துபாய் தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருநாளை 06.11.2009 அன்று மாலை ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு விமரிசையாக நடத்தியது.
துவக்கமாக குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பொருளாளர் கீதா கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சஞ்சனா, ஐஸ்வர்யா, வஸந்த, சுஸந்த் உள்ளிட்ட குழந்தைகள் திருக்குறளும், அதன் விளக்கவுரையினையும் வாசித்தனர்.
துபாய் தமிழ்ச் சங்க பெண் உறுப்பினர்களின் தீப ஒளி நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.
இந்து, இஸ்லாம், கேரளம் உள்ளிட்டவர்களின் திருமண நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சி இடம் பெற்றது. பாலாஜியின் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியும், ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
துபாய் அல் வாஸல் மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் பர்வீன் பானு, கேன்சர் குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
துபாய் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
'தி ஹிந்து' நாளிதழின் திருச்சிப் பதிப்பு நிர்வாகி சையது சகப் முத்தஹர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் இயக்குநர் பேராசிரியர் கலந்தர் தங்களது திறனை சிறப்புற வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
டிசம்பர் 2 அன்று நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சி குறித்து விழாக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா விவரித்தார்.
துணைப் பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். தேசிய கீதத்துக்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பொதுச்செயலாளர் சி.ஜெகநாதன் தலைமையிலான குழுவினர், கமிட்டி உறுப்பினர்கள் விழா சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக