ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் போட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த காவ்யா சிவசங்கர் (13) முதலிடம் பெற்றார். அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் ரொக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.
கான்சாஸ் மாநிலத்தின் ஓலத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் 8-வது படிக்கிறார்.
வர்ஜீனியாவைச் சேர்ந்த டிம் ரூட்டர் (12) என்ற ஏழாவது வகுப்பு மாணவன் இரண்டாம் இடம் பிடித்தார்.
இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா பஸ்தபூர் (13) மூன்றாம் இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு சமீஸ் மிஸ்ரா என்ற இந்திய அமெரிக்கருக்கே இந்த முதல் பரிசு கிடைத்தது.
1998-ல் கலிபோர்னியாவின் சாக்ரமண்டோ நகரைச் சேர்ந்த ராகஸ்ரீ ராமச்சந்திரன் இப்போட்டியில் முதலில் வந்து புதிய மரபைத் தோற்றுவித்தார். அதிலிருந்து அமெரிக்க் குடிமக்களாகிவிட்ட இந்திய வம்சாவழியினர் அதிக எண்ணிக்கையில் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
1999-ல் நூபுர் லாலா முதல் இடம் பெற்றார். 2002-ல் பிரத்யூஷ் புத்திகவும், 2003-ல் சாய் குண்டூரியும், 2005-ல் அனுராக் காஷ்யப்பும் முதலிடம் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக