தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பிரகாஷ் கேடயம் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முத்து அரங்கில் மாவட்ட அளவில் பிளஸ்2, 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் பிரகாஷ் ரேங்க் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
இதில் மாவட்ட அளவில் பிளஸ்2 தேர்வில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி சி.பிரதீப், இரண்டாவது இடத்தை அதே பள்ளி மாணவர் பிரசாந்த், மூன்றாமிடம் பெற்ற கோவில்பட்டி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா, செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிராஸ்பர், தி விசாகா மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்கிரவர்த்தி, தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆனந்த் ஜானகிராம், மாணவி சௌமியா ஆகியோருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
10ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியாகிருஷ்ணா, 2ம் இடம் பெற்ற காயல்பட்டிணம் எல்.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர் அமானுல்லா, குலசேகரபட்டிணம் திருஅருள் மேல்நிலைப்பள்ளி மாணவி இசக்கிசெல்வி, 3ம் இடம் பெற்ற காயல்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷாபீவி, தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகானா சௌந்தரி, தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நட்டாச்சியம்மாள், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் வெங்கடேஷ் ஆகியோருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற எக்ஸ்.என்.மெட்ரிக் பள்ளி மாணவி பாலபிரியதர்ஷினி, 2ம் இடம் பெற்ற எக்ஸ்.என்.மெட்ரிக் பள்ளி மாணவி ஏஞ்சலின், தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி மாணவி கிப்டி, 3ம் இடம் பெற்ற கோவில்பட்டி ராவில்லா கே.ஆர்.ஏ.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லாரன்ஸ்ஏமிலி ஆகியோருக்கும், ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் இரு இடம் பெற்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ராபியாபேகம், ராஜபிரியா, 3ம் இடம் பெற்ற பிரியதர்ஷினி, சோனிகா வைசாலி ஆகியோருக்கும் கலெக்டர் பிரகாஷ் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் டி.ஆர்.ஓ.அன்பரசு, செய்தி மக்கள் தொடர்புதுறை பி.ஆர்.ஓ.சாரதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் பலர் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக