இந்தியாவின் முதல் பெண் சிறைத்துறை டிஐஜி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த ராஜ செளந்தரி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை புழல், வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கான மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றை தவிர்தது பெண் கைதிகளுக்கான 10 துணை சிறைகளும் இருக்கின்றன. இதில் சுமார் 855 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறைகளில் இதுவரை பெண்கள் அதிகபட்சமாக சூப்பிரண்டுகளாக மட்டுமே இருந்தனர். ஆனால், சிறைத்துறை டிஐஜிக்கள் அனைவரும் ஆண்களாக தான் இருந்தனர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதே நிலை தான் நீடித்தது.
இந்நிலையில் இந்த குறையை போக்கும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டிஐஜி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் ராஜ செளந்தரி.வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் 12 ஆண்டுகள் சூப்பிரண்டாக இருந்த இவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல்வர் கருணாநிதியின் உத்தரவையடுத்து முதல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் இந்தியாவின் முதல் சிறைத்துறை டிஐஜி என்ற பெருமை பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக