ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
சனி, 20 ஜூன், 2009
குழந்தைகளை வாசிக்க பழக்குங்கள்
குழந்தைகள் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். புத்தகங்கள் என்றால் பாடப் புத்தகங்கள் அல்ல.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றை வாங்கி வந்து கொடுத்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
இதன் மூலம், உங்களால் செய்ய முடியாத எத்தனையோ நல்ல காரியங்களை அந்த புத்தகங்கள் செய்து விடும்.
நல்ல நண்பன் நல்ல நூல்கள்தான் என்பதை குழந்தைகளுக்கு வலியுறுத்துங்கள். தற்போது தாய் மொழி என்பதே குழந்தைகளுக்கு தெரியாத ஒன்றாகிவிட்டது. எனவே இப்படி செய்வதன் மூலம் தமிழையும் வளர்க்கலாம்.
நீங்கள் வாங்கிக் கொடுக்கும் புத்தகம் அவர்களுக்கு ஏற்றதாக எளிய நடையுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக