ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஹாங்காங்கில் தமிழர் இயக்கம் நடத்திய விளையாட்டுப் போட்டி


ஹாங்காங்கில் டயல் தமிழ் கலாச்சார அமைப்பின் சார்பில் 2009ம் ஆண்டிற்கான பேட்மிடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அக்டோபர் 26ம் தேதியன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் வாழும் இந்திய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் கலாச்சார அமைப்பு மற்றும் டயல் குரூப்ஸ் கம்பெனி ஆகிய அமைப்புக்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் இளைஞர்களுக்கான பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்திய சமுதாய மக்கள் குறிப்பாக தமிழர்களின் விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான ஆடைகள், சாதனங்கள் ஆகியவற்றை வழங்கி வரும் டயல் குரூப்ஸ் கம்பெனி, இப்போட்டிகள் நடத்துவதற்கான பொருட்செலவை வழங்கியது. இந்தியாவிற்கான அயல்நாட்டு துணை தூதர் எல்.டி.ரால்ட், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சீனக் கலைஞர்கள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சியும், இந்திய நடன ஆசிரியர்களிடம் பயின்ற சீன மாணவர்களின் பாலிவுட் நடனமும் இடம்பெற்றது. கின்னஸ் சாதனை நிகழ்த்திய பூவேந்திரனின் யோகா செயல் விளக்கம், நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழ் கலாச்சார அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினரும் பேட்மிடன் வீரருமான ரால்ட் ஆகியோர் பங்கேற்ற விளையாட்டுடன் போட்டிகள் துவங்கியது.

அனைத்து கழக உறுப்பினர்களின் அயறாத உழைப்பே நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு காரணமாக அமைந்தது. இறுதியில் 3.5 அடி உயரமுள்ள ஸ்ரீ கோவிந்தசாமி நினைவு கோப்பையை ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்ற ராகேஷ் மற்றும் பாபு ஆகியோர் கைப்பற்றினர்.

வெற்றியாளர்களின் பெயர்கள் :

ஆண்கள் இரட்டையர் போட்டி : ராகேஷ், பாபு

பெண்கள் இரட்டையர் போட்டி : பாவினி ஷா, பிரியனனிக்ரம்

இளைஞர் இரட்டையர் போட்டி : அஸ்வின், கிருஷ்ணா

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin