பன்றிக் காய்ச்சல் எதிரொலி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநகராட்சி பகுதிகளில் தெருக்களிலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் பன்றிகள் சுற்றிவருவது கண்டறியப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்போர் பன்றிகளை மாநகராட்சி எல்லைக்கு வெளியே குடியிருப்பு பகுதிக்கு அப்பால் கொட்டகைகளில் விட்டு வளர்க்கவேண்டும்.
பன்றிக் காய்ச்சல் பொது மக்களுக்கு வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதை தடுப்பது அவசியமாகிறது.
எனவே, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 13-ன் கீழ், மாவட்ட நீதிபதிக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பன்றி வளர்ப்போர் உடனே அகற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையர் மூலமாக சுற்றித் திரியும் பன்றிகளை அகற்றிடவோ, அழித்திடவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக