சனி, 28 மார்ச், 2009

5000 அமெரிக்க ஊழியர்களை நீக்கும் IBM





நியூயார்க்: சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனமான ஐபிஎம், விரைவில் தனது 5000 அமெரிக்கப் பணியாளர்களை நீக்குகிறது.

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள தனது ஊழியர் எண்ணிக்கையை நிலையாக அதிகரி்த வண்ணம் உள்ளது ஐபிஎம். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனத்தில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் இருந்தனர்.

இப்போது சில பணிகள் முற்றுப் பெற்றதாலும், அந்தப் பணிகளுக்கான க்ளையண்டுகள் இல்லாமல் போனதாலும், அந்தப் பிரிவுகளில் பணியாற்றியவர்களை நீக்குகிறது ஐபிஎம்.

கடந்த ஜனவரியில் மொத்தம் 4600 பேருக்கு வேலை நீக்க கடிதம் அனுப்பியது ஐபிஎம். மேலும் சர்வதேச அளவில் ஐபிஎம் கிளைகளில் உள்ள பல்வேறு வேலைகளுக்கு இவர்கள் விண்ணப்பித்தாலும் பரிசீலிக்கப்படும், ஆனால் உள்ளூர் சம்பளமே வழங்கப்படும் என ஐபிஎம் அறிவித்திருந்தது.

வேலை நீக்கத்தை விட இது பெட்டராக உள்ளதே என்று பலர் ஐபிஎம்மில் புதிய வேலைகளுக்கும் விண்ணப்பித்து வருகிறார்களாம்.

இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்கர்கள்தான். தப்பித்தவர்கள் இந்தியர்கள். எந்தக் கிளையில் வேண்டுமானால் பணியாற்றத் தயாராக இந்தியப் பணியாளர்கள் இருப்பதால், இந்தியாவில் பணி நியமன உத்தரவு கொடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin