தண்டையார்பேட்டை: பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக 18 ஒட்டகங்கள் வண்ணாரப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வரும் 28-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை வாங்கி வெட்டி இறைவனுக்கு படைப்பார்கள். பின்னர் அவற்றை உறவினர்கள், ஏழைகளுக்கு வழங்குவார்கள். கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் ஒட்டகங்களை முஸ்லிம்கள் குர்பானி கொடுத்து வருகின்றனர். ஒட்டகத்தின் விலை அதிகமாக இருப்பதால், சிலர் கூட்டாக சேர்ந்து வாங்கி வெட்டி பங்கு போட்டுக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலையில் உள்ள தர்காவுக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து லாரிகள் மூலம் 18 ஒட்டகங்கள் வந்து இறங்கின. அவற்றை தர்காவில் உள்ள வளாகத்தில் விட்டுள்ளனர். இந்த ஒட்டகம் ஒவ்வொன்றும் 250 முதல் 300 கிலோ வரை எடை கொண்டது. ஒரு ஒட்டகத்தின் விலை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை.
தமுமுகவை சேர்ந்த ஏ.என்.தாஹா மற்றும் அமீது ஆகியோர் இந்த ஒட்டகங்களை குர்பானி கொடுப்பதற்காக வாங்கியுள்ளனர்.
செய்தி : தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக