செவ்வாய், 29 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் "அம்மா" என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 நேட்டால் பரபரப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளால் தேர்தல் வேலைகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. மேலும் வர்த்தக பிரமுகர்கள் பணம் கொண்டு செல்வது கூட பறக்கும் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் வாகன சோதனை கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்று ரப்பர் ஸ்டாம்பி்ல் முத்திரை குத்தப்பட்ட ரூ.100 நோட்டுகள் பல்வேறு தரப்பினரிடம் புழக்கத்தில் உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை அதிகமுவினரே இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக அம்மா என்ற அடையாளத்தை முத்திரையிட்டு வினியோத்தார்களா, அல்லது போலீசையும், தேர்தல் ஆணையத்தையும் திசை திருப்ப யாரேனும் செய்தார்களா என்பது தெரியவில்லை.

இந்த நோட்டை வினியோகித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 28 மார்ச், 2011

வஃபாத்து செய்தி

வஃபாத்து செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த  ஜனாப் மீரான் முஹைதீன் (பாபு சார் )இன்று காலை காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்.

ஞாயிறு, 27 மார்ச், 2011

மிக முக்கியமான தகவல்கள்

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.


3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.


4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. 

மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் 
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754044-24911526044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்
தகவல் உதவி :மின்னஞ்சல் வழியாக கிடைத்த தகவல் 

வெள்ளி, 25 மார்ச், 2011

ஸ்ரீவையில் நேற்று அதிமுக.வேட்பாளர் சண்முகநாதன் மனுதாக்கல் செய்தார்

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை அதிமுக தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளருமான சண்முகநாதன் அறிவிக்கப்பட்டார்.


இதையொட்டி அவர் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

கூட்டணி கட்சிகள் தொண்டர்களோடு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக சென்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரும் தேர்தல் அதிகாரியுமான வசந்தாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், வக்கீல் பிரிவு சேகர், மாவட்ட பஞ்.தலைவர் சின்னதுரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லதுரை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 17 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டம் அருகே பறக்கும் படை மடக்கி பிடித்த ரூ. 17 லட்சம்.

த‌மிழக‌ம் முழுவது‌ம் வாகன சோதனை‌ காவ‌ல்துறை‌ செ‌ய்து‌ வருகிறது. அதை போல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பறக்கும் படை வட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், முத்தையா உள்ளிட்ட போலீஸார் ஸ்ரீவை பகுதிலும் செக் போஸ்ட் அமைத்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.பேட்மாநகரம் செக் போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த அம்பாசிடர் காரில் ரூ.17 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அப்பணம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பட்டு காஸ் ஏஜென்சீஸ் மேலாளர் தூத்துக்குடி மெர்க்கன்டைல் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. பின்னர் முறையான கணக்குகள் காண்பிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டது

ஹஜ் விண்ணப்பம் ஏப்.30 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அறிவிப்பு


இன்ஷா அல்லா இந்த 2011ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினரும் செயல் அலுவலருமான கா.அலாவுதீன் அறிக்கை கொடுத்துள்ளார்.

அறிக்கை விபரம் :விண்ணப்பங்களை புதிய எண் 13, பழைய எண் 7, மகாத்மா காந்தி சாலை, நுங்கம் பாக்கம், ரோசி டவர் 3வது தளத்தில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் நேற்று (16ம் தேதி) முதல் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

ஸ்ரீவைகுண்டத்தில் முதன் முதலில் ஓட்டு சேகரிக்கும் கட்சி பாஜக

ஸ்ரீவைகுண்டத்தில் முதன் முதலில் ஓட்டு சேகரிக்க துவங்கினார் பாஜக.வேட்பாளர் செல்வராஜ் .

ஸ்ரீவைகுண்டம் பஜாரில் ஓட்டு சேகரிக்கும் துவக்க விழா நடைபெற்றது.

அதில் பாஜக., வேட்பாளர் செல்வராஜ், பாஜக., மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொது செயலாளர் பாலாஜி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர் கொற்கை மாரிமுத்து, மாவட்ட செயலாளர் வீரமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமசுப்பு, நகர தலைவர் மணி, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம், முத்துமாலை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது

தமிழக சட்டசபைத் தேர்தல் 2011 அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக S.P.சண்முகநாதன் போட்டியிடுகிறது


பெயர் : எஸ்பி சண்முக நாதன்

வயது : 57

ஊர் : பண்டாரவிளை

கல்வித் தகுதி : 9ம் வகுப்பு

தொழில் : முழு நேர அரசியல்

குடும்பம் : மனைவி - ஆஷா சண்முகநாதன், 5 மகள்கள், 1மகன் .

கட்சி பொறுப்பு: அதிமுகவில் நீண்டகால உறுப்பினர், ஸ்ரீவை ஒன்றியச் செயலாளர், 3வது முறையாக மாவட்ட செயலாளர்.

கடந்த 2001ம ௦ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வேட்பாளர் டேவிட் செலவினை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இதே S.P. சண்முகநாதன் வெற்றி பெற்று கைத்தறித் துறை அமைச்சரானார்.

2006ல் மீண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 3ம் முறையாக ஸ்ரீவை தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ௦ஆண்டு வெற்றி பெற்ற S.P. சண்முகநாதன் 2011ஆம் ௦ஆண்டு வெற்றி பெறுவரா ?

ஸ்ரீவை மக்களின் பதில் என்ன என்பது வரும் மே 13 ஆம் தேதி தெரிந்து விடும்.

செவ்வாய், 15 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் குறித்த விவரம் இன்று வெளியானது

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்

1. திருத்தணி

2. பூந்தமல்லி (தனி)

3. ஆவடி

4.திரு.வி.க.நகர் (தனி)

5. ராயபுரம்

6. அண்ணா நகர்

7. தியாகராய நகர்

8. மயிலாப்பூர்

9. ஆலந்தூர்

10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

11. மதுராந்தகம் (தனி)

12. சோளிங்கர்

13. வேலூர்

14. ஆம்பூர்

15. கிருஷ்ணகிரி

16. ஓசூர்

17. செங்கம் (தனி)

18. கலசப்பாக்கம்

19. செய்யாறு

20. ரிஷிவந்தியம்

21. ஆத்தூர் (தனி)

22. சேலம் வடக்கு

23. திருச்செங்கோடு

24. ஈரோடு மேற்கு

25. மொடக்குறிச்சி

26. காங்கேயம்

27. உதகை

28. அவிநாசி (தனி)

29. திருப்பூர் தெற்கு

30. தொண்டாமுத்தூர்

31. சிங்காநல்லூர்

32. வால்பாறை (தனி)

33. நிலக்கோட்டை (தனி)

34 வேடசந்தூர்

35 கரூர்

36 மணப்பாறை

37 முசிறி

38 அரியலூர்

39 விருத்தாச்சலம்

40. மயிலாடுதுறை

41. திருத்துறைப்பூண்டி (தனி)

42. பாபநாசம்

43. பட்டுக்கோட்டை

44. பேராவூரணி

45. திருமயம்

46. அறந்தாங்கி

47. காரைக்குடி

48. சிவகங்கை

49. மதுரை வடக்கு

50. மதுரை தெற்கு

51. திருப்பரங்குன்றம்

52. விருதுநகர்

53. பரமக்குடி (தனி)

54. ராமநாதபுரம்

55. விளாத்திகுளம்

56. ஸ்ரீவைகுண்டம்

57. வாசுதேவநல்லூர் (தனி)

58. கடையநல்லூர்

59. நாங்குனேரி

60. ராதாபுரம்

61. குளச்சல்

62. விளவங்கோடு

63. கிள்ளியூர்

வெள்ளி, 11 மார்ச், 2011

” ஜப்பான் சுனாமி 2011” கூகிளின் உதவிக்கரம் சற்று முன் கிடைத்த செய்தி


மார்ச் 11, 2011

“Japan sunami 2011 ” கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் வீடுகளையும்
குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்
என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.
ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள்
உடனடியாக Person Finder: 2011 Japan Earthquake என்ற தளத்தை
உருவாக்கி கொடுத்துள்ளது,  ஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய
தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை
பற்றிய தகவல்களை நொடியில் கொடுப்பதற்காக இந்தப்பக்கம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபக்கம் உருவாக்கிய கடந்த 2 மணி
நேரத்திற்குள் 1200 பேர் தங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளையும்,
உறவினர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து காலத்தில் கூகிள்
செய்யும் இந்த உதவிக்கு அனைத்து மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்கள் அல்லது
உறவினர்கள் யாராவது ஜப்பானில் இருந்தால் நீங்களும் இதைப்
பயன்படுத்தி அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து
கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க இறைவனை
பிரார்த்திப்போம்.
இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en
தகவல் உதவி : விண்மணி 

ஞாயிறு, 6 மார்ச், 2011

ஸ்ரீவை, திருப்புளியங்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இந் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அ.சேது தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வீரபாகு வரவேற்றார்.
எம்.பி.சுடலையாண்டி எம்.எல்.ஏ. நிழற்குடையைத் திறந்து வைத்துப் பேசினார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் காடுவெட்டி பிச்சையா, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் முத்துகுமார் நன்றி கூறினார்.

- தினமணி

சனி, 5 மார்ச், 2011

ஸ்ரீவை அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் மேலக்கோட்டை வாசல் தெருவில் அன்னை சத்யா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் உள்ளது.

இங்கு 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். புதன்கிழமை மதியம் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 14 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு தாமதமாக வந்ததால், இச்சம்பவத்தையடுத்து, அவர்களுக்கு மாற்று உணவு வழங்கப்பட்டது

- தினமணி

வெள்ளி, 4 மார்ச், 2011

ஆண்களின் உலகம்!

அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்!

எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ.யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்பெலண்டர் பிளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையே பேர்!படித்தவர்கள்தான் என்றாலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறை கல்விபெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள் நகரங்களில் தடுமாறித்தான் போகின்றனர். 21 வயதில் யு.ஜி. டிகிரி முடித்து வேலைதேடி வரும் அவர்கள், டெலி மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப், பி.பி.ஓ., என மெதுவாய் மேலே ஏறி ஒரு நிலையை எட்டுவதற்குள் முன் நெற்றியில் முடி கொட்டிவிடுகிறது. இளமையின் எந்த சுகங்களையும் அனுபவித்திடாத முதல் தலைமுறை இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்!


‘‘காலேஜ் முடிச்சதும் கஷ்டமோ, நஷ்டமோ... எல்லா பசங்களையும் போல ரெண்டு வருஷம் ஜாலியா ஊரைச் சுத்தியிருக்கனுன்டா... அந்ததந்த வயசுல அப்படியப்படி இருந்திரனும். குடும்ப நிலைமைன்னு வேலைக்கு வந்தோம். எட்டு வருஷமாச்சு... நிமிர்ந்துப் பார்த்தா சுத்தியிருக்குறப் பசங்கல்லாம் ‘அண்ணா’ன்னு கூப்பிடுறான். நமக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகுது. என்னைக்காச்சும் ஒரு பொண்ணு ‘அண்ணா’ன்னோ, ‘அங்கிள்’னோ கூப்பிட்டுருமோன்னுதான் பயமா இருக்கு.’’ என சிரிப்பவனின் பெயர் பிரவீன். தி.நகர் ‘முருகன் இட்லி கடை’ வாசலிலோ, சரவண பவன் வாசலிலோ பார்த்திருக்கக்கூடும். தடித்தடியாய் டிக்ஸ்னரி விற்றுகொண்டிருப்பான்.


இப்போது டி.என்.பி.எஸ்.ஸி. குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு நடக்கவிருப்பதால் 4000 கேள்வி, பதில்களை ஆடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்து அதை சி.டி.யில் போட்டு 50 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறான். ‘‘ப்ளூடூத் வழியா செல்போன்ல ஏத்திக்கிட்டா ஃப்ரீயா இருக்கும்போது எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் சார். நீங்க படிக்கவே வேண்டியது இல்லை, ஜஸ்ட் கேட்டா போதும்!’’ தெருவோரம் நின்று இப்படி கூவி விற்பதில் அவனுக்கு எந்த வெட்கமும் இல்லை. கேட்டால், ‘‘இருந்துச்சு. இப்போ இல்லை’’ என்பான். மாதம் பிறந்தால் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. மூன்று இருக்கிறது பிரவீனுக்கு.


இப்படிப்பட்ட பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்வி கதை இருக்கும். அதற்குக் காரணம் குடும்பமாய் இருக்கும். ‘குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பதல்ல... குடும்பத்தின் நிலையறிந்து அவர்களே தான் மனம் விரும்பியப் பெண்ணிடம் காதலைச் சொல்வது இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாய் சொல்வதில்லை. காரணம், ‘ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது. இணை, இணையாய் சுற்றுபவர்களைக் காட்டிலும், இப்படி மனதுக்குள் கருகிப்போனக் காதல்களோடு, வேலை முடிந்த பின்னிரவில் முகமறியா பெண்களுடன் காதலும், காமமுமாய் பேசித் திரியும் ஆண்கள்தான் எத்தனை, எத்தனை பேர்?! 30 வயதில்தான் இத்தகைய நிலை என்றில்லை. 24, 25 வயதில் லட்சியங்கள், ஆசைகள் ஒதுக்கிவைத்து, சொந்த சுமைகளை இறக்கி வைப்பதற்காய் உழைப்பவர்கள் பலபேர். நிமிர்ந்து பார்க்கும் நேரத்தில், ஒரு பறவையைப் போல இளமை அவர்களை கடந்துவிட்டிருக்கிறது!


ஆண்கள் குடும்பத்தைப் பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு பன்னெடுங்காலமாய் உண்டு. நண்பர்களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகப்பட்சம் இரண்டாவது பியரில் ‘ஒரு மேட்டர் மச்சான்’ என சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண்களேதான். சினிமாவில் சித்தரிப்பதுப் போல, பெண்கள் அல்ல! ஆனால் குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம், தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்கின்றனர்.


மேன்ஷன் போன்ற இடங்களில் ஆண்களின் உலகத்தை மேலும் நெருக்கமாக அறியலாம். ஏதேதோ திசையில் இருந்து ஓர் அறையில் அறிமுகமின்றி வந்து தங்கும் இளைஞர்களுக்கு இடையேயான நட்பின் அடர்த்தி கூடக், குறைய இருக்கலாம். ஆனால் யார் ஒருவரும் மற்றவர்களை சாப்பிடாமல் தூங்க விடுவது இல்லை. மாசக் கடைசியில் கூட, ‘‘உனக்கு இதே வேலையாப் போச்சுடா’’ எனத் திட்டிக்கொண்டேயாவது ஒரு முட்டை பரோட்டா பார்சல் வாங்குவந்துவிடுவார்கள். இப்போது நிறைய ஐ.டி. இளைஞர்கள் இரவையும், பகலையும் கடந்து வேலைப் பார்க்கின்றனர். அதிக சம்பளம், அதை அவர்கள் செலவழிக்கும் விதத்தால் வீட்டு வாடகை உயர்வு.. போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம். ஆனால் அவர்களை வீடும், உறவும் உண்மையில் பணம் காய்க்கும் எந்திரமாக அல்லவா பார்க்கின்றன? எல்லோருக்கும் இதைப் பொருத்த முடியாது எனினும் நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். ஐ.டி. இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறை வீட்டுக்கும், உறவுகளுக்கும் கலாசார ரீதியாய் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தாலும் அவர்கள் ஈட்டும் அதிகப்பணமே அதற்கான அங்கீரமாய் மாறுகிறது.


ஆனால், ஐ.டி. வேலை எல்லோருக்கும் கிடைப்பது இல்லையே?! தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் உரக்கப் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரிப் படித்துவிட்டு வந்தார்கள்? ‘இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச்சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தினவாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்களால் நிறைந்தது. ‘‘உன் வீட்டுக்காரர் எங்க வேலைப் பார்க்குறார்?’’ எனக் கேட்டால் அவர்களின் மனைவிமார்கள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர்கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாய் தலையசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.


கிருஷ்ணகுமார் என்ற நண்பருக்கு 35-ஐ தாண்டிய வயது இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து தினமும் சென்னை வடபழனிக்கு வேலைக்கு வருகிறார். வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள், அங்கிருந்து கிண்டி வரை மின்சார ரயில், கிண்டி டூ வடபழனி நகரப் பேருந்து்... மாலை வீடு திரும்புகையில் இதே சுற்று பஸ்-டிரெயின்-சைக்கிள் என்பதாய் முடியும். காலை ஆறு மணிக்கு கிளம்பினால் வீடு திரும்ப எட்டு, ஒன்பது ஆகும். ஓர் உழைக்கும் எந்திரமாய் மாறிப்போயிருந்தார். அலுவலகம் பக்கம் இருக்கும் டீ கடையில் இஞ்சி போட்ட ஸ்பெஷல் டீதான் குடிக்கும்படியாய் இருக்கும். சாதா டீ வாயில் வைக்க முடியாது. ஆனால் சாதா டீயை விட ஸ்பெஷல் டீ 2 ரூபாய் அதிகம். கிருஷ்ணகுமார் ஒருநாளும் ஸ்பெஷல் டீ குடித்தவர் இல்லை.


டிராஃபிக் அதிகமாகி இருந்த நாள் ஒன்றில் என் வண்டியில் கிண்டி வரை வந்தார். தனக்கு ஒரே ஒரு தங்கை எனவும் அவளை திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கடுமையான பிரச்னை எனவும் சொன்னார். நான் அதிகம் கேட்கவில்லை. ‘‘ரொம்ப பிரச்னையாயிடுச்சு சார். வேற வழியில்லாம டைவர்ஸ் வாங்கினோம். ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு இப்போதான் இன்னொரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சேன்!’’ என்றவரிடம் பெரிய ஆசுவாசம் தெரிந்தது. இந்த வயதில்தான் அவர் குடும்ப பொறுப்புகளில் இருந்து விடுதலை ஆகியிருக்கிறார். ‘‘நீங்க எதுவாச்சும் ஆகனும்னு ஆசைப்பட்டீங்களா?’’ என்றேன். சிரித்தார். ‘‘ஆசைக்கு என்ன சார், இப்போ கூட பட்டுக்க வேண்டியதான். ஆசைதானே?!’’உண்மையில் வரதட்சணை, வீண் ஆடம்பரம், நகைகளை வாங்கிச் சேர்ப்பது போன்றவை ஆண்களை நசுக்கிப் பிழிகிறது. அதற்கேற்ற வகையில் சம்பாதிக்க முடியாமல் போனால், வாழவே தகுதியில்லையோ என அவர்களைக் குற்றவுணர்வு அடைய வைக்கும் அளவில்தான் இருக்கிறது சூழல். நமது மோசமான குடும்ப அமைப்பு உறவுகளாலும், அதைவிட அதிகமாய் பணத்தாலும் பின்னப்பட்டிருக்கிறது. அந்த பாரத்தை ஆண்கள் விருப்பப்பட்டு அல்ல, வருத்தப்பட்டே சுமக்கின்றனர். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், ஊர் மெச்சும் வாழ்வு.. இவை எல்லாம் தர முடியாத ஆண் தரக்குறைவானவன் என பொதுப்புத்தி நினைப்பது மட்டுமல்ல, அதுதான் குடும்ப உறுப்பினர்களின் எண்ணமும் கூட. கிடைக்கும் வேலையை சரியாக செய்து, வரும் வருமானத்தில் திருப்தியுடன் வாழ்வதை யாரும் விரும்புவதும் இல்லை, பரிந்துரைப்பதும் இல்லை.

ஆண் துயரத்தின் அதிகப்பட்ச வெளிப்பாடாய் வெளிநாட்டில் பணிபுரிபவர்களைக் குறிப்பிடலாம். ஊரில் நிலத்தை, நகைகளை அடகுவைத்து ஏஜெண்டிடம் பணம் கட்டி சிங்கப்பூரிலும், வளைகுடா நாடுகளிடமும் ஆண்டாண்டு காலமாய் வேலைப் பார்ப்பவர்கள் லட்சங்களைத் தாண்டுவார்கள். முதல் இரண்டு வருடம் பணிபுரிந்து, வெளிநாடு செல்வதற்கு வாங்கிய கடனை அடைப்பார்கள். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து கோடாலி தைலமும், செண்ட் பாட்டிலும் பரிசளித்துவிட்டு மறுபடியும் பிளைட் பிடித்தால், அடுத்த இரண்டு வருட வருமானம் வீடு கட்டவே போதாது. அப்புறம் தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம் என முடித்து நிமிரும்போது அப்போதுதான் உள்ளூரில் நல்ல விலைக்கு நிலம் விலைக்கு வரும். கடன் வாங்கி அதை வாங்கிவிட்டு கடல் கடந்தால், அதற்கோர் இரண்டு வருடம். இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து திருமணம் முடித்து தாம்பத்தியம் நடத்தி வெளிநாடுப் போனால், சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கையில் முகத்தோல் தடித்து, கன்னக்கதுப்புகளில் முதிர்ச்சி படிந்திருக்கும். வயதின் முதுமையுடன் பெற்றோரும், கையில் குழந்தையுடன் மனைவியும்... மிச்ச வாழ்க்கை அவ்வாறாக கழியும்.


இவை எவற்றையும் பாரமாகவும், துக்கமாகவும் எந்த ஆணும் நினைப்பது இல்லை. வாழ்வின் ஒரு பகுதியாகவே இவையும் கடந்து செல்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆணை விமர்சிக்கவும், ஒதுக்கித் தள்ளவுமான கருவியாக எல்லோரும் கைகொள்வது அவனது ஒழுக்கத்தை. குறிப்பாக ‘சாராயம் குடிக்கின்றனர், சிகரெட் பிடிக்கின்றனர்’ என்பது. உண்மையில் இவை உடல்நலம் கெடுக்கும் தவறான பழக்கங்களே. ஆனால் சமூகத்தில் ஓர் ஆணின் நல்மதிப்பை அளவிட இவற்றை அளவுகோல்களாக கருத முடியாது. காஞ்சிபுரத்தில் இறைவன் சந்நிதியில் பெண்களுடன் சல்லாபம் நடத்திய தேவநாதனுக்கு சாராயம், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லை. ஊரே சிரிக்கும் நித்தியானந்தாவுக்கு டீ குடிக்கும் பழக்கம் கூட இல்லையாம். இந்த ஆண்களின் சமூக மதிப்பை எப்படி வரையறுப்பது? 1,500 கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த ‘சத்யம்’ முதலாளி ராமலிங்க ராஜுவுக்கு சாராயம், சிகரெட், பெண் சகவாசம் எதுவும் இல்லை எனில், நல்லவர் என அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா?


ஆண்களை Victim-களாக சித்தரித்து அவர்களின் ஆதிக்கத்தன்மையை நியாயப்படுத்துவது அல்ல இக்கட்டுரையின் நோக்கம். மேற்சொன்ன ஆண் துயரங்கள் போன்றவை இன்னும் அதிக விழுக்காட்டில் பெண்களுக்கும் உண்டு. ஆணின் உலகை இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் புரிந்துகொள்வோம் என்பதே இந்த குரலின் அடிநாதம்!

- பாரதி தம்பி


(இது 23.02.2011 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை. படிக்காதவர்கள் படிக்கவும், ஓர் உரையாடலுக்காகவும் இங்கே...)

இந்த கட்டுரை திரு. பாரதி தம்பி என்ற நண்பரின் facebook ல் இருத்து எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

வியாழன், 3 மார்ச், 2011

ஜூன் 30ம் தேதி முதல் 25 பைசா நாணயம் செல்லாது : ரிசர்வ் வங்கி


நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு 25 பைசா நாணயம் ஜூன் 30ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கோ.ரா.ஆனந்தா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய நாணயச் சட்டம் 1906ன் கீழ், வரும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது.

எனவே, ஜூன் 29ம் தேதிக்குள் சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள், ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், பொதுமக்கள் இந்த நாணயங்களை மாற்றிக் கொண்டு அதற்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல் : தமிழ் முரசு

அன்பு சகோதரர்களின் கவனத்திற்கு


சில தினங்களாக நமது சகோதரிகளின் செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாக சொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில் நாங்கள் தங்கி உள்ளோம், தற்பொழுது வெகேசனில் வந்துள்ளோம் உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்து பேச சொன்னார். நல்லா இருக்கீங்களா, பிள்ளைகள் நல்லா இருக்கா என்றெல்லாம் விசாரித்து அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள், சம்பந்தப்பட்ட சகோதரிகள் தங்கள் கணவருக்கு போன் செய்து விபரம் கேட்கும் பொழுது அது பொய்யான தகவல் என்று தெரிகிறது.

இவர்களின் நோக்கம் என்ன?உறவினர்கள் யாரும் கேலி செய்கிறார்களா என்று விசாரிக்கும் பொழுது அதுவும் இல்லை!அவர்களுக்கு நமது சகோதரிகளின் போன் நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன? மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது.

வெளிநாடுகளில் உள்ள சகோதர்கள் அனைவரும் உடனடியாக தம் தம் மனைவியருக்கும், குடும்பத்தாருக்கும் இத்தகவலை தெரிவித்து இது போல் யாரும் போன் செய்து பேசினால் வேறு எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

20.02.11 அன்று இரவு 09.30 மணிக்கு எனது மனைவிடம் இருந்து call me என்று ஒரு SMS வந்தது உடனடியாக நான் அவருக்கு போன் செய்யும் பொழுது லயன் பிசியாக இருந்தது, 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தேன்.மனைவியின் குரலில் ஒரு பதஷ்டம் என்ன என்று கேட்கும் பொழுது உங்களுக்கு SMS செய்த மறு நொடி ஒரு போன் வந்தது நீங்கள் தான் என்று நினைத்து நலம் விசாரித்தேன் அதற்கு அவன் சொல்லு சொல்லு என்று சொன்னான், மறுபுறம் குரலில் வித்தியாசம் இருந்ததால் உடனே கட் செய்து விட்டேன் திரும்பவும் அவன் நம்பரில் இருந்து உங்கள் பெயர் மட்டும் போட்டு SMS வந்தது மீண்டும் அவன் போன் செய்தான், நீங்கள்தான் என்று நினைத்து மறுபடியும் எடுத்தேன், யார் பேசுவது? இது எந்த ஊர்? என்று கேட்கிறான், நான் பயந்து வைத்துவிட்டேன் என்று சொன்னார்கள்.


நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நம்பர் வருவதாக சொன்னார்கள் நம்பர் என்ன வென்று கேட்டு வாங்கிக்கொண்டு நான் அவனுக்கு போன் செய்தேன்,உறக்கத்தில் இருந்து எடுப்பவனைப் போல் எடுத்து ஹலோ என்று சொன்னான், யார் நீ? உனக்கு எந்த நம்பர் வேண்டும் ஏன் இதற்கு SMS செய்தாய் எப்படி உனக்கு இத நம்பர் கிடைத்தது என்று கேட்டவுடன் இணைப்பை துண்டித்துவிட்டான்.

ஆகையால் நண்பர்களே, நம்மை நோக்கி எதுவோ? யாரோ? குறி வைக்கிறார்கள் அதில் நமது குடும்பத்தார்கள் சிக்கி விடாமல் இருக்க அனாமத்தான கால்கள் எதுவும் வந்தால் அதற்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று தங்கள் மனைவிமார்களிடமும் குடும்பத்தார்களிடமும் எச்சரிக்கை செய்யவும் .

தகவலுக்கு நன்றி : அதிரை அமீன்.

புதன், 2 மார்ச், 2011

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதே போல புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:

இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

4.59 கோடி வாக்காளர்கள்:

தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும்.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30.

ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.

தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம்-புதுச்சேரி தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல்- மார்ச் 19
மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 26
மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30
வாக்குப் பதிவு- ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை- மே 13

செவ்வாய், 1 மார்ச், 2011

சவூதியில் பொது மன்னிப்பு


சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு கீழ்கண்டவைகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என அறிவிக்கப்படுகின்றது :


உம்ரா / ஹஜ் / விசிட்விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள்.

இந்த பொது மன்னிப்பு,வேலை சம்பந்தப்பட்ட விசாவில் வந்தவர்களுக்கு இல்லை. அதுபோல் HURBOOB - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கலுக்குமல்ல - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

இந்த பொது மன்னிப்பு 23 மார்ச் 2011 ல் முடிவடைகின்றது.உம்ரா / ஹஜ் / விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள் உடனடியாக இந்த சந்தர்பத்தை மார்ச் 23 க்கு முன்பாகவே பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகின்றர்கள்.

யாரெல்லாம் இந்த குறுப்பிட்ட காலத்திற்குள் நாடு செல்ல வில்லையோ, அவர்கள் அபராத தொகை கட்ட நேரிடும், மேலும் அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

யாரிடத்தில் ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டை இல்லையோ,அவர்கள் அவுட்பாஸ்(out pass) பேப்பரும், ஜவாஜாத் அலுவலகத்திலிருந்து உம்ராஹ் / ஹஜ் விசாவிர்காண அத்தாச்சி பேப்பரையும் கொண்டு வரவேண்டும்.

அவசர சான்றிதல் - அவுட்பாஸ் பெறுவது எப்படி?

சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் பாஸ்போர்ட் காப்பியும்,அத்துடன் ரேஷன்கார்டு அல்லது கார் வாகனவோட்டு சான்றிதல், அல்லது எலக்ரிகல் கார்டு அல்லது ஏதாவது இந்தியன் அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கத்தின் போட்டோ அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஓன்றை வைத்து அவுட்பாஸ் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த அவுட்பாஸ் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும்.

HUROOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள்

ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் கபீலிடத்திலிருந்து NOC certificate - பிரச்சனை இல்லை என்ற சான்றிதல் வைத்திருக்கவேண்டும்.

ஜவாஜாத் - jawazat போலீஸ் பாது காவலில் வைக்கப்பட்டு, தர்ஹீல் என்ற போலீஸ் நிலையதிலிருந்து அனுப்பப்படுவார்கள்.

இந்த பொது மன்னிப்பு, HURBOOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

தாயகத்திற்கு திரும்ப அவசர சான்றிதல் -அவுட்பாஸ் மட்டும் போதுமானதல்ல.

ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், இந்நாட்டு சட்டப்படி, அவர்களின் கபீலிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை முடித்து கொள்ள வேண்டும்

தகவல் : அதிரை எக்ஸ்பிரஸ்

நாம் பிடித்த புலிவால் வாழ்க்கை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


பிறக்க ஓர் இடம்!

பிழைக்க ஓர் இடம்!

இதுதான் என் சமுதாய

மக்களின் வாழ்வாகிவிட்டது!

நம் முன்னோர்களுக்கோ

பர்மா, ரங்கூன், மலேசியா!

எங்களுக்கோ வளைகுடா!

இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்

அங்கும் தொடருமா?

எங்கள் வாரிசுகள்?


வளைகுடா வசந்தம் என்றார்கள்!

முன்னால் கால் வைத்த

மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!

வைத்த காலை எடுக்க முடியவில்லை

ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த

எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!

சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது

எம்முடைய பயணமோ

திக்குத்தெரியாமல்

வளைகுடாவை நோக்கியே!


ஊர் சென்றால் நம்

சுமைகளை சுமந்து செல்வதில்

அலாதி ஆனந்தம் நம்

கையெல்லாம் சிவக்க சுமப்போம்

அடுத்த தடவை சுதந்திரபறவைதான்

ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்

காற்றோடு போகும்! மீண்டும் சுமை!


மனைவி மக்களை பார்த்தால்

மன சந்தோஷம் ஆனால்

நம்முடைய கையிருப்பும்

எடுத்த விடுப்பும்

கரைய கரைய மனதில் பீதி!

வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!


எத்தனை கொடுத்தாலும்

போதுமென்ற மனம் இல்லை

இதுதான் கொண்டு வந்தாயா?

நம் உள்ளமோ வேதனையில்

கொடுத்த பொருள் நன்றாக

இருந்தது என்று சொல்லி விட்டால்

தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!

சொல்லத்தான் மனமில்லை!


கண்ணீரோடு குடும்பத்தை

பிரிந்த நாம் சொல்வது

இரண்டு வருடம்தான்!

முடித்து விட்டு போய்விடுவோம்

பல பிரச்சனைகளில்

மறந்தே விடுவோம்!

இதுதான் தொடர்கதையான

வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து

வீட்டையும் கட்டி விட்டு

தொழிலுக்கு பணத்தோடு

ஊரில் தங்கிவிட வேண்டும்!

எல்லாம் முடிந்து

நாமும் குடும்பத்தலைவன்

ஆன பிறகு மீண்டும்

அதே பழைய இடம்

வீடு பிள்ளைகள் திருமணம்

ஊரில் நிரந்தரம் என்பதும்

கனவாய் போனதே!


வழி அனுப்ப வாகனத்தில்

வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!

விமான நிலையத்தில் நாம்

உள் நுழைவதை பார்த்தவுடன்

அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!

இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு

ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்

திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை

என்ன சொல்லி சமாளிக்க!

நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!

குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி

இல்லையா என்று உள்ளம் கலங்க

என்ன செய்வோம் எத்தனை காலம்

இந்த அடிமை வாழ்க்கை!

நாம் பிடித்தது புலி வால் அல்லவா?


ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்

எல்லோரும் சொல்லும் வார்த்தை!

சென்றவர்கள் சில காலம் கழித்து

மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!

ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்

என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்

குலைந்துவிட என்ன செய்ய

மீண்டும் மனப்போராட்டம்!


ஊரில் சிறு தொழில் வைக்காதே

பெரிதாக தொழில் தொடங்கு

ஆலோசனை இலவசம்!

பணத்தை எந்த மரத்தில் பறிக்க

காலம் இப்படியேதான் போகுமா?

குடும்பத்தோடு சேர்ந்து

வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்

கஷ்டப்படும் நிலையை பார்த்து

கல்வியை கற்றுக்கொண்டு வா!

என்றார்கள், கல்வி கற்று வந்ததும்

நல்ல வேலை மனைவி மக்களுடன்

வாழ்க்கை சிலருக்கு!

கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து

உள்ளவனை பார்த்து

ஏன் இங்கு வந்தாய் என்றால்

இங்கு உள்ள சுகாதாரம்

ஊரில் வருமா அதனால்தான் என்றான்?

இங்கு வந்து வாழும்

குடும்ப பெண்களிடம்

கேட்டால் ஊர் போல் வருமா

வளைகுடா என்றார்கள்!


நாம் இழந்தது என்ன?

தாய் தந்தை சேவையை!

குடும்பத்தின் சுக துக்கத்தை!

நம் உறவுகளின் அனுசரணையை!

தென்றல் வீசும் காற்றை!

மழலையின் வார்த்தையை!

மழையின் மண்வாசனையை!


பள்ளி விட்டு வந்ததும்

பள்ளியின் கதை சொல்ல

தந்தையை தேடும்

பிள்ளை செல்வங்களை!

தந்தையுடன் செல்லும்

பிள்ளைகளை பார்த்து

நம் தந்தை அருகில்

இல்லையே என்று வாடும்

நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!


வாகனத்தில் செல்லும்பொழுது

சாலைகளில் இருபுறமும்

பசுமை மரங்களோடு

சேர்ந்து வரும் தென்றலை!

இன்னும் நிறைய!

பணம் உண்டு இங்கு

நம் மனம் மட்டும் ஊரில்!

இயந்திரத்தனமாக தொடர்கிறது

புலிவாலை பிடித்த வாழ்க்கை!

ஈமெயில் உதவி : ஜனாப் . இப்ராகிம்.ACM

LinkWithin

Blog Widget by LinkWithin