திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தல் அ.தி.மு.க.. வேட்பாளராக அக்கட்சி உடன்குடி ஒன்றிய செயலர், அம்மன் டி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பயோ-டேட்டா
பெயர்: அம்மன் டி. நாராயணன்(57)
ஜாதி: இந்து நாடார்
கல்வித் தகுதி: ஏழாம் வகுப்பு
சொந்த ஊர்: திருச்செந்தூர் அடுத்த அம்மன்புரம்
குடும்பம்: மனைவி வசந்தா, அ.தி.மு.க.,விலுள்ள அவர் 2001 முதல் 2006 வரை உடன்குடி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தார்.
மகள்கள்: 1. சரவணக்குமாரி - திருமணமாகிவிட்டது, 2. சூரியகுமாரி (9ம் வகுப்பு படிக்கிறார்), மகன்- ஆனந்தகுமார் -இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படிக்கிறார்.
தொழில்: விவசாயம்
அரசியல் அனுபவம்: 1972ல் அ.தி.மு.க., உறுப்பினரான அவர், 1993 முதல் 1998 வரை உடன்குடி ஒன்றிய ஜெ., பேரவை இணைச்செயலர், 1998 முதல் 2003 வரை உடன்குடி ஒன்றிய ஜெ.,பேரவை செயலர், 2003 முதல் தற்போது வரை உடன்குடி ஒன்றிய அ.தி.மு.க., செயலர். அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
சாதனைகள் ஜெயிக்க வைக்கும்: வேட்பாளர் அம்மன் டி.நாராயணன் கூறுகையில்,"" ஏழைத்தொண்டனான என்னை, வேட்பாளராக அறிவித்த அம்மாவுக்கு(ஜெ.,க்கு) நன்றி. தமிழகத்தில் ஜெ., ஆட்சியில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். எனவே, அந்த சாதனைகள் என்னை ஜெயிக்கவைக்கும்.
அதன் மூலம் திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை என மீண்டும் நிரூபிக்கப்படும். எம்.எல்.ஏ., ஆனபின் தொகுதி மக்கள் பிரச்னை தீர்க்க பாடுபடுவேன்'' என்றார்.
செய்தி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக