புதன், 25 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் இன்று ஏ.ஐ.டி.யு.சி., உண்ணாவிரதம்

திருநெல்வேலி: பணிமனை தோன்றி 21 ஆண்டு கால தொழிலாளர்களின் அடிப்படை, அத்யாவசிய கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் பணிமனை 6.4.88ம் ஆண்டு 15 வழித்தடங்களுங்களுடன் துவங்கப்பட்டது. தற்போது 35 வழித்தடங்களும், 38 பஸ்களும் உள்ளது. பணிமனை ஆரம்ப நாளில் எப்படி இருந்ததோ அதே நிலைமையில் தான் உள்ளது. டயர் புதுப்பித்தல் பிரிவு கொசுக்களில் கூடாரமாக மாறியுள்ளது. பழைய கழிவு டயர்களை அப்புறப்படுத்தவேண்டும். டயர் பிளாண்டில் காண்டிரக் முறையை கைவிடவேண்டும்.

ஓய்வறை விஸ்தரித்தல், தரமான மதிய உணவு வழங்குதல், தரமான டீ வழங்குதல், 240 நாள் பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்துதல், கழிப்பறை வசதி என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து தலைமை கிளைத்தலைவர் ஜேசுபாதம் தாவீதுராஜா, கிளைச் செயலாளர் முருகன் முன்னிலை வகிக்கிறார். உண்ணாவிரதத்தை இந்திய கம்யூ., நகர செயலாளர் நடராஜன் துவக்கிவைக்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி தலைவர் அழகுமுத்துப்பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். சம்மேளன துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், பொதுச் செயலாளர் ஆறுமுகம், தலைவர் குருசாமி பேசுகின்றனர். இத்தகவலை ஏஐடியுசி துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin