தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத் சஞ்சார் நிகாம் சார்பில் இன்று காலை 11மணியளவில் அதன் தூத்துக்குடி பொதுமேலளாளர் நடராஜன் நோவா நெட் என்ற தனி இன்டர்நெட் சேவையை துவக்கி வைத்தார். அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கமளித்த அவர், பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு நோவா நெட் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கு முன் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் தேவை. இனிமேல் அது அவசியம் இல்லை வாடிக்கையாளர்களுக்கு நோவா நெட் பிசி என்ற கருவி, மானிட்டர் மற்றும் கீபோர்டு, பிராட் பேன்ட் இணைப்போடு வழங்கப்படுகிறது.
இந்த நோவா நெட் கம்ப்யூட்டரில் ஈமெயில், பிரவுசிங், சேட்டிங், மீடியா பிளேயர் மற்றும் ஆபிஸ் டாகுமென்ட் மேக்கர், பைல் மேனேஜர், பேரன்டல் கன்ட்ரோல், மல்டிபிள் யூசர் மேனேஜ்மென்ட், ரிமோட் சர்வில்லியன்ஸ் மற்றும் கேம்ஸ் போன்ற வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் உபயோகிக்கலாம்.
நோவா நெட் கம்ப்யூட்டருடன் பிராட்பேண்டுக்காக மாத வாடகையாக மூன்று திட்டங்களை பி.எஸ்.என்.எல்.நிறுவனம் வழங்குகிறது. ஹோம் பிளான் 125 வாடிக்கையாளர்களுக்கு ரூ.274ம், ஹோம் பிளான் 250 வாடிக்கையாளர்களுக்கு ரூ.374ம், அன்லிமிடெட் பிளானுக்கு ரூ.850ம் மாத கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இணைப்புடன் ரூ.1200 மதிப்புள மோடம் இலவசமாக வழங்கப்படும்.
நோவா நெட் கம்ப்யூட்டர் பெற விரும்புவோர் ரூ.6364 செலுத்த வேண்டும். இதில் பி.எஸ்.என்.எல். நோவாநெட் பிசி, கீபோர்டு உடன் மானிட்டர் வழங்கப்படும். மானிட்டர் தேவையில்லாதவர்கள் ரூ.2999 மட்டும் செலுத்தினால் இந்த இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் வீடுகளில் உள்ள LCD டிவி மூலமும் இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக நோவா நெட் பிசி, வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ், வை-பி அக்ஸஸ் ஆகியவைகளுக்கு கட்டணமாக ரூ.5193 செலுத்தி இன்டர்நெட் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகளை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், அதன்கீழ் இயங்கும முகவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என்று பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நோவா நெட் கம்ப்யூட்டர் தூத்துக்குடி மாவட்ட விற்பனைதாரராக தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள காயத்ரி இன்போடெக் என்ற கம்ப்யூட்டர் விற்பனை நிலையம் செயல்படுவதாக அதன் உரிமையாளர் ஏ.கே.ஜெயகுமார் தெரிவித்தார்
நன்றி : சிவராம், (படம்: இருதயராஜ்) , தூத்துக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக