வெள்ளி, 29 மே, 2009

சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்


தேவ்பந்த்: ஏறத்தாழ 114 மொழிகளில் இதுவரை சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ள இறைமறையான குர் ஆன் தற்போது சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. புகழ்பெற்ற நூலாசிரியரும் பேராசிரியருமான முஹம்மது சுலைமான் அவர்களின் பேத்தியான ரஜியா சுல்தானா இப்பணியைச் செய்யத் துவங்கியுள்ளார்.
பேராசிரியர் முஹம்மது சுலைமான் ஏற்கனவே குர் ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் குர்ஆன் விரிவுரையையும் இரு பகுதிகளாக ஜம்மியத்-உலமா-யே- ஹிந்த் மூலம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது
21 வயதான சகோதரி ரஜியா சுல்தானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். இப்பணியினை மனதிற்கொண்டே தான் சமஸ்கிருதத்தில் M.A படிநிலையைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். இஸ்லாமிய நூல்கள் சமஸ்கிருதத்தில் மிகக் குறைந்து இருப்பதால் உயர்தர இத்தகைய நெறிமுறைகள் சமஸ்கிருதம் அறிந்த மக்களுக்குக் கொண்டு சேர்க்க தாம் விரும்பியதாகவும் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முழுமையான தொகுப்பிலும், பகுதி மொழிபெயர்ப்புகளும் சேர்த்து இறைமறை குர்ஆன் இதுவரை 114 மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன என்பது கூடுதல் தகவலாகும்
சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கத் துவங்கியுள்ள இச்சகோதரியின் தூய குறிக்கோள் சிறந்த முறையில் வெற்றி பெற இறை பிரார்த்தனைகளுடன் சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதனுடன் ஸ்ரீவை மக்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது
தகவல் : சத்தியமார்க்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin