செவ்வாய், 21 ஏப்ரல், 2009

புதிய பத்து ரூபாய் நாணயம்!


ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா 10 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட இருக்கிறது. நாணயத்தின் முன்பாகத்தில் அசோகச் சின்னமும், நாணயம் தயாரிக்கப்பட்ட வருடமும், 10 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும். அடுத்த பாகத்தில் குறுக்கு மறுக்காக இரு கோடுகளும், புள்ளியும், பத்து ரூபாய் என்பது ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

நாணயத்தின் உட்பகுதி ஃபெரஸ் ஸ்டீலாலும், வெளிப்பகுதி நிக்கெல் ப்ரான்ஸாலும் ஆனது. நாணயத்தின் எடை, 8 கிராம்; சுற்றளவு 28 மி.மீ நாணயத்தை வடிவமைத்தவர்கள் National Institute of Design, Ahmedabad. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தைக் கருவாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நோய்டா மற்றும் மும்பையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. 70 மில்லியன் மதிப்புள்ள நாணயங்கள், ஆகஸ்ட் 2008 முதல் தயாரிக்கப்பட்டுக் கையிருப்பில் உள்ளன. விரைவில் வெளியிடப்படும்.

4 கருத்துகள்:

LinkWithin

Blog Widget by LinkWithin