சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
மரியம் ஹூசேனின் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக பணியாற்றி வந்த ஹலிமாவின் உதவியுடன் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்து கொள்ளையடித்தனர்.
இதையடுத்து ஹலிமா உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெட்டாவில் இவர்கள் மூன்று பேரும் வாளால் தலை துண்டித்து மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 59 பேருக்கு இவ்வாறு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 102 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய ஷிராய சட்டப்படி, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவை மரண தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக