
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 24 ஆம் தேதி நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் மிக முக்கியமான கோவிலாக கள்ளபிரான் சுவாமி கோவில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் இக்கோவில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி கொடியற்றம் தொடக்கி 10 நாட்கள் நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 24 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5 மணிக்கு சுவாமி தேரில் வைத்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
மாலை 7.30 மணிக்கு தேர் கோவிலை அடையும்.மறுநாள் காலை 9.00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக