செவ்வாய், 10 நவம்பர், 2009

காயல்பட்டினத்தில் ஜமா அத்துல் உலமா சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொதுக்குழுக் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.இ. காழி அலாவுதீன் தலைமை வகித்தார். எஸ்.எம். முஹம்மத் ஃபாரூக், எஸ்.டி. அம்ஜத் அலி, எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ். உமர் ரிழ்வானுல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் தொடக்கிவைத்தார்.

மாவட்ட ஜமா அத்துல் உலமா பேரவைச் செயலர் எஸ். முஜிபூர் ரஹ்மான், தூத்துக்குடி ஜாமி ஆ மஸ்ஜித் தலைமை இமாம் அப்துல் ஆழிம், தூத்துக்குடி மன்ப உஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஏ.எம். ஷேக் உஸ்மான், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரிப் பேராசிரியர் கே. சுல்தான் ஸலாஹூத்தீன், மஹழ்ரா அரபிக் கல்லூரிப் பேராசிரியர் எஸ். செய்யித் அப்துற் ரஹ்மான், தூத்துக்குடி மன்பஉஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் எம். இம்துல்லாஹ், செய்துங்க நல்லூர் ஜூம்ஆ பள்ளி இமாம் ஹஸன் ஞானியார், வடக்கு ஆத்தூர் ஜூம்ஆ பள்ளி இமாம் பஷீர் அஹ்மத், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி இமாம் ஏ.கே. அபூ மன்ஸþர் மற்றும் ஏரல் முஹம்மத் யூஸþப் ஆகியோர் பேசினர்.

உலமாக்கள் பணியாளர் நல வாரியத்தில் அதிக உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக மாவட்ட ஜமா அத்துல் உலமா பேரவைச் செயலர் முஜிபூர் ரஹ்மான் மற்றும் அரசு மாவட்ட காஜியாக காயல்பட்டினம் மஹ்ழரா துணை முதல்வர் எஸ்.டி. அம்ஜத் அலி ஆகியோரை நியமித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இருவரும் பொன்னாடை அணிவித்து கெüரவிக்கப்பட்டனர்.

மஹழ்ரா அரபிக் கல்லூரிப் பேராசிரியர் காஜா முஹ்யித்தீன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin