வெள்ளி, 22 மே, 2009

தமிழக 10‌ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு நாளை வெளி‌யீடு

தமிழகத்தில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழு‌திய 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. அன்றைய தினமே பள்ளிகளில் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10ஆ‌ம் வகு‌‌ப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆ‌ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,541 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வு எழுதின‌ர். இவர்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 838 பேர் மாணவிகள். 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள்.

சென்னையில் மட்டும் 18,697 மாணவிகள் உள்பட 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 18ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆ‌ம் தேதி வரை நடந்தன. மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 பேரும், ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,697 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,361 பேரும் எழுதின‌ர்.
பிளஸ்2 தேர்வு கடந்த 14ஆ‌ம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்த்து கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

இந்த நிலையி‌ல், 10‌ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''10ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23ஆ‌ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும். அதேநேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

தூத்துக்குடியில் நாளை சுப்பையா வித்யால‌ய‌ம் ம‌க‌ளிர் மேல்நிலைப்ப‌ள்ளியில் காலை 9.30 ம‌ணிக்கு தூத்துக்குடி மாவ‌ட்ட‌ முத‌ன்மை க‌ல்வி அலுவ‌ல‌ர் பிரைட்சேவிய‌ர் வெளியிடுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin