ஸ்ரீவை இடைத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீவை இடைத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூன், 2011

ஸ்ரீவை , அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் என ஸ்ரீவை.சிவாஜி நற்பணி மன்றம் அறிவிப்பு


ஸ்ரீவை அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவைகுண்டம் சிவாஜி நற்பணி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகள் ஆற்று நீரில் மிதந்து வந்து தண்ணீரை வீணாக்குகிறது. மேலும் ஆற்றங்கரையில் நீராடும் பொதுமக்களுக்கு அரிப்பு ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

மேலும் தண்ணீரை உறிஞ்சி வீணாக்குவது மட்டுமல்லாமல் அசுத்தமாக்கி தண்ணீரின் தன்மையும் கெட்டுவிடுகிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை நிர்வாகம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு குடிதண்ணீர் பாதுகாக்கப்படாத நிலையில் ஆற்றிலிருந்து நேரடியாக மக்களுக்கு குழாய்கள் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவையில் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததாலும்.ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளாலும் தோல் நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

கலங்கலான சகதி கலந்த சேறுடன் சில வேளைகளில் தண்ணீர், குடிநீராக வழங்கப்படும் நிலையும் இருப்பதால் மக்களுக்கு தோல் நோயுடன் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் அமைப்புகள் மற்றும் பொது நலச்சங்கங்கள் குரல் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இன்று வரை எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறையும், வனத்துறையும் இணைந்து ஆய்வு செய்ய தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஸ்ரீவை சார்த்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ, திரு. சண்முகநாதன் இதனை நிறைவேற்றுவார் என்று ஸ்ரீவை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தகவல் : செய்திதாள்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வி ஏ‌ற்பு


அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீவைகு‌ண்டம்,தொண்டாமுத்தூர் ச‌ட்ட‌ம‌ன்ற தொகு‌தி‌யி‌ல் வெ‌ற்ற‌ி பெ‌ற்ற கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் நேற்று பத‌வி ஏ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.

சமீபத்தில் நடந்த 5 சட்டம‌ன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்பம், இளையான்குடி, பர்கூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ராமகிருஷ்ணன், சுப.மதியரசன், நரசிம்மன்ஆகியோர் கடந்த 25ஆ‌‌ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கந்தசாமி (தொண்டாமுத்தூர்), சுடலையாண்டி (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் நேற்று
முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர். அவை‌த் தலைவ‌ர் அறையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஆ‌கியோ‌ர் கலந்து கொண்டனர்.

நன்றி : சக்திவேல்,சென்னை

சனி, 22 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம்:அடிப்படை வசதிகளுக்கு பாடுபடுவேன்- சுடலையாண்டி



ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்று வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சுடலையாண்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

வெற்றி குறித்து சுடலையாண்டி நிருபர்களிடம் கூறுகையில்,

இது மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு கிடைத்த வெற்றி. ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகளை பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.

எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் அழகிரி , தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு , அமைச்சர்கள் கீதா ஜீவன், சுரேஷ்ராஜன், தங்கம் தென்னரசு, பூங்கோதை, மாவட்ட செயலாளர்கள் என் பெரியசாமி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

ஸ்ரீவைகுண்டத்தில் எம்ஜிஆர் தொண்டர்களின் வாக்குகளை வென்ற தேமுதிக

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தே.மு.தி.க. வெற்றிவாய்ப்பை இழந்த போதிலும், எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகளை வெல்லும் போட்டியில் அக்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இத் தொகுதி இடைத்தேர்தலில் 53,827 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் 22,468 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்தது. இதனால், இத்தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். தொண்டர்களின், அதாவது அ.தி.மு.க. ஆதரவாளர்களின் வாக்குகள் யாருக்கு என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகள் தங்களுக்குத் தான் என தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுமே கூறி வந்தன.

ஆனால், எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகள் யாருக்கு என்ற போட்டியில் உண்மையில் வெற்றிபெற்றிருப்பது தே.மு.தி.க. தான்.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட (2006) கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கிறது. 2006 தேர்தலில் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற டி. செல்வராஜ் 38,188 வாக்குகள் பெற்றிருந்தார். அப்போது பதிவான மொத்த வாக்குகள் 93,648.

ஆனால், இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் 53,827 வாக்குகள் பெற்றிருக்கிறார். பதிவான மொத்த வாக்குகள் 84,480 தான்.

காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு ஓட்டு குறிப்பிட்ட சதவிகிதம் கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆளும் கூட்டணிக் கட்சிக்கு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேநேரத்தில் அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துள்ள சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகளைப் பெறுவதில் தே.மு.தி.க. வெற்றி பெற்றிருக்கிறது.

அந்த கட்சி வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் 22,468 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்ட எஸ். சத்தியசீலனுக்கு 3,166 வாக்குகள்தான் கிடைத்தன. அப்போது தே.மு.தி.க.வுக்கு இந்த தொகுதியில் 4-வது இடம் தான் கிடைத்தது. மேலும், டெபாசிட் தொகையையும் இழந்தது.

தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் எம்.எஸ். சுந்தருக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 8,347 வாக்குகள் கிடைத்தன.

இந்த இடைத்தேர்தலில் கூடுதலாகக் கிடைத்துள்ள வாக்குகள் எம்.ஜி.ஆர். தொண்டர்களின், அதாவது அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் தான் என்பதை தே.மு.தி.க.வினரே ஒப்புக்கொண்டுள்ளனர்.

தி.மு.க.வினர், வாக்குகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால், காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைத்த எம்.ஜி.ஆர். தொண்டர்களின் மற்ற வாக்குகளும் தங்களுக்குத் தான் கிடைத்திருக்கும் என தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகளை எங்கள் பக்கம் இழுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இம்முறை எங்களுக்கு வாக்களித்த எம்.ஜி.ஆர். தொண்டர்கள் வரும் தேர்தல்களிலும் எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.

அதேவேளையில் எம்.ஜி.ஆர். தொண்டர்கள் தங்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும். அது அவர்களது தார்மிகக் கடமை என்று கூறி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளர் ஞா. தனலெட்சுமி வெறும் 3,407 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலம் திட்டவட்டமாகத் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்கும் இந்த தொகுதியில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பி.எம். பால்ராஜுக்கு 2,719 வாக்குகள் கிடைத்தன. ஆனால், தற்போது அதுவும் குறைந்து 1797 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

மதிமுகவிடமிருந்து தொண்டாமுத்தூரை வென்றது காங்.

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.என். கந்தசாமி 71,487 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

மதிமுகவிடமிருந்து இத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.

வேட்பாளர்கள் வென்ற வாக்குகள்:

கந்தசாமி (திமுக) - 1,12,350

கே.தங்கவேலு (தேமுதிக) - 40,863

ஸ்ரீவை. டெபாசிட் இழந்த தேசிய கட்சிகள்: வேட்பாளர்கள் ஓட்டுக்கள் முழுவிவரம்


ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியில் பாஜக மற்றும் சிபிஐ கட்சி வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகைளை இழந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுடலையாண்டிக்கு 55,827 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் இத்தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியி்ட்ட வேட்பாளர்கள் தேமுதிகவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் 22 ஆயிரத்து 468 வாக்குகளுடன் 2வது இடத்தைப் பிடித்தார்

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்

சுடலையாண்டி (காங்.) 53,827

செளந்தரபாண்டியன் 22,468

தனலட்சுமி (சிபிஐ) 3407

சந்தனக்குமார் (பாஜக) 1797

மொத்தம் பதிவான வாக்குகள் 84,504

வெற்றி வித்தியாசம் 31,359

ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி, மற்றும் பாஜக சந்தணகுமார் ஆகிய இருவரும் இத்தேர்தலி்ல் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இரு கட்சிகளும் தேசிய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது..

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல் காங்கிரஸ் வெற்றி


ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி 31ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணிக்கை சாயர்புரம் போப் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 172 வாக்குச் சாவடிகளில் பதிவான 84 ஆயிரத்து 504 ஓட்டுக்கள் 13 ரவுண்ட்களாக எண்ணப்பட்டன.

ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஸ்ரீவைகு‌ண்‌ட‌ம் தொகு‌தி‌யி‌‌ல் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ா‌ர்‌பி‌ல் எம்.பி.சுடலையாண்டியும், தே.மு.‌தி.க சா‌ர்‌பி‌ல் எம்.சவுந்திரபாண்டியனு‌ம், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் தனல‌ட்சு‌மியு‌ம் வே‌ட்பாள‌ர்களாக போ‌ட்டி‌யிட்டனர்.

ஸ்ரீவைகு‌ண்ட‌ம் ச‌ட்டம‌ன்ற இடை‌த் தே‌‌ர்தலு‌க்கான வா‌க்கு‌ எ‌‌ண்‌‌ணி‌க்கையில், கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் எம்.பி.சுடலையாண்டி 53827 வா‌க்குக‌ள் பெ‌ற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக, தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியன் 22468 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31359 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டிக்கு வாக்கு எண்ணும் மையத்திலேயே, தொகுதி தேர்தல் அதிகாரி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் பிரகாஷ், திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். சுடலையாண்டியின் வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சக்திமுருகன்

ஸ்ரீவையில் காங்கிரஸ் முன்னிலை காலை 9 மணி நிலவரம்

ஸ்ரீவைகுண்டம் - காங்.-4558,

தேமுதிக-1579,

சிபிஐ-343

இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். பின்னர் பிற வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10 மணிக்கு வெற்றி பெறப் போவது யார் என்பது உறுதியாகி விடும். 11 மணிக்குள் முடிவுகள் தெரியும்.

வாக்கு எண்ணும் இடங்கள்..

தொண்டாமுத்தூர் - கோவை தடாகம் சாலை அரசு தொழில்நுட்ப கல்லூரி.

ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் போப் கல்லூரி.

பர்கூர் - கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி.

இளையாங்குடி - இளையாங்குடி மேல்நிலைப்பள்ளி.

கம்பம் - உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாயர்புரம் போப் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) நடைபெற்றது.

தொகுதியில் 172 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு, சாயர்புரம் போப் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை இரவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து சேர்ந்தன.

தொடர்ந்து அந்த இயந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அனைத்து இயந்திரங்களும் தனி அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸôர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்திலும், மையத்திற்கு வெளியேயும் என மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் கோ. பிரகாஷ், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் டி.கே. ரங்கசாமி, சீனிவாசுலு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.

72.46 சதவிகித வாக்குப் பதிவு:

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 57,353 ஆண்கள், 59,254 பெண்கள் என மொத்த வாக்காளர்கள் 1,16,607 பேர்.

இவர்களில் 84,504 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளனர். இது 72.46 சதவீதம் ஆகும். ஆண்கள் 40,731 பேர் வாக்களித்துள்ளனர். இது 71 சதவிகிதமாகும். பெண்கள் 43,773 பேர் வாக்களித்துள்ளனர். இது 73.9 சதவிகிதம் ஆகும்.

சராசரி வாக்குப்பதிவான 72.46 சதவிகிதத்திற்கு 15 சதவீதம் கூடுதலாக அல்லது 15 சதவிகிதம் குறைவாக ஏதாவது வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவாகியிருந்தால் அதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.

அதன்படி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 4 வாக்குச் சாவடிகளில் சராசரி வாக்குப்பதிவை விட 15 சதவிகிதம் கூடுதலாகவும், 1 வாக்குச் சாவடியில் சராசரியை விட 15 சதவிகிதம் குறைவாகவும் வாக்கு பதிவாகியிருந்தது.

இந்த 5 வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்ற வாக்குப் பதிவு விவரங்களை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட 17 ஏ படிவம், வாக்குப்பதிவு நிலவரங்களை குறிக்கும் படிவம் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது மத்திய தேர்தல் பார்வையாளர்கள் டி.கே. ரங்கசாமி, சினிவாசுலு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் வீ. வேலாயுதம், தேர்தல் வட்டாட்சியர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

49 (ஓ): ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 65 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனக்கூறி 49 (ஓ) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 13 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவை. வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு


ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நாளை மறுநாள் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சாயர்புரம் பொறியியல் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் மொத்தம் 72% வாக்குப் பதிவில் 84,504 வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் பெண் வாக்களர்கள் 43,773 பேர் வாக்களித்துள்ளனர். ஆண் வாக்காளர்கள் 40,731 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் உள்ள 172 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பார்வையாளர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரிக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை ஆட்சியர் பிரகாஷ், தொகுதி தேர்தல் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 49 (ஓ) ஆர்வம் இல்லை

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு எடுபடவில்லை. 49 (ஓ) குறித்து வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இந்த தொகுதியில் மொத்தம் உள்ள வாக்காளர்கள் 1,16,607 பேர். அவர்களில் 84,501 பேர் வாக்களித்துள்ளனர். இது 72.46 சதவிகிதம் ஆகும்.

இந்த வாக்குப்பதிவு சதவீதம் 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை விட கூடுதல் ஆகும். கடந்த 2006-ல் 66.8 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியிருந்தன. மொத்த வாக்காளர்கள் 1,40,131 பேர். இதில் 93,648 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க. பா.ம.க., புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. இருப்பினும், கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த போதிலும், அந்த கட்சிகளின் தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. ஏதோ ஒரு வேட்பாளருக்கு தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளனர் என்பதையே இந்த வாக்குப்பதிவு சதவிகிதம் உணர்த்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும், தேர்தலை புறக்கணித்த சில கட்சிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் 49 (ஓ) போடும்படி அறிவுரை வழங்கியிருந்தனர். ஆனால், அதுவும் வாக்காளர்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்டது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி முழுவதும் 172 வாக்குச் சாவடிகளிலும் 10-க்கும் குறைவானவர்களே 49 (ஓ) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

மொத்தத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்று அரசியல் கட்சிகள் சொன்னதை வாக்காளர்கள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

திமுக, போலீஸ் தள்ளுமுள்ளு ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்திற்கு அண்மையில் வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தலில் 49- ஓ படிவத்தை பயன்படுத்துமாறு தனது கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், அக் கிராமத்தில் மொத்தமுள்ள 639 வாக்குகளில் 482 வாக்குகள் பதிவாயின. இது 75.43 சதவிகிதம் ஆகும்.

முக்காணியில் வாக்குச் சாவடிக்குள் உள்ளே இருந்த தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு சென்ற திமுகவினரை போலீஸôர் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ஆனால், திமுகவினர் கேட்காததால் திமுகவினருக்கும், போலீஸôருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. பின்னர், போலீஸ் படை குவிக்கப்பட்டதும் திமுகவினர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். வயதானவர்கள் பலர் இத் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவை. தொகுதி இடைத் தேர்தலில் 72.46% வாக்குப்பதிவு ஆட்சியர் தகவல்


இன்று நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்ட மன்ற இடைத் தேர்தலில் 72.46% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. சராசரியாக 68 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்தம் உள்ள 172 வாக்குச் சாவடிகளில் 84,501 வாக்குகள் பதிவாகி உள்ளன. விறுவிறுப்பாகவும், எவ்வித சட்ட ஒழுங்கு சீர்குலைவு இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்த இந்த தேர்தலில் 72.46% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சக்திமுருகன் (படங்கள்: மாருதி)

ஸ்ரீவை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நிலவரம்..

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை 11 மணி வரை 30% சதவீத வாக்குகள் பதிவாகின. மதியம் 1 மணி நிலவரப்படி 52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

1 மணி நிலவரம்..

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கிட்டத்தட்ட 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கம்பம் தொகுதியில் சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இளையாங்குடியல், கிட்டத்தட்ட 45 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதே போல பர்கூரிலும் மிக விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும்.

அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பையும் மீறி அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 1136 வாக்குச் சாவடிகளில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகள் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஸ்ரீவை இடைத்தேர்தல்: வாக்குரிமை இல்லாத அரசியல் கட்சி வேட்பாளர்கள்


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. தொகுதியில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேருக்கும் வாக்குரிமை இல்லாததல் இன்று அவர்கள் வாக்களிக்கவில்லை..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான காங்கிரஸ் சுடலையாண்டி, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமி, பாஜக வேட்பாளர் சந்தனகுமார் ஆகியோருக்ககான வாக்குரிமை தூத்துக்குடியில் உள்ளதால் வாக்களிக்க முடியவில்லை.

தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனுக்கு சென்னையில் வாக்குரிமை உள்ளது. அதனால் அவரும் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளார். இதர சுயேட்சை வேட்பாளர்கள் 8பேரில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வாக்களிப்பதில் எந்தவித சிக்கலுமில்லை. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்குப்பதிவு இல்லாமல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: தேர்தல் அதிகாரிகள் பார்வை


ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கியது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி 24.6% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையிலிருந்து மக்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகள் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கோ.பிரகாஷ், தொகுதி தேர்தல் அதிகாரியான வருவாய்துறை அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தொகுதி முழுவதும் பார்வையிட்டு வருகின்றனர். தொகுதியின் 172 வாக்குப்பதிவு மையங்களிலும், வாக்குப் பதிவு வெப் கேமரா மூலம் பதிவு செய்து இணைய தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வெளி மாநில அதிரடிப்படைப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு விவரங்களை உடனுக்குடன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வாக்குப் பதிவு முடிவடைந்ததும், மின்னணு எந்திரங்கள் முறைப்படி ஓட்டு எண்ணும் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் ஸ்ரீவைகுண்டம் உட்பட 5 தொகுதிகளிலும் வரும் வெள்ளிக்கிழமை (21ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியது


ஸ்ரீவைகுண்டம், தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் மக்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகள் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். ஐந்து தொகுதிகளிலும் வெளி மாநில அதிரடிப்படைப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப் பதிவு விவரங்களை உடனுக்குடன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வாக்குப் பதிவு முடிவடைந்ததும், மின்னணு எந்திரங்களின் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள `குளோஸ்' பட்டனை அழுத்தியபின் முறைப்படி ஓட்டு எண்ணும் இடங்களுக்கு மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்

இத் தேர்தலை அதிமுக, மதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து விட்டன.

சட்டசபையில் கட்சிகளின் பலம்

மொத்த தொகுதிகள் - 235

திமுக - 95

அதிமுக - 58

காங்கிரஸ் - 34

பாமக - 18

சிபிஎம் - 9

சிபிஐ - 6

மதிமுக - 3

விடுதலைச் சிறுத்தைகள் - 2 (செல்வம் ராஜினாமா செய்து விட்டார் - ஆனால் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை)

தேமுதிக - 1

சுயேச்சை - 1

நியமனம் - 1

"புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்'

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்த 13 ஆவணங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப் பெற்றவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும்போது, அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க வரும்போது தவறாமல் கொண்டுவரவேண்டும்.

13 ஆவணங்கள் பற்றிய விவரம்:

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சித் துறை நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டை. பொதுத்துறை வங்கிகள், தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பாஸ் புத்தகங்கள், கிஸôன் பாஸ் புத்தகங்கள் (28.2.2009-க்குள் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும்), சொத்து ஆவணங்கள் (புகைப்படத்துடன் கூடிய பட்டா, ஒப்பந்த பதிவுப் பத்திரங்கள்).

அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சான்றிதழ்கள் (28.2.2009-க்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்). புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் (முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய ஆணை, முன்னாள் ராணுவத்தினர் மனைவிக்கு வழங்கப்பட்ட துறைச் சான்றிதழ், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவைகள் ஓய்வூதிய ஆணை).

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 28.2.2009-க்குள் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம், 28.2.2009-க்குள் ஊனமுற்றோர் இயக்குநரகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை (28.2.2009-க்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), தொழிலாளர்கள் திட்டத்திற்கான அமைச்சரகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றார் ஆட்சியர்.

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்: முன்னெச்சரிக்கையாக 133 பேர் கைது

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத் தொகுதியில் இதுவரை மொத்தம் 107 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க.வினர் மீது 41, தே.மு.தி.க.வினர் மீது 38, காங்கிரஸ் கட்சியினர் மீது 13, புதிய தமிழகம் கட்சியினர் மீது 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது 5, மற்றவர்கள் மீது 5 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் சென்றதாக 18 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இத் தொகுதி முழுவதும் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு 358 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க வாக்காளர்கள் மறுப்பு: தா.பாண்டியன் பாராட்டு


ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வாக்காளர்கள் மறுத்துள்ளனர்; அவர்களைப் பாராட்டுகிறேன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் செய்த தா.பாண்டியன், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகிறது. சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் மொத்த வருமானம் 1090 கோடி ரூபாய். இப்போது 10 லட்சத்து 55 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.

இந்தியா தொழில்துறையில், விண்வெளி துறையில் முன்னேறி உள்ளது. தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விடும் அளவுக்கு முன்னேறி உள்ளோம். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் மக்களுக்கு குடிநீர் கொடுக்க முடியவில்லை.

இத் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்துள்ளனர். இந்தச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

வாக்காளர்களாகிய நீங்கள் விலைபோக மாட்டீர்கள் என்பதை நாளை நடைபெறும் தேர்தலில் நிரூபித்து, தமிழகத்திற்கே ஸ்ரீவைகுண்டம் தொகுதி வழிகாட்டி என்ற பெருமையைத் தேடித் தரவேண்டும் என்றார்.

நிறைவு பிரசாரத்தில் மார்க்சீய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.கனகராஜ், வட்டச் செயலர் கே.கந்தசாமி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி முன்னாள் தலைவர் உலகம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.மோகன்ராஜ், மாவட்ட துணைச் செயலர்கள் பி.கரும்பன், எஸ். அழகுமுத்துப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. எல்.அய்யலுசாமி, மாவட்டப் பொருளாளர் எம்.போத்தியடியான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.உலகநாதன், எஸ்.குணசேகரன், இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் டி.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LinkWithin

Blog Widget by LinkWithin