செவ்வாய், 10 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகள் அகற்றம்

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.

ஆற்றை ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளினால் விஷப்பூச்சிகள், வண்டுகள் தேங்கி பொதுமக்கள் படித்துறைகளில் குளிக்கும்போது கடித்து விடுகின்றன.

இந்த அமலைச் செடிகளை பொதுபணி துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுடலையாண்டியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரும் இக் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி அமலைச் செடிகளை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் அமலைச் செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இப் பணியை சுடலையாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்.

பேரூராட்சித் தலைவர் கந்த.சிவசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin