சனி, 27 பிப்ரவரி, 2010

இந்தியாவில் ஹெச்பி லேப் டாப் அறிமுகம்


தில்லியில் (23-02-209) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹூவ்லெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனத்தின் புதிய ரக லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறார்

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.

அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில் அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு 'மீலாது நபி'யும் இடம் பிடித்துள்ளது.

"நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்ற ஒரு கருத்தும், "நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்" என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் "மீலாதுக் கொண்டாட்டம்" என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.

மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் - முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் - நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.

தனது இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:

"கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).


இதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,

"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3) என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.


இது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.


மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்" என்பதாகும்.

ஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.

இன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.

மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.

ஆனால் அவரது பதிலிலேயே, "சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது" என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.

நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.

ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் ... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)

நன்றி : சத்யமார்க்கம்.காம் ( http://www.satyamargam.com/ )

மத்திய பட்ஜெட் 20010-11 முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட் 20010-11 முக்கிய அம்சங்கள்

1. சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி

2. ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.

3. ரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு நிதியம்.

4. ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு

5. குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்

6. மகளிர், குழந்தைகள் நலனுக்கு ரூ.22,300 கோடி

7. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்'

8. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம்

9. மகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம் அதிகரிப்பு

10. நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி

11. இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி

12. புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி

13. 2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்

14. பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி

15. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு

16. பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி

17. சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி

18. இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது

19. 2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்

20. ஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு

21. உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா தயார்

22. மின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி

23. சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி

24. அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி

25. மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.

26. தேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்

27. விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்

28. திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி

29. வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை

30. சில்லறை வர்த்தகம் தொடர்பான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

31. 2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.

32. 5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்

33. தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்

34. அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்

35. நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி

36. வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

37. வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி

38. ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு

39. அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன

40. ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி

41. விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்

42. அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி

43. பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை

44. 2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்

45. வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.

46. மேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்

47. சமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி

48. தனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்

49. நேரடி வரிகள் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் புது திட்டம்

50. உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்

51. இந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு

52. விரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்

53. அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

54. இரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது

55. உலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது

56. உற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது

57. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது

58. உலக பொருளாதார சிக்கலை இந்தியா திறம்பட சமாளித்தது

59. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி

60. ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

61. அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே முக்கிய இலக்கு

61. 8 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது

62. தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் உணவு உற்பத்தி பாதிப்பு

கடந்த பட்ஜெட்டின்போது பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது

ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெறுவோருக்கு வரி சலுகை!

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி விவரம்:

ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி கிடையாது.

ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.

ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தகவல் : தட்ஸ்தமிழ்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்புத் துறை நூற்றாண்டு விழா

ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்புத் துறை நூற்றாண்டு விழா சார்பில் மாணவ,மாணவிகளுக்கு வினாடி-வினா,பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறை அலுவலர் (பொறுப்பு)மாணிக்கம் பரிசுகள் வழங்கினார். தீயணைப்புத் தடுப்பு முறை பிரசாரங்களும்,செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டன.

ரயில்வே பட்ஜெட் 2010-முக்கிய அம்சங்கள்!

1. புனிதத் தலங்களை இணைக்கும் 'பாரத தீர்த்த யாத்திரை ரயில்கள்' அறிமுகம்

2. கடந்த 50 ஆண்டுகளில் வருட்துக்கு 180 கி.மீ. தான் புதிய பாதை அமைத்துள்ளோம்

3. 10 ஆண்டுகளில் 25,000 கி.மீ புதிய பாதை அமைக்க இலக்கு

4. சிறுபான்மையின மகளிருக்கு ரயில்வே தேர்வு கட்டணம் ரத்து

5. ரயில்வே தேர்வை மாநில மொழிகளிலும் நடத்த யோசனை

6. ரயில்வே தேர்வு ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் நடத்தப்படும்.

7. கொல்கத்தா ரயில் நிலையம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்

8. வடகிழக்குப் பகுதி ரயில்வே வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம் *தேசிய அதிவேக ரயில் கழகம் அமைப்பு

9. அடிப்படை வசதிகளுக்கு 40% கூடுதல் நிதி ஒதுக்கீடு

10.பொருளாதார நெருக்கடியையும் மீறி கூடுதல் சரக்குகளை கையாண்டுள்ளோம்

11. 2ம் வகுப்பு முன்பதிவில் சேவை கட்டணம் ரூ. 10 குறைப்பு

12. ரயில்வேயின் நிகர லாபம் ரூ. 1,328 கோடி

13. புதிய ரயில் பாதைகள் அமைக்க ரூ. 4,411 கோடி

14. 2011ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரயில்வே ரூ. 6,608 கோடி டிவிடெண்ட்

15. சென்னை பெரம்பூர், சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலைகள் நவீனமயமாக்கப்படும்

16. சிக்கன நடவடிக்கை மூலம் ரூ. 2,000 மிச்சம்

17. ரே பரேலியில் ரயில் பெட்டி தொழிற்சாலை

18. ரயில்வே பெண் ஊழியர் குழந்தைகளுக்கென பாதுகாப்பு மையங்கள் ( கிரெச்சுகள்)

19. 16 புதிய சுற்றுலா ரயில்கள் அறிமுகம்

20. சிறப்பு அதிவிரைவு ரயில் பாதைகள் அமைக்கப்படும்

21. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எமகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் இ டிக்கெட் வசதி

22. மாவட்ட தலைநகர்கள், பஞ்சாயத்துகளில் டிக்கட் கவுன்டர்கள்

23. சோதனை அடிப்படையில் 'டபுள் டெக்கர் ' ரயில்கள் அறிமுகம்

24. 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்

25. அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் ரயில்வே குடி நீர் தொழிற்சாலைகள்

26. அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1302 கோடி

27. ரயில்வே பார்சல்களை வீடுகளிலேயே டெலிவரி செய்ய திட்டம்

28. மேற்கு மண்டல ரயில்வே காரிடார் அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

29. ரயில்வேவுக்காக நிலம் தரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

30. ரயில்வே சார்பில் பாட்டில் நீர் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்

31. சிக்கன நடவடிக்கைகளால் ரயில்வே ஏராளமான நிதியை மிச்சம் பிடித்துள்ளது

32. ஏசி பெட்டி ரயில் கட்டணம் ரூ. 20 குறையும்

33. நிலம் கிடைத்தால் மே.வங்கத்தில் ரயில்வே டீசல் மையம் அமைக்கப்படும்

34. இந்த ஆண்டில் 54 புதிய ரயில்கள் *ரயில்வேவுக்காக வலுக்கட்டாயமாக நில ஆக்கிரமிப்பு இல்லை

35. ஏசி பெட்டி ரயில் கட்டணம் மீதான சேவை வரி ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆகக் குறைப்பு

36. உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டிகளின் கட்டணம் ரூ. 100 குறைப்பு

37. 10 புதிய துரந்தோ ரயில்கள் *21 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்

38. மும்பைக்கு 101 புதிய புறநகர் ரயில்கள், இந்த ஆண்டிலேயே 54 ரயில்கள் அறிமுகம்

39. 5 புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்

40. காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்

41. ரயில்கள் மோதலை தவிர்க்க நவீன கருவிகள், சிக்னல்கள் மேம்படுத்தப்படும்

42. ரயில்வே சார்பில் 'தாகூர் மியூசியம்கள்'

43. சென்னை, ஹைதராபாத், டெல்லியில் ரயில்வே விளையாட்டு அகாடெமிகள்

44. சட்டம்*ஒழுங்கு ரயில்வேயின் பணியல்ல.. அது மாநில அரசுகளின் பணி

45. ரயில்வே பாதுகாப்பில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர்

46. 5 ரயில்வே விளையாட்டு அகாடெமிகள் அமைக்கப்படும்

47. ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் 14,000 பணியாளர்கள் நியமனம்

48. டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு சிறப்பு ரயில்கள்

49. ரயில்வே ஊழியர்களுக்கு புதிய வீட்டு வசதி திட்டம்

50. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை

51. 7 மாதங்களில் 117 புதிய ரயில்கள்

52. 5 ஆண்டுகளில் அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசி்ங்குகளும் ஒழிக்கப்படும்

53. ரயில் நிலையங்கள் குறைந்த விலை குடிநீர்,அடுக்கு மாடி கார் நிறுத்தங்கள்

54. மருத்துவமனைகள், பல்கலைகளில் இ டிக்கெட் வேன்கள்

55. ரயில்வேயில் பெண்கள், சிறுபான்மையினருக்கு சலுகைகள்

56. வருடந்தோறும் 1000 கி.மீ. புதிய ரயில் பாதை

57. ரயில்வேயில் தனியார் திட்டங்களை ஊக்குவிக்க தனிக் குழு

58. தனியாருடன் இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது

59. 100 நாட்களில் தனியார் திட்டங்களுக்கு அனுமதி

60. ஐ.ஐ.டி. காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்

61. ரயில்வே தனியார்மயமாகாது

ஸ்ரீவை., ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஸ்ரீவைகுண்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் ஜெ.,பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினர்.விழாவிற்கு பள்ளத்தூர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மணிமொழியன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் மோதிரம் வழங்கினார். விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜெனிபர்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், கருங்குளம் சிவசுப்பிரமணியன், பெருங்குளம் செல்லத்துரை, நகர செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் பால்துரை, நகர அவைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ராஜாராமன், பாசறை துணை செயலாளர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமலர்

புதன், 24 பிப்ரவரி, 2010

ஸ்ரீவை மக்களின் உதவியை நாடி ஒரு வேண்டுகோள்......

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஸ்ரீவை ஜமாஅத் பள்ளி வாசலில் வேலை பார்த்து கொண்டிருந்த நமது பிலால் ( மோதினார் ) ஜனாப் K.M. முகைதீன் பிச்சை அவர்களுக்கு அதிக வயதாகி விட்டதால் இன்ஷா அல்லாஹ் ஓய்வு பெற இருக்கிறார்.

எனவே அவர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஸ்ரீவை ஜமாஅத்தை சார்த்த நமது மக்கள் தங்களால் இயன்ற அளவு பண உதவியை செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் பிலால் ( மோதினர் ) ஜனாப் K.M. முகைதீன் பிச்சை அவர்கள் எழுதிய கடிதம் உங்களது பார்வைக்கு





ஈமெயில் உதவி : ஜனாப் S. சலீம்,சென்னை.போன்:91 98412 34511,

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

காதலர் தினம்
தமிழாக்கம் - சகோ.அபு இஸாரா


சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...

சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!

அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:

உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.


1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும்.

2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.

3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.



காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.

நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.



عيد الحب

فضيلة الشيخ محمد بن صالح العثيمين حفظه الله
السلام عليكم ورحمة الله وبركاته وبعد
فقد انتشر في الآونة الأخيرة الاحتفال بعيد الحب ــ خاصة بين الطالبات ــ وهو عيد من أعياد النصارى ، ويكون الزي كاملاً باللون الأحمر الملبس والحذاء ويتبادلن الزهور الحمراء ..00
نأمل من فضيلتكم بيان حكم الاحتفال بمثل هذا العيد ، وما توجيهكم للمسلمين في مثل هذه الأمور والله يحفظكم ويرعاكم
بسم الله الرحمن الرحيم

ج / وعليكم السلام ورحمة الله وبركاته
.الاحتفال بعيد الحب لا يجوز لوجوه :
الأول : أنه عيد بدعي لا أساس له في الشريعة .
الثاني : أنه يدعو إلى العشق والغرام
الثالث: أنه يدعو إلي اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة لهدي السلف الصالح رضي الله عنهم
.فــلا يــحـل أن يحدث في هذا اليوم شيء من شعائر العيد سواء كان في المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك وعلى المسلم أن يكون عزيز بدينه ولا يكون إمَّــعَــةً يتبع كل ناعق . أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن وأن يتولانا بتوليه وتوفيقه .

كتبه
محمد الصالح العثيمين
في 5/11/1420هـالتوقيع


VALENTINE’S DAY

Shaykh Ibn Uthaymeen (may Allah have mercy on him) was asked:

Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu…

In recent times the celebration of Valentine’s Day has become wide spread, especially among female students. It is a Christian festival where people dress completely in red, including clothes and shoes , and they exchange red flowers. We hope that you can explain the ruling on celebrating this festival, and what your advice is to Muslims with regard to such matters; may Allah bless you and take care of you.

He replied :

Wa Alaikum Salam Wa Rahmathullahi Wa Barakathuhu…

Celebrating Valentine’s Day is not permissible for a number of reasons.

1. It is an innovated festival for which there is no basis on Islam.

2. It promotes Love and Infatuation.

3. It calls for hearts to be preoccupied with foolish matters that are contrary to the way of the righteous (may Allah be pleased with them).

It is not permissible on this day to do any of the things that are the characteristic of this festival, whether that has to do with food, drinks, clothing exchanging gifts or anything else.

The Muslim should be proud of his religion and should not be a weak character who follows every Tom, Dick and Harry. I ask Allah to protect the Muslims from all temptations, visible and invisible, and to protect us and guide us.

வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
Thanks to : Islamic Call & Guidence Centre - Al Khobar,Saudi Arabia Tel. +96638655557

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஸ்ரீவை பெரிய பள்ளி வாசல் முதல் தெருவை சார்ந்த மர்ஹூம் ஜனாப் முஹம்மது ஷாபி அவர்களின் மகன் ஜனாப் அபூபக்கர் சித்திக் அவர்களின் மனைவி இன்று (12-02-2010) சென்னையில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
வஸ்ஸலாம் .

LinkWithin

Blog Widget by LinkWithin