செவ்வாய், 26 மே, 2009

மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது; சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


குற்றாலத்தில் வழக்கத்தை விட முன்கூட்டியே சீசன் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சீசனுக்கான அறிகுறிகள் தென்பட்டன. மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசிய வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியது.

மலைப்பகுதியில் மழை பெய்ததால் நேற்று மதியம் முதல் மெயின் அருவியிலும் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதனால் கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தென்காசி, குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் குளு, குளு கால நிலை நிலவுகிறது.

சுற்றுலா பயணிகள் வர தொடங்கியதையடுத்து குற்றாலத்தில் சீசன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீசன் தொடங்கியுள்ளதால் குற்றாலம் பகுதி வர்த்தகர்கள், சிறுவியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin