வியாழன், 5 நவம்பர், 2009

குற்றால அருவிகளில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கனமழை காரணமாக பழையகுற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும், மெயின் அருவியில் இரவு மின் விளக்கு எரியாததாலும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் மெயின் அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. இரவு அருவி பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிக்க போலீசார் தடை விதித்தனர்.அருவிக்கு செல்லும் பகுதியின் குறுக்கே கயிறு கட்டி போலீசார் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

டவுன் பஞ்., ஊழியர்கள் மழை காரணமாக மின்விளக்கு சுவிட்சை போடாமல் சென்று விட்டதால் விளக்குகள் எரியவில்லை என்று அப்பகுதி வியாபாரிகள் கூறினர்.பழையகுற்றால அருவியில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin