ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து நேற்று மாலை ஐந்து மணி நிலவரப்படி விநாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே எட்டடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு உள்ளது.இதன் மூலம் வடகால்,தென்காலில் 30க்கும் மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழை, நெல்லை மாவட்ட அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகியவற்றால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் மழைநீர் வெள்ளமென சீறிப்பாய்கிறது. நீரை சேமித்து வைக்க வழியில்லாததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் மழைநீர் வீணாக புன்னக்காயல் கடலில் சென்று கலக்கிறது.
நேற்று மாலை ஐந்து மணி நிலவரப்படி விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் அணையிலிருந்து கடலுக்குச் சென்றது. மழை தொடர்ந்தால் கடலுக்குச்செல்லும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கும்.
இந்த அணைக்கட்டிற்குப்பின்னரோ அல்லது முன்னரோ ஒரு தடுப்பணை கட்டியோ, வேறு திட்டத்தை செயல்படுத்தியோ மழைநீர் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். அவ்வாறு செய்தால் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை இருக்காது என அவர்கள் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக