சனி, 7 நவம்பர், 2009

விடிய விடிய பொழிந்த மழையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் நீர் நிரம்பி வழியுது


ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 48 மணிநேரம் கொட்டி தீர்த்தது பருவமழை.இதன் காரணமாக விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் அதிகாலை 4 மணிக்கு 104 கனஅடியும், 8 மணிக்கு 831 கனஅடியும்,தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரத்துவங்கியது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி சுமார் 5300 கன அடி தண்ணீர் கடலுக்குள் செல்கிறது.

கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. அணைக்கட்டுகள் நிரம்பியது இதனால் விவசாயத்திற்கு குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தங்கள் ஏர்கலப்பைகளை தூசி தட்டி ஆரவாரத்துடன் பிசானத்திற்கு தயாராகினர்.

மருதூர் மேலக்காலில் 1100 கனஅடி தண்ணீரும் கீழக்காலில் 400 கனஅடிதண்ணீரும் ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 979 கனஅடி தண்ணீரும், தென்காலில் 1100 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பாசனகால்வாயில் இருந்து பயன்பெரும் சுமார் 55 குளங்கலும் வேகமாக நிரம்பி வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை 81 மி.மீ அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் மழை தொடர்ந்து நீடித்தால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மிகுந்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும் நிலை ஏற்படும்

மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள 16 மதகுகளில் ஒருசிலவற்றைத் தவிர பல பழுதுபட்டு கிடப்பதால் வெள்ளக்காலங்களில் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆற்றில் காணப்படும் மணல் மேடுகள், அமலைச் செடிகள் வெள்ளக்காலங்களில் தேங்கி விடுகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்புறம் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு தேவைப்படும் மூலப்பொருள்கள், கம்பிகள், தளவாடங்கள் ஆற்றில் கிடந்தன. அதிகாலையில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அதை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். பின்னர் காலையில் டிராக்டர் மூலம் பொருள்கள் ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

இருப்பினும் பாலம் கட்டுமானப் பணிக்கு தேவையான பொருள்கள் சேதப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin