விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினோம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச கூறியுள்ளார்.
இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளது:
பிரபாகரனை உயிருடன் பிடித்து விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். எனெனில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தவர் பிரபாகரன். இது தொடர்பாக இந்தியாவில் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் நினைத்தேன் என்றார் ராஜபட்ச.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகாலமாக வேரூன்றி இருந்த பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டது. நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு விட்டோம். இப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.முப்படையினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்.
முக்கிய ராணுவ தளபதிகளும் போர்க்களத்துக்கு நேரடியாகச் சென்று விடுதலைப் புலிகளை ஒடுக்கினர். ராணுவ நடவடிக்கைகளுக்கு நான் முழுமையாக ஆதரவு கொடுத்தேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக