ஞாயிறு, 22 நவம்பர், 2009

பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியர் உள்பட 4 ஹஜ் பயணிகள் மரணம்

ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் உள்பட நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள்.

ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா வந்த சில மணி நேரங்களி்ல் இவர்கள் இறந்துள்ளனர்.

இதுகுறித்து சவூதி அரேபிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா , சூடான், மொராக்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேருமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாமல் பயணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

நான்கு பேரில் இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு வயது 75 ஆகும். நைஜீரியாவைச் சேர்ந்த யாத்ரீகர் 17 வயது சிறுவன் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இந்தியரின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.

ஹஜ் யாத்திரைக்காக சவூதிக்கு 160 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin