செவ்வாய், 25 ஜனவரி, 2011

உலகின் உயரமான உணவு விடுதி

உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ்  கலிபாவின் 122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.இந்த உயரமான உணவகத்தின் பெயர் அட்மாஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இதில், 442 வது மீ., உயரத்தில் 122 வது மாடியில் நேற்று புதிய உணவு விடுதி ஒன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவுவிடுதி இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சி.என்.டவர் கட்டடத்தில் அமைந்துள்ள 360 உணவு விடுதிதான் இதுவரை உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவு விடுதி என்ற இடத்தைப் பெற்றிருந்தது.


புர்ஜ் கலிபாவின் உயரமான புதிய உணவு விடுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான பதிவு அனைத்தும் முடிந்து விட்டன. இந்த விடுதியில் இருந்து துபாயின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகத்திற்கென தனியாக  லிப்ட் உள்ளது. இங்கு ஓரே நேரத்தில் சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம். இந்த சொகுசு உணவகத்தில் பிரைவேட் டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரத்து 62. 65 கொடுக்க வேண்டும். மேலும், மதிய வேளையில் டீ குடிக்க ரூ. 4 ஆயிரத்து 557. 75 பைசா கொடுக்க வேண்டும். இது தவிர பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனி வேண்டுவோர் தலைக்கு ரூ. 2 ஆயிரத்து 481.69 பைசா கொடுத்தால் போதும்.இந்த உணவகத்தில் இருந்து துபாயை முழுவதுமாக கண்டு ரசிக்கலாம்.

திருச்செந்தூர் - நெல்லை சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்

தூத்துக்குடி : திருச்செந்தூர் - நெல்லையிடையே கடந்த ஓராண்டாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படுகிறது.நெல்லையில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு திருச்செந்தூருக்கும், மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு நெல்லைக்கும் கடந்த ஓராண்டாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கான எண்களைக் கொடுத்து இவற்றை நிரந்தர ரயிலாக இயக்க, ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கான துவக்க விழா நேற்று மாலை, திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அலங்கரிக்கப்பட்ட திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில்(எண்:56764) பயணத்தை, 4.10 மணிக்கு பச்சைகொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி எம்.பி.,ஜெயதுரை, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.கோயல், கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது மாலை, நெல்லையிலிருந்து சென்னை செல்லும் நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணைப்பாக உள்ளது. இதுபோல, காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலுக்கு, 56763 என்ற எண் தரப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து இருமார்க்கத்திலும் தினமும், மொத்தம் நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


செய்தி:  தினமலர்


வியாழன், 20 ஜனவரி, 2011

சுவிஸ் பாங்கியில் தமிழக அரசியல்வாதிகள் கருப்பு பணம்; “விக்கிலீக்” இணைய தளம் வெளியிட்டது

புதுடெல்லி, ஜன 19-


உலகம் முழுவதும் அரசியல் வாதிகளும், மற்றவர்களும் தாங்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த பணங்களை சுவிட்சர்லாந்து பாங்கியில் போட்டு வைத்துள்ளனர். இந்த பாங்கிகளில் பணம் போட்டு வைத்து இருப்பவர்கள் பற்றிய தகவலை வெளியிடுவது இல்லை.

எனவே தான் இந்த பாங்கிகளிலேயே பணத்தை போட்டு வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதி பர்களும் தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்கிகளில் டெபாசிட் செய் துள்ளனர்.
இந்த வகையில் இந்தியர்களின் ரூ.72 ஆயிரம் லட்சம் கோடி பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ள பாங்கிகளில் “ஜுலியஸ் போ” என்ற பாங்கியும் ஒன்று.

இந்த பாங்கியின் முன்னாள் ஊழியர் ருடால்எல்மர். அவர் “ஜுலியல் போ” பாங்கியில் ரகசிய கணக்கு வைத்து இருந்த 2 ஆயிரம் பேர் பட்டியலை உலக ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளத்துக்கு வழங்கி உள்ளனர். அதில் ஏராளமான இந்திய அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
அதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பணம் போட்டு வைத்து இருக்கும் தகவலும் உள்ளது. அதில் 2 கணக்குகள் தனிப்பட்ட நிறுவனங்கள் பெயரில் உள்ளன. மற்ற 2 கணக்குகள் தனிப்பட்ட 2 நபர்கள் பெயர்களில் உள்ளன.
ஒரு நிறுவனம் ரூ.400 கோடியும், இன்னொரு நிறுவனம் ரூ.45 கோடியும் டெபாசிட் செய்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் யாருடையது என்ற தகவல் சரியாக வெளியாகவில்லை. தமிழக அரசியல்வாதிகள் தொழில் நிறுவனங்கள் பெயரில் இந்த பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

ருடால் எல்மர் கொடுத்துள்ள 2 ஆயிரம் பேர் பட்டியலில் சிலருடைய பெயர் மட்டுமே தற்போது வெளிவந்து உள்ளது. விரைவில் 2 ஆயிரம் பேர் பெயரையும் விக்கி லீக் இணையதளம் வெளியிட முடிவு செய்துள்ளது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி : மாலைமலர்

மொபைல் போன் பயனாளர்களுக்கு இன்று முதல் Mobile Number Portability

வேறொரு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை வைத்துக் கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களுடைய செல்போன் நிறுவன சேவை செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் வேறு செல்போன் நிறுவன சேவைக்கு மாறுகின்றனர். அப்படி மாறினால் அவர்களுடைய செல்போன் எண்களையும் மாற்ற வேண்டியது இருக்கிறது. அதனால், சேவை குறைபாட்டை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வேறு செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்வதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்தது. நீண்ட நாட்களாக இது குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீடித்து வந்தது. இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் மட்டும் கடந்த நவம்பர் 25-ந் தேதி அன்று இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இன்று  (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிவிப்பில், `தொலைத்தொடர்பு செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றம் செய்யும் வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை பகுதிகளிலும் ஜனவரி 20 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, தொலைத்தொடர்பு மொபைல் போன் எண்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி 2009-ல் உள்ள பிரிவுகள் மாற்றம் செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நன்றி : மாலைமலர் (சூர்யா கண்ணன்)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

புது வரவு

அஸ்ஸலாமு அலைக்கும்!
அணைவருக்கும் வணக்கம்,நலம்! நலமறிய ஆவல்,நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,இத்தனை நாட்கள் வேலைப்பளுவினாலும் மற்றும் பல காரணங்களாலும் நம் வலைபதிவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளமுடியவில்லை.இனிமுதல் நான் என்னுடைய அளவிற்கு
முயற்சி செய்கிறேன்,மேலும் நம் வலைபதிவில் இணைந்தவர்களும் மற்றும் அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை mail மூலமாகவோ அல்லது நம் தளத்திலோ பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் நல்ல செய்திகளுடன் ..........
K.ஆசிப் மீரான்

LinkWithin

Blog Widget by LinkWithin