செவ்வாய், 26 மே, 2009

முதல் செயற்கைக்கோளை ஏவுகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முதல் செயற்கைக்கோளை வரும் அக்டோபர் மாதம் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இது அந்நாட்டு அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொலைத் தொடர்பு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக அல்-யாஹ் செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் மார்டின் ஜீ, கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், செயற்கைக்கோளின் வடிவம் மற்றும் அது சுமந்து செல்லும் பொருட்களின் எடை இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் தெரிவித்துள்ளார்
யாஷாட்-1ஏ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், அந்நாட்டின் தொலைத் தொடர்பு சேவைக்காக பயன்படுத்தப்படும் என்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு சேவையை வழங்க இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
யாஷாட்-1ஏ செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியாக யாஷாட்-1பி என்ற செயற்கைக்கோளை 2011ஆம் ஆண்டின் மத்தியில் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin