ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வெள்ளி, 20 நவம்பர், 2009
உலகம் சுற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்த அமீரக இந்தியர்
உலகம் சுற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் வாழ் இந்தியரான கஷி சமத்தர்.
துபாயில் பணிபுரிந்து வரும் சமத்தர், ஐ.நா.சபையில் உறுப்பினராகவுள்ள 194 நாடுகளுக்கு 12 வருடம் எட்டு மாதம் 13 நாட்களில் சென்று வந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 2008ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி வரை இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
அமெரிக்கன் வேர்ல்ட் ரிகார்ட் அகாடமி, லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் உள்ளிட்டவை சமத்தரின் பயணம் உலகின் முதலாவது மற்றும் வேகமானது என சான்று அளித்துள்ளன.
இப்பயணத்திற்கான விசா பெறுவதற்கு பல்வேறு சிரமங்களைச் சந்தித்தாலும் தனது பயணத்திட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையி்ல், '194 நாடுகளில் 160 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக அந்தந்த நாட்டு விமான நிலையங்களில் விசா பெற இயலாது.
எனது பயணத்தின் போது பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்களைச் சந்தித்து சுற்றுலாப்பயணிகளுக்கு விசா வழங்கும் முறைகளை எளிதாக்க கேட்டுக் கொண்டேன். உலக சுற்றுலா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே எனது பயணத்தின் நோக்கம்' என்றார் சமத்தர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக