சென்னை மற்றும் டெல்லி இடையே புதிய விமான சேவையை துவக்கியுள்ள பாரமெளண்ட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானங்களில் செல்போனில் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்லது
தென் இந்தியாவில் தனது விமான சேவையை நடத்தி வரும் இந்த நிறுவனம் வட இந்தியாவிலும் விரிவாக்கத்தைத் துவங்கியுள்ளது
இதன் ஒரு பகுதியாக சென்னை-டெல்லி இடையே தினசரி விமான சேவையை துவக்கியுள்ளது. இந்த விமானம் சென்னையிலிருந்து தினமும் மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு டெல்லி சென்றடையும். அங்கிருந்து இரவு 7.40 மணிக்கு கிளம்பி, 9.55 மணிக்கு சென்னை வருகிறது.
சுமார் 75 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய எம்பரர் 170 ஜெட் ரக விமானத்தை இந்த சேவைக்காக பயன்படுத்தி வருகிறது.
மேலும், இந்த நிறுவனம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சி , விசாகப்பட்டிணம், பெங்களூர் , ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ஆரம்பிக்க இருக்கிறது
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் கூறுகையில்
டெல்லியில் இருந்து பெரும்பாலான தென் இந்திய நகரங்களுக்கு விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ளோம். 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுமையையும் எங்களால் சேவையால் இணைக்க திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து ஜெய்பூர், லக்னெள், சண்டிகர் ஆகிய நகரங்களுக்கும் சேவையை துவக்கும் எண்ணம் உள்ளது.
இந்தியா வில் முதன் முறையாக எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார்
தகவல் : தட்ஸ்தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக