ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கடற்கரை கிராமங்களில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில், பொது மக்கள் தங்கள் விபரங்களை வழங்கி பயனடையும்படி தாசில்தார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் தமிழ்மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாக கடற்கரை கிராமங்களில் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி இன்று (நவ.5)துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான பட்டணமருதூர், தருவைக்குளம் மற்றும் கீழஅரசடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது பெயர் மற்றும் வயதிற்கான ஆதாரங்களை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும், இந்த விபரங்களை வீடு, வீடாக லேப் டாப் கம்ப்யுட்டர் மூலம் புள்ளி விபரங்கள் சேகரிக்கும் கணக்கீட்டாளரிடம் வழங்கி பொது மக்கள் பயன்பெறலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News by Tuticorin Web Site
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக