புதன், 11 நவம்பர், 2009

துபையில் மகளை கொன்ற இந்திய பெண்-15 ஆண்டு சிறை

துபாய்: முதல் மகளைக் கொன்றும், 2வது மகளைக் கொல்ல முயன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற இந்தியப் பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து துபாய் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

துபாயைச் சேர்ந்த அந்த இந்தியப் பெண்ணுக்கு வயது 24. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அழர் தனது மூன்றரை வயது மகள் நசுவாவை கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து பிறந்து 22 மாதமே ஆன நஜியாவையும் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். பின்னர் தன்னையும் கத்தியால் குத்திக் கொண்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். 2வது மகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவர் அப்பீல் கோர்ட்டில் மனு செய்தார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்தபோது நல்ல மனநிலையில்தான் அப்பெண் இருந்துள்ளார். எனவே வேண்டும் என்றேதான் தனது குழந்தையைக் கொன்றுள்ளார் என்று கூறி 10 ஆண்டு சிறைத் தண்டனையை 15 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தார்.

இந்தியப் பெண்ணால் குத்தப்பட்ட 2வது குழந்தைக்கு 35 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்த அப்பெண்ணின் கணவர், தங்களுக்கு 2001ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், அன்று முதல் இதுவரை தனது மனைவிக்கு மன நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin