நாழிதளில் வந்ததை அப்படியே தந்துள்ளோம்.வல்ல நாயன் அல்லாஹ் இந்த வீரமரணம் அடைந்த தியாகச்செம்மலுக்கு சுவனப்பதி தருவானக!அவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பொருமையையும்,சாமாதானத்தையும் ,அமைதியையும் நிலவச்செய்வானாக.ஆமின்)
அரிக்கோடு : படகு கவிழ்ந்து, ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில், ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, மாணவர் ஷமீம் மரணத்தை தழுவினார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது. அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும்.சில தினங்களுக்கு முன், பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, இழுத்து வந்து கரையில் சேர்த்தார். சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது தான், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறக்க நேரிட்டது.தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.
அதிரை POST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக