செய‌லாள‌ர் ந‌ஜுமுதீன், முஹ‌ம்ம‌து ஃபாரூக் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம், யுஏஇ தமிழ்ச் ச‌ங்க‌ம், அமீர‌க‌ தமிழ்க் க‌விஞ‌ர்க‌ள் பேர‌வை, வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு, தாய்ம‌ண் வாச‌க‌ர் வ‌ட்ட‌ம், அமீர‌க‌ த‌மிழ‌ர்க‌ள் அமைப்பு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ளும், வ‌லைப்பூ ப‌திவ‌ர்க‌ளும் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

நிக‌ழ்ச்சியினை ஜெஸிலா ரியாஸ் தொகுத்து வழ‌ங்கினார்

பிரீபெய்டு வாடிக்கையாளருக்கும் ஜி.பி.ஆர்.எஸ் வசதி தரும் பிஎஸ்என்எல்!


தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய செய்திதான். பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளரும் இனி ஜிபிஆர்எஸ் வசதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

ஒரு நாளைக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி தங்கள் மொபைலிலேயே வரம்பற்ற (அன்லிமிடெட்) அளவு பிரவுசிங் செய்து கொள்ளலாம்.

இதற்கான டாப் அப் கார்டுகள் தனியாகக் கிடைக்கின்றன. மொத்தமாக வாங்க வேண்டியதில்லை. ஒரு நாள் மட்டும் உபயோகப்படுத்த விரும்புபவர்கள் ரூ.20 மட்டும் செலுத்தி ஜிபிஆர்எஸ் கார்டு வாங்கி 24 மணிநேரம் தடையில்லாமல் தாங்கள் விரும்பிய தளங்ளை மொபைலிலேயே பிரவுஸ் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இதற்கான முழு விவரங்கள் கிடைக்கின்றன.

குழ‌ந்தைகளை வா‌சி‌க்க பழ‌க்கு‌ங்க‌ள்


குழ‌ந்தைக‌ள் பு‌த்தக‌ங்களை படி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள். பு‌த்தக‌ங்க‌ள் எ‌ன்றா‌ல் பாட‌ப் பு‌த்தக‌ங்க‌ள் அ‌ல்ல‌.

குழ‌ந்தைகளு‌க்கான பு‌த்தக‌ங்க‌ள் ஏராளமானவை உ‌ள்ளன. அவ‌ற்றை வா‌ங்‌கி‌ வ‌ந்து கொடு‌த்து படி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள்.

இத‌ன் மூல‌ம், உ‌ங்களா‌ல் செ‌ய்ய முடியாத எ‌த்தனையோ ந‌ல்ல கா‌ரிய‌ங்களை அ‌ந்த பு‌த்தக‌ங்க‌ள் செ‌ய்து ‌விடு‌ம்.

ந‌ல்ல ந‌ண்ப‌ன் ந‌ல்ல நூ‌ல்க‌ள்தா‌ன் எ‌ன்பதை குழ‌ந்தைகளு‌க்கு வ‌லியுறு‌த்து‌ங்க‌ள். த‌ற்போது தா‌ய் மொ‌ழி எ‌ன்பதே குழ‌ந்தைகளு‌க்கு தெ‌ரியாத ஒ‌ன்றா‌கி‌வி‌ட்டது. எனவே இ‌ப்படி செ‌ய்வத‌ன் மூல‌ம் த‌மிழையு‌ம் வள‌ர்‌க்கலா‌ம்.

‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி‌க் கொடு‌க்கு‌ம் பு‌த்தக‌ம் அவ‌ர்களு‌க்கு ஏ‌ற்றதாக எ‌ளிய நடையுட‌ன் இரு‌க்‌கிறதா எ‌ன்பதை உறு‌தி செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் அவரே இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு அவர் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் (எ) மணிராஜ் (வயது 17) எ‌ன்பவ‌ர் கடந்த 2002 டிசம்பர் 5ல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது 60 வயது முதியவர் மீது மோதியதில் அவர் இறந்தார். அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி, கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சத்து 90,066 நஷ்டஈடு தொகையை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். இந்த பணத்தை ராஜேஷ் மணிராஜிடம் இன்சூரன்ஸ் நிறுவனம் திரும்ப வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ராஜேஷ்மணிராஜின் தாயார் ஞானசெல்வம், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்து நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தர‌வி‌ல், பழகுநர் உரிமம் வைத்திருப்பவர் வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது, அவருக்கு பின்னால் அமர்ந்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், மனுதாரர் மகன் தனியாகவே வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். எனவே, அவரது வாகனத்தில் சிக்கி இறந்தவர் குடும்பத்துக்கு அவர் தான் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மனுதாரரிடம் வசூலிக்க வேண்டும் என கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

6-ம் வகுப்பு முதல் கணினி கல்வி!


தமிழகத்தில் முதல்முறையாக 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி கல்வி, இந்தக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்மாதிரியான இந்தக் கல்வித் திட்டத்தை நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.


இந்நிலையில் இந்தக் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 6-ம் வகுப்புக்கு இந்தக் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் 2 வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கணினி கல்வி கற்பிக்கப்பட உள்ளது.


ஏற்கெனவே பள்ளி ஆசிரியர்களுக்கு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த என்ஜினீயர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி அளித்துள்ளனர். மாநிலத்தில் உள்ள 4,200 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இந்தக் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


"கணித ஆய்வகங்கள், ஆங்கில மொழித் திறன், கணினி கல்வி என 3 முக்கிய அம்சங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்' என்றனர் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்.


100 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது...: 2009-10 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 100 அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


9-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: மேலும், தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிந்திருக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தரம் உயர்த்தப்படும் பள்ளியில் தேவையான அளவு 9-ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனரா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளின் பட்டியல் விவரம் உள்பட பல்வேறு விவரங்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளி, 19 ஜூன், 2009

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!

وَإِذْ قُلْنَا لِلْمَلاَئِكَةِ اسْجُدُواْ لآِدَمَ فَسَجَدُواْ إِلاَّ إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ


'ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்' என்று நாம் கூறினோம்.

ஆனால் அவ்விருவரையும் ஷைத்தான் அதிலிருந்து தடம் புரளச் செய்தான். அவர்கள் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவ்விருவரையும் அவன் அப்புறப்படுத்தினான். (அல்குர்ஆன் 2:35,36)

பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கென ஆசாபாசங்களோ உரிமைகளோ கிடையாது என்று தான் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு 'ஆன்மா' இருக்கிறதா என்ற வாதப்பிரதி வாதங்கள் கூட நடந்துள்ளன.

சொத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. தங்கள் பெயரில் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்ள முடியாது. திருமணம் நடக்கு முன் தந்தையையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கி பெண்களை பகுத்தறிவு இல்லாத பிராணிகளைப் போல் நடத்தி வந்தனர்.

இன்றைக்கும் கூட பெண்ணுரிமை என்ற பெயரால் கவர்ச்சி காட்டி ஆண்களை மயக்கக் கூடியவர்களாகவும் தாங்கள் நடந்து கொள்வதற்கு உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர்.

அந்தக் கோட்பாடுகளை திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றன.

கடவுள் முதன் முதலில் ஒரே ஜோடிளைத்தான் நேரடியாகப் படைத்தான். அவர்களிலிருந்து பல்கிப் பெருகியதே மனித சமுதாயம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட தம்பதிகள் குறித்தே மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.

அவ்விருவரையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கப் பூங்காவில் தங்கச் செய்து அதன் பாக்கியங்களை அனுபவித்துக் கொள்ள அனுமதிக்கின்றான். அந்தக் கட்டத்தில் கடவுள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கருத்துடன் கவனிக்கத் தக்கவையாகும்.

இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு தம்பதியரை விருந்துக்கு அழைத்தால் கணவரிடம் மட்டும் கூறினாலே போதும் என்ற நிலை இருக்கிறது. குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்ற அழைப்பின் காரணமாக - மனைவி தனியாக அழைக்கப்படா விட்டாலும் - மனைவியையும் அழைத்துச் செல்வோர் நாகரீக உலகத்திலும் இருக்கிறார்கள்.

ஆனால் மனித சமுதாயம் உள்ளிட்ட அகில உலகையும் படைத்த இறைவன், நீங்கள் இருவரும் தங்குங்கள்! நீங்கள் இருவரும் உண்ணுங்கள்! என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறான்.

பொதுவாக உணவுகள் விஷயத்தில் பெண்களுக்கு என தனி விருப்பம் இருப்பதை ஆண்கள் உணர்வதில்லை. ஆண்கள் எதை வாங்கிப் போடுகிறார்களோ அதை ஆக்கிப் போடுவது மட்டும் தான் மனைவியரின் வேலை என்பது தான் நடைமுறை.

விருப்பமான உணவுகள் சமைக்கப்பட்டால் கூட சமைத்தவளை மறந்துவிட்டு அனைத்தையும் மேய்ந்து விட்டு பாத்திரத்தைக் காலியாக வைத்துச் செல்லும் கணவர்கள் ஏராளம்.

ஆனால் படைத்த இறைவன் அப்படிக் கருதவில்லை. நீங்கள் இருவரும் விரும்பியவாறு உண்ணுங்கள் என்கிறான். பெண்களுக்கு தனி விருப்பங்கள் உள்ளன என்கிறான். ஆண் விரும்புவதைத் தான் பெண்ணும் விரும்ப வேண்டும் என்பது கிடையாது என்கிறான்.

அது ஏதோ இந்த நூற்றாண்டில் கூறப்பட்டதன்று. நபிகள் நாயகம் காலத்தில் கூறப்பட்டதன்று. பெண்ணுரிமைக்காக பலத்த குரல் எழுப்பப்பட்ட போது கூறப்பட்டதன்று. 'ஆன்மா' இருக்கிறதா என்ற சர்ச்சை நடந்த காலத்தில் கூறப்பட்டதுமன்று.

வேறு எவரும் படைக்கப்படாத நேரத்திலேயே, இரண்டே இரண்டு பேர் மட்டும் படைக்கப்பட்டிருந்த நேரத்திலேயே இறைவன் இவ்வாறு கூறிவிட்டான். அதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நினைவு படுத்துகிறான்.

அதுமட்டுமின்றி இறைவன் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பித்தான். அந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கும் போதும் இருவரையும் அழைத்தே தடையுத்தரவைக் கூறுகிறான். நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள் என்ற வாசகத்திலிருந்து இதை உணரலாம்.

அந்தக் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட மரத்தை நெருங்கினார்கள். அந்த நிகழ்ச்சி குறித்து பைபிள் கூறும் போது, ஆதம் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொண்டது போலவும், அவரது மனைவியிடம் தான் ஷைத்தான் கைவரிசையைக் காட்டியதாகவும், அவள் தான் தடையை மீறியதாகவும் குறிப்பிடுகிறது.

பெண்கள் வழிகெட்டவர்கள், பிறரை வழி கெடுப்பவர்கள், ஆண்கள் மகா பரிசுத்தர்கள் என்று சித்தரிக்கும் வகையில் பைபிள் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

ஆனால் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் அதை மறுக்கின்றன.

ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு கடவுளின் கட்டளையை இருவரும் தான் மீறினார்கள். தடை செய்யப்பட்டவைகளை விரும்புவது பெண்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. ஆண்களும் அத்தன்மையைப் பெற்றவர்கள் தாம் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

மனிதன் என்ற தன்மை, அதாவது ஆசை, கோபம், கடவுளின் கட்டளையை மீறுதல், மனோ இச்சைக்கு அடிபணிதல் ஆகிய குணாதியங்கள் பெண்களிடம் இருப்பது போலவே ஆண்களிடமும் உள்ளன. அதனால் தான் இருவரும் பாவம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அது மாத்திரமின்றி தவறுகளுக்குத் தண்டனை வழங்குவதிலும் இன்றைய உலகில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

ஆண்களின் தவறுகள், 'ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்' என்ற வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன.

அதே போல் தவறுகளுக்காக பெண்கள் தண்டிக்கப்படும் போது, 'பாவம் பெண்கள்! ஆண்களைப் போல் அவர்களைத் தண்டிக்கலாமா?' என்று பச்சாதாபம் காட்டப்படுகின்றது.

அந்த இரண்டு தவறான கோட்பாடுகளையும் இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இருவரையும் உடனே வெளியேறுமாறு கட்டளையிடுகிறான்.

ஆண் தப்புச் செய்யலாம். பெண் தப்புச் செய்யலாமா என்று கூறி பெண்களை மட்டும் தண்டிக்கவில்லை. பெண் பலவீனமானவள். அவளைத் தண்டிக்க முடியாது. நீ மட்டும் வெளியே போய் விடு என்று ஆணை மட்டும் வெளியேற்றவில்லை.

அந்த வசனங்கள் இரண்டையும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது உடலமைப்பில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் மனிதத் தன்மையில் இருவரும் சமமானவர்களே என்று குர்ஆன் கூறுவதை உணரலாம்.

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கோட்பாடு தான் உலகின் முதல் கோட்பாடு மனிதர்கள் தான் அந்தக் கோட்பாடுகளை மாற்றிவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்குத் தான், முதல் தம்பதிகளுக்கு இறைவன் பிறப்பித்த கட்டளையை நினைவுபடுத்துகிறான்.

வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்

LinkWithin

Blog Widget by LinkWithin