சிங்கப்பூரில் ' ஸ்வைன் ஃபுளூ ' எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் 22 வயது பெண் ஒருவருக்கு தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நியூயார்க் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்பிய அந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பெண்தான் சிங்கப்பூரின் முதல் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கிய நபர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நோய் தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண் கடந்த 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நியூயார்க்கில் தங்கியிருந்ததாகவும்,அப்போது அவருக்கு 'ஸ்வைன் ஃபுளூ ' தாக்கியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக