துபாயில் அமீரக தமிழ் மன்றத்தின் சார்பில் வியாழக்கிழமை மாலை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறுபது ஆண்டு ஊடகத்துறைத்துறை அனுபவம் வாய்ந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இலங்கையில் வாடும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு உதவிப் பொருட்களை அனுப்ப வேண்டும் என்ற அவர் அதற்காக தமிழக முதல்வர் முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழின் பெருமையை விளக்கும் பாடலை குமரி அபுபக்கர் பாடினார்.
அமீரக தமிழ் மன்ற தலைவர் ஜெஹபர், அப்துல் ஜப்பாருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் அஹமது முஹைதீன், செயலாளர் நஜுமுதீன், முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துபாய் தமிழ்ச் சங்கம், யுஏஇ தமிழ்ச் சங்கம், அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை, வானலை வளர்தமிழ் அமைப்பு, தாய்மண் வாசகர் வட்டம், அமீரக தமிழர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், வலைப்பூ பதிவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை ஜெஸிலா ரியாஸ் தொகுத்து வழங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக