ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் சர்வேயர் பிரிவு, பட்டாபிரிவில் காலிஇடங்கள் நிரப்பபடாததால் மக்கள் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் பட்டாமாறுதல் பிரிவு, சர்வேயர்பிரிவு,வாரிசு சான்று, நலிந்தோர்நலதிட்டம்,ரேஷன், தேர்தல் என்று பல்வேறு பிரிவுகள் இயங்கிவருகிறது.
இப்பிரிவுகளில் பட்டாவழங்கும் பிரிவு, சர்வேயர் பிரிவுகளில் அலுவலர்கள் காலியிடங்கள் இன்னும் நிரப்பபடாததால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பட்டாபிரிவில் இருக்கவேண்டிய இரண்டு மண்டல துணை தாசில்தார்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். பலர் விடுமுறையில் உள்ளனர். இதனால் பட்டாவழங்கும் பணிமுழுமையாக நடைபெறவில்லை.
2009 அக்டோபர் மாதம் முடிய பெறப்பட்ட மனுக்கள் சுமார் 8ஆயிரம் ஆகும். அவைகளில் 3 ஆயிரத்து 200 ஏற்கப்பட்டது என்றும் 3ஆயிரத்து400 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் நிலுவையில் 2 ஆயிரம் என்றும் கணக்கிட்டு கூறியுள்ளனர். ஆனால் ஏற்கப்பட்ட 3 ஆயிரத்து200 மனுக்களை அரசு விதிமுறைகள் படி கம்ப்யூட்டரில் பதிவு செய்து அந்தந்த பயனாளிகளுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து ரூ20 பணம் செலுத்தி பெற்றுசெல்லவேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் ஏற்கப்பட்ட மனுக்களில் அலுவலகத்தில் வந்து கேட்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதற்கு மனுவுக்கு சுமார் ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மனுதாரர் செலவு செய்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் சர்வேயர் பிரிவில் தலைமை சர்வேயர் பணியிடம் எப்போதும் காலியாகவே உள்ளது. மேலும் பிர்க்கா சர்வேயர்கள் 6 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கும் நிலஅளவை கோரி வந்து இருக்கும் மனுக்கள் சுமார் 500க்கும் மேல் தேங்கி கிடக்கிறது
.
எனவே மாவட்ட நிர்வாகம் காலியான பணிகளையும் அதன் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் நயினார் குலசேகரன் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
செய்தி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக