செய்தி: தினகரன்.
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 9 பிப்ரவரி, 2011
நமது செல்போனில் வேண்டாத அழைப்புகளை தடுக்க பதிவு செய்யலாம்.
செய்தி: தினகரன்.
வியாழன், 12 நவம்பர், 2009
விநாடிக்கு ஒரு பைசா: பி.எஸ்.என்.எல். அறிமுகம்

ப்ரீ பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு விநாடிக்கு ஒரு பைசா திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. (இச்செய்தி, நிமிடத்திற்கு ஒரு பைசா திட்டம் என தவறுதலாக புதன்கிழமை வெளியானது).
இதன்படி, உள்ளூர், வெளியூர் பி.எஸ்.என்.எல் அழைப்புகளுக்கு ஒரு விநாடிக்கு ஒரு பைசாவில் பேசிக் கொள்ளலாம். மற்ற இணைப்புகளுக்கு வினாடிக்கு 1.2 பைசா கட்டணம். ரூ. 45 செலுத்தி இந்தத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இத்திட்டத்துக்கு ஓராண்டு வேலிடிட்டி உண்டு
புதன், 4 நவம்பர், 2009
மொபைல் உள்ளூர் அழைப்பு கட்டணம் 10 பைசா

மொபைல் தொலைபேசி மூலம் உள்ளூர் அழைப்பு கட்டணம் 10 பைசா அளவுக்கு குறையும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இதை அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்குள் "டெர்மினேஷன்' கட்டணத்தை ஆபரேட்டர்கள் குறைக்க வேண்டும்.
அதன் மூலம் உள்ளூர் அழைப்புக் கட்டணம் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறையும் என்றார் அவர்
ஞாயிறு, 18 அக்டோபர், 2009
மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்?: அவசியம் படியுங்கள் இதை!

"ஹலோ...' என்று மழலைகூட கொஞ்சி பேசும் அளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நல்லதோ, கெட்டதோ எந்த விஷயம் என்றாலும், உடனுக்குடன் தொடர்புக் கொள்ள உதவும் "மீடியேட்டராக' உள்ளது. இன்று ரோட்டில் குப்பை பொறுக்குபவர் கூட மொபைல் வைத்துள்ளார்.
இது அந்தஸ்தின் அடையாளம் அல்ல. இன்றைய வாழ்வின் அவசியம். ஆனால் மொபைல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்ன பாதிப்புகள்? மதுரை மூளை நரம்பியல் டாக்டர் வி.நாகராஜன் கூறுகிறார் :மொபைல் போன் நல்லதா, கெட்டதா என விவாதங்கள் நடந்தாலும், அதன் பலன் முழுமையாக இதுவரை தெரியவில்லை. விஞ்ஞான ரீதியாக மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது என எவரும் கூறவில்லை. ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டால், அது மொபைல் போனால்தான் வந்ததாக கருதுகின்றனர்.
உண்மையில் மூளைக்கும், மொபைல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நரம்புகள் பாதிக்கும் என்கின்றனர். அதுவும் ஆதாரப்பூர்வமாக இல்லை. தினமும் 20 மணி நேரமும் மொபைல் போனுடன் பேசும் 150 பேரை நான் ஆய்வு செய்ததில், மூளையில் இருந்து வரும் சக்தி எந்தவிதத்திலும் மாறுபடவில்லை. மொபைல் போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. தரமற்ற மொபைல் போன்களால் பாதிப்பு வரலாம்.மொபைல் போனை இடுப்பில் வைத்தால் உயிரணுக்கள் குறையும், சட்டையில் வைத்தால் மாரடைப்பு வரும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அதேசமயம் மொபைல் போன் டவர்களின் மின்காந்த அலைகளால் பாதிப்பு வரலாம். அருகில் உள்ள பசுமைகள் பாதிக்கலாம். இந்த மின்காந்த அலைகளுக்கு சர்வதேச கட்டுப்பாடு உண்டு. சில மொபைல் போன் நிறுவனங்கள் இதை மதிப்பதில்லை. மொபைல் போனில் எந்த நேரத்தில் என்ன தகவல்கள் வரும் என்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதே சிந்தனையுடன் இருப்பதால் மூளைக்கு ஓய்வு ஏற்படுவதில்லை. இதுவே மனநோய்க்கு காரணமாகிறது.
அளவுடன் பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.சிலர் மொபைல் போன் சூடாகும் வரை பேசுகிறார்கள். இது காதினுள் தூசி செல்வதை தடுக்கும் நுண்ணிய ரோமகால்கள் கருக காரணமாகிறது. பின் காது கருப்பாக மாறி அரிப்பு ஏற்படுவதோடு, ஜவ்வும் பாதிக்கும். மொபைல் போன் மூலம் ஏற்படும் மனஉளைச்சலிருந்து காத்துக்கொள்ள சில "டிப்ஸ்' :எப்போதும் போனும், கையுமாக இருப்பதை தவிர்க்கவும். மொபைல் போன் ஸ்பீக்கர் போட்டு காதில் வைக்காமல் பேசவும். தேவையில்லாத நேரங்களில் "சுவிட்ச் ஆப்' செய்யவும். வெளியூர் அல்லது தனிமையை நாடிச் செல்லும்போது, குடும்பத்தினர் அவசரம் கருதி தொடர்புக் கொள்ள புதிய சிம் கார்டு எண்ணை கொடுக்கலாம்.
பள்ளி மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது. தேவையெனில் பள்ளிக்கே போன் செய்து பெற்றோர் பேசலாம். மொபைல் போனில் திரைக்காட்சி பார்ப்பதால் கண் தசைகள் பாரமாகி, கண் வலி ஏற்படுகிறது. கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையே மொபைல் போனை சொருகி பேசுவதால், கழுத்து நரம்பு பாதிப்பதோடு, குருத்தெலும்பும் விலகி விடுகிறது. மொபைல் போனை இடுப்பில் வைத்து தூங்கினால், திரும்பி படுக்கும்போது விலா எலும்பு பாதிக்கும். குறிப்பாக மொபைல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கும்போதே பேசினால், "ஷாக்' ஏற்பட்டோ, வெடித்தோ உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்.
சனி, 29 ஆகஸ்ட், 2009
தூத்துக்குடியில் செப்டம்பரில் பி.எஸ்.என்.எல். மேளா: சலுகை கட்டணத்தில் லேண்ட்லைன்

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள் மேளா நடத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதில் சலுகை கட்டணத்தில் லேண்ட் லைன் இணைப்பு வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் பிராட் பேன்ட் வசதி ஆகஸ்ட் 15ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அந்தந்த தொலைபேசி நிலையங்களில் விண்ணப்பித்து ப்ராட்பேண்ட் இணைப்புகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
தூத்துக்குடி மொபைல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிகமான கவரேஜை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் மேலும் 46 செல்டவர் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலைகள் முடிந்து வரும் பொங்கல் அன்று இந்த செல்டவர்கள் இயங்கத் துவங்கும்.
மாவட்டத்தில் 35 இடங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் மேளா நடத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதில் 500ரூபாய் இணைப்புக் கட்டணம் தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வில்போன் ப்ரிபெய்டு சேவையும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
ரூ.750க்கு மேல் உள்ள திட்டங்களில் ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும மோடம் இலவசமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள 29 தொலைபேசி நிலையங்கள் மூலமாக ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நோவா நெட் கம்ப்யூட்டர் ரூ.1,900க்கு வழங்கப்படும்.
மேலும் இந்த மேளாவில் ரூ.20க்கு, வசந்தம் மற்றும் நியூ தமிழ்நாடு ஆனந் திட்டங்களில் லைப்டைம் கார்டுகள் கிடைக்கும். இந்த சிம்கார்டில் ரூ.5 மதிப்புள்ள டாக்டைமில் பேசிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். உடன் உதவி பொது மேலாளர் தாமஸ், துணை கோட்ட பொறியாளர்கள் (வர்த்தகம்) லிங்கபாஸ்கர், (வர்த்தக அபிவிருத்தி) வளனரசு, இளநிலை தொலை தொடர்பு அலுவலர் (வணிகம்) சுரேஷ், செய்தித் தெடர்பாளர் மாரிமுத்து ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.
வியாழன், 23 ஜூலை, 2009
தமிழகத்தில் பிஎஸ்என்எல் வைமேக்ஸ் சேவை!
சென்னை: இந்திய அரசின் தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்து வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவையில் களமிறங்குகிறது. இந்த சேவை மூலம் கேபிள் இல்லாமலேயே 3 மெகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும்.முதல் கட்டமாக தமிழகத்தில் 30 வைமேக்ஸ் நிலையங்களை நிறுவுகிறது பிஎஸ்என்எல். ஒவ்வொரு நிலையமும் 15 கிமீ சுற்றளவுக்குள் சேவைகளை வழங்கும். இவற்றில் 22 நிலையங்கள் கிராமப் புறங்களை மையப்படுத்தி அமையவிருப்பதாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் ஆர் கணேசன் தெரிவித்தார்.
வைமேக்ஸ் நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள் ஆகஸ்டுக்குள் தமிழகத்துக்கு வந்துவிடும் என்றும், அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் சேவை ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக 300 வைமேக்ஸ் நிலையங்களை அமைக்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.
வியாழன், 16 ஜூலை, 2009
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை நடுவர்கள், முன்சீப்கள் பணியிட மாற்றம்
மற்றும் நீதித்துறை நடுவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 71 முன்சீப்கள் மற்றும் மாஜிஸ்திரேட்களை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர்கள் விவரம்:
(தற்போது வகித்து வந்த பதவி அடைப்புக்குறிக்குள்)
கே.எஸ். திருமணி, (மாஜிஸ்திரேட், ஸ்ரீவைகுண்டம்) தூத்துக்குடி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.
கிளாட்சன் பிளசிங் தாகூர் (மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி, தூத்துக்குடி) ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர்.
வி. பாண்டியராஜ், (மாஜிஸ்திரேட் 2 திருநெல்வேலி) நான்குனேரி முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட்
ஜி. ஜெயவேல் (முதன்மை முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் நான்குனேரி) திருநெல்வேலி மாஜிஸ்திரேட் 4.
டி. செல்வம் (மாஜிஸ்திரேட் 4 நெல்லை) நான்குனேரி கூடுதல் மாவட்ட முன்சீப்.
மைதீலி (கூடுதல் மாவட்ட முன்சீப் நான்குனேரி) மாவட்ட முன்சீப், ராணிபேட்டை.
ஏ. ராபின்சன் ஜார்ஜ் (கூடுதல் மாவட்ட முன்சீப் கூடலூர்) மாஜிஸ்திரேட் 2 நெல்லை)
பி. சரவணன் 2-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நாகர்கோவில்) 1-வது கூடுதல் மாவட் முன்சீப் நாகர்கோவில்.
ஆர். செல்வகுமார் 1-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நாகர்
கோவில்) மாஜிஸ்திரேட், பெரம்பலூர்.
எம். வினோத் (மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் சிவகிரி) முதன்மை மாவட்ட முன்சீப், திருநெல்வேலி)
எஸ். ஜெகநாதன் (முதன்மை மாவட்ட முன்சீப் நெல்லை) மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட், சிவகிரி.
இ. சசிகலா (மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் செங்கோட்டை) பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் சென்னை எழும்பூர்.
எல். ஜெயந்தி (பெருநகர மாஜிஸ்திரேட் (சென்னை எழும்பூர்) தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதெமி, உதவி இயக்குநர்.
டி. சம்பத் குமார் (1-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நெல்லை) மாவட்ட முன்சீப்
மற்றும் மாஜிஸ்திரேட் செங்கோட்டை.
ஜி. பிரபாகரன் (2-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நெல்லை) 1-வது கூடுதல் மாவட்ட முன்சீப் நெல்லை.
புதன், 24 ஜூன், 2009
பிஎஸ்என்எல் பங்குகளையும் விற்கிறது மத்திய அரசு!
அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் ஜரூராக இறங்கியுள்ளது மத்திய அரசு. முன்பு மன்மோகன் சிங் அரசு இதைச் செய்ய முயன்ற போது, கம்யூனிஸ்டுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பணிந்து போக வேண்டி வந்தது.
இப்போது முன்பை விட பலமாக அமைந்துள்ளது மத்திய அரசு. என்ன எதிர்ப்பு வந்தாலும் முழுமையாக அலட்சியம் செய்யும் மனநிலையில்தான் ஆட்சியாளர்களும் உள்ளனர்.
கடந்த ஆட்சியின்போது செய்ய நினைத்து, முடியாமல் போன பங்கு விற்பனையை இந்த ஆண்டு செய்தே தீருவது என ஒற்றைக் காலில் நிற்கிறது அரசு.
சில தினங்களுக்கு முன் என்எல்சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்கப்போவதாக அறிவித்தது மத்திய அரசு. அடுத்து இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் விற்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தப் பங்குகளை விற்று 10 பில்லியன் டாலர்களை திரட்டப் போகிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார் பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்.
சனி, 20 ஜூன், 2009
பிரீபெய்டு வாடிக்கையாளருக்கும் ஜி.பி.ஆர்.எஸ் வசதி தரும் பிஎஸ்என்எல்!

தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய செய்திதான். பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளரும் இனி ஜிபிஆர்எஸ் வசதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
ஒரு நாளைக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி தங்கள் மொபைலிலேயே வரம்பற்ற (அன்லிமிடெட்) அளவு பிரவுசிங் செய்து கொள்ளலாம்.
இதற்கான டாப் அப் கார்டுகள் தனியாகக் கிடைக்கின்றன. மொத்தமாக வாங்க வேண்டியதில்லை. ஒரு நாள் மட்டும் உபயோகப்படுத்த விரும்புபவர்கள் ரூ.20 மட்டும் செலுத்தி ஜிபிஆர்எஸ் கார்டு வாங்கி 24 மணிநேரம் தடையில்லாமல் தாங்கள் விரும்பிய தளங்ளை மொபைலிலேயே பிரவுஸ் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இதற்கான முழு விவரங்கள் கிடைக்கின்றன.
வெள்ளி, 29 மே, 2009
பி.எஸ்.என்.எல். புதிய சலுகை: எஸ்.டி.டி. 25 பைசா; உள்ளூர் அழைப்பு 10 பைசா; மத்திய மந்திரி ராசா அறிவிப்பு
கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடரும். தொலைபேசி கட்டணத்தை குறைக்க உரிய வழிகள் காணப்படும். சீரிய நிர்வாகத்தின் காரணமாக உள்ளூர் அழைப்பு நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்.டி.டி. அழைப்பு 25 பைசாவாகவும் குறையும்.
3ஜி அலைக்கற்றை ஏலம், வயர்லெஸ், விமாகஸ் அகண்ட அலைவரிசை, அரசு அலுவலகங்களில் கீழ்நிலை வரை கம்ப்யூட்டர் மயமாக்கல் ஆகியவற்றுக்கு எமது துறை முக்கியத்துவம் தரும். தபால் துறை சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
பி.எஸ்.என்.எல். வழங்கும் நோவா நெட் அதிவேக இன்டர்நெட் சேவை தூத்துக்குடியில் அறிமுகம்
தூத்துக்குடி மாவட்ட மக்களை கவரும் வகையில் இன்டர்நெட் சேவையை அதிகப்படுத்த நகர்புறம் மற்றும் கிராமப்புர மக்கள் பயன்படும் வகையில் நோவா நெட் சேவையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத் சஞ்சார் நிகாம் சார்பில் இன்று காலை 11மணியளவில் அதன் தூத்துக்குடி பொதுமேலளாளர் நடராஜன் நோவா நெட் என்ற தனி இன்டர்நெட் சேவையை துவக்கி வைத்தார். அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கமளித்த அவர், பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு நோவா நெட் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கு முன் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் தேவை. இனிமேல் அது அவசியம் இல்லை வாடிக்கையாளர்களுக்கு நோவா நெட் பிசி என்ற கருவி, மானிட்டர் மற்றும் கீபோர்டு, பிராட் பேன்ட் இணைப்போடு வழங்கப்படுகிறது.
இந்த நோவா நெட் கம்ப்யூட்டரில் ஈமெயில், பிரவுசிங், சேட்டிங், மீடியா பிளேயர் மற்றும் ஆபிஸ் டாகுமென்ட் மேக்கர், பைல் மேனேஜர், பேரன்டல் கன்ட்ரோல், மல்டிபிள் யூசர் மேனேஜ்மென்ட், ரிமோட் சர்வில்லியன்ஸ் மற்றும் கேம்ஸ் போன்ற வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் உபயோகிக்கலாம்.நோவா நெட் கம்ப்யூட்டருடன் பிராட்பேண்டுக்காக மாத வாடகையாக மூன்று திட்டங்களை பி.எஸ்.என்.எல்.நிறுவனம் வழங்குகிறது. ஹோம் பிளான் 125 வாடிக்கையாளர்களுக்கு ரூ.274ம், ஹோம் பிளான் 250 வாடிக்கையாளர்களுக்கு ரூ.374ம், அன்லிமிடெட் பிளானுக்கு ரூ.850ம் மாத கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இணைப்புடன் ரூ.1200 மதிப்புள மோடம் இலவசமாக வழங்கப்படும்.
நோவா நெட் கம்ப்யூட்டர் பெற விரும்புவோர் ரூ.6364 செலுத்த வேண்டும். இதில் பி.எஸ்.என்.எல். நோவாநெட் பிசி, கீபோர்டு உடன் மானிட்டர் வழங்கப்படும். மானிட்டர் தேவையில்லாதவர்கள் ரூ.2999 மட்டும் செலுத்தினால் இந்த இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் வீடுகளில் உள்ள LCD டிவி மூலமும் இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக நோவா நெட் பிசி, வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ், வை-பி அக்ஸஸ் ஆகியவைகளுக்கு கட்டணமாக ரூ.5193 செலுத்தி இன்டர்நெட் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகளை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், அதன்கீழ் இயங்கும முகவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என்று பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நோவா நெட் கம்ப்யூட்டர் தூத்துக்குடி மாவட்ட விற்பனைதாரராக தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள காயத்ரி இன்போடெக் என்ற கம்ப்யூட்டர் விற்பனை நிலையம் செயல்படுவதாக அதன் உரிமையாளர் ஏ.கே.ஜெயகுமார் தெரிவித்தார்
திங்கள், 11 மே, 2009
தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்கலாம்.போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்
தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம் சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.
பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.
பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100
(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது
தகவல் : நீதியின் குரல் மற்றும் http://mttnews.blogspot.com/2009/05/blog-post_9451.html
பிளாக்பெரி சேவை: பிஎஸ்என்எல் அறிமுகம்

சென்னை வாடிக்கையாளர்களுக்கென்று இரண்டு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முதல் சேவை தனிநபர் வாடிக்கையாளர்களுக்கானது. மின்னஞ்சல், இணையதள தேடல்கள், யாகூ மெசன்ஜர், கூகுள் டாக் உள்ளிட்டவை சேவைகள் இதில் உள்ளன. மாதாந்திர கட்டணம் ரூ. 299, ரூ. 499, ரூ. 999 என மூன்று வகைத் திட்டங்கள் இதில் உள்ளன.
இரண்டாவது சேவை நிறுவனங்களுக்கென்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிறுவனங்களுக்குத் தேவையான மின்னஞ்சல், தகவல் தொடர்புகள், குறிப்புகள் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.
புதன், 29 ஏப்ரல், 2009
தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் மொபைல் பி.சி.ஓ. வசதி அறிமுகம்
இது தொடர்பாக தூத்துக்குடி பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அட்சய திருதியை முன்னிட்டு தூத்துக்குடி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பி.சி.ஓ. (மொபைல் பொது தொலைபேசி) வசதியை திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த வசதி மாவட்டம் முழுவதிலும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டின் விலை ரூ. 221. இத்துடன் இந்த கார்டில் ரூ. 50 இலவச டாக்டைம் கிடைக்கும்.
இதற்கான ரீசார்ஜ் கார்டின் விலை ரூ. 5,515. 30 நாள் வேலிடிட்டி உள்ள இந்த ரீசார்ஜ் கார்டில் ரூ. 9,502 வரை பேசலாம். இந்த கார்டை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் 42 சதவிகிதம் நிகர லாபம் அடைய முடியும்.
இந்த கார்டில் இருந்து லோக்கல் மற்றும் எஸ்டிடியில் பேசுவதற்கு நிமிஷத்துக்கு ரூ. 58 காசுகள் வசூலிக்கப்படும். இதன் மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை நாடுகளுக்கு 8 வினாடிகளுக்கு 58 காசுகளும், ஐரோப்பா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, குவைத், துபாய்க்கு பேச 5 வினாடிகளுக்கு 58 காசுகளும், சவூதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு பேச 4 விநாடிகளுக்கு 58 காசுகளும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மொபைல் பி.சி.ஓ.வில் வாடிக்கையாளர்கள் வெளி நாடுகளிலும் பேச வசதியாக "கால் கான்பிரன்ஸ்' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுடன் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, குவைத், துபாய், சவூதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுடனும் கால் கான்பிரன்ஸில் பேசிக் கொள்ளலாம்.
இதற்கான கட்டணம் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்கு நிமிஷத்துக்கு ரூ. 5.51-ம், ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு நிமிஷத்துக்கு ரூ. 9.85-ம் கால் கான்பிரன்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்
இந்த மொபைல் பி.சி.ஓ. கார்டுகள் மாவட்டத்தில் உள்ள எல்லா பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், பிஎஸ்என்எல் பிரான்சைஸிகளிடமும் மற்றும் பிஎஸ்என்எல் விற்பனைப் பிரதிநிதிகளிடமும் கிடைக்கும்.
செல்போன் சிம்கார்டு விற்பனையில் தமிழ்நாடு வட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடந்த நிதியாண்டில் 2-ம் இடம் பிடித்து பரிசு வென்றுள்ளது. இதேபோல, மின் சிக்கனத்தில் தமிழ்நாடு வட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை சேவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அகண்ட சேவை இணைப்பு பெற மோடம் இலவசமாக வழங்கப்படும். மாத வாடகையும் ரூ. 99 மட்டுமே. இந்த வசதி மாவட்டத்தில் 40 தொலைபேசி நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, துணைப் பொது மேலாளர் தாமஸ், உதவிப் பொது மேலாளர் டேவிட் செல்வராஜ், உதவி கோட்டப் பொறியாளர் (விற்பனை) ஐ. லிங்கபாஸ்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மொபைல் பி.சி.ஓ. வசதிக்கான சிம்கார்டு விற்பனையை பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் தொடங்கிவைத்தார். முதல் கார்டை காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரகமத்துல்லா பெற்றுக் கொண்டார்
செவ்வாய், 28 ஏப்ரல், 2009
பி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.
தொலைத் தொடர்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் கே. ஸ்ரீதரா, சென்னை தொலைத் தொடர்பு வட்ட முதன்மை பொதுமேலாளர் பி. வேலுச்சாமி உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
இந்தத் திட்டத்தின் கீழ், தொலைபேசி, இன்டர்நெட் இணைப்புடன், செட்-டாப் பாக்ஸýம் வழங்கப்படும்.
இந்தப் புதிய இணைய டி.வி.யில் 150 சேனல்களுக்கு மேல் பார்க்க முடியும்]
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, புதிய ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் கொண்ட இணைய திரைப்பட நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து திரைப்படங்களைப் பார்க்கலாம்
குழந்தைகள் சில சேனல்களைப் பார்ப்பதை தடை செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது
செட்-டாப் பாக்ஸýக்கு ரூ. 2,500 கட்டணம் செலுத்த வேண்டும். மாத வாடகை ரூ. 50 செலுத்த வேண்டும்.
இந்த இணைய டி.வி. இணைப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு, ஜ்ஜ்ஜ்.ம்ஹ்ஜ்ஹஹ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்
சனி, 25 ஏப்ரல், 2009
இனி எவரஸ்ட் சிகரத்தில் இருந்தும் செல்போனில் பேசலாம்
ஞாயிறு, 19 ஏப்ரல், 2009
ரூ.200 கட்டினால் சீன கொரிய செல்பேசிக்கு ஐஎம்இஐ எண்
விலை மலிவான சீன மற்றும் கொரிய செல்போன்களில் சர்வதேச மொபைல் அடையாள எண். (ஐ.எம்.இ.ஐ) இல்லை. அப்படியே இருந்தாலும், லட்சம் செல்போன்களுக்கு ஒரே எண்ணாக இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு படையினருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டது.
தீவிரவாதிகள் பெரும்பாலும் இந்த செல்போன்களையே தங்களின் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தினர். இதனால் ஐ.எம்.இ.ஐ. இல்லாத சீன மற்றும் கொரிய செல்போன்களுக்கான இணைப்பை ஏப்ரல் 15ல் இருந்து இணைப்பை துண்டிக்கும்படி மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஐ.எம்.இ.ஐ. இல்லாத செல்போன்களுக்கு அதை வழங்கும் நவீன சாப்ட்வேரை செல்போன் நிறுவனங்களின் சங்கங்கள் தயாரித்துள்ளன. நாடு முழுவதும் 1,600 சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ.200 கட்டினால் ஐ.எம்.இ.ஐ.யை கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதன் மூலம் 2 கோடி பேர் தங்களுடைய இணைப்பு ரத்தாவதை தடுத்துக் கொள்ள முடியும். இதற்கு அனுமதி அளிக்கும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திடம் செல்போன் நிறுவனங்கள் கேட்டுள்ளன.
வெள்ளி, 17 ஏப்ரல், 2009
15 முதல் 40 சதவிகிதம் தள்ளுபடி பி.எஸ்.என்.எல். இண்டர் நெட் வாடிக்கையாளருக்கு சலுகை
தற்போது பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதை பயன்படுத்துவதில் கட்டண சலுகை வழங்கி உள்ளது. பல்வேறு திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்படுகிறது. 1 ஜி.பி. அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
5 ஜி.பி.யில் இருந்து 10 ஜி.பி. வரை பயன்படுத்துவோருக்கு 30 சதவீகித தள்ளுபடி, 10 ஜி.பி.க்கு மேல் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீகிதம் சலுகையை பி.எஸ்.என்.எல். அளிக்கிறது.
கிராமப்புறங்களில் 2 புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் 512 கே.பி.பி.எஸ். குறைந்த பட்ச வேகத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இலவச டவுண்லோடு வசதியும், 400 எம்.பி.க்கு அப்லோடு செய்ய மாத கட்டணம் ரூ.99. ஒரு ஜி.பி. டவுண்லோடு செய்ய மாத கட்டணம் ரூ.150 ஆகும்.
செவ்வாய், 31 மார்ச், 2009
BSNL. அறிமுகம் !இன்டர்நெட் சேவையை பயன்படுத்த ரூ.3 ஆயிரம் விலையில் கம்ப்ïட்டர்!

சனி, 28 பிப்ரவரி, 2009
இனி லோக்கல் 33 பைசா-எஸ்டிடி 50 பைசா!: பிஎஸ்என்எல் அதிரடி
வரும் மார்ச் 1ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசாகவும் குறைக்கவிருப்பதாக, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
'இந்தியா கோல்டன் 50' என்ற புதிய திட்டம் மூலம் பிரீ பெய்டு மொபைல் சந்தாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதன்படி மார்ச் 1ம் தேதி முதல் நாட்டின் எந்த பகுதிக்கும் 50 காசில் செல்போனில் பேசலாம்.
இதற்கான இணைப்பு பெற, சேவை வரி உள்பட ஆரம்ப கட்டணமாக ரூ.375 செலுத்த வேண்டும். இதில் பேசுவற்கான மதிப்பு ரூ.30 தரப்படும், பயன்பாட்டிற்கான கால அளவு 30 நாட்கள்.
60 வினடிக்கு ஒரு யுனிட் என கணக்கிடப்படும். உள்ளூர், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 50 காசு. வெளிநாடுகளுக்கு (ஐ.எஸ்.டி.) அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை நாடுகளுக்கு ரூ.7.20ம், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, பாகிஸ்தானுக்கு ரூ.9ம்,
ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆங்காங், குவைத், பஹ்வான் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ரூ.9.60 கட்டணம் வசூலிக்கப்படும். உலகின் இதர பகுதிகளுக்கு கட்டணம் ரூ.12.
இனி '95' வேண்டாம்!:
இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி நாளை (28ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி இன்று (28ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வசதியை வைத்துள்ள சந்தாதாரர்கள் இனிமேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
