ஷார்ஜாவில் சமவுரிமை மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முஹம்மது அலி தலைமை தாங்க அஹ்மத் இம்தாதுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். அலி பாதுஷா மன்பயீ சமவுரிமை இதழ் குறித்து அறிமுகம் செய்து வைத்தார்.
கவிக்கோ அப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும், எஸ்.எம். இதாயத்துல்லாவை ஆசிரியராகவும், துணை ஆசிரியர்களாக பி. அப்துல் காதர், ஜி.அத்தேஷ் உள்ளிட்ட குழுவினரைக் கொண்டு சமவுரிமை மே மாதம் முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது
சமவுரிமை இதழை முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வெளியிட முதல் பிரதியை முஹம்மது அலி பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பொறியாளர்கள் எஸ்.என்.பக்ருதீன், இம்தாத், ரவூஃப் நிஸ்தர், மவ்லவி அலிபாதுஷா, தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
சமவுரிமை இதழுடன் samaurimai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக